Thursday, November 10, 2022

பிராணன் - அபானன்

 ====பிராணன் - அபானன் ===


பிராணன் போக கூடியது, வரகூடியது அல்ல. பிரானன் போச்சு என சொல்லுவது வழக்கம். விளக்கமான தெளிவுக்கு காகபுசுண்டர் பிரான் வசிஷ்ட்டருடன் சம்வதிக்கும் புசுண்டோபாக்யானம் எனும் ஏகாதச ஸ்கந்தமான யோகவாசிஷ்ட்டம் கூறபட்டிருக்கிரது.பார்த்து விளங்கிகொள்ளவும்.

"முதல் உட்செல்வது பிராணன் எனவும் வெளிச் செல்வதை அபாணன் எனவும் கொண்டு” என சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?. இந்த கூற்று தான் தவறு என்கிறேன். பிரானன் முதலிலும் உட்புகாது கடைசியிலும் உட்புகாது. ஒரு குழந்தை பிறந்த உடன் முதலில் உட்புகும் சுவாசத்துக்கு அபானன் என பெயர். குழந்தை முதன்முதலில் வெளிவிடும் சுவாசம் பிரானன். பிராணன் எப்போதும் வெளியே தான் போய் கொண்டிருக்கும்.

பிராணன் வேறு உயிர் வேறு. கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கும் ஆனால் பிரானன் இருக்காது.

பிறந்த பின் உருவாகும் நேர் - எதிர் அசைவுகளுக்கு பிராண அபான என பெயர். வெளி போகும் சுவாசம் பிரானன், உட்புகும் சுவாசம் அபானன்.

"பிரானன் அபானன் என்பது காற்று அல்ல."

தன்னில் தானாகி விளங்கும் உயிரை அறியாவிடில் பிராணன் அபானன் என பிரபஞ்ச காற்றை மூக்கு வழி இழுத்துகிட்டு கடைசியில் சாவு தான் வரும். மூன்றாம் நாள் உடல் நாறும், அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது. அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது. ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.

ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம்?

பஞ்ச இந்திரியங்கள் வழி கடந்தால் நீங்கள் பயணிக்கும் பாதை இந்திரிய பாதை என உணருங்கள். முதலில் குரு அறிவிக்கும் பாதை என்பது ஜீவ பாதை.

ஆனால் ஜீவன் எது, எங்கே என்பதில் தான் காணாதவருக்கு சந்தேகம். பிரானன், அபானன் ஜீவன் என பிதற்றல் இருக்கும். தெரிந்தவருக்கு குழப்பமே இருக்காது

ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது. எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி.

பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது.

உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உணர்ந்தீர்களானால் அடுத்த வாசல் திறக்கும். சாலை ஆண்டவர் சொல்லுவது பொன்ற "அகர வாசல்". இல்லையெனில் பிராணாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம்.  சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிராணன் என்பனவற்றிலேயே முடிந்து விடும். ஜீவனை எட்டாது. ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் பரசியமாக கிடையாது. ஆனால் நிலவி வருகின்றது என்பது நிச்சயம் உண்மை

இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம்.

புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.

உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலில்  ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள். அது தான் இலக்கு. அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள். அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள். அதை பிரயாணம் செய்து அடைவது சீடனின் கடமை.

ஏராளம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உணர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள். கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள். அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்.. யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர்.

தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே தன்மயமே தான்.  மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம்.

"நான்" "நான்" என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை.

இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்றது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான்.

வெட்டவெளி ‘ஒன்றுமல்லாதது’ என்பது மனதின் கற்பனை.ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை.

அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய்.

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.

No comments:

Post a Comment