Tuesday, November 8, 2022

சாகாத கல்வி

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.
2.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இதில் எங்கே சாகாத கல்வி தெரிவிக்கபட்டுள்ளது என ஆராயலாமே

175 வருஷமாக ஜீவகாருண்யம் பண்ணி பண்ணி செத்துபோனவர்கள் தான் அதிகம்,,ஆனா சாகாத கலையான சன்மார்க்கம் விளங்க காணோம்...எல்லோரும் நல்லாவே கதை கட்டி நம்மள ஏமாத்திவிட்டு போயிட்டங்க...நாம தான் புத்திகெட்டு செத்து போயிகிட்டிருக்கோம்...விளங்கினா சரி...இல்லேண்ணா 175 வருஷமாக போனவங்க வழியிலேயே போயிகிட்டு இருக்க வேண்டியது தான் அல்லவா?.

“பேருபதேசம்” என்கிற இந்த ஒரே ஒரு பகுதி மட்டும் இல்லாமல் உரைநடையை பாருங்கள்...அது சன்மார்க்கத்தை நன்றாக போதிப்பதாகவே இருக்கிறது....அதில் சொல்லபட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் திருவருட்பா பாடல்களுக்கு இசைந்ததாகவே காணப்படும்...ஆனால் பேருபதேச பகுதியின் ”””சாதனைகள் ஒன்றும் செய்யவேண்டாம்”” எனும் ஒரேஒரு சங்கதியே சன்மார்க்கத்தை அழிக்கும் செயல் ஆகும்....அது ”சாகாத கல்வியை” போதிப்பது அன்று. தேவர் குறளில் முதல் அதிகாரத்திலேயே சாகாத கல்வியை தெரிவிக்கப்பட்டுள்ளது என சொல்லும் வள்ளலார், அந்த சாகாத கல்வியை அல்லவா நாம் செயலில் கொண்டுவர உத்தேசித்திருந்திருப்பார்?..தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் ””சாதனைகள் ஒன்றும் செய்யவேண்டாம், அதுவே சாகாத கல்வி”” என்றா சொல்லபட்டிருக்கிறது?..சற்று சிந்தித்து பாருங்கள்.

No comments:

Post a Comment