*ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்*
--- *_பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை_*
குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும்.
வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல
ஒரு முனையில் *“நான்”* என இருக்கும்.. மறு முனையில் *மனம்* என இருக்கும்.. இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர்.
*அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே* --- *_திருமூலர்._*
மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும்
ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா?
இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும்
உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....
தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என.
உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே* - *_அகத்தியர் ஞானம்_*
No comments:
Post a Comment