Friday, January 20, 2023

கடவுளின் பெயர் என்ன?

 உன்னை பெற்ற தாய் தந்தையர் உனக்கு ஒரு பெயர் வைக்கவில்லை என்றால் உனக்கு பெயர் இருக்குமா என்ன? பெயர் இல்லாமல் வாழ முடியாதா என்ன? இவ்வளவோ பெரிய உலகில் மனிதனை தவிர ஏனய உயிரினங்கள் எல்லாம் தான் எந்தவொரு தனித்துவமான பெயருமின்றி வாழ்ந்து வருகின்றனவே அல்லவா? பெயரென்பது வெறும் வியவகார வழங்கு பொருளன்றி மற்றொன்றன்று.இயற்கையில் எந்தவொரு உயிரினத்துக்கும் தனியென ஒரு பெயரில்லை,சர்வ வல்லவரான இறைவனுக்கும் தான் இது பொருந்தும். தனிப்பட்ட ஒரு பெயரை கொண்டவர் தான் எம் இறைவன் என சொன்னால் உம் இறைவன் பொய்.நாமரூப மன கற்பனைகளை கடந்தவனை உன் வசதிக்கு என பொய் பெயர் புனைந்து மெய்யென பேசித் திரிகின்றாய்.

Friday, December 30, 2022

தேடுதல்

 முல்லா நஸ்ருதீன் இரண்டு மணி நேரமாக தேடிக்கொண்டிருக்கிறார். கையில் ஒரு சிம்னி விளக்கு வேறு அரேபிய பாலைவனக் காற்றில் அங்குமிங்கும் அசைந்தாடி அணைவதும் ஒளிர்வதுமாக இருந்து கொண்டிருந்தது.

 "என்ன முல்லா ரெம்ப நேரமாக தேடிக்கொண்டிருக்கிறீர்களே?"வழிபோக்கர் ஒருவர் வினவினார்;

"என்னுடைய பொக்கிஷம் தொலைந்து விட்டது, அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்" என சொல்லிக்கொண்டே விளக்கின் பிரகாசம் எட்டும் இடம் வரை தன் தேடுதலை முல்லா தொடர்ந்தார். நண்பரான அந்த வழிபோக்கரும் முல்லாவுக்கு உதவியாக அவர் கூட சேர்ந்து தேட ஆரம்பித்தார்.

இவர்கள் தேடுவதை கண்டு மற்று சிலர் கூட வந்து சேர்ந்து கொண்டனர். அந்த சின்ன மங்கலான வெளிச்சத்தில் எல்லோரும் சேர்ந்து நீண்ட நேரம் தேடியும் முல்லாவின் பொக்கிஷம் கிடைத்த பாடில்லை.

அதில் ஒருவர் சற்று புத்தியுள்ளவர், அவர் வினவினார் "முல்லா இவ்வளவு தேடியும் பொக்கிஷம் கிடைக்கவில்லையே, நீங்கள் எப்போது தொலைத்தீர்கள்?".

"அது ஞாபகம் இல்லை" முல்லா பதிலளித்தார்.

"இங்கே தான் தொலைத்தீர்களா?" நண்பர் விடுவதாக இல்லை.

"எங்கே தொலைத்தேன் என்பதுவும் சரியாக எனக்கு ஞாபகம் வரவில்லை" அப்பாவியாக முல்லா பதிலளித்தார்.

கடுப்பாகி போன நண்பர் சற்று குரல் உயர்த்தி கேட்டு விட்டார், "முட்டாள் முல்லாவே ,எங்கேயோ எப்போதோ தொலைத்த பொருளை இப்போது இங்கே தேடுகின்றீர்களே, அது இங்கே கிடைக்குமா? எவ்வளவு நேரமாக நாங்களும் சேர்ந்து உங்கள் கூட தேடுகின்றோம்"

சாந்தமாக முல்லா சொன்னார்,"இங்கே தான் வெளிச்சம் இருக்கின்றது அதனால் தான் இங்கே என் பொக்கிஷத்தை தேடுகின்றேன்".

[எங்கேயோ தொலைத்த ஆன்மாவை இங்கே தேடுகின்றோம் ,முல்லா நஸ்ருதீனைப் போல.....]

Sunday, December 25, 2022

லா அலா நூர்

 அந்த நாளையில் அஹமதை துதிக்கும் முன் இறையோன்_விந்தை ஆகிய லாமலிபு ஆனதை விரும்பி_சிந்தையுள் எழு மஹமூதை படைத்தனன் செல்வம்_வந்தவாறதை கண்டே ஞானப்பூட்டினில் வகுப்பாம்~பீரு முஹம்மது றபியுல்லாஹ்.

ஆதியில் இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தான்...பின்னர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார் வெளிச்சம் உண்டாயிற்று~ பைபிள்.

ஆதியில் அல்லாஹ் தன்னிலிருந்து தன்னுடைய நூரை வெளியாக்கினான் அந்த நூரில் இருந்து முஹம்மதை படைத்தான்~அல் குறான்.

நானே மெய்யான ஒளி .என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என் பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறான்.நான் என் பிதாவில் இருந்து வருகின்றேன்~ யோவான் எழுதிய சுவிசேஷம்.

Thursday, December 22, 2022

Who am I ?

