Thursday, November 24, 2022
தயவும் தவமும்
தயவும் தவமும்
இந்த சென்மத்துலே மோட்ச வீட்டில் புகுந்து கொள்ள வேண்டாமா, அப்போ எவ்வளவு சமயம் நாம் ஒவ்வொருவரும் சீவகாருண்ய வசத்தராயிருக்க வேண்டும்? கணக்கிட்டு பாத்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும் ,ஒவ்வொருவரும் எத்தனை நேரம் சீவகாருண்ய முனைப்பாய் இருக்கிறீர்கள் என்பது, அப்படித்தானே?. ஒரு நாளில் எத்தனை நிமிடம் என்று சொல்லுங்கள், உள்ளம் தயவுடன் இருக்கிறது?.
பசிப்போருக்கு உணவளிக்க வேண்டும், அது தலையாய கடமை,அதுவே சீவ காருண்யம் என கொண்டு உணவளிக்கலாம். ஆனால் பாருங்கள் நூறு பேரிடம் பணம் வாங்கி ஒரு கும்பலாய் கூடி, சாப்பாட்டை ஏந்திகொண்டு பசி இல்லாதவர்களுக்கு பரிமாறி கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரே அமர்களம், கேட்டால் சீவகாருண்யமாம். பசித்து இளைத்து, கண்கள் பஞ்சாகி உள்ளே சென்று பெரிய மனுஷங்கள் கிட்டே உக்காந்து சாப்பிட்டா திட்டுவாங்களோண்ணு பயந்து வெளியிலே ஒரு மூலைலே ஒதுங்கி நிக்கும் ஒரு கூட்டம்,எங்கே போகுது சீவகாருண்யம்? இதுவா சீவகாருண்யம்? இதுவா தயவு?
பசித்து துக்கித்து நிற்பவனை கண்டால் உடம்பில் ஒருவித நடுக்கம் தென்பட ஆரம்பிக்கும்,அது பசியால் வாடினவன் உணவு கொண்டபின் அவன் கண்களில் ஏற்படும் பூரிப்பை கண்டபின்பே தணியும்,இதுவே தயவு. அப்படி நாள் முழுக்க தயவுடன் இருப்பதே தவம். இது வராமல் மோட்சவீடு என்று சொல்லிகொண்டு திரிவது வெறும் பகட்டுக்கு வார்த்தை ஜாலம் மட்டுமே,செத்து பிணம் நாறுமே ஒழிய மோட்சமில்லை
தன்னை உணர தனக்கொரு கேடில்லை
தன்னை உணர தனக்கொரு கேடில்லை
மகார வித்தை - Ajiesh
ஐயா மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து..அதுக்கு
மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா
மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்......நீங்க சொல்லி
இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை....
’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர்
வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே
ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு
விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம்
செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும
திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்...
துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை
மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய
குரு கவுட பாதர் விலக்குகிறார்....இங்க துரிய தவம் சொல்லி
குடுத்து சமாதி நிலை கிடைக்குதாம்,ஆனா அகாரத்தையும்
கண்டதில்லே உகாரத்தையும் கேட்டதில்லை,விந்து நாதம்
தெவையே இல்லை...என்னா உலகம் எப்படியாவது நாலு
பணம் பாக்கணும் ஆசிரமம் கட்டணும் பயிற்சி வகுப்புகள்
நடத்தணும்ன்கிற ஒரே குறிக்கோளிலே குருமார்கள்.....நல்ல
சீடர்களை வார்த்தெடுக்கணும் என்கிறகவலை கிடையவே
கிடையாது....கொடுக்கிற பீஸுக்கு சமாமான போதனை
அவ்வளவுதான்...ஞானம் கிடைச்சச்சு போ.....நல்லா உருப்படும்
குருவும் சீடனும்......
