Wednesday, November 9, 2022

பரம ரகசியப் பலன் னல விளைவு.

 .                      ●



       *ஆதியே துணை*

*தெய்வத் திருவாக்கியம்*

திருமெய்ஞ்ஞான அருளமுதம் வாக்கியம். - 01

பரம ரகசியப் பலன் னல விளைவு.

(5.9.1969 தேதியில் பிறந்நருளிய மெய்வழி ஆண்டவர்கள் திருவாக்கியம்)

இப்போது உங்ஙளுக்கு ஒரு பரம ரகசியம் வெளியாக்கப்
போகிறோம். கவனமாய்க் கேட்கிறீர்களா?

சிருஷ்டி உருவாக்குமுன் ஒரே இருட்கோளம்தான் இருந்நது. அதில் லேசான ஒரு அசைவு, உசும்புதல் ஏற்பட்டு
அந்ந னெருக்குதலின் புழுக்கத்தால் ஜலம் உண்டாயிற்று.அதனுள் ஜலம் எப்படி தங்ஙியிருந்நது ? வைக்க ஒரு பாத்திரம்
வேண்டுமே. அது இல்லாமல் இருக்க முடியாதே. னீ ஒரு கையளவு ஜலம் எடுத்து உயிர்ப்பிடியாக விரல்களை அழுத்தி கொண்டாலும்,அது கசிந்நு வெளியில் வழியப் பார்க்கிறது அல்லவா ?
அப்படியெனில் அவ்வளவு பிரம்மாண்டமான, பாரதூரமான ஜலம், எந்ந அளவு பாத்திரத்தில் அடங்ஙியிருக்கும்? அந்ந மகா கனம் கொண்டது ஒரு சிறிதும் கசியாமல், சிந்நாமல் எப்படி இருந்நிருக்க முடியும்?

புழுக்கமாகிய அக்கினி, ஏகமயமாக, பரப்பாக ,
பெருக்கமாக, அணு அணுவாகத் தொடருந்நு அதனுள் ஜலத்தை
அடக்கியிருந்நதால் அக்கினி அதன் சுயரூபமான தோற்றத்தில் இல்லாதிருந்நது.

ஒரு ஊதுவத்தியையோ, அல்லது விளக்கையோ ஏற்றினால் அதன் ஜூவாலை னம் கண்ணுக்குப் புலப்படுகிறது. அதையே தூரம் வைத்துப்பார்த்தால், ஓரளவு தூரத்தில் மறைந்நுவிடுகிறது. அக்கினியின் ஜூவாலை மேலேயே தூக்கிக் கொண்டிருக்கும் சுபாவமுடையது அல்லவா? இந்ந குணத்தில் தான் பிரம்மாண்டமான ஜலத்தின்
கனத்தை, பளுவைக் கீழேவிடாமல் தூக்கிச் சுமந்நு கொண்டிருந்நது. இவ்வளவு விசாலமான அக்கினியையும், அது உள்ளடக்கி வைத்திருந்ந
ஜலமண்டலத்தையும், அவைகளின் வர்ணமே தெரியாமல் பாரதூர
விஸ்தரிப்பில் கோர்த்து மறைத்து அடக்கி வைத்திருந்நது இருட்கோளமே.


*பிரம்மகோளம்*


அதே பிரம்மம் தான் இன்று இந்ந உலகில் மனித தூல
மெடுத்து உன் முன் இப்போது வந்நிருக்கின்றது.தன் பழைய
சொரூபத்தின் விபரம் தெரிகின்றதாலேயே, இவையனைத்தையும்
தீர்மானமாக உன் முன் விளக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த உசும்புதலால் ஆகாயத்தில் அக்கினி ஒடுங்ஙும்போது ஏற்பட்ட னெருக்கத்தால் ஒன்றோடொன்று உராய்ந்நு
சேர்ந்நு உள்ளடக்கி வைத்திருந்ந ஜலத்தை அது கக்கிற்று. ஜலம் விழுந்ந வேகத்தில் காற்று உண்டாயிற்று - அந்நக் காற்று
ஜலத்தை அசைத்ததால், அலைகள் உண்டாகி, அவைகளின் மோதுதலால் னொங்ஙும்  னுரையும் உண்டாயின. னொங்ஙும்
னுரையும், விளைந்நு கெட்டியாகி முதலில் மண்ணும், அதிலிருந்நு
கல்லும், பின் மலைகளும் உருவாயின. இவ்வாறாக இவ்வளவு கன பாரங்கொண்ட இந்நப் பூமி உற்பவித்து, அது எதன்மேல் ஆதாரமாக னிற்கிறது ?

