----------------------மெய்யறிவு--------------
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதே குரு மரபு.நாம் முதலி ல் அறிவது உயிரெழுத்தையே,பின்னர் மெய் எழுத்தும் நம் புலன்களை அடைகின்றன.இறைவன் எழுத்தை ஏன் அறிவித்தான் எனில் அது மெய்யறிவு பெற்றற்கண்ணே.சிறாபோது எழுத்தறியுமுன்னே நாம் உயிர் ஈது மெய் ஈதுவென அறிந்திலோம்,அவ்விருட்கண்ணே அருட்திருவுருவாம் ஆசான் அமைந்து,நம் சூண்டாணி விரல் பிடித்து அரியென வரைதல் அருமை.உயிர் எழுத்தின்பால் அவ்வாசான் சூண்ட அவ்வகாரமான உயிரை இரீங்காரமான அருட்சக்தியின்கண்ணே பதிப்பித்தல் இனிதே அமைவுறுகிறது.உயிரின்றி மெய்யில்லை அம்மெய்யும் உயிரின்றி வெளிப்படுமாறில்லையெனவறிந்தே இறையறிவு மெய்யை உயிரின்கண் உடம்பில் அமைத்தான் அமைவுற.மெய்யென வகுப்ப அது விந்து நிலையதாம்,ஆதலின் அகத்திய பெருந்தகை விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார்.அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம்.நாத நாதாந்த நிலையே இறையறிவு,அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும்.மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம்,அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும்.உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே.அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும்,அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம்,ஆதலின் அதன்கண் விந்து பதிற்று.(விந்து-புள்ளி)
No comments:
Post a Comment