Tuesday, October 10, 2023

*சிலை வழிபாடு அவசியமா இல்லையா?*

 *சிலை வழிபாடு அவசியமா இல்லையா?*


எல்லா மதங்களிலும் சிறு வயது முதல் சாகும் வரை எல்லோருக்கும் வழிபாடு என்று ஒன்று எடுத்து வைத்தது எதற்கு?

இறைவன் திருவடி சென்று அடைவதற்கே என்று எல்லா வேதங்களும் ஒத்துக் கொள்ளுகின்றன.


சிலை வழி பாட்டின் அவசியம் என்ன?

நாம் சொல்லும் கோவில் மனிதன் உண்டாக்கியது.அந்தக் கோவிலில் உள்ள சிலையை உண்டாக்கியதும் மனிதனே.எனவே மனிதன் உண்டாக்கிய பொருளுக்கு யார் ராஜா?கட்டாயம் நாம் உண்டாக்கியது நமது கட்டுப்பாட்டிற்கு உள்தானே இருக்கும்.


இப்போ இந்த சிலையை மக்களாகிய நாம் அனைவரும் தெய்வம் என்று வணங்குகின்றோம்.என்ன காரணத்திற்காக?

அதில் காயத்திரி மந்திரம் ஓதி உரு ஏறி இருப்பதாக நமக்கு சொல்லி வைத்தார்கள்.

இங்கே வேதம் ஒரு கேள்வி எழுப்புகின்றது.காயத்திரி மந்திரம் ஓதியதால் உரு ஏறிய இந்த சாதாரண கல் தெய்வம் ஆகிற்று என்றால்,இதனை ஓதிய அய்யர் தெய்வத்திற்கும் தெய்வமாகி இருக்க வேண்டும் அல்லவா?அப்படி ஆகிற்றா?இல்லையே அப்போ இந்தக் கல் தெய்வம் ஆகியிருக்குமா இல்லையா என்பதனை அவர் அவர் யோசனைக்கு விட்டு விடுகின்றேன்.


இந்தச் சிலையும் நீங்களும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கட்டை எடுத்து உங்கள் இரண்டு போரையும் அடிக்க ஓடி வருகின்றார்,நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று தடுப்பீர்கள் இல்லையெனில் ஓடி ஒளிந்து கொள்வீர்கள்,ஆனால் பாவம் அந்த சிலை என்ன செய்யும்?அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும்.


ஏன்?

உங்கள் உள் மனதில் ஓடும் பதிலை நான் இங்கே போடவா?

அதுக்குத்தான் உயிர் இல்லையேங்க.


ஓ அப்போ அது நம்மை விட மட்டமானதுதானா?

நமக்கு உசிர் இருக்கு அதுக்கு இல்லை.

அதால தன்னையே காப்பாற்றிக்க முடியாத நிலையில் தங்களை எப்படி காப்பாற்றும் அய்யா?


ஆனால் அந்த எல்லையில் உங்களை காப்பாற்றியது யார்?

என்ன சந்தேகம் அய்யா,கடவுள்தான் 

என்னது கடவுளா,நான் ஏதும் பார்க்கலையே என்று மலைக்கிண்றீர்களா?

கடவுள் = கடம் + உள் கடமாகிய உங்கள் உடலின் உள்ளே இருந்து ஒரு ஓசை வந்து "டேய் பாருடா உன்ன அடிக்க ஓடி வரான்,ஓடு " என்று எது உஜார் படுத்தியது?அந்த உயிராக நமது உடம்பினுள் இருப்பது இறைவன்தான்.


இப்போ ஒரு கேள்வி எழும் எல்லோருக்கும்.

கால காலமாக நமது மூதாதையர்கள் கும்பிட்டு வந்த சிலை வழிபாடு தவறா?

அது தவறு கிடையாது.அது ஒரு ஆரம்ப கல்வி நிலை ஆன்மீகத்தில்.அவ்வளவே.அதற்கு பின்னர் ஆன்மீகத்தில் நாம் போயி பட்டம் வாங்க வேண்டாமா?


ஒரு சிறு குழந்தை பள்ளிக் கூடத்தில் யானையை ஒரு பொம்மையை காட்டியும் ஒரு படத்தை காட்டியும் விளக்கி தருவார்கள்.அதற்காக அது நிஜ யானை ஆகிவிடுமா?ஒரு நாள் சுற்றுலா கூட்டி சென்று ஜூவில் நிஜ யானையை காண்பிக்கும் பொழுதுதான் அதன் கல்வி நிறைவு பெறுகின்றது.அப்போதான் அந்த பிள்ளைக்கு தெரியும் நாம் இதுவரை கண்டது நகல் அசல் இதுதான் என்று.


அது போல சிறு பிள்ளைகளுக்கு தெய்வம் என்று ஒன்று உண்டு என்பதனை கற்பிக்க வந்ததே சிலை வழிபாடு.


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது மணலில் வீடு கட்டி விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா போயி குடியிருக்கின்றோம்?நிஜ வீட்டிற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் சோப்பு சாமான்களை வைத்து சமையல் செய்து விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா சமைக்கின்றோம்?

நிஜமான பாத்திரத்திற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் பொம்மைகளை வைத்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகின்றோம் பெரிதானவுடன் நிஜமான ஒரு மனைவியை நாம் மணம் முடித்து அல்லவா குடும்பம் நடத்துகின்றோம்?


அது போல சிறு பிள்ளைக்கு என்று வந்த சிலை வழிபாட்டில் மட்டும் இன்னும் மனிதன் அறிவு பருவம் வந்தும் இந்த பொம்மையை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தால் நிஜமான இறைவனை இவன் கண்டறிவது எப்போ?


ஞானிகள் சிலை வழிபாட்டை என்றும் ஆதரிக்கவில்லை:


நட்ட கல்லைத் தெய்வமென்று 

நாலு புஷ்பம் சாற்றியே 

சுற்றி வந்து முணுமுணுத்து 

சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ 

நாதன் உள்ளிருக்கையில் 

சுட்டச் சட்டி சட்டுவம் 

கறிச்சுவை அறியுமோ?

- சிவவாக்கியப் பெருமான்


ஞானிகள் கோவில் கோவிலாக சுற்றுங்கள் என்று சொல்லவில்லை:


"வீணான பயல்களுட மார்க்கங் கேளு

வெளியிலுள்ள கோவிலுக்குள் பூந்து பூந்து

கோணாமற் கும்பிடுவார் ஒன்றுங் காணார்

குறும்பரவர் அலைகின்ற மார்க்க மேதோ

நாணாமல் நாணுகின்ற மடையரப்பா

நாய் போலத் திரிவார்கள் தளங்கள்தோறும் 

தோணாது முழுகுவார் தீர்த்தமென்று

துறையேதுங் காணாத மடையர்தானே "


- திருவள்ளுவப் பெருமான் (திருவள்ளுவர் 300 என்ற நூலில் இருந்து)


எல்லா வேதங்களும் இறைவனை நம் அகத்தினுள் தான் தேட சொல்லுகின்றது:


உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் உடம்பினுள் உத்தமனை காண்.

- ஒளவையார் 


சத்திய வேதம்:

நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருகிறீர்களா?

(கொரிந்தியர் 1-நிருபம்-3:16)


திருக்குரான்:


மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்;அவன் மணம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கிறோம்.(50:16)


நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்-அன்றியும் அல்லா நீங்கள் செய்வதை உற்று நோக்கியவராக இருக்கிறார்.(57:4)


சிலையை வழிபடுவது பாவம்.ஏன்?


எல்லா வேதங்களும் இறைவன் நமக்குள்ளே இந்த உடலின் உள்ளே குடி கொண்டிருக்கின்றார்கள் என்று கூற,இந்த சிரசின் உள்ளேதான் அவர்களுடைய பூரண குடியிருப்பு என்று கூறி இருக்க,ஈசன் குடி கொண்டிருக்கும் இந்த சிரசினை ஒரு ஜடப் பொருளாகிய கற் சிலையின் முன்னாள் மண்டியிட்டால் நாம் யாரை மண்டியிட செய்கின்றோம்?இறை சொரூபத்தையே ஒரு ஜடப் பொருளுக்கு தலை வணங்க செய்ய வைப்பதால் வந்தது இவன் தலைக்கு தீ.இறுதியில் இதன் காரணமாகவே தீட்டாகி நாரி புழுத்து போகின்றான்.அப்போ வேதத்தின் இலக்காகிய நிஜ இறைவனை எட்டாதவர்களையே "தவறி விட்டான்" என்ற நாமம் கொண்டு அழைத்தனர்.நிஜ இறைவன் உள்ளே குடி இருக்க அவரை விட்டு வெளியில் இருக்கும் பொருளுக்கு மதிப்பு கொடுத்ததினால் வந்தது இந்த இழி பட்டம்.


இறுதியாக இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

நமது அகத்தின் உள்ளே உள்ள இறைவனை அறிவதே மெய் வழிபாடு.இந்த மெய்வழிபாட்டின் மூலம்தான் ஒருவர் மரணத்தை வெல்ல முடியும்.இது நம்மால் மட்டும் ஆகக் கூடிய காரியம் அல்ல.அதற்கு ஒரு மெய் குருபிரான் அவசியம்.அப்பேற்பட்ட மெய்குருபிரான் எங்கே என்று மலைக்க வேண்டாம்.மெய்வழிச்சாலைக்கு விஜயம் செய்யுங்கள்.

இங்கே உள்ள அனந்தர்கள் நிஜ இறைவனை தங்களுக்குள்ளே நிஜமாக தரிசித்தவர்கள்.மேலும் இன்று சென்று சேரும் அன்பர்களாக இருந்தாலும் ஆண்டவர்களின் அருளினால் அங்கே எல்லோரும் மரணத்தை வெல்லுகின்றார்கள்.இது எல்லாம் எப்படி என்கின்றீர்களா?


இறைவனே இறுதி தீர்ப்பினை நடத்த இங்கே மனு அவதாரம் பூண்டு,நமக்கு சற்குருவாக "பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் " என்ற நாமம் பூண்டு எழுந்தருளி எல்லோரையும் மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்கு ஆக்கி கொண்டிருக்கின்றார்கள்.அவர்களே எல்லா சமயங்களும் எதிர் பார்த்த இறுதித் தீர்ப்பர்.இறுதி மெசியாவென்றும்,மகதி அலைகிஸ் சலாம் என்றும்,கல்கி என்றும்,மைத்ரேய புத்தர் என்றும்,வைகுண்டர் என்றும்,வீரபோக வசந்தராயர் என்றும் அஹூர் மஸ்தாவென்றும் வெவ்வேறு நமங்கலாளால் எதிர்பார்க்க பெற்ற இறுதி தீர்ப்பர் வந்தாயிற்று.வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்.


எனவே குருவை போற்றி குடி ஓங்கி வாழ்வோமாக.


இதனை நம்ப வேண்டாம்,நேரில் சென்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கோ.

No comments:

Post a Comment