 இந்த ஆன்மீக பயணத்துக்கு வந்து விட்டாலே முதலில் சொல்லி கொடுக்கப்படும் விஷயம் என்பது இது ஒன்று தான். வந்து வந்து போன மாமஹரிஷிகள் என அழைக்கப்பட்டவர்கள் பெரிய ஞானம் என வைத்து விட்டு போன கேள்வி இது.இதைப்போல ஒரு பைத்தியக்காரத்தனம் உலகில் வேறெதுவும் இல்லை எனலாம்.நான் யார் என கேட்டு தியானம் செய்து கொண்டிருந்தால் ஞானம் வந்து விடுமாம்.இதை நம்பி பைத்தியக்காரத்தனமாக அலைந்தது எத்தனை காலம்.தானும் கெட்டு தன்னை நாடி வந்தவனையும் கெடுத்து குட்டிச்சுவரானது தான் பலன்.இதனால் ஒரு ஞானமும் ஒரு காலத்திலும் விளையப்போவதில்லை என்பதே நிஜம். நான் யார் என தியானிக்கும் ஒவ்வொருவனும் உண்மையை அறிந்து கொள்ளப்போவதில்லை.ஏனெனில் நான் யார் என கேள்வி கேட்பவன் உண்மையில் நான் என ஒன்று இருக்கிறதா இல்லையா எனக்கூட நிச்சயமாக தெரிந்து கொள்ளாமல் கேட்கும் கேள்வியானது சரியா தவறா எனக்கூட புரிந்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் இந்த கேள்வி கேட்டுக்கொண்டே மாண்டு போகின்றான்.

நான் யார் என தியானிப்பவன் உண்மையில் நான் என ஒரு பொருள் இருப்பதாக எந்த சந்தேகமும் இன்றி முதலில் ஏற்றுக்கொள்கின்றான்.இருக்கிறதா இல்லையா என யோசிக்கிறவனுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கிறது.இது இல்லாதவனுக்கு புத்தி மந்தம் ஆனதினால் அவன் நேரடியாக நான் யார் என ஆரம்பித்து விடுகின்றான்.

தன்னை அறிவதே தலையாய தவம் என இவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்க இவன் சுற்றுமுற்றும் பாராமல் முதலிலேயே தன்னை அறிய முற்படுகின்றான்.தன்னை அறிய தன் தலைவனை அறியலாம் என மேலும் இவனுக்கு ஊக்க மருந்து வேறு ஊட்டப்பட்டிருக்கின்றது.போதை கொண்டவன் பைத்தியத்துக்கு சமம்.

Thursday, December 8, 2022

எழுத்து

எழுத்து கேள்வி: ஐயா ஆய்த எழுத்து என்பதனை எப்படி உச்சரிக்கவேண்டும்?...”அக்” என்றா அல்லது ”அஹ்” என்றா....அதாவது அஃறிணை என்பதனை. ”அக்றிணை” என்று உச்சரிக்கவேண்டுமா அல்லது ”அஹ்றிணை” என உச்சரிக்கவேண்டுமா?.. தயவு கூர்ந்து ஒலி இலக்கண விரிவுரை தருக. பதில்: ஆய்த எழுத்து "காரணப்பெயரின் தோற்றம்.... தமிழில் ஆய்த எழுத்தாக ‘ஃ’ உள்ளது. அது எப்பொழுது தோன்றியது? அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது? உலகில் பேச்சு மொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. ‘அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.  ‘அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.  காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.  ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத் தனி நிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.  ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை ‘ஆய்த’ எழுத்து என்றே கூறுவர். ‘ஆய்த’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்து வகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து, கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவு பெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரை யாக ஒலிக்கும் பொழுது, ஆய்தக் குறுக்கம் என்ற சார்பெழுத்து ஆகிறது. ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃது, அஃது என்பன போன்று வரும். கஃaது (கல் + தீது), முஃடீது (முள் + தீது) என ஆய்தக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர் வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தை தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக் கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவது போல் இடித்துத் தாக்கும் அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ‘ஃ’ என்பது போல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால் இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக் கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளி யாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ‘ஃ’ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமை யாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது என்று தமிழ்த்தாத்தா. உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கர் மகா வித்துவான். ச. தண்டபாணி தேசிகர் கூறியுள்ளார். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத் துக்களின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப் பெயர்) பெற்றுள்ளது. நன்றி: அருண்குமார் Hseija Ed Rian அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014).இந்த மூன்று குறளடிகளிலும் கவனிக்கில் ஃ என்பதினை தனியாக ‘அக்’ என உச்சரிக்கமுடியாது.’அஃ’ என முன் உயிர் சேர்த்து உச்சரிக்கவருகிறது..ஏன் ஃ கிற்க்கு தனி ய்ச்சரிப்பு வரவில்லை?.அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ”ஃதும் ”பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என ஏன் உச்சரிக்ககூடாது?

திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு=

=== திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு=== கேள்வி: மனம் என்பதே உயிரின் அம்சம் தானே உயிர் சக்தியின் செலவிடுதலே மனதின் இயங்கும் நிலை இதில் ஒடுங்குவதும் அடங்குவதும் உயிரின் சுயம் அன்றி வேறென்ன. . .ஐயா? Hseija Ed Rian: உயிர் இருப்பதனால் தான் மனம் இயங்குகிறது என்பது தெரிந்த ஒன்று... ஆனால் மனமானது உயிரின் அம்சம் தான் என்பது தெரியாத ஒன்று அல்லவா? உயிர், உடல், மனம் வெவ்வேறானவை, வெவ்வேறு குணாதிசயம் சேர்க்கையில் இயைந்து இயங்குவது. உயிரின் அம்சம் உடலுக்கு இருக்காது.... உடலின் அம்சம் உயிருக்கும் இருக்காது... உயிரின் அம்சம் மனதுக்கு இருக்காது.. மனதின் அம்சம் உயிருக்கும் இருக்காது... ஆனால் உடலெனும் கூட்டில் இவை அடக்கம். "நான்" என்பதே மனதின் ஆணிவேர்... சூட்சுமமாக அனுபவத்தில் நிலைகொளத்தான் அது புரிதலுக்கு வரும்... "நான்" இருப்பதினனல் மனம் என இருக்கிறது. "நான்" என்பது தான் மனம் என மலர்ந்திருக்கிறது... எப்போது "நான்" இல்லை என ஆகிறதோ.. அப்போது மனம் இல்லை என்றாகிறது. மிஞ்சுவது அறிவு மட்டுமே.. ஞானசொரூபமான வஸ்த்து. கேள்வி:  தூக்கத்தை பற்றி உங்களது கருத்து என்ன? Hseija Ed Rian: தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி. அனைத்திலும் கவனம் அற்று போகையில் தூக்கம் நடக்கும்... அக மற்றும் புற நிகழ்வுகளில் இருந்து கவனம் அற அது வரும். இதுக்குத்தான் எவ்வளவோ சொல்லியும் ..மொக்கை என சொல்ராங்க...ஒருவேள சரியா இருக்குமோ? கவனம் என்கிறதை பற்றுதலே தூக்கம் வராம இருக்க வழி. கேள்வி: கவனிப்பவனை கவனித்தால் தூக்கம் வருவதை தடுக்கலாம் அப்படிதானே!!!! ???? Hseija Ed Rian: உபநிஷத்துகளில் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது.. "உத்திஷ்ட்ட ஜாக்ரத” என்பதாகும். அதாவது ”ஜாக்கிரதைக்கு எழுவாயாக” என்பதாகும்.அதாவது கவனத்தை பற்றுவாயாக என விளக்கம். கேள்வி: கவனத்தை பற்றுதல் தான் வள்ளலார் சொன்ன "விழித்திரு" என்பதா? Hseija Ed Rian: ஆமாம். கேள்வி: மனம் உயிரில் ஒடுங்குவதுதான் தூக்கமா? Hseija Ed Rian: தூக்கத்துலயும் சரி விழிப்புலயும் சரி உயிர் இல்லாம இவை இல்லையே... மனம் உயிரில் இருந்து தோற்றம் பெற்றால் அல்லவா அதில் சென்று ஒடுங்கவும் தெரிந்திருக்கும்...அல்லவா? தூக்கத்தில் ஒடுங்க மனதுக்கு தெரிந்திருந்தால் மரணத்தின் போதும் ஒடுங்க முடிந்திருக்குமே... தெரியாததினால் அல்லவா உயிர் விட்டு போகிறது...அல்லவா? கேள்வி: உயிர் நிலைக்க பிராணன் அவசியமல்லவோ ...? Hseija Ed Rian: கருப்பையில் உயிருடன் இருந்த சுக்கில துளிக்கு ஏது பிராணன்? உயிரில் இருந்து பிராணன் வந்த பிற்பாடல்லவா மனதுக்கு மூன்று நிலை... சுக்கில துளிக்கு ஏது கனவும் நனவும்? கேள்வி: ஐயா. மரணத்தை சந்திக்கும் போது உயிர் பல கொடுமைகளை சந்திக்கும் என்று சொல்ராங்க அப்படி தூக்கம் வரும் போது ஏதுமில்லையே!!? Hseija Ed Rian: தூக்கத்தில் மனம் சப்தத்தில் ஒடுங்கியிருக்கும்.. மனதின் சூட்சும தன்மாத்திரையான ஆகாய ரூபம். மரணத்தில் இது இருக்காது. ஆகாய தன்மாத்திரையான சப்தம் உயிருடன் ஒன்றியிருக்கும்... ஆகையினால் அது ‘விட்டு போகாது’... மரணத்தில் விட்டு போகும்.. கேள்வி: தாயின் கருவில் உள்ள குழந்தை எப்படியா தூங்குது? Hseija Ed Rian: ஐயா.. இங்க ரெண்டு நிலைகள் கவனிக்க தகுந்தவை. பிறவிக்கு முன் பின் என. பிறக்கிறதுக்கு முன்ன பிராணன் வெடிக்கா நிலை... பிறவிக்கு பின் பிராணன் வெடித்த நிலை. சாதாரணமாக பிறவிக்கு பின் நிகழகூடிய மூன்று அவஸ்த்தைகளையே "நனவு, கனவு, தூக்கம்" என வகைபடுத்தி கொள்ளுகிறோம். கருவில் மனம் மொட்டாக இருக்கிறது, அதனால் மனம் வியாபிக்கவில்லை... மனம் வியாபிக்க வாயு விசும்பிதல் ஆகவேண்டும். கண்டம் பிரியவேண்டும். முதல் அழுகையினால் கண்டம் பிரிகிறது... அதற்க்கு முன் பத்தாம் மாதமும் சரி ஒன்றாம் மாதமும் சரி.. எல்லாம் வளர்ச்சி நிலை நோக்கி நகருதல் தாம்.. நிறை ஆகவில்லை. பிராணன் வெடிக்க மனம் சலனம் ஆரம்பிக்கின்றது. மூன்று அவத்தைகள் மனதுக்கு வந்து சேருகின்றது. கேள்வி: ஐயா கருவில் குழைந்தைக்கு சுவாசம் எப்படி நுகரும் தன்மை எப்படி? Hseija Ed Rian: சுவாசம் வெடிக்காது என சொன்னதினாலே புரியவேண்டியது.. அது ஒரு இடத்தில் சுழன்று கொண்டிருக்கும் என்பது தான்... இதனையே "சக்கரம்" என்பர். வெட்டுபட்ட சக்கரம் எனவும் வெட்டாத சக்கரம் என இரண்டு... வெட்டுண்ட சக்கரம் துண்டாகும்... துண்டான சக்கரம் கலை சிறுக்கும்... வெட்டாத சக்கரம் துண்டாகாது.. கலை சிறுக்காது... தட்டுண்டு போகாமல் தலைபடுவது எக்காலமோ..தெரியலியே ஐயா.. ❣️ நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள் ❣️

