Tuesday, November 8, 2022

ஊர்த்துவ கதிண்ணா என்னவாம்?

 


ஊர்த்துவ கதிண்ணா என்னவாம்?


இண்ணைக்கு ஒரு வீடியோ பார்த்தேன்.தமிழ்நாட்டுக்கு பிரபலமாக தெரிஞ்ச ஒரு சித்த வித்யார்த்தி பேசிகிட்டு இருந்தார். ஊர்த்வகதி என்றால் அது பிரமோஷன் கிடைக்கிற மாதிரியில்ல...எப்ப கிடைக்கும்ண்ணு யாராலும் சொல்லமுடியாதுண்ணு சொல்லிகிட்டு இருக்கார். பிரம்மரந்திரத்தை தட்டி உரசிகிட்டு உள்ளுக்குள்ளேயே சுவாசம் பண்றது தான் ஊர்த்வகதி.அப்படி மூக்கையும் வாயையும் அடைச்சு புடிச்சா கூட சுவாசம் உள்ளுக்குள்ள மேலும் கீழும் நடக்கிறது தான் ஊர்த்வகதிண்ணு சொல்லிகிட்டு இருந்தார்..ரெம்ப வருத்தமாக இருந்துச்சு அவர் பேச்சை கேட்க்க.


முன்னாடி வேறொரு சித்தவித்யார்த்தியும் இது மாதிரி தான் சுவாசகதி பண்ணணும், மூக்கு அடைச்சாலும் உடலில் இருக்கிற மயிர்கால் தோறும் சின்ன துளைகள் இருக்கு ,அது வழியா பிராணம் உள்ள வரும்ண்ணு சொன்னதை நினைச்சு பார்த்தேன்.இப்படி அனேகம் கற்பனைகள். ஏண்ணா ஊர்த்வகதியை அனுபவிச்சு பார்க்காத குறை தான் காரணம்.


பிரம்மரந்திரம்ண்ணா ஏதோ தலமண்டைக்குள்ள இருக்கிற ஒரு தூல உறுப்பு தான்ண்ணு நெனச்சுகிட்டு இருக்காங்க. ஏதோ புருவமத்திக்கு மேல நாலு அங்குலத்துல சின்ன ஒரு இடம், அதுல ஒரு ஓட்டை இருக்கு, அந்த ஓட்டை அடைஞ்சிருக்கு கபத்தால என நினைச்சுகிட்டு இருக்காங்க.நாம உடுத்து விடுற சுவாசம் அந்த துளையை போயி தட்டி திறக்கும்ண்ணு கனா காண்கிறாங்க சித்தவித்யார்த்திகள். தலைக்கு உள்ள இருக்கிறது தூல மாமிசம், அழிகி போற சட நிலை உறுப்பு.அதுலயா அழியாத பிரம்மரந்திரம் இருக்குங்கிறத நெனைச்சு பார்க்காம இருக்காங்க.


பிரம்மரந்திரம் என்பது சிறு துளை என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதன் புரிதல் சற்று வித்யாசமானது. நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி.இதை தான் ‘சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே’ என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம். உன் உடல் குளிர்ந்து போகும்

No comments:

Post a Comment