Monday, October 9, 2023

எந்த வித்தைகள் செய்தாலும்

 எந்த வித்தைகள் செய்தாலும் அது ஞானத்தை கொடுக்கும் என அறுதியிட்டு கூற முடியாது, ஏனெனில்  வித்தைகளினால் மோட்சம் கிடைக்காது. மனமே மகா சாகரத்தில் சிக்கி தவிக்கிறது, அந்த மனதுக்கு தான் மருந்து தேவை. அது ஆழமான புரிதலிலே தான் கலக்கங்கள் மறைந்து சித்தம் பிரகாசிக்கின்றது. அதை விடுத்து கடினமாக இரவும் பகலும் எதையோ செய்வதினால் ஞானம் வராது. ஞானம் செய்வதினால் வருவது அல்ல.


 

பலவிதமான வித்தைகள் உன்னிடம் வந்து செல்லும், அதை நீ செய்யத்தான் வேண்டும், செய்து செய்து ஒரு கனத்தில் உனக்குள் ஒரு புரிதல் சட்டென மலரும், இப்படியல்ல இந்த வித்தையை பண்ணுவது என. அப்பொழுது நீ உருமாற்றம் பெற்றுவிட்டாய். உன்னுடைய குரு நீ எந்த இலக்கினை அடையவேண்டும் என நிர்ணயித்து ஒரு வித்தையினை பயன்பாட்டில் வைத்தாரோ அந்த பயன்பாட்டின் எல்லையினை நீ புரிந்து கொள்வாய். இல்லையெனில் ஆயிரம் வருடம் ஆனாலும் அந்த எல்லையினுள் நீ பிரவேசிக்க மாட்டாய். நீ அந்த வித்தையினை கடந்து அதீதமான புரிதல் கொண்டு விட்டாய் என்பதை உன் ஆழ்நிலை உனக்கு அறிவுறுத்தும், ஆனால் வெளி உலகத்துக்கு நீ சொல்லுவது ஒன்றும் புரியாது. நீ விளக்கினாலும் அவர்களால் அதை புரியமுடியாது..அது தான் ஞானத்தின் தன்மை.


ஞானம் ஏன்பது ஒன்றே ஒன்று தான் என நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எல்லா நிலைகளும் பலவிதமான பரிணாம தோற்ற நிலைகளுக்கு உயர்நிலைகளுக்கு உட்பட்டதே. இப்படி அனேகம் ஞானநிலைகள் கொண்டதே பயனம். அதில் பலதும் வந்து போகும், பயனம் முடிவற்றது, மலர்தல் முடிவற்றது, இதை புரிந்துகொண்டவன் பயணத்துக்கு தயாராகவே எப்போதும் இருப்பான், உருமாற்றத்துக்கு தயாராகவே இருப்பான். எல்லாம் முடிந்தது, நான் கடைசி எல்லையில் வந்து விட்டேன், கடைசி உயர் ஞானத்தின் விளிம்பில் வந்து விட்டேன் எனும் மட்டமான நிலை அவனிடம் இருக்காது. அது தான் உண்மையான ஆழம், மென்மையான ஆழம்.

No comments:

Post a Comment