அரை மாத்திரை விளக்கம் என்பது குரு பாரம்பரியத்தால்
கிடைக்கப்பெறுவது...அப்படி ஒன்று இருக்கிறது என்பது பெரும்
ஞானிகளுக்கு தெரிந்தாலும் அதை
விளக்கத்தெரிவதில்லை....கேட்டால் அது ரகசியம் என
ஓடிவிடுவர்...ஆனால் உண்மை அதுவல்ல....உண்மையில்
அரை மாத்திரை என்பது உச்சரிக்கும்
தன்மையாகும்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டுவது ஒரு
தன்மை...ஆனால் அது நீட்டுதல் இல்லை, ===ம்ம்ம்ம்ம்ம்ம்=
என முழங்குவது ஆகும், மற்றொன்று தான் ””””அரை மாத்திரை
பிரயோகம்”””,அது தீட்சா சம்பிரதாயம்.....அதுவானது
மகாரத்தின்மெல் புள்ளி போடாமல் அர்த்த சந்திரன் போட்டு
உச்சரிக்கும் முறை...அது குருவானவர் சீடனுக்கு காதில்
உபதேசித்து கருணை பொழியும் முறை...அதுவே அருள்
முறையான அமைப்பு.....அதையே வடமொழியில் ஓம்
என்பதை எழுதும் போது அதன் மேல் அர்த்தசந்திரனும் ஒரு
புள்ளியும் போட்டிருப்பார்கள் நம் ரிஷி முனிவர்கள் தங்கள்
கருத்தால் சுட்டிக்காட்டிய ஞான அமைப்பு அது.ஆனால்
காலப்போக்கில் உண்மை மறைந்து போனது,நாமும்
அரைமாத்திரை பிரயோகத்தை இழந்துவிட்டோம்,ஆனால்
கடவுள் கருணை உள்ளவர் என்பதை நாம்
மறந்துவிடக்கூடாது...கருணைசெலுத்தவேண்டியவர்களுக்கு
அவர் கருணைபொழிய தவறியதில்லை
சத் சங்கம்.
== சத் சங்கம்.===
அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்.. ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை
உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான்
புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.
ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....
ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....
இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.
----❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
வாலையின் அட்சரம்
வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்டு சொல்பவர் யார்காணும் மேலென்றும் கீழென்றும் மத்திபமும் கூட்டி விரைந்து சொல்லடி ஞானபெண்ணே.
விரைந்து சொல்லுவன் மூன்றெழுத்தால் சதம் விரிந்து தானுயிருண்டாச்சு தெரிந்து கொண்டவர் தங்களுக்கா கவலை தீட்சை இதுவல்லவோ ஞானபெண்ணே
~ கொங்கணர் ஞானகும்மி
அ ன்னா
ஆ வன் னா
இ ன்னா
ஈ யன் னா
ன்னு சொல்லும் குருவே அவனா இவன் இவனா அவன்னு கண்டு பிடித்து அவனுக்கு தக்க பாடம் எடுக்கும் குருவே வாலையின் அட்சரம் தெரிந்தவர்கள் குருவே
ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா
ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா?? – ரியான் அய்யா
வள்ளலார் இதற்க்கு விளக்கமாக சொல்லுவது என்ன என பார்க்கலாமா?... இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை?
1) கண்டம், 2) சிரம்
சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது.
கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷ ஜீவன்; இது இறந்துவிடும்.
மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன.
இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
அப்படியெனில் ஜீவன் என்பது முக்கியமாக இரண்டு வகைகளும், ஆன்மா என்பது முக்கியமாக ஒன்றுமாகும் என காணலாம் அல்லவா?. இனி ஏன் ஜீவன் இரண்டாக இருக்கிறது என அறியவேண்டாமா? அல்லாது ஏனையா மூன்று ஜீவன்களும் எவை எவை எனவும் அறிய வேண்டாமா?.
ஆன்மாவானது தனித்து இருக்கிறது என கூறும் வள்ளலார் ஜீவன்களில் முதலானது புருவமத்தியிலும், இரண்டாவது ஜீவன் கண்டத்திலும் இருக்கிறதாக சொல்லுகிறார் அல்லவா?. முதலாவது சொன்னது சாமானிய ஜீவனும் இரண்டாவது சொன்னது விசேஷ ஜீவனும் ஆக சொல்லுகிறார். ஆனால் இவை இரண்டையும் பரமாத்மா எனவும் ஜீவாத்மா எனவும் பெயரிட்டு அழைக்கவும் செய்கிறார், அப்படித்தானே?. .அப்படியெனில் இவை ஜீவனா அல்லது ஆத்மாவா என கேட்க்க தோன்றுகிறதல்லவா?.சரிதானே??
ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?. .அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும், அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.
ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?... அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?.. அப்படித்தானே?.. ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்திருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?. .சரிதானே?..
ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?.. அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?. .சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?.. செத்துப்போவது சன்மார்க்கமாகாதே..... ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?... அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி.
