Wednesday, November 9, 2022

கேள்வி பதில்

 கேள்வி: உடம்பை மறைய வைக்க முடியுமா? 


பதில்: ஏன் நாம உடம்பு இல்லேன்னு தெரிஞ்சா போதாதா? 


கேள்வி: வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மாதிரி அந்தர்கதமா முடியுமா? 


பதில்: இதெல்லாம் ஸ்தூல விஷயம்.


அதுதான் முக்யமா? 


நாம ஆத்மாவாச்சே! இதைப் பத்தியா கவலைபடறது!


சாரத்தை எடுத்துக்கொண்டு சக்கையைத் தூக்கிப் போட்டுடனும்! 


உடம்பு மறைஞ்சாத்தான் முக்தின்னு சொல்றவா.... தவறாப் புரிஞ்சிகொண்டிருக்கா. உண்மையிலேயே அப்படித் தேவையில்லே. 


நாம உடம்பு இல்லே.


அது மறைஞ்சா என்ன... மறையாட்டா என்ன.... இதிலேயெல்லாம் ஒரு சிறப்பும் இல்லே. 


இதிலே என்ன ஏற்றத்தாழ்வு?


ஞானமடையறதுதான் விஷயம். 


“நான்”கறது இல்லாம போறதுதான் முக்கியம். உடம்பு இல்லாம போறது இல்லே. 


நம்மள உடம்போட சம்பந்தப் படுத்திகறதுதான் உண்மையிலேயே பந்தம். 


இந்த அஞ்ஞானத்தைத் தொலைச்சு நாம யாருங்கற ஞானம் ஏற்படறதுதான் ஆத்மா ஞானம். 


அதுதான் முக்யம்.


ஒரு தங்க ஆபரணத்தை சுத்தமான தங்கமான்னு சோதிக்கறதுக்கு... எப்படி உருக்கினா என்ன? 


கொஞ்சமா உருக்கினா என்ன?


மொத்தமா உருக்கினா என்ன?


உருக்கினதுக்கு அப்புறம்... அது முன்னாடி என்ன ஆபரணமா இருந்தது... இதெல்லாமா முக்யம்!


அது தங்கம் தானா? அதுதான் முக்யம் !


செத்தவா யாரும், உடம்பைப் பாக்கப் போறதில்லே.


உயிரோடு இருக்கிறவன்தான், ஞானியோட உடம்பு மறைஞ்சுத்தா... இல்லையான்னு யோசிக்கறான்.


உண்மையை உணர்ந்தவனுக்கு உண்மையிலேயே சாவு கிடையாது. 


உடம்பு இருந்தாலும், உடம்பு இல்லேன்னாலும் அவனுக்கு ஒரு வித்தியாசமும் கிடையாது. 


பிறருக்கு ஞானியின் உடம்பு இருக்கறதனாலேயோ... மறையறதனாலேயோ.. எந்த பிரயோஜனமும் இல்லே..


நாம வந்த வேலையை நாம பாக்கணும்.


முதல்லே ஞானத்தை அடைவோம். 


அப்புறம் எப்படி உடம்பை விடலாம்னு ஆலோசிப்போம்.


‘உடம்புதான் நான்’கற அஞ்ஞானந்தான் இந்த யோசனைக்கெல்லாம் காரணம். 


நீ இந்த உடம்பா? 


தூங்கும்போது இந்த உடம்பு எங்கே?


இந்த யோசனையெல்லாம் எங்கே? 


இப்போ விழிச்சுக் கொண்டவுடனே எது கிளம்பறதனாலே இந்த 


யோசனையெல்லாம் வந்து தொல்லை பண்றது? 


அதுதான் அகந்தை! திருட்டுப் படவா! விரட்டிட்டா சுகமாயிருக்கலாம்.

No comments:

Post a Comment