===சுய வஞ்சனை===
அப்போதெல்லாம் பள்ளியில் படிக்கிற காலம், இண்ணைய மாதிரி எல்லாம் பிள்ளைங்கள யாரும் கவனிக்கிறதில்ல, கிராமபுறங்களில் சொல்லவே வேணாம்.பிள்ளைங்க காலைல எந்திரிச்சு பல்லு கூட வெளக்காம பள்ளிக்கு வரும், தலை சீவி வாரி இருக்காது, மொகத்துல அங்கங்கயா திட்டு திட்டா சாம்பலை அள்ளி பூசின மாதிரி பவுடம் மட்டும் அப்பியிருக்கும்.
ஜலதோஷம் வந்து மருந்து மாத்திரை ஏதும் சாப்பிடாம, சாப்பிடாம என சொல்ல கூடாது,பெற்றோர்கள் கவனிக்காம மூக்கு ஒலிங்சுகிட்டே இருக்கும், அப்பப்ப கையிலாக அதை இழுத்து துடைச்சுகிட்டே பாடம் படிக்கிற காலம்.அணிஞ்சுக்கிறதுக்கு ஒரு ட்ரஸ் தான் இருக்கும்,அதுவும் மூணு கண்டி வெச்சு தைச்சிருக்கும்.அதை தினோம் சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சப்புறம் தண்ணியில போட்டு அலசுரது,துவைக்கிறதுக்கு சோப் ஒண்ணும் கிடையாது,ரெண்டு அடி..பக்கத்துல கிடக்கிற கல்லு மேல..அதான் வாஷிங் மெஷீன்.
மத்தியானத்துக்கு என ஸ்னாக்ஸ் - லஞ்ச் பாக்ஸ் ஒண்ணும் இல்ல,வட்டர் என் சொல்லுகிற டிபண் பாக்ஸ், காலைல அம்மா அதுல பழைய சாதத்தை புழிஞ்சு உண்டை உண்டையாக வெச்சிருப்பாங்க, ஊற்காய் என எதாச்சும் தொட்டுக்க. பக்கத்துல இருந்து சாப்பிடுற நண்பர்கள் கூட்டம் பார்க்காம இருக்க கொஞ்சம் தள்லி போயி கையால மறைச்சு சாப்பிடுவோம்,ஏதோ சிக்கண் மசாலா லெக் பீஸ் சாப்பிடுர மாதிரி.அப்புறம் கை கழுவுற வழக்கம் ஒண்ணும் இல்ல, ஏண்ணா பள்லியில பைப் தண்ணி வசதி ஒண்ணும் இருக்காது.கூட்டம் கூட்டமா போகும் ,ஆம்பிளைங்களும் பெம்புளைங்களும் பக்கத்து வீட்டுக்கோ அல்லது பக்கத்து கொல்லை கிணற்றடிக்கோ, அல்லது ஊர் குளம் மட்டை என போயி கழுவிக்க வேண்டியது தான்.இதுக்குள்ள ஜெனரல் ஆப்டிட்யூட் என சொல்ர நாட்டு விஷயங்கள், வீட்டு விஷயங்கள் என பேசிகிட்டே பொறது.
புது சட்டை நிக்க்ர் போடுறதுண்ணா அது பள்ளி சுற்றுலா போறதுக்கும்,ஆண்டுவிழாவுக்கும் மட்டுந்தான்.அண்ணைக்கு கிழிஞ்சது ஒண்ணும் போடுறதில்ல, சில பசங்க கிழிஞ்சதும் போட்டுக்கிட்டு வருவாங்க. சில பேரு அடுத்த வீட்டு பைய்யனோ புள்ளையோ வீட்டுக்கு போயி அவங்க ட்ரஸ் இரவல் வாங்கித்தாணு சொல்லி தாயார் கிட்ட அழுது மன்றாடி, அப்படி எதாச்சும் கிடைச்சா அதை பெருமிதமா போட்டுகிட்டு வந்து முன்னாடி நிக்கும்.,ஏதோ அவங்க சொந்த ட்ரெஸ் மாதிரி நெனைப்பு முகத்துல பூரிச்சிருக்கும்.
