வாசி யோகம் பண்ணுவது எப்படி?
ஆயிரெத்தெட்டு இதழ் மீது அமர்ந்த சித்தனாதன் ஆயிரெத்தெட்டு யோக நடைமுறைகளை சொல்லி போயிருக்கான்.அதுல ஒண்ணு தான் வாசி யோகம். நம்ம சித்தர்கள் அதை கடைபுடிச்சு ஞானம் அடைஞ்சிருக்காங்க,சித்தி அடைஞ்சிருக்காங்க. ஆனால் அதன் வழிமுறை மங்கி போனதினால் மக்களுக்கு சரியாக பயன் அடைய முடியாம போயிடிச்சு.அதை கொஞ்சம் கவனிப்போம், சித்தனாதன் அருள் செய்வாராக.
அருமையா உட்கார்ந்துக்குங்க, எப்படி வேணாலும் பரவாயில்ல,ஆனா சவுகரியமா அதிக நேரம் உட்கார இருக்கிறது நலம்,அப்படியாக அமருங்க.
ஒண்ணும் பண்ண வேணாம்,சும்மா,..சுகமா...அப்படியே நீளமாக....மிக ஆழமாக மெல்ல சுவாசத்தை ஒன்பது தடவை உள்ள வாங்கி வெளிய விடுங்க...
சும்மா கொஞ்சம் வேகமா கொல்லர்கள் தங்களுடைய ஆலையில் உலை ஊத பயன்படுத்தும் துருத்தியை கொண்டு ஊதுவது போல வயற்றை துருத்தியாக கொண்டு, கண்டம் எனும் உலை வட்டம் வழியாக அண்ணாகெனும் உலைக்குள் இருக்கும் அக்கினி பிரகாசிக்க வேகமாக பதினெட்டு முறை ஊதுங்கள்...ஸ்டாப்...ஸ்டாப்..ஸ்டாப்...
மறுபடியும் ..சும்மா,..சுகமா...அப்படியே நீளமாக....மிக ஆழமாக மெல்ல சுவாசத்தை ஒன்பது தடவை உள்ள வாங்கி வெளிய விடுங்க...
சுகமாக நீண்டு நிமிர்ந்து அப்படியே கழுத்தை கொஞ்சம் மேலாக்க தூக்கி ராஜ நிலையில் முகத்தை உயர்த்தி சிறு புன்சிரிப்புடன் கவனியுங்கள்.
மூடி அமர்ந்திருக்கிற கண்களுக்கு முன்னால் இருள் தோன்றுகிறது..இமைகளின் ஊடாக......கண்களை திறக்க வேண்டாம்..அந்த இருளை கவனியுங்கள்..அது அனாதி கால இருள்...நீங்கள் கருப்பையில் இருந்த போது கண்டுகொண்டிருந்த இருள் தான். உலகத்தில் பிறந்து கண்களை திறந்த பின்னர் உலகத்தின் சூரிய சந்திர ஒளிகற்றைகள் கண்விழி ஊடாக உட்சென்ற பிற்பாடு, இந்த இருளை நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள்.”அன்றுமின்று மென்றும் அழியா பொருளேதடீ சிங்கா-அது இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருளனதடி சிங்கீ” என பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானியர் அப்பா பாடல் நினைவுக்கு வந்து விட்டது...சரி போகட்டும்..விஷயத்துக்கு வருவோம்...
இடது கண்ணிலும் இருள் இருக்கிறது, அப்படியே வலது கண்ணிலும் இருள் இருக்கிறது நமுக்கு முன்னால்...இது தான் ”இருள் வெளியாக” நின்ற பொருள்.இதை “அருள் வெளியாக” மாற்றுவதே வாசி யோகம்.
இடது கண்ணீல் கவனம் கொடுக்க, கொஞ்சமாக பார்த்து வர...இடது கண்ணில் மனம் குவியும்..அழுத்தம் உண்டாகும்....அது போல வலது கண்ணில் மனம் குவிய அங்கும் அழுத்தம் உண்டாகும்.மனம் எங்கு குவிகிறதோ அங்கு பிராணனும் வந்து குவிந்து விடுவதால் தான் அந்த அழுத்தம் .
இடது கண்ணில் மனமும் பிராணனும் குவிந்து ஒரு முக பட துவங்கும் போது, தன்னை அறியாமலேயே தனது நாசியில் சுவாசம் இடது பக்கமாக ஓரம் பற்றி இயங்க துவங்கும்.அது போல வலது கண்ணில் மனமும் பிரானனும் குவிய வலது நாசியிலும் சுவாசம் தானாக மாறி இயங்கும்.இதற்க்கு தனியாக விரல் கொண்டு நாசியை மூடி திறக்க வேண்டியதில்லை. தானாக மாறி மாறி இயங்கும்.....
=====வாசி யோகம் முழுக்க ஒரு பதிவாக சொன்னா கதை கசக்கும்..லியா..??====
அடுத்த ஒரு பதிவுல கொஞ்சம் அட்வான்ஸான வாசி யோகம் பார்க்கலாம்...வருங்கால ஞானிகளே.
No comments:
Post a Comment