-- நன்றி ரியான் அய்யா அவர்கள் 🙏
பிறந்த குழந்தை
“பிறந்த குழந்தைக்கு மூச்சி ஓடாது மனம் வேலை செய்யும் போது குழந்தை பால் அழும் போதே மூச்சி மூக்கின் வழி நடக்கும்”.
இது உங்கள் கமெண்ட். இதன் தாத்பர்யம் என்னவாம்? இங்கு எதை சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு மனம் வேலை செய்யும் போது தான் குழந்தை பால் அழும் போதே மூச்சு மூக்கின் வழி நடக்கும் என்று சொல்லுகின்றீர்களே, அப்படியெனில் மூச்சு ஓடாமல் குழந்தைக்கு மனம் வேலை செய்யுமா?.
குழந்தையின் முதல் அழுகையினால் தான் மூச்சு ஆரம்பிக்கிறது என்கிறீர்களே, அப்படியெனில் குழந்தை அழுவதற்க்கு தேவையான காற்றை குழந்தை எங்கிருந்து கொள்கிறது?.குழந்தை அழ வேண்டுமெனில் அதன் நுரையீரலில் வாயு நிரம்பியிருக்க வேண்டும். வாயு இல்லாமல் முதல் முதலாக குழந்தை அழுவது எப்படி? விளக்கம் வெண்டுகிறேன் ஜீ.
மெய்ப்பொருள்
*மெய்ப்பொருள்*
மெய்ப்பொருள் என்றால் என்ன?
அது கண்ணால் காணக்கூடியதா? அல்லது உணரக் கூடியதா?
அந்த மெய்ப்பொருள் மனுத்தூலமெடுத்த அனைவருள்ளும் நின்று விளங்குகின்றதா?
அல்லது அவதார புருஷர்களிடம் மட்டுமே உள்ளதா?
நாம் இவற்றிற்கெல்லாம் விடை தேடி அலைய வேண்டாம் என்ற பெருங்கருணைப் பேரிரக்கத்தால்......
அதாவது வள்ளலார் அவர்கள் .......
*ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன்*
என்றது போல.....
நமக்காக நம் பிதாவானவர்கள் ஆதிமெய் உதய பூரண வேதாந்த முகப்புப் பாவில்....
*னீதி எனும் பொருள் ஆன மனுக்குலம்* என்றுதான் அருளியுள்ளார்கள்....
னீதி எனும் பொருள் என்று எடுத்துக் கொண்டாலே...
னீதிதான் பொருளாக உள்ளது என்றாகின்றதல்லவா?
அந்த னீதி என்ற மெய்ப்பொருளை தன்னகத்தே ஆனவன் தான் மனிதன் என்று அருளியுள்ளார்களல்லவா?
னீதியென்ற பிடரிக்கண் திறக்கும் காலம்
என்றும். ...
அந்த
னீதியுடன் எனையாண்ட குருபரன் தாள்
என்றும்
னீதியாய் அனுதினம் கருப்பில் வெள்ளை னேசமதே குடியாய்
என்றும்
னீதியில் னடக்க னித்தியன் ஆவாய்
என்றும்
ஆதிதன் சோதி னீதினன் னெறியால்
என்றும்
னீதினீரளித்த ஞானம் னீடூழி காலம் வாழ்க
என்றும்
னீதிவழி பற்றித் தாவித் தொடர்ந்து வெளியாவதற்கென னிற்கும்
என்றும்
னீதி னிறைந்த பரம்பொருளே நித்தமென் சித்தத் துறைந்தவரே
என்றும்
ஊழித்தீர்ப்பு னீதிகொண்டு வந்து னிற்கும் உத்தமியே என் னாவில் னின்று உரையுந்தாயே
என்றும்
ஆதிபராபரை னீதி தராதல அந்தரி சுந்தரியே
என்றும்
னீதினகர்மணி பரைவேற்கண்ணி னித்திரை யற்றவளே
என்றும்
பிரளய னீதி தெளிவுறுங்கோல்கை கொண்டிங் குற்றவளே
என்றும்
னீதி னாமம் வேறு பூண்டு பூண்டு னீனிலத்தில் வந்த காலந்தோறும்
என்றும்
னீரேதுணையல்லால் எங்களுக்குத் தாயே தனிக்குண னீதியரே
என்றும்
