== பராசக்தி ==
*”மூலம் அறிந்தாக்கால் குதம்பாய் முக்தியும் உண்டாமே”* என குதம்பை சித்தர் பாடல்.எனில் மூலம் என்றால் என்ன என வினவுமிடத்து மும்மூலங்கலை யாவரும் சொல்ல காண்கிறொம்ம். அவையாவன *கீழ்-நடு-மேல்* என மூன்று.இவையை உற்று நோக்குங்கால் உடல் உயிர் பூரணம் என நம் சிற்றறிவால் உணரலாம்,எனில் *“உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்தில் சிறிது ஜனம் வெவ்வேறென்பர்"* என அகத்திய பெருந்தகையும் சொல்லுகின்றார். ஆகையின் மூலமே முக்திக்கு முதற்படியாயிற்று.
*"நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் இஃதின் பயனறிவாரில்லை வேதியராயினும் விளக்கவொண்ணாதது தேவியுந்தானும் திகழ்ந்து நின்றாலே"* என திருமந்திரத்தில் கிடக்க காண்கின்றோம்.ஒளவைபிராட்டியாரும் *"உந்தியுன்னே ஒருங்க சுடர் பாய்ச்சின் அந்தி அழலுருவாம்"* என சொல்ல காண்கின்றோம்.எனின், மற்றொரிடத்தும் *"நாபிசுழியை நயமுற நோக்கிடின் சாவதுமில்லை உடம்பு"* எனவும் சொல்ல பட்டிருக்கிறது.பதஞ்சலியாரோ தமது யோகசாதனை நூலிலும் நாபி சக்கரத்தில் சம்யமம் பண்ண தூல உடலின் ரகசியங்கள் அத்துணையும் அவ்யோகிக்கு கிடைக்கபெறும் என பகன்றுள்லமை காணலாம். எனில் அவ்விரகசிய நிலை என்னவோ எனின் அது நாம் அறியவேண்டியதுவும் அல்லவோ அன்றோ?
வள்ளலர் பிரான் தாம் விளம்பியிருக்கின்ற திரு அருட்பா உரைநடை மூலமாக எண்ணிறந்த ஞான ரகசியங்களை விட்டு சென்றிருக்கிறார். அதின்கண் பார்க்கையில் *சன்மார்க்க கொடியின் ரகசியமே* மேலோங்கி நிற்கின்றது.அதை விளக்குமிடத்து *"நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது ,அந்த நாடியின் மேற்புறம் புருவமத்திக்கு உட்புறம் ஒரு சவ்வு தொங்குகின்றது.அதில் ஏறவும் இறங்கவும் செய்ய நாடிகள் இருக்கிறது"* என்கிறார்.இவையெல்லாம் சுட்டிகாட்டுவது அந்த பராசக்தி நிலையமகின்ற பர நிலை குறிப்பே ஆம் அல்லவா?.
உடலுக்கு என கீழ் மூலம், உயிருக்கு என நடு மூலம், பூரணத்துக்கு என மேல் மூலம். இம்மூன்றையும் அறிந்திருக்கின்ற யோகியவனே மும்மூல யோகி.
*“அடியாகி முடியாகி மூலந்தன்னில் முப்பொருளும் தானாகி நடுவுமாகி அடியாகும் மூலமதே அகாரமாகி அவனவளாய் நின்ற நிலை அணுவதாமே* ~ *_திருமூலர் ஞானம்._*
🙏 நன்றி 🙏
-- ❣திரு. ரியான் ஐயா அவர்கள்❣
No comments:
Post a Comment