Wednesday, October 11, 2023

வைராக்கியம்

 ஒரு சின்ன கதை பார்ப்போம்.

ஒரு குருவிடம் பலபேர் சீடர்களாகி பயின்று வந்தனர்.ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் கற்கும் ஆவலில் வந்து சேர்ந்தான்.அருமையான சுறுசுறுப்புள்ளவன் தான்.கொஞ்ச காலம் சென்றது.குருவும் பலவித போதனைகளை செய்து கொண்டிருந்தார்.சீடனும் சிரத்தையுடன் பயின்று கொண்டிருந்தான்.

ஒருநாள் குருவானவர் சீடனிடம் தினமும் ஓர் தேங்காய் கொண்டு வர சொன்னார்.சீடனும் அதை சம்மதித்து தினம் ஓர் தேங்காய் கொண்டு வந்தான்.சிலநாள் சென்றபோது அவனுக்கு தேங்காய் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.யோசித்துப் பார்க்க என்ன செய்வது என அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தில் பலபேருக்கு சொந்தமான தெனந்தோப்புகள் பல இருந்தன.தினம் ஒரு தேங்காய் திருடுவதனால் ஒன்றும் ஏற்படப் போவதில்லை,யாரும் சீக்கிரம் கண்டு பிடிப்பதும் இல்லை எனும் நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோப்பில் இருந்தும் ஒரு தேங்காய் எனும் கணக்கில் பறித்துக்கொண்டு குருவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.

குருவோ சொன்னது மட்டுந்தான்,இவன் கொண்டு வருகிறானா என ஒன்றும் அவர் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை.அவர் அவர் பாட்டுக்கு அவருடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.கொஞ்ச காலம் சென்றது.சீடன் திருடுவதில் தேர்ந்து விட்டிருந்தான்.இப்போது இவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது, நாம் எதற்கு ரெம்ப கஷ்ட்டப்பட்டு தேங்காயை திருடி குருவுக்கு கொடுக்க வேண்டும்? அவர் தேங்காய் கொடுப்பதை கண்டு கொள்வதே இல்லை.நாம் கொடுக்காமல் இருந்தாலும் அவர் கண்டு கொள்ளப் போவதில்லை எனும் முடிவுக்கு வந்து விட்டான்.அன்றிலிருந்து குருவுக்கு தேங்காய் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான.

பல தோப்புகளில் இருந்து ஒவ்வொரு தேங்காய் பறித்தவன் இப்போது குலை குலையாக திருட ஆரம்பித்தான்.இப்படி குருவையும் ஏமாற்றி,தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பெரும் திருடனாக மாறிக் கொண்டான்.அவனுடைய சுய இருப்பு சுயமாக மலர்ந்தது.இவன் ஆசிரமத்துக்கு வராமல் இருக்கிறானே என குரு கவலைப்பட்டதே இல்லை.

No comments:

Post a Comment