=====வள்ளல்பிரானின் தகர மெய்ஞான தகர விளக்கு=====
தீட்சை குடுப்பாங்க ,தவம் பண்ணுவாங்க, பெரிய ஞானதானம் வரை பண்ணுவாங்க, ஆனா மெய்ஞான விளக்கு எதுண்ணு கேட்டா பல்லை இளிப்பாங்க.ஆமா, பெரிய குருமார்கள் கதை தான் இது.நயன தீட்சை என சொல்லி குருபீடம் கட்டுவார்கள்..வள்ளலார் காட்டி சென்ற தகர விளக்கின் ரகசியம் தெரியாமல் சன்மார்க்கம் வடலூர் என சுற்றி செத்து போறது தான் தலை எழுத்து...கண்டதில்லை.அய்யா, வள்ளலார் ஏற்றி வைத்தது தகரகண்னாடி விளக்கு,அது ஞான சூட்சுமம், அது தெரிஞ்சவர் கொஞ்சம் பேர்தான். பாக்கி எல்லாம் பித்தலாட்டங்கள்.விஷயம் தெரியாம குருப்பட்டம் தேடி அலயுர ஜென்மங்கள்.....அந்த விளக்கினால்பெறும் தீட்சையே தகர தீட்சை.அந்த மெய்ஞானந்தான் தகர மெய்ஞானம்.அது தெரியாம கண்ணுதான் கடவுள் எங்கற கூட்டத்தை நம்பி கெட்டது ஏராளம்.
வள்ளலார் சொல்வதை பாருங்கள்,” தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி”. இது தான் விஷயம், தகர மெய்ஞானம் என்கிற தனிப்பெரும் வெளியினில் உலாவுகிறவர் அகர நிலை என்னப்படுகிற அருட்பெரும்ஜோதியாண்டவர்.இதை சூக்குமமாக வைத்து சென்றுள்ளார் வள்ளல் பெருமான்.அது தெரியாம கண்மணி மத்தியிலே ஜோதியிருக்குது ஜீவனிருக்குது என்பது சுத்த முட்டாள்தனம்.இந்த தகர மெஞ்ஞானம் தெரிந்த ஒருவர் மட்டுமே தீட்சை கொடுக்க வள்ளலார் ஏற்றி சென்ற தகர கண்ணாடி விளக்கை கையில் எடுப்பார்கள். தெரியாதவர் வேறுமாதிரியான விளக்கினால் தீட்சை செய்வார்கள். அதிலிருந்து உண்மை ஏது பொய் எது என தெரிந்து கொள்ளலாம். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment