=====வெட்டவெளி சாதனை====
“வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடீ-குதம்பாய் பட்டயம் ஏதுக்கடீ”
இந்த பாடலை படிச்ச உடனேயே இவனுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு...கெளம்பிருவான் உடனேயே...பாயை விரிச்சு போட்டு அம்மணமா உக்காந்துகிட்டு கழுத்தை நிமிர்த்தி உக்காந்துகிட்டு மேகமில்லாத ஆகாயத்தை உத்து உத்து பாக்கணும்பான்.கண்ணுல நீர் வழியற வரைக்கும் உத்து பாக்கணும்,அப்புறமா கண்களில் இருந்து நீர் பொல பொலண்ணு வழியும்,வடிஞ்சு வாயில எட்டி உப்புகரிக்கும்,இது தான் அமிர்ததாரை என்பான்.சில கூமுட்டைகள் இதுதான் அமுரி உப்புண்ணு சொல்லிகிட்டு திரிவானுங்க.
இன்னும் கொஞ்ச பேரு இருக்காங்க,தலைக்குள்ள ஒரு வெற்றிடம் இருக்கறதாம்,அதான் சிற்றம்பலமாம்,,அதான் இறை வெளி,அதையே நெனச்ய்சு தியானம் பண்ணணுமாம்.வேற சிலர் இருதயத்துல வெற்றிடமா ஒரு சின்ன வெளி இருக்காம்,அதான் மெய்யான வெளியாம்பாங்க.
இந்த ஒலகமே ஒனக்குள்ள தாம்பா இருக்குது,இப்படி சொன்னா உடனேயே இவன் மனசு கற்பனை பண்ணிக்க ஆரம்பிக்கும்,மூலாதாரத்த்ல பூமி இருக்கு,மணிபூரகத்த்ல அக்கினி இருக்குண்ணு கதை கட்ட ஆரம்பிப்பான்.கிரகங்கள் நட்சத்திரங்கள் எல்லாம் தலமண்டைக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கறதா பாவனை பண்ணிக்குவான்.
உலகம் உனக்குள்ளே இருக்கிறதுண்ணு சொன்னா அதன் சூட்சுமம் வேற.உனக்கு உள்ள இருக்கிறது வேற ஒண்ணுமில்ல,அந்த “நீ” தான்.”நீ” தான் இந்த உலகமா விரிஞ்சு இருக்குறே.உனக்குள்ளத்தான் இந்த ஒலகம் தோன்றி ஒடுங்குது.அந்த “நீ” உனக்குள்ள இல்லைண்ணா மிஞ்சி இருக்கிறது தான் வெளி,வெற்றிடம்.இது தான் மெய் வெளி.இங்க எந்த ஆண்டவனுமில்ல,எந்த கடவுளுமில்ல, எந்த உலகமுமில்ல,எந்த கற்பனையுமில்ல,எந்த கதையுமில்ல.
சொல்லிமுடிக்கும்போது பட்டயம்ண்ணா என்னாண்ணு சொல்லாம போன நம்மள கட்டிவெச்சு உதைப்பானுவ அல்லவா,அந்த பயம் வேற இருக்கு.அப்ப சொல்லிருவொம்,அப்படியாச்சும் விடுவாங்களாண்ணு பார்ப்போம்.இப்பல்லாம் லேண்டுக்கு பட்டா போட்டு குடுக்கறாங்களே,இதைஅ குமரிமாவட்ட தமிழ்ல பட்டயம்ண்ணு தான் சொல்லுவாங்க.இப்பவும் பட்டாண்ணு சொல்ரது நியூ ஜெனரேஷன் மகள் மட்டும் தான்,ஓல்ட் ஜெனரேஷன் மக்கள் பட்டயம்ண்ணும் தான் இப்பவும் சொல்லுவாங்க.
முன்னைய மன்னர்ஆட்சி காலகட்டத்துல இந்த பட்டயம் செம்ப தகிடுல குடுத்தாங்க.செம்பு பட்டையில இருக்கிறதினால செம்ப பட்டயம்ண்ணு பேர்.வேற ஒண்ணுமில்ல “ஓணர்ஷிப்” தான்.
அது போல,”ஓணர்ஷிப்” இல்லாம இருக்கணும்ங்கிறது தான் சாதனையின் நுணுக்கம்.அதான் வெட்டவெளியை மெய்யென்றிருப்போர்க்கு ஓணர்ஷிப் ஏதுக்கடீ என்கிறார்.
No comments:
Post a Comment