னெறினீதித் தலையவர் அறம்வளர் சன்னிதி
என்றும்
சித்தந்தனில் உத்யோவனம் னித்தந்தணி யாதனிறை
னீதினிறைந்து னிறைந்திருக்கும்
என்றும்
னீதிச்சொல் மணம் வீசும்
மாதம் விடாயற்ற ஆதிப்பெண் அவள் வேண்டுமா
என்றும்
ஊழிவிதி னீதித்தீர்ப்பது வந்துவிட்ட உற்றகலியுகக் கடை காலந்தன்னிலே
என்றும்
னீதியுடல் ஆதியெடுத்து
கடைக்காலம்
னின்றிசைய எண்டிசைக்கும் தென்றிசையிங்கே
என்றும்
*ஆதிமார்க்கனாத னீதி சாதிபேதம் தீர்த்த சேதி*
என்றும்
*னீதிப் பெருங்குடி மாலைப்பானைப்பலி பொங்கலோ பொங்கல்*
என்றும்
*னடுனீதி யுகம்புரக்கும் பூவண திடதீர்க்கத் தரிசனம் னடைபெறும் காட்டிலே*
என்றும்
*ஆதித் தலைனாளில் னான் அறிந்து தொட்ட னீதி மெய்யை*
என்றும்
*ஆண்னீதிப் பெண்ணகமாய் அருண்மேனி வந்து னின்ற*
என்றும்
*சென்னெறி னீதிக் குன்றேறியே*
என்றும்
*ஆதியின் னீதி யுகம்புரக்கும்*
என்றும்
*னீந்திப் பிரளயத்தை னீதிக்கரை ஏறவென*
என்றும்
*னலிவுற்ற னீதிக்கண் தெளிவுற்றுப் பெலம் ஏற*
என்றும்
*வேதனெறினீதி விளங்க உலகெங்கும்*
என்றும்
*இறைதிரு இறுதி னீதினடவு வைப்பு*
என்றும்
*பிரளய னீதி னடவு கோட்டு எண்ணத்திற்கு ஏறி வந்து விட்ட நாளையிலே*
என்றும்
மேற்கண்டவாறு நம் ஆண்டவர்கள் சொல்லாட்சியைக் கையாண்டு அருளியுள்ளார்களல்லவா. ......
இதைக் கூர்ந்து கவனிக்கும் விதத்தில்
னீதி என்ற மெய்ப்பொருளானது நம்முள் குடி கொண்டுள்ள இறை சக்தியான பிரணவப் பொருளையும்....
அதைக் கைப்பற்றி ஜோதிமயமானவர்கள் தான் பெரியோர்கள் என்பதையும் நன்கு உணர முடிகின்றதல்லவா? நான்
ஒருதலைமுறைக் காலம் உன்னில் குடியேறியிருக்கின்றேன் ...னீ என்னை திரும்பிப் பார்க்கமாட்டாயா என்றும்
மனுவினுடைய ஜீவ குகைதோறும் வீற்றிருக்கும் மருவில்லா குகன் என்றும்...
நாம் சிவமாய் வாழலாம் நாடிப்பாரே என்றும்
சாயுச்ய அரசனென வருவாய் என்போல் என்ற ஆசிர்பாதத்தையும்....
உற்றுப் பார்க்கையில் அந்த மெய்ப்பொருளானது மனுத்தூலமெடுத்த அனைவருள்ளும் பொதிந்துள்ளது....
அதை திருப்பிக் காட்டி எடுத்துத் தரக்கூடிய பெரியோர்களாக நம் ஆண்டவர்கள் அவதரித்தார்கள் என்பதை ஒலினாடாவில் அருளியுள்ளதோடு
அவர்கள் மான்மியத்தில் 300 ம் பக்கத்தில்
*என்னுடைய உன்னுடையதுமாகிய அசல் தெய்வத்தைக் காட்டி*
என்று அருளியுள்ளார்கள்.
பாவவிமோசனத் திருமந்திரத்தில்
*நாங்களாகிறவர்கள்... உங்களோடு அறிந்து செய்த பாவங்களைத் தொட்டும்*
என்பதை நோக்கும் போது அந்த மெய்ப்பொருள் தான் நம்முள் பர ஆன்மாவாக இருந்து நம்மை வழி நடத்திச் செல்கின்றது....
ஆனால் அந்த ஜீவனை அவாவோடு தாவச்செய்து குற்றச்செயல்களை புரிய வைப்பதும் அல்லது மேல் நிலையிலேயே இருந்து நன்மைகளைக் கைக்கொள்வதும் அவரவரின் எண்ணம் சொல் செயலால் விளங்குகின்றது.