நோயுடையார் = வாயுடையார்

நோயுடையார் = வாயுடையார் நோய் இருக்கிறவங்க கிட்ட போய் கேட்டு பார்த்தா, அவன் கடவுளிடம் தான் வேண்டி கொண்டு இருப்பான் தன் வாயால், அவனுக்கு இந்த ஜென்மாந்தரமா வந்த வினையின் தொகுப்பு அவனுக்கு புரியாது, தெரியாது, கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பவர்களிடம் கேட்டாள் அவருடைய நோயைப் பற்றிய தன்மையும் அறிந்து கொண்டே இருப்பான்,நம்முடைய வாழ்க்கையில வினை என்ற ஒரு வார்த்தை அதிகமாகஉபயோகப்படுத்தப்படுகின்றோம்இந்த வினை என்பது உன்னுடைய வாழ்க்கையில நீ  முன் ஜென்மத்தில் செஞ்ச வேலைதான் உன்னை இந்த மாதிரி எல்லாம் பாடா படுத்துது,அப்படி என்று சொல்ல கூடிய ஒரு விஷயம் இருக்குது, வந்த வினை தொகுப்பு அப்படி என்று  சொல்லுவாங்க, அந்த தொகுப்பு பலகோடி காலமாக கர்ப்பகோடி காலங்களாக இந்த தொகுப்பு உன் வாழ்வில் ஜென்மம்  ஜென்மம் எடுத்து வந்து கொண்டிருக்கின்ற ஒரு தொகுப்பு இதை அவன் சீக்கிரம் இதை அறிந்து கொள்ள முடியாது புரிந்து கொள்ள முடியாது இது சூட்சமமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய மகா ரகசியமாகவும் இருக்கின்றது நிலக்கடலை வித்து  ஒன்று இருக்கின்றது  அந்த நிலக்கடலையை விதைத்தால்  அந்த வித்தானது  வளர்ச்சி சில வாரத்துக்குள் வித்து முளையிடும்  அதே  மற்றொரு  வித்தானது நீண்டகாலம்  முளைத்து  வர நேரம் எடுத்துக் கொள்கின்றது, அந்த மாதிரி தான் இந்த ஜீவன்ல இருக்குற நம்ம உடம்புகள் அனைத்துமே  ஒரு ஒருவருக்கும் ஒவ்வொரு  வித அமைப்புக்குள்ளான உடம்பாக இருக்கின்றது, ஒவ்வொரு அசைவுகளும் இயக்கங்களும் அங்கங்களும் ஒரு ஒரு வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது, ஒருவர் உடம்பில் ஆரோக்கியமாக இருப்பாங்க ஒருவர் காலம் முழுவதும் நோயுற்றே இருப்பாங்க, ஒரு சிலர் படுத்த படுக்கையிலேயே இருப்பாங்க, இந்த மாதிரி பல விதமான மனிதர்கள் நோயுடனும் அவஸ்தை பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள், ஆனா இந்த பலகோடி கற்பகாலமாக இந்த மனிதன் உடலை எடுத்து வந்து கொண்டு இருந்து அதுல அந்த வினையின் தொகுப்பை அனுபவித்து தான் ஆக வேண்டும், அந்த அனுபவித்ததில் ஒரு சிலர்களுக்கு அந்த வினை பாதிலேயே கழிந்து போய்விடும், உதாரணமாக ஒருத்தருக்கு கேன்சர் இருக்கு அப்படின்னா அந்த கேன்சர் உள்ள நபர் கொஞ்ச காலம் இருந்துட்டு அந்த கேன்சருக்கு வந்து இருந்த இடம் அறிகுறி இல்லாமயே போய்விடும், அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையிலும் ஒரு சில மிராக்கள் நடந்த ஒரு சம்பவங்களும் இருக்கின்றது, அதே போல தான் ஒருத்தருடைய வாழ்க்கை தரமும் வாழ்க்கையில அவருடைய அனுபவிக்கக்கூடிய உணவு முறைகளும் பழக்க வழக்க முறைகளும் அவர்களுடைய உடல் அமைப்பு மாற்றிக்கொண்டு