மகா சிவராத்திரியின் மறை இரகசியம்
===============================
சாத்திரங்கள் சம்பிரதாயங்களும் தந்திரங்களும் யோகங்களும் இந்த ஐக்கிய சொரூபத்தினை பலவாறாக விளக்குகின்றன.
ஆயினும் முக்கியமாக சொல்லபடுவது சிவ சக்தி இணைதல் என்பதே என்பது கவனிக்கிறோம்.
ஆயினும் சிவராத்திரி என்பதின் மறை ரகசியம் அறியபடவேண்டியதே தாம். சற்று நின்று உற்று கவனிக்கில் ஒரு சங்கதி புலப்படும்.
சக்தி யோனி எனும் ஆவிடையில் அமைந்திருக்கும் சிவ லிங்க அடையாளத்தின் தன்மை ஆகும்.
யோனியில் இருந்து லிங்கம் பிறக்கும் தன்மையிலே தான் நாம் காண்கிறோம். லிங்கமானது யோனியில் உட்செல்லும் அமைப்பில் இல்லை.
யோனியில் உட் செல்வது போகம். ஆனால் இங்கே நாம் காண்பதோ லிங்கமானது உட்செல்லாமல் வெளி வரும் அமைப்பே தான். லிங்கத்தின் தலை பகுதி அதாவது மொட்டானது பூவினில் பொருந்த பெறவில்லை. யோனியில் உள் பொருந்த அமைக்க பெறவில்லை.
பூவினில் இருந்து மொட்டு மலர்ந்த ரகசியந்தனை கண்டவர் எவரோ அவர் எனக்கும் குருவே.
சிவராத்திரியின் ரகசியம். மெய்பொருள் என அறிவாயாக.
இது மெய்பொருள் ரகசியம் ஐயா..
உலக பொது ரகசியம். எல்லோரிடமும் அமைந்திருக்கும் மெய்பொருள் விஞ்ஞானம்.
நன்றி
No comments:
Post a Comment