"கண்"ணாடி தவம்
வள்ளலாரும் கண்ணாடியை ஞானசபையில் வைத்தார், ஐயா வைகுண்டசாமியும் கண்ணாடியை வைத்தார், நாராயனகுருவும் கண்ணாடியை வைத்தார்... ஆனால் உங்கள் குரு முறை கண்ணாடியை விட்டு விட்டது...அதன் மறை ரகசியத்தை இழந்து ஞானத்தை இழந்து நிற்கிறது.
”பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.”
81. தியானம்
தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.
உங்களில் எவனுக்காவது கொஞ்சமாவது மண்டையில அறிவிருந்தா இதை படிச்சு புரியப்பாருங்க.இது வள்ளலார் தியானம் செய்த முறை , அவர் காட்டிய செயல் முறை, அவர் ஞானசபையில் கண்ணாடியும் விளக்கும் வைத்த காரணமுறை. தியானம் செய்யவேண்டுமானால் எதாவது ஓர் உருவத்தை தியானிக்கவேண்டும் என வள்ளலார் சொல்லியிருக்க சிவ செல்வராஜ், ராமசாமி தேசிகர் போன்றோர் எந்த உருவத்தை தியானிக்க சொல்லி விட்டு சென்றுள்ளனர் என்பதனை கவனிச்சு பாருங்க. “நிஷ்களங்கமாயிருக்கபடாது” என வள்ளலார் கட்டளையிட்டும் எதுக்கு நிஷ்களங்கமா இருக்க தீட்சை கொடுத்துகிட்டு இருக்கீங்க?? இது தான் உங்க வள்ளலார் சன்மார்க்கமா என்ன?/...தெரியாமத்தான் கேக்கிறேன்.
உருவம் இருக்க வேண்டும் என பெருமானார் சொல்கிறார், ஆனால் உங்க குருமார்கள் சும்மா இரு என சொல்லியே செத்து போனாங்க. காரணம் அவர்களாஇ வித்தை இன்னிது என புரிந்துகொள்ளமுடியாமல் மூடபுத்தியால் எல்லாம் தெரிந்துவிட்ட கற்பனை, அது தான் அவர்களை கெடுத்தது. உருவம் கரைந்து அருவமாகும் என சொல்லி போயிருக்கிறார், அதெப்படி கல்லை பார்த்து தியானிச்சுகிட்டு வந்தா கல் கரைஞ்சு போயிரும்ணா அவர் சொல்கிறார்?...அப்படியாக இருக்குமோ அதன் பொருள்??.. கொஞ்சம் ஆலோசிங்கப்பா... ஆலோசிங்க...கடவுள் மண்டையில புத்திய உபயோகப்படுத்தத்தானே தந்திருக்கார்...அப்படித்தானே...அல்லாம சும்மா ”மலட்டு கற்பம்” சுமந்துகிட்டு பிரசவத்துக்கு காத்திருக்கவா?..மலட்டு கற்பம் பிரசவிக்குமா?...இல்லியே...
"""""""பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.""""""
இதை அருமையா கவனிச்சு புத்திய தெளிய வையுங்க... இல்லைண்ணா அடிச்சு துவைச்சு வெயில காய போடுங்க, கொஞ்சம் அழுக்கு போகட்டும்... எதை பார்க்கணும்ணு தனக்குத்தானே கேட்டுப்பாருங்க, பார்க்கப்படும் பொருள் எப்படி கெடும் எனவும் ஆலோசிச்சு பாருங்க.
அறிவிருந்தா தப்புவீங்க.. இல்லைண்ணா அலகைதான்.
No comments:
Post a Comment