மனோ சக்தியாள் வரக்கூடிய அந்த சக்தி ஒருவர்  உடல் அங்கங்கள் சரியான கோணத்தில் உடல் அமைத்துக் கொண்டிருக்கின்றது அது அவர்களுடைய வினையின் மிகப்பெரிய மாபெரும் ரகசியமாகவும் இருக்கின்றது, இதன் பிரகாரம் பார்த்தோம்னா ஒரு மனிதனுக்கு ஒருத்தருக்கு தயிர்சாதம் ரொம்ப பிடிக்கும், ஒருத்தருக்கு புளிசாதம் பிடிக்கும், ஒருத்தருக்கு கீரை சாதம் பிடிக்கும், இந்த மாதிரி தான் மனிதனுடைய அறுசுவை உணவுகளும் அவருடைய பழக்கவழக்கங்களும் அவனுக்கு உள்ள இருக்குது, ஒருத்தனுக்கு ஒன்று பிடிக்கும் இன்னொருத்தனுக்கு வேறு ஒன்றும் பிடிக்கும் ஒருத்தன் மிகவும் கொடூரமாக இருப்பான், மற்றொருவன் ரொம்ப சாந்தமாக இருப்பான், இது எல்லாமே அவருடைய வாழ்வியல் முறைகளும் அவருடைய உடல் சார்ந்த அமைப்புகளும் அவனுக்குள்ள இருக்க கூடிய அந்த வித்துவின் மகத்துவமும் பொருந்திய நிலையில் தான் இருப்பான், இதுல அவனுக்கு அறிவு வயப்பட்டு அறிவால் அவர் சிந்தித்து செயல்பட்டு அந்த வினையே போக்கக்கூடிய ஒரு விஷயம் புரிந்து கொண்டார் என்றால் அவனுக்கு எப்பேர்பட்ட ஒரு விஷயங்களும் அவனுக்கு  வந்த நோயும் எல்லாமே அவனுக்கு வந்த வினையின் வித்து என்றும் புரிந்துகொள்ள வான், ஒரு சிலருக்கு  நோய் வரத்தான் செய்யும் அதை அனுபவிச்சு தான் தீரனும். அப்படி என்ற எண்ணத்தில் போவோம், ஒரு சில விஷயங்கள் வியப்பாக இருக்கின்றது,  பெரிய மகான்கள் ஞானிகள் எல்லாருமே ஒரு ஒரு காலகட்டத்தில் ஒரு ஒரு வினையின் சார்பாக நோயுற்று அவதிப்பட்டு உள்ளவர்களும் இருக்கின்றார்கள், இப்படித்தான் ஒரு சில விஷயங்கள் நடக்கும் இதே போல் ஒருத்தருக்கு ஒரு சின்ன குழந்தைக்கு  கேன்சர் இருக்கின்றது,  அந்த குழந்தை யை மிகப் பெரிய டாக்டர்கள் பரிசோதித்து விட்டார்கள் குழந்தை கொஞ்ச காலம் தான் உயிருடன் இருக்கும்  என்று கூறினார்கள், அந்த கேன்சர் வந்த குழந்தை ஒரு பெரிய சித்த ஞானியிடம் அழைத்து சென்றார்கள்,   அந்த குழந்தையை  அந்த ஞானி வயிற்றை தடவி கொடுக்கிறார் தடவி கொடுத்து பார்த்த உடனே அந்த குழந்தையை ஆசீர்வாதம் செய்து அனுப்பிவிடுகின்றார், அந்த  குழந்தையை   இரண்டு நாள் கழித்து  மருத்துவமனையில்  பரிசோதனை செய்தால் அந்த குழந்தைக்கு அந்த கேன்சர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றது,  இது தான் அந்த வினையின் ஆதிக்கம் உள்ள வரை செயல்படும் பின்பு அந்த நோயின் தாக்கம் குறைந்து கொண்டு சரியாகிவிடும், இவை எல்லாமே மிராக்கலாகவும் நடக்கும், அதனால் இந்த வினை என்பது அவன் கூடவே வந்தது தான், அந்த வித்தாகி வந்ததை  அனுபவித்து தான் ஆக வேண்டும், வாழ்க்கை என்பது வாழ வேண்டிய அரிய பொக்கிஷம், அதை அறிவு கூர்ந்து வாழ்ந்தால் நலம், நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🌷நன்றி பித்தன்🌷

