Tuesday, November 8, 2022

னாதம்=னாதத்தொனி;விந்து=சுக்கிலம்; னாதன்=னாதத்துக்கு அதிபன்(குரு)”

 ”னாதம்=னாதத்தொனி;விந்து=சுக்கிலம்;

னாதன்=னாதத்துக்கு அதிபன்(குரு)”
==========================================

நாதம் உண்டான பிறகே மனிதப்பிறவியில் ஆண் பெண் என்ற வித்தியாசம் ஏற்படுகிறது.அது வரையில் ஒரே தன்மை தான்.ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லாமல் ஒன்றாகவே விளையாடுவார்கள்.

பெண் பருவமடைந்ததும் அவளது தேகத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.குணத்திலும் அப்படியே.

ஆணுக்கு பதினாறு வயது எட்டினதும் அவனது தேகத்தில் சுக்கிலம் உற்பத்தியாகி,பாலனின் தொனி மாறி,கம்பீரமான ஆண்மைகுரல் எழும்புகிறது.ஆக நாதம் தான் ஆண்.இந்த நாதமில்லையேல் ஞானமில்லை.னாதமே ஞானத்துக்கு மூலம்.

நாதன் உன்னை தொட வேண்டுமென்றால் உன்னிடத்தில் நாதம் இருக்கவேண்டும்.அப்போது தான் உனது நாதத்தை எழுப்பமுடியும்.ஆதலால் தான் இளமை ததும்பும் போதே ஞானத்தை அடைய வேண்டுமென்கிறோம்.ஆதலால் தாம் ’இளமையில் கல்’ என்று எழுதி வைத்தார்கள்.இளமையில் நாதம் னிரம்பி வழியும்.ஞானத்தை எளிதாக பற்றும்.அதை விட்டு விட்டு ஞானத்தை வயது முதிர்ந்து அடையலாம் என்று சொல்லுவது உதவாத பேச்சு. பதினாறு வயதுக்கு முன்னும் அறுபது வயதுக்கு பின்னும் ஞானதீபத்தை ஏற்ற முடியாது.

[புரிகிறவங்க புரிஞ்சுக்கிடுங்கோண்ணேன்.....ரியான் உள்விளி]

No comments:

Post a Comment