Wednesday, November 9, 2022

பாதையும் பரிசும்

 பாதையும் பரிசும்

(பகுதி-49)
20.03.14,
"இன்னும் கொஞ்ச னாளாவது என்னுடன் இருங்கள்" என தெய்வமவர்கள் பாட்டையரிடம் மன்றாடும் உருக்கமான வரிகள் பற்றி,

"இந்த பெரிய பூமிப்பரப்பிலே மனிதக் கிருமிக் கோடிகளுள் ஒன்றாக உழன்று திரிந்து கொண்டிருந்த என்னை வைத்து பிரளய இறுதித் தீர்ப்பு னடத்துவதற்காக,
பலகாலங்களாக இரவு பகலென்று பாராமல் உலகம் முழுதும் என்னைத் தேடி அலைந்து அலுப்பாய் அலுத்து, உங்களின் சிரசிலே இருக்கும் மதிப்பளுவை மாற்றுவதற்காக என்னைக் கண்டுபிடித்தீர்களே என் அத்தா,

தூல வாழ்க்கையே னிஜ வாழ்க்கை என புகுந்து கொண்டிருந்த எனக்கு ஜீவ வாழ்க்கையைக் காட்டி என்னை மாற்றிய துளப உளவரே,

கொங்கு தேசத்தின் குடிபதி ஒருவனாய் மெய்யைப் பற்றி எதுவுமே தெரியாமல் வசித்து வந்து கொண்டிருந்தேனே, வியாபாரம் செய்து பொருள் சம்பாதிப்பதே மனித ஜென்மத்தின் னோக்கம் என னினைத்து இருள் வழியே போய்க் கொண்டிருந்தேனே என் அம்மா,

ஒருனாள் ஒரு பொழுது இளஞ்சூரிய ஒளி விரிக்கும் காலை னேரத்திலே திங்களுரில் னான் உங்களைக் கண்டேன்-னீங்கள் என்னைப் பார்க்காமல் சென்று கொண்டிருந்த அன்னேரம்- உங்களிடம் னான் சேர னீங்கள் என்ன செய்தீர்கள் என இன்னும் னான் அறியேனே இறைவா,

அந்த சாலை வழியிலே சாடையாய் னீங்கள் சைக்கிணை செய்வது போல எனக்குத் தோண ஓடி னான் வந்து உங்கள் கரம் பிடித்தேனே பரந்தாமா,

உங்கள் விழிகளிலே வழிந்த காமத்தால், பழிகாரி என்று உங்களை உலக மக்கள் கூறினாலும் அதை பொருட் படுத்தாமல் உங்கள் பின்னே தொடரந்தேனே தேவா,

இனி உங்களுடன் வாழும் வாழ்வே னிலையானது னிரந்தரமானது என னினைத்து, என் குடும்பம் சுற்றம் மேலும் என் இளமை சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து மறந்து உங்கள் பின்னே தொடர்ந்து வந்தேனே என் அத்தா,

இன்று எனது பழைய உருவத்தையும் பெயரையும் மாற்றி, புதிம மெய் உருவமும் புதிய னாமமும் சூட்டியுள்ள என் உத்தம சுத்த உறுதி னாயகமே,

னீங்கள் என்னை மாற்றியதானது எதைப் போல என்றால், ஒரு னீண்ட வயதை உடைய குளவியானது அற்ப வயதை உடைய புழுவை எடுத்து வந்து கூட்டிலடைத்து தன் கொடுக்கால் இடைவிடாமல் கொட்டிக் கொட்டி குளவியாக மாற்றி தன் கூட்டிலிருந்து பிரித்து விடுவதைப் போல, அன்று குடும்பம் என்னும் காமலி தேக கூட்டத்துக்குள் புகுந்து கொண்டிருந்த என்னை பிரித்தெடுத்து மாற்றியுள்ளீர்கள், ஆனால் இன்று குளவி தன் கூட்டைவிட்டு குளவியாக மாறியுள்ள புழுவை பிரித்து விடுவதைப்போல,
உங்களைத் தவிர தூலத் துணை ஒருவருமே இல்லாத என்னை தன்னந்தனியே பிரித்து விடத் துணிந்து விட்டீர்களே என் தந்தையே,
இன்னும் கொஞ்ச காலம் என் கூடவே இருந்து விட்டு அதன் பிறகு என்னை விட்டுப் பிரிந்து செல்லுங்களேன் என் அப்பா" என தெய்வமவர்கள் பலவாறாக கண்ணீருடன் மன்றாடி பாட்டையரைப் பிரார்த்தித்து னின்றார்கள்.

பாட்டையரின் பதில்
(தொடரும்)

No comments:

Post a Comment