ஞானமோ= ஞானும்==

=ஞானமோ= ஞானும்== குருவே,குருவே,  காப்பாற்ற வேணும் குருவே என கேட்டு நின்றான் அந்த அபலை சீடன். அவன் தோற்றத்தையே அளந்த குருவிற்க்கு புலப்பட்டது ரொம்ப தூரம் வழி நடந்து வந்திருக்கிறான்.... ஆயினும் அவன் கண்களில் அந்த திடமான தீட்சண்யமும் நன்றாக தெரிந்தது. அந்த முகத்தின் ஜொலிப்பும்... கண்களின் கம்பீரியமும்..., அந்த நிதர்சனமும்...,அவன் சரியான திசையையே நாடி செல்கின்றான் என்று பிரதிபலித்தது..... குருவானவர் புன்முறுவலோடும்  வாக்ஞையோடும் அவனை ஆரத்தழுவினார், குழந்தாய்... ஆருயிர் செல்லமே...நீ அடைய தகுதியானவனே..ஞானத்தின் உண்மை  தெரிந்துகொள்ள தகுந்தவனே..ஆயினும் சற்று செவி சாய்ப்பாயாக.... உன் சித்தம் தற்போது சற்று கலங்கி இருப்பது நிதர்சனமான உண்மை..., ஏனெனில் நீ பலகாலமாய் கற்றுக்  கண்ட உண்மைகள் உன்னை திருப்தியடைய செய்ய மறுக்கின்றன......என ஆழமாய் உணர்கின்றேன்..... ஆம், உன் சிந்தைகள் பலவீனமாக இருப்பதற்கு  இதுவே காரணம் தான்....சற்று இளைப்பாறுவாய் குழந்தாய்...காலம் கனியட்டும்... உலகின் பல பல பிறவிகள் தோன்றி மறையும்  என்று  அறிந்திரா விட்டால் இப்பொழுது  கலக்கமடைவது மெய்யே.... தன் அறிவால்....ஒன்றா இரண்டா பல கற்பகாலங்கள் கழித்தாய்?..கோடான கோடி யுகாந்திரங்கள் கடந்தாய்..மகனே சற்று நிதானிப்பாய்..எண்ணமற்ற எண்ணிலடங்கா கோடி எத்தணை காலம் கழிந்தனவே.....  அது மட்டுமல்ல,  கோடாண கோடி காலங்கள் வீணாக கழிந்தனவே... என்ற எண்ணம்  எண்ணில் அடங்காதது கரை காணாது....எழுத்தினால் இலக்கம் எழுத முடியாதது.... அவ் எண்ணில் பல கோடி  துன்பமும்... துயரங்களும்..... கோடானு கோடி.வினைகளும் கோடி....வினைப்பயன்கலும் பற்பல கோடி  மலை  போல அடுக்குகள் உள்ளது.... உதிர்ந்த கண்ணீர் அளவோ..கடல் போல...  எத்தனை பிறவிகள்...., எத்தனை முன்னோக்கிய பிரயாணங்கள்....., எத்தனை பின்னோக்கிய பிரயாணங்கள்......இத்தொகுப்புகள் அனைத்தும் இப்போதும் உன்னிடம் இருக்கின்றனவே குழந்தாய்.... எத்தனை பிறவிகளின் வினை தொகுப்புகளின் பயன்களை நீ களைவாய் மகனே....எத்தனை கொலை புலை தவிர்ப்பாய்.....நீ என்ன என்று பார்க்கின்றாயா.... கண்ணே...எத்தனை கோடி வினைகளை... நீ தவிர்த்து புண்ணியம் அதிகரித்து கொண்டாலும்..... அதை விட லட்சம் கோடி வினைகள்.... மீண்டும் உன்னில் இருந்து எழும்ப காண்பாய்...ஒரு காலும் உன்னால் இதை களைந்து முன்னால் பிரயாணிக்க உன்னால் இயலாதே.......சற்று சிந்திப்பாய்..... ஞானம் இது மட்டுமா..சற்று தியானிப்பதால் கிடைத்துவிடுமென்று.... நினைத்தாயோ...சற்று பிராணாயாம.... தாரணை.... சாதனங்களினால் அடைந்து விட முடியுமென்று நினைத்தாயோ.....சற்று நிதானிப்பாய் மகனே..... உன் முதுகில் பாரமாக தொங்கி கொண்டிருக்கும் வினைபயனின் அளவு தெரிந்திருந்தால் நீ மூச்சடங்கி நின்றுவிடுவாயே... ஏது செய்து இவற்றை கடந்து முன்னேறுவது...? நீ...வினைதொகுப்பை என்ன செய்து நொடி நேரத்தில்  கடந்து வருவாய் ....... முன்னோக்கி..முன்னோக்கி.... உதறி விட்டு....உதறி விட்டு...... தொலைத்து....தொலைத்து.... தாவி...தாவி... குதிப்பாய்..மகனே...

