""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
===================================
""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.அப்படி உயிரை தூய்மை செய்வது “தமிழ்” எனும் சொல்லில் இருக்கும் அறிவுகலை என்பது அறியவேண்டிய முக்கிய அறிவாக இருக்கின்றது.அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம்.ன் ண் ல் ள் என்பவை வெவ்வேறு ஓசை நயத்தினை கொண்டது..அவை துடும் இடங்களும் வெவேறானவை...பொதுவாக உயிர் எழுத்துக்கள் எங்கும் படாமல் வெளிவரும்,, மெய்யெழுத்துக்கள் படகூடிய இடங்கள் ஒவ்வொன்றும் வெவேறு இடங்கள்...க் என சொல்ல அது ஒரு இடத்தில் ஒட்டி இருக்கும்..ங் என சொல்ல வேறொரு இடத்தில் ஒட்டும்...ச் என அப்படி ந் வரை ஒவ்வொரு இடம் இருக்கிறது....ஆனால் உயிர் எழுத்துக்கள் எங்கும் பதியாது நீர் ஒழுகி வருவது போல ஒழுகும் தன்மை உடையது..உயிர் அறிவுகளில் ஆறரிவு கொண்டவன் மனிதன், அந்த ஆறாவது அறிவு என்பது வாக்கறிவு...அதாவது பேச்சறிவு..பேசும் திறன்..இது மனிதனை ஏனையவைகளில் இருந்து வேறிட்டு காட்டுகிறது. இது இயற்க்கை விளக்கம், இயற்க்கை உண்மை . இ்யற்கை வெளிப்பாடு. இங்ஙனம் வாய் மொழியான ஓசைகள் மனிதன் கண்டு அறிந்து அதனுள் இருக்கும் அறிவுகளைகளை உயிரில் பதித்து உயிர் தூய்மையை அடையவே அனாதி இயற்க்கை கடவுளருளால் வழங்கபட்டிருக்கிறது.இதனை வாக்கு என வள்ளல் பெருமான் விளக்கி இருக்கிறார்..அதாவது சூட்சுமை பரா பைசந்தி மத்திமை வைகரி என நுண் ஓசையிலிருந்து விரிந்து செவிபுலனுக்கு வருவதை வைகரி என முடிக்கிறார்...இப்படி சூட்சுமை எனப்படும் வாக்கானது வைகரி நிலையினால் காதுக்கு எட்டுகிறது. இது அட்சர நிலை சுருக்கம்.அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்