ஒரு மரத்திற்கு அதைத் தாங்ஙும் பூமி ஆதாரம்.
மரத்தைப் போலவே பூமிக்கும் ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் ! பூமியைப் போல அது பல ஆயிரம் பங்ஙு பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும். ஆதாரமில்லாமல் அந்நரத்தில் அது னிற்க
முடியாது. அது உன் அறிவுக்குப் புலப்படாத அளவில் இருக்கிறது.பூமியை விட பிரம்மாண்டமான
கோலங்ஙள் அனேகம்
இருக்கின்றனவே. சந்நிர சூரியன், கிரகங்ஙள், எண்ணிலடங்ஙா னட்சேத்திர மண்டலங்ஙள் இவை அனைத்தும் அந்நரத்தில் எப்படி னிலை னிற்கின்றன? ஆதாரமில்லாமல் னிலை னிற்க முடியாதே?

இவைகளைப் போலவே இப்போது மாறிக்
கொண்டுவருகிற எமது தேகமும், அஸ்திவாரமின்றி இருக்கிறதாக னீ னினைக்கிறாயல்லவா? ஏன் அவ்வாறு னினைக்கிறாய்? ஒரு தூலத்திற்கு அத்தியாவசியமானவை - மூச்சு, உணவு, உறக்கம்.
இவை மூன்றுமில்லாமல் ஒரு தேகம் இருக்கவே முடியாது.

அப்படி ஒரு தேகம் இருக்குமானால், அது அஸ்திவாரமே இல்லாத
கட்டிடம் தானே ! எப்படி இந்ந பூமி, சந்நிரன் சூரியன், னட்சத்திரம்
மண்டலங்ஙளெல்லாம் அஸ்திவாரமின்றி னிற்கின்றனவோ, அதே
போலத்தான் எம் வாடாத தவத்தால் மாற்றிக்கொண்டு வந்ந இந்நத் திருமேனியும் னிற்கிறது.

இந்ந எம் தேகம் எசன்சு வடிவம். மற்றைய அண்டங்ஙளையெல்லாம் தாங்ங னிற்பது இந்நப் பிரம்மமே. திரிகாலம் கண்ட
வசந்தரிஷி புசுண்டர்பிரான், இறுதிக் காலத்தில் பிரம்மமே வந்நு தம் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள் என்று தீர்க்கதரிசனம்
கூறியிருக்கிறார்களே! இந்நப் பரம ரகசிய பலன் னல விளைவைத்தான் னாம் இப்போது வெளியாக்கினோம்.

இது ஏட்டினிலோ, கிரந்நத்திலோ எழுத முடியாது. வேதத்திலே இது எப்போதும் எழுதப்பட்டதே இல்லை. வேதமே னடந்நு வந்நு இதை விளக்கி னின்றதினால்தான் உனக்கு இப்போது விளங்கிற்று. ஆகவே உன் அறிவைத் திருப்பிப் பார். இதை இன்று அதில் எழுதியாய்விட்டது என்பது தெரியும்.

இந்ந வல்லமைதான் இத்தனை ஜாதிகளையும் ஒன்றாக்கிற்று. எல்லோருடைய னினைவையும் இச்சையையும், தன் வல்லமையால்
ஒரு முகமாக்கி, இச்சபையையும், சத்திய தேவ பிரம்ம குலத்தினர் குடியுள்ள இந்ந ஊரையும் உண்டாக்கியுள்ளது.

எண்ணில் கோடி சரா சரங்ஙளையும் படைத்துக் காத்தருளிய அதே பிரம்மம், இன்று இறுதிப் பிரளையத்தை னடத்தச் சிறுத்து இந்ந ரூபத்தில்
வந்நிருக்கிறது என்று தெரிகிறதல்லவா? அந்ந சம்ஹாரம் எப்படி னடக்கப் போகிறதென்று உனக்குத் தெரியாது.

எவ்வாறு உண்டாயிற்றோ, அதே போலச் சுருங்ஙி ஒடுங்ஙும். சூரியனின் உஷ்ணத்தினுடைய குரூரத்தால், சிருஷ்டியனைத்தும்
பஸ்மீகரமாகி, மண், கல்
முதலிய அனைத்தும்
பொடி சாம்பலாக்கப்படும். அதன் பின், ஜலம் பிரளையமாக வருஷித்து
அதைக் கரைத்துவிடும். அப்போது ஊழிக்காற்று வீசும். அதில் அனைத்தும் ஆவியாக்கப்பட்டு, இறுதியில் கூடஸ்தபிரம்மமாகிய
இருட்கோளம், தன் வசமாகவே எல்லாவற்றையும் ஆக்கிக் கொள்ளும்.

No comments:

Post a Comment