குருவும் மறை ரகசியமும்

குருவும் மறை ரகசியமும் ஒரு  குரு வானவர் தன்னுடைய சீடனை பூனைக்குட்டி போல் பார்த்துக் கொண்டிருப்பார் பூனை எப்படி அதனுடைய குட்டிகளுக்கு பேசத் தெரியாமல் அமைதியாக இருக்கும் எந்த சப்தமும் இல்லாமல் இருக்கும் அப்போது அந்த தாய் பூனை அந்த குட்டிகளை வாயால் கவ்வி பிடித்து  இடம் மாற்றிக் கொண்டே இருக்கும் அந்த பூனைடைய பல் அந்த குட்டியின் மேல் எந்த இடத்திலும் தழும்புப்படாமல் பார்த்து அன்பாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சீடன் குருவிடம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தால் அவனுக்கு அந்தப் பக்குவம் இருந்தால் அவன் தேர்ச்சி பெறுவான், ஒரு பூனையைப் போல் அமைதியாக இருக்க வேண்டும் அப்பொழுது குருவினுடைய தத்துவார்த்த விஷயங்கள் அவனுக்கு புரிய வரும், அதே போல் இன்னொரு சீடன் குருவிடம் குரங்கு போல் இருப்பான், குரங்கு தன்னுடைய குட்டி என்ன பண்ணும் குரங்கை ஓடிக்கொண்டே இருக்கும் அப்பொழுது குரங்கின் வயிற்றை  கவ்வி பிடித்துக் கொண்டு கவி பிடித்துக் கொண்டு ஓடும், அப்பொழுது அந்த குட்டி குரங்கு தாயின் உடைய வயிற்றை சரியாக பிடிக்கவில்லை என்றால் அந்தக் குரங்கு கீழே விழுந்து அகால மரணம் அடைந்து விடும், இதுபோல்தான் குரு சீடருடைய உறவு குரு யாரை எந்த இடத்தில் எப்படி தத்துவார்த்த விஷயங்களையும் தன்னுடைய இதயத்தில் இருந்து அன்பான விஷயத்தையும் அள்ளிக் கொடுப்பாரோ அவர் அவர்கள் தகுதிக்கேற்ப வழங்கிக் கொண்டிருப்பார் இது சீடருடைய செயலைப் பொறுத்து அமையும் அதை விடுத்து சில சீடர்கள் இங்கே ஒரு குருவிடம் இருந்து கொண்டு வெளியே சுற்றிக்கொண்டு நாய் போல் சுற்றிக்கொண்டு அந்த தெருவழியாக நாய் ஓடும் அதைத் தாண்டி ஒரு மாதம் கழித்து பக்கத்து தெரு வழியாக ஓடும் அப்பொழுது அந்த நாய் அடுத்தவன் கையால் கல்லடி பட்டு மண்டை உடைந்து ரத்தத்துடன் கால் உடைந்து ஓடிக் கொண்டிருக்கும், இப்படிப்பட்ட சீடர்களும் இருக்கின்றார்கள் குருவிடம் எவ்வளவு பணிந்து பயபக்தியுடன் இருந்து அந்த தத்துவார்த்த விஷயங்களையும் அவருடைய அன்பிலிருந்து உதயமாகும் அன்பான விஷயத்தையும் செவிப் பருகிகின்றானோ அவனுக்கு அவன் அறிவு தக்க நிலைக்கேற்றவாறு வந்து ஏற்றமாகும். அவன் தெரியாமல் அடைந்த அறிவு அறிவுக்கண் போல் ஊற்ற்றெடுத்துக் கொண்டு அவன் நாதம் ரூப லிங்கத்திலிருந்து அறிவு அருவி போல ஓடிக்கொண்டே இருக்கும் இந்த இயற்கையின் சக்தி அருளால் அவனுக்கு அனைத்தும் கிடைக்கும் இது இல்லாமல் ஒரு சீடன் நாய் போல் சுற்றிக்கொண்டே தெருத்தெருவாக நாய் போல் சுற்றிக்கொண்டு இருந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும் அடுத்து தெருவில் இருந்த எலும்பு துண்டுகளும் கள்ளடியும் இதுதான் கிடைக்கும் இந்த நாலு தெரு சுத்தி சுத்தி வந்த நாய்க்கு என்ன தெரியும் நாளிடத்தில் வாய் வைத்துவிட்டு வந்து அதை வெளியே கொப்பளித்துக் கொண்டும் வாந்தி எடுத்துக் கொண்டும் சுற்றிக் கொண்டே இருக்கும் இப்படியும் ஒரு சில சீடன் ஜென்மங்கள் இந்த குரு பதவிக்காக போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இந்த இடம் விட்டு மாறி கொண்டும் இந்த ஜென்மத்தில் பிறந்தும் இறந்தும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள் அவருடைய வாழ்க்கையும் அப்படியே முடிந்துவிடும் தனக்கென்று அறிவு மலராத வரை அவன் இப்படியே தான் இருப்பான் மாற்றம் அவனுக்குள் வரும் வரை அவன் அமைதியாக இருப்பது நல்லது இல்லையென்றால்  மந்த புத்தியே அவனை அழித்து விடும்