இதைத்தான் மேலே இழுத்தால் சுல்தான்
கீழே இழுத்தால் சைத்தான் என்றும் பெரியோர்கள் அருளியுள்ளார்கள்.
......
*ஜீவனே சிற்றம்பலப் பொருளதாகும்*
என்ற சிவானந்த போத வரிகளைப் போல் நமக்குள்
.....
வாசனை கேள்வி இருகண் வாய் எவைக்கும் வல்லமை அளிக்கும் அக்கண்ணாக..... அதாவது மூன்றாவது கண்ணாக......
சர்வத்திற்கும் தாய்க்குடிலாக.....
தொந்திக் கணபதியாக,
மணிவயிராக,
.....
மனிதனுடைய எண்ணத்தின் பிற்புறப் பிடரியில் னிறை னீதி ஆசன பீடமிட்டிருந்துவரும்
வஸ்து வித்தாகிய அது
கோடி சூரியப்பிரகாச அதியரசு கிரணமாலியாயும் பிரம்ம சொரூப இதய மேருகிரி அரசு தவசு மாலாயும் சுத்தாவிச் சித்து வித்தான
முத்து ஒத்தை உருவாயும்
அணுவினுக்கு அணுவாகவும் அகண்டம் அனைத்தினுக்கும் அதனை விழுங்கிவிடும் அகண்டமாயும் நிலையுற நின்று விளங்கும் அம்மகா மகான்மிய மகத்துவ வித்தினை இங்கே நாம் எழுதாத எழுத்தென் றுரைக்கின்றோம்.....
ஓதாமலோதும் வேதமதென்றும் கூறுவோம்.....
அதனையே வித்தில்லா வித்தென் றுரைப்போம் பிரவியரே....
என்று மான்மியம் பக்கம் 307 ல் அருளியுள்ளார்கள்.
கோடாயிதக்கூர் பக்கம் 22ல்
ஜீவன் பஞ்சு இழை. மயிரிழையைக் காணிலும் எத்தனையோ மடங்கு சிறியது .அந்த இழையிலே ஒரு துளை .அதனுள்ளே ஆவியாக னிற்பது,னுண்ணியதினும் ணுண்ணியதானது ஜீவன். அதனுடைய உசும்புதலாலேயே இந்தத் தேகாதியந்தமும் அசைகிறது. அது ஆத்ம மர்ம ஜலக்கடலின் மேல் இருந்து கொண்டு சர்வ சக்தியோடு, பிரிதொன்றின் துணையின்றி, தேகாதியந்தத்திற்கும் உற்பனத் தாயாக, உசுப்பி நடத்துவதாக விளங்குகின்றது.
பஞ்ச பூதமும் அதனிடமிருந்து கடன் பெற்றே தேகமாகிய இந்தக் கூட்டை கட்டிற்று.
அது மயனத்தில் மயனமாக இருந்து கொண்டு சர்வத்திற்கும் தாய்க்குடிலாகவும்,
புராதன காலந்தொடங்கிச் சர்வத்துக்கும் காரண ரூபமாகவும், சர்வ சத்துக்களுக்கும் பெட்டகமாகவும்,
தொந்திக் கணபதியாகவும்
மணிவயிராகவும் வாய்த்திருந்து, சகலத்துக்கும் உதவுவதான
பெரு வயிருடைய
பஞ்சபூத கணத்தலையரசன் திருத்தலமாகவும் இலங்கி மிலிர்வது......
என்று பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள். .....
மெய் இருதயமாம் கல்பை விளங்கிடத் தலமெய்யாகும்....
என்றும் அருளியுள்ளார்கள். ...
அப்ப அந்தக் கலிமாப்பொருளான திருச்சிற்றம்பலப்
பொருளே, சிவமயப் பொருளே நமக்குள் மெய்ப்பொருளாக னாதமாக னின்று விளங்குகின்றது என்பது வேத சாட்சியாக விளங்குகின்றதல்லவா?
இப்படியல்லாமல் நம்மிடம் ஒன்றுமில்லை......
எல்லாம் அவர்களிடம்தான் உள்ளது என்று தர்க்கம் பண்ணினால் அதற்கு வேதம் சாட்சியாக நின்று விளங்காது.....
இதைத்தான்...
அனுபவிக்கின்ற கருவியையும் நமக்குள் வைத்து. .. அனுபவிக்கக்கூடிய பொருள்களையும் வெளியில் வைத்து. ...
அந்த
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
இவைஐந்தின் வகைதெரