Tuesday, October 10, 2023

கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ====

 ==== கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ==== 


”ஐந்துகரத்தனை யானை முகத்தனை 

இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை

நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”


வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொளுதல் நலம் அல்லவா?. உங்கள் அருமையான விடைகளுக்கு காத்திருக்கிறேன்....


நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு?


திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?.. எதாவது வித்யாசம் உள்ளதா என்ன?..


யோகசரியை படி எல்லா ஆதாரங்களிலும் ஒவ்வொரு ஆதாரமூர்த்திகள் தத்தம் துணைவியருடன் இருப்பதாக சொல்லபடுகின்றது, ஆனால் மூலாதாரத்தில் பராசக்தியும் கணபதியும் சொல்லபடுகின்றது... ஏன் சிவனார் எங்க போனார்?


திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெலாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?


பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர். அப்போது சிவன் கணபதிக்கு பிள்ளையா?.. மூலாதார பராசக்தி அந்த பிரணவ நாதரின் துணைவியரா என சந்தேகம் எழும் அல்லவா?


மூலாதாரத்தில் ஆதார வழக்கப்படி பராசக்திக்கு கணவர் தானே இருந்திருக்கவேண்டும்... குண்டலினிதாய்+பிரணவநாதர். 


மட்டுமல்ல மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள். 


கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ங்னம் தகும்?


பிரணவம் தானே ஆதிமூல பரம்பொருள்.. அது கணபதி தானே? அப்போது சிவன் கணபதிக்கு மகன் என சொல்லகூடாதோ என்ன?


எல்லா கணங்களுக்கும் அதிபதியானவர் கணபதி... அவர் பிரணவ சொரூபர்... வேதமூர்த்தி... அவர் இருப்பிடம் மூலாதாரம் .. அவர் துணைவியாக இருப்பது வல்லபை எனும் பராசக்தி... இப்படி யிருக்க சிவனாருக்கு மகன் என கணபதியை ஏன் சொல்லுகின்றனர்... கணபதியல்லவா இவர்களுக்கு முன்னே இருக்கின்றவர்?


 சிவனார் அல்லவா கணபதிக்கு மகன் என சொல்லபட வேண்டும்?..சைவர்கள் குழப்பிவிட்டனரோ...?


தந்தைக்கு முன்னே மகன் உதித்தானே எனும் திருமந்திர பாடலும் இதற்க்கு வலு சேர்க்கிறது அல்லவா?


அப்ப சிவனுக்கும் முன்னரே இருக்கிறவர் கணபதி என்பது திருமந்திர கருத்து என புரிகிறதல்லவா?


ஆனா பாருங்க...சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்....வேறு யாருக்கும் இது கிடையாது..பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது


என்னிடம் ஒரு பழைய ஏடு இருக்கிறது... அதின் பிரகாரம் யானைமுகத்துடன் இருக்கும் தலைவருக்கு சிவன் என பெயர். 


கங்கைசூடி பிறை அணிந்து நீறுபூசி எலும்பும் கபாலமுமாக இருப்பவருக்கு மகேஸ்வரன் என பெயர். சிவன் என்பது கணபதியை குறிக்கும்....அதனால் தான் பராசக்தி மனைவியாக உள்ளாள்....இந்த கனபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... இவர் பராசக்தியுடன் போகித்து மும்மூர்த்திகலை ஈன்றாராம்.


ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்...இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்..அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.


ஓம் என்பது இவரின் பெண்பாகம், ஆண் பாகம் மற்றொரு மந்திரம்.. 


இவரின் லிங்கம்”முப்பத்து மூணு மாறு” நீளமாம்...இதை தான் லிங்கபுராணமும் “பெரிய சைஸ் லிங்கமாக” சொல்கின்றது.. இந்த லிங்கத்தைத்தான் சிவனார் சதா தியானம் செய்கிறாராம்...அல்லாது சிவனார் தானே தன்னுடைய லிங்கத்தை அல்ல, என்பது சாரம்...மும்மூர்த்திகலையும் சிருஷ்ட்டித்துவிட்டு கணபத்சிவமான இவர் எல்லா தந்திரங்கலையும் மந்திரங்கலையும் உபதேசித்துவிட்டு தன்னுடைய உடம்பை அவிழ்த்தாராம்....மீதமானது நீறு...அதை சிவனார் என நாம் சொல்லும் மகேஸ்வரனார் உடம்பெலாம் பூசிகிட்டாராம்...


சாதாரனமாக நாம் சொல்வது போன்று சிவன் தான் எல்லோருக்கும் முதல் பிறந்தவன் என கொண்டால், சிவனாருக்கு பூச நீறு எங்கிருந்து கிடைத்தது என ஒரு கேள்வி வரும்...ஏண்ணா சிவனார் பூசியிருப்பது சுடுகாட்டு சாம்பல்... அப்ப சிவனாருக்கு முன்ன சுடுகாட்டுல போன ஒருவர் இருந்திருக்கவேண்டும் எனும் பொருள் நாம் எல்லோரும் மறந்து போனோம்!!


சிவன் தானே கங்காலன் என நாம் சொல்லிகிடுரோம்..வேறு யாராவது இருக்காங்கலா என்ன? 


அது சுடு காட்டில் இருந்து கிடைக்கும் நீறு...”திரு” நீறு... திரு என்பது கணபதி தான்....அதுக்கு ”ஸ்ரீ” என்ற பெயரும் உண்டு. 


யாருடைய மண்டை ஓடு?..சிவனாருக்கு அவருக்கு முன்னால மண்டை ஓடு எங்கிருந்து கெடைச்சுது?


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

No comments:

Post a Comment