Wednesday, November 9, 2022

ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும்

 ===  "ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும் :

அதல்லாத் தொழுகையது ஆற்றில் கரைத்தபுளி" ===

ஊமை எழுத்தே உயிராச்சு ஓமென்ரெழுத்தே உடலாச்சு நாமிந்தெழுத்தை அறிந்துகொண்டோமென நாடி கும்மி அடியுங்கடீ...

அண்டசராசரங்கள் அனித்திற்க்கும் அனித்து மதங்களுக்கும் அவை எவையும் உண்டாவதற்க்கும் முன்னே அனாதிஅனந்தங்கோடி கற்பாந்தங்களுக்குமுன்னே எக்காலகோடிகளுக்கும் கோடாலங்கிருதங்களுக்கும் முன்னே இருக்கும் எழுத்தறிவு அது இலங்கும் தலமிது...அதுவே கமலக்கண்....

எல்லா பாஷைகளுக்கும் ஒரு மொழியாய் அடங்கி எல்லா தொனிகளும் ஒரு தொனியாய் முழங்கி அங்கிங்கெனாதபடி அகம்புறமாய் விளங்கும் “மெய்பொருள்”

அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்...அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை.இப்படி “இவ்விடுதலையே “ வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....

அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே..

மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர தியான சம்பிரதாயங்கள்...

பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...

முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...




No comments:

Post a Comment