அப்புறம் காலேஜ் போற வயசு வந்திச்சா..பருவ சபலங்கள் எட்டிபார்க்க ஆரம்பிச்சிரும். வீட்டில இருந்து ”டைம்டேபிளுக்கு” கட்ட பனம் வேணும்ண்ணு அம்மாவ நச்சரிச்சு..அம்மா போயி அப்பாவ நச்சரிச்சு..அப்பா மகன் ஏதோ கலக்டருக்கு படிக்கிற மாதிரி நெனச்சு..வெளிய எங்காச்சும் போயி யார்கிட்டயாவது கடன் வாங்கி கொண்டுவர...அதை லவட்டிகிட்டு...ரெண்டு ரூவாக்கு கிடைக்கிற சவ்வாது பவுடர பன்னீர் விட்டு குழைத்து அங்கங்க அப்பிகிட்டு ஏதோ பெரிய வீட்டு புள்ள மாதிரி காலேஜுக்கு போறது.சாயந்திரம் ஆகும்போது அங்கங்க கூட்டம் போட்டு வற போற பொம்பிளைங்கள வாய் பார்த்து நிக்கறது.இவன் மனசுல எல்லாம் இவன் ஏதோ பெரிய வீட்டு சீமான்ங்கறது தான். திருப்பி வீட்டுல வரும் போது குடிக்க கஞ்சி கூட இருக்காது எங்கிறது வேற விஷயம். பச்ச தண்ணிய குடிச்சுகிட்டு ஏதோ மாங்காயொ தேங்காயோ சாப்பிட்டு பசி அடக்கிறது.
வார விடுமுறை வந்துச்சுண்ணா அடுத்தவன் சக்கிளோ, அல்லது அடுத்தவன் மோட்டார் சைக்கிளோ எடுத்து கிட்டு எதாவது பெரிய பங்களா முன்னாடி போயி நிக்கிறது,பார்க்கிற பொம்பிளைங்க அந்த பங்களா இவனோடதுண்ணு நினைக்கணும்,அதுக்குத்தான் இந்த எச்ச வேலை.வாய்ப்பு கிடைச்சா பெரிய பங்கலா, பெரிய வசதியான வீட்டு கார் மேல ஒய்யாரமா சாய்ஞ்சு நின்னுகிட்டு போஸ் குடுக்கிறது. பெண்பிள்ளைங்க இதை பார்த்து இவனுக்கு மயங்கணும் என்கிர நப்பாசை தான் எல்லாத்துக்கும் காரனம். இவனுக்கு சொந்தமா ஒண்ணும் இல்ல, ஆனா பெருசா காட்டிக்கணும்.இது தான் விஷயம்.
இந்த மனோ வியாதி எல்லா காலத்து மக்களுக்கும் இருந்துகொண்டே தான் இருக்கிறது.சின்ன வயசுல காட்டிகிட்டோம்ண்ணா அது அறிவு வலராத காலம்ண்ணு சொல்லி சமாளிச்சுக்கலாம், அறிவு வர பக்குவமான வயசு வந்தும் கூட அற்ப விஷயங்களுக்காக தன்னை பெரிய ஆளாக காட்டிக்கிறதுக்கு அடுத்தவன் நிழல்ல நின்னு வெயிலாறுகின்ற குணம் மக்களுக்கு விட்டு போகாமல் இருப்பது என்பது கேவலம்..அடுத்தவன் அறிவு,அதுத்தவன் பெருமை,அடுத்தவனின் புத்திகூர்மை, அடுத்தவன் பொருள், அடுத்தவன் போடுற பதிவு இப்படி அடுத்தவன் விஷயங்கலையே எடுத்து தன்னோடதா காட்டிகிட்டு, அதையே பெருமிதமா நினைச்சிட்டு இருக்கிறது எவ்வளவு அற்பத்தனம்,சற்று சிந்திக்கத்தான் சொல்லுகிறேன்.மனதில் மலர்சி உண்டாகட்டுமே.....
No comments:
Post a Comment