போலியான நண்பனும் குரு பட்டமும்

இறைவன் ஒரு சிலரை அறிந்தும் அறியாமல் இருக்கின்ற அறிவாளிகளை படைத்திருக்கின்றான் ஏனென்றால் அவனுக்கு பரந்த ஞானத்தை கொடுப்பது போல் கொடுத்து அதில் அவருடைய பைத்தியக்காரத்தனத்தையும் வைத்துள்ளான், ஒருவனுக்கு ஞானம் விரிவடையும் பொழுது பகுத்தறிவின் தரம் தானாக விரிவடைகின்றது, அதுவே அவனுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டமும் கொடுக்கின்றது, அறிவை அடைவதற்கு சிலர் அனுபவத்தாலும் சிந்தனையாலும் அறிவை பெறுகின்றார்கள், அனுபவத்தால் அறிவைப் பெறுகின்றார்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை சிலர் பைத்தியங்களாகவும் சுற்றிக்கொண்டு உள்ளன, இவர்களுக்கிடையில் ஒரு சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு அறிவு கடலைப் போன்றது அதில் அல்ல அல்ல குறையவே குறையாது, ஒரு சிலருக்கு அறிவு மிக குறைவாக இருக்கும் அடுத்தவர்களின் அறிவை வாங்கிக் கொண்டு அதை வெளியே பிதற்றிக் கொண்டிருக்கும் சில மூடர் கூட்டமும் உண்டு, ஒரு சில மேலான மேம்பார அறிவைப் பெற்று அறிந்திருப்பார்கள் அவர்கள் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருப்பார்கள், ஒரு சிலர் அற்ப சீடர்கள் தேர்ந்தெடுக்க  வாய்க்கு வந்ததை எல்லாம் கேட்டது  கடன் வாங்கிய அறிவை எல்லாம் வெளியே உளறிக் கொண்டு நான் அறிவாளி, ஞானி, குருவாக தன்னை பாவித்துக்கொண்டும்,  அனுபவத்தால் உணர்ந்தாலும் சரி இந்த  ஒரு சில தராதரங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும், ஒரு சிலர் ஒரு விஷயத்தை விரைவாக தெரிந்து கொண்டார், வேறு சிலர் அதை தெரிந்து கொள்வதற்கு வெகு நேரம் பிடிக்கின்றது, இது அவர்களுக்கு இயற்கையாய் இறைவனால் அச்சு பதிக்கப்பட்ட ஒரு பொம்மை இந்த பொம்மைக்குள் எவ்வளவு அடக்கமாகி இருக்குமோ அவ்வளவுதான் எவ்வளவுதான் ஆடி பாடி சொன்னாலும் அதன் அறிவு விருத்திக்கு வராது, இதில் ஒரு சிலர் குருவாகவும் ஆசானாகவும் வேடமிட்டு கொண்டு  தன்னை தம்பட்டம் அடித்து கொண்டு   வெளியே சுற்றிக்கொண்டு இருப்பார்கள் அரைகுறை  வேக்காடு குருமார்கள். இவர்கள் கூட உரையாடிக் கொண்டிருப்பதே ஒரு வேலையாக இருக்கின்றது, இவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் தன்னையும் தன் அறிவையும் அழித்துக் கொண்டு பாவியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு அருள் புரிவாராக காப்பாற்றுவாராக. ============================== ஆன்மீகத்தில் எல்லாம் தெரிந்த அறிவு கொண்ட மனிதன் எவருமே யாரும் கிடையாது, மானிட உலகில்  அப்படி ஒருவரும் இல்லை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படித்தரத்தில் இருக்கின்றான் நிறைய ஆன்மீக வழி சொல்பவர்களில் இந்த படித்தரங்கள் இருக்கின்றன, அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடையாளத்தையும் வைத்திருக்கின்றார்கள், ஒரு சிலர் கடந்து சென்ற பாதைக்கு வேறு பாதையாகவும் இருந்திருக்கின்றார்கள், அவர்கள் நம்முடைய படித்தளத்தையும் அறிந்த நிலைமையிலும் முன்னேறி வருகின்றார்கள் தமக்கு கீழ் உள்ள படித்தரங்களும் அவர்களுக்கு நன்றாக தெரிகின்றன, அவற்றையெல்லாம் கடந்து தானே அவர்கள் இப்போதைய நிலைக்கு வந்திருக்க வேண்டும் இதில் உள்ள மனநிலை வேறுபாடு எந்த குருவோடுமே ஒரு நிலையான ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டே அதை அதில் உள்ள நிலையை உணர்ந்து தன்னை அறிந்து செயல்பட தகுதியற்றவனாகவும் இருக்கின்றார்கள், அந்த குருவிடம் தனக்கு உரிமை கிடைக்கவில்லையே என்று ஆதங்கத்திலும் அந்த இடத்தில் ஒரு சில சச்சரவுகளும் செய்துகொண்டு தன் அறிவை இழந்து  கொண்டிருக்கின்றனர் இதில் அவருடைய கர்ம விதி என்று சொல்லிக் கொண்டு கூடவே இருக்கும் சில ஒரு சில ஆன்மாக்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றார்கள், இதில் அவனுக்கு காமம் வேறு தலைக்கு ஏறி பித்தம் தலைக்கு ஏறி சுற்றிக்கொண்டு எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலைக்கு  தள்ளப்படுகின்றார்கள், இதில் இவன் ஒரு சில காலம் வேறு சில குருவுக்கு  சேவை செய்து கொண்டு இருப்பார்கள், இதில் அந்த குருவிற்கு என்ன தெரியும் என்றும் இவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த குருவிடம் இவ்வளவுதான் சரக்கு உள்ளதா?? என்று தெரிந்து கொண்டு அவனைவிட நான் மேலே இருக்கின்றேன், என்ற ஆணவமும் அகம்பாவமமும் அவருடைய அறிவை சீரழிக்கின்றது இவனை வேறு பாதைக்கு தள்ளி விடுகின்றது,இந்த இயற்கையில் இறைவனின் சாதாரணமான சக்தி படைத்தவனா ஆண் பெண் உருவம் கொண்ட அவன் யார்? இறை சக்தி யாரையும் விட்டு வைத்ததில்லை அவன் உணர்ச்சிகளாகவும் அவன் ஆனந்தமாகவும் இந்த உலகில் நடனம் மாடிக் கொண்டிருக்கின்றான் இதை இந்த  அறிவாளி  என்னை என்று  தெறியாமல் அவன் புலம்பி கொண்டிருக்கின்றான், ஒருவருக்கு இந்த உலகில் எதைக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் நிர்ணயித்து அவருடைய அறிவுக்கு ஏற்றார் போல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான், அவனுடைய எண்ணங்கள்  உணர்ச்சியும் மனத்தையும் ஆசையையும் அவனை சீரழித்து குருபீடத்துக்கு தள்ளி அந்த குரு பீடத்திலிருந்து அவன் தவறும் செய்கின்றான், அந்த குருவிடத்தில் இருக்கும் வரை அவனுக்கு அறிவுக்கு   எட்டியதை தவிர தாண்டி மேலே போகக் கூடிய பக்குவம் அவனுக்கு இல்லை, அவன் குரு சொல்லிக் கொடுத்ததை  வைத்து  காலங்காலமாக சொல்லிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருப்பானே தவிர அதற்கு மேலே அவனுக்கு போகக்கூடிய வழியும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பு அவனுடைய அறிவுரைக்கு எட்டிய வழியில் செய்தால் தான்  முடியும்,  இந்த இயற்கை இதனால் அவன்  ஒரு சில  குரு மார்களை  தேடி அங்கு என்ன நடக்கிறது இங்கே என்ன நடக்கின்றது நோட்டமிட்டு அதனாலையே அதில் கற்றுக் கொண்டு அடுத்தவர்களை ஏளனமாகவும் கேளியாகவும் பேசிக்கொண்டு சுற்றி திரிகின்றார்கள்  இந்த பைத்தியக்காரத்தனம் கொண்ட குருமார்களை என்ன செய்வோம், இது தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு குரு பீடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடன் கூட இருந்த நண்பர்களையும்  எதிர்த்து கொண்டு அழிந்து போகின்றார்கள் இவனுக்கு அழிவேதான் இவன் அறிவு