======= மெய்ப்பொருள் ======
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராஜபதியே......! வள்ளலாரின் இந்த பாடலின் மறைபொருளும், சாலை ஆண்டவரின் மெய்மணஞானத்தில் பாடல் கீழேயே பதிவிட்டிருப்பதும் ஒருபொருளே தாம்.
--- வள்ளலார்
அறுக்குமட்டு மாய்கைதனை அறுத்துவிட்டு அருமறையின் நெறிவழியே ஆசான்பின்னே உருக்கமுடன் ஊசிமுனைவாசல் பாய்ந்து ஓமுடிந்த பட்டணத்தூடுருவி சென்று வெறுக்காமல் மனம் வெறுத்து நின்றாயானால் வேதந்த திசைநாத வெளியுந்தோணும் விருப்பமுடன் மனமூணி யுறைந்தாயாகில் வெல்லாமற் போவதிலை மெஞ்ஞானத்தை= இவ்விரண்டு பாடல்களும் சொல்லுவது நாதாந்த வரை கடந்த அந்த மெய்பொருள் ககன தகர நடராஜ பதியின் ஓங்கு திருவடியே தான்.
---- சாலை ஆண்டவர்கள்
எது ஒன்று நம் கூடவே அனாதியாக இருக்கிறதோ... எது ஒன்று ஜீவனை விட்டு கணநேரம் கூட விலகாமல் இருக்கிறதோ எது ஒன்றை ஜீவன் தன்னோடு இருந்தும் அறியாமல் இருக்கிறதோ அதுவே தான் மெய்பொருள்... அதை அழிக்கவோ சாவோ தீண்டாது
எது ஒன்று அகம் புறம் என ஊடுருவி எங்கும் தானே தானாக விளங்குகிறதோ, எது ஒன்று தனக்கு ஆதாரமாக ஒன்றையும் பற்றாதிருக்கிறதோ அதுவே மெய்பொருள்
அறிந்தவர் ஒருவர் தொட்டுக்காட்ட அது ஜீவ அறிவுக்கு வரும்... அதுவரை எத்தகைய பிரயாசையினாலும் ஜீவ அறிவிற்க்கு வராது.... ஆனால் நம் கூடவே தான் சதா இருக்கும்
எதை அறிய எலாம் அறிய வகையாகிறதோ அது மெய்பொருள்... எதில் அனைத்தும் அடங்குகிறதோ அது மெய்பொருள்.. எது அனித்துக்கும் ஆதாரமாய் அனைத்தையும் ஊடுரிவி நிற்க்கிறதோ அது மெய்பொருள்... இதை அறிந்தவர்க்கால்லாது மற்றொருவர் இதை சுட்டிகாட்ட இயலா
----❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
No comments:
Post a Comment