Friday, November 11, 2022

ஆன்மா - மனம் - 1

 ஆன்மா - மனம் - 1




ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது


நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது


பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே.. இது தான் நிலை.... இது மயக்கம் இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்


புற உலக காட்சியை கண்னை கட்டியும் நிறுத்தலாம்... புற உலக கேள்வியை காதை பொத்தியும் நிறுத்தலாம்... ஆனால் மனம் ???


தான் தான் மனமாகவும் ஆன்மாகவும் இருக்கிறேன் என மனம் உனராது... மனம் உணராது என்றால் ஆன்மாவும் உணராது


மனமே கற்பனை கட்டிகொண்டு உலகை ருசிக்கிறது...அதுவே அதை பலனையும் அனுபவிக்கிறது....எது வரை?..ரெண்டாக இருக்கும் வரை இது தொடரும்


அந்த ‘நான்” எனும் ஆன்மா மனதினால் நிலை பெறுகிறது


இப்படி மனம் வேறு ஆன்மா வேறு என நில்லாதிருப்பது அத்வைதம்


அப்போது ஆன்மா பிரம்மம் எனவும், மனம் மாயை எனவும் பகுக்கபடுகிறது


இதையே மாயை அகலுதல்...அல்லது மாயை லயிப்பது என்றார்கள்...தானாக பிளவு பட்டிருந்த மனமே ஆன்மாவாக ஒன்றாகிறது.


ஆன்மா ஆன்மாவாகவே எக்காலமும் சுழன்றுகொண்டிருக்கும்...மனமும் எக்காலத்துக்கும் மனமாக ஆன்மாவிடம் ஒட்டி அனுபவிப்பித்து கொண்டிருக்கும்


பகவான் என்பதும் மனதின் வேலையே தான்...தன்னில் இருந்து பிறிதாக ஒரு பகவானும் இல்லை


பகவான் என்பது துணைக்கு ஒரு ஆளை மனமே செய்யும் ஏற்பாடு தான்


மனம் பக்தியில் முதிர்ந்து சித்தியில் சிறந்து விடினும் மயக்கம் மாறா....ஏனெனில் பக்தியெலாம் சித்தியெலாம் மனத்தின் மயக்கமே தாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்து விடும் தருணம் வரைக்கும் மனத்தின் மயக்கம் இருக்கும் தொடர்வுறாது நிற்க்கும். பிற்பாடு தான் மனம் தன்னையே மாய்க்கும் தருனம் வரும்...அப்போது தான் “உன்னுடலையும் உன் உயிரையும் எனக்கு தந்தாய்..என்னுடலையும் என்னுயிரையும் நீ கொண்டாய்” என்பது மலரும்..மனம் ரெண்டற்று பக்தனும் பரமனும் ஒன்றாவர்...உடலும் ஒன்றாகி உயிரும் ஒன்றாகும்....அது கடைசி நிலை...மனம் ரெண்டற்று போனபின்னர் நிகழ்வது....அது வரை கற்பனை தான்...மனத்தின் மாபெரும் கற்பனை....பக்தெனும் பரமனும் இணைந்து விட்ட பிறகு பக்தி என்பது பயனற்று போய்விடும்

No comments:

Post a Comment