=== தன்னையறிய மனம் இல்லாமலோ, செயலற்று போக வேண்டுமா? ===
உயிர் அனுபவம் என்பது உயிரானது உயிரினை அறிவதாம்... அதற்க்கு மனம் தேவை இல்லை..... ஆறானது ஒரு இடத்திலிருந்து உற்பத்தியாகி ஒருமுகமாகவோ பலமுகமாகவோ ஓடினும், அதன் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்துகொள்ள ஆற்றையே அடங்கசெய்யவேண்டும் என நினைப்பது சரியானதாக தோன்றுகிறதா?...
அப்படியே மனதின் உற்பத்தி ஸ்தானத்தை அறிந்து கொள்ள மனமானது அடங்கவேண்டுமென்பதில்லை, அறிவு உருவானாலேபோதுமானது...
அறிவானதே அந்தகாரத்தை ஊடுருவும் தன்மை கொண்டது... அறிவானது புத்தி தத்துவத்தை சார்ந்து நில்லாது ஆன்ம தத்துவத்தை சார்ந்து நிற்க்கும்போது உணர்வானது உண்மை விளக்கமாக உயிர் சார்ந்து அனுபவவிளக்கமாகும்... அனுபவ விளக்கமானது உண்டாகுமிடத்து சந்தேகம் என்பது உருவாகது உயிர்பிரகாசம் மட்டுமே மேலோங்கி சுயம்பிரகாசமாயிருக்கும்.... எப்போதும் நமக்கு உயிரனுபவம் இல்லாத பொருட்களிடத்தே சந்தேகம் இருந்து கொண்டிருக்கும்..நம் உயிரனுபவத்திற்க்கு வந்த பொருட்கள்மேல் எள்ளளவும் சந்தேகம் என்பது வராது....
பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது.
இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம்.
வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்
அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்..ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை.
No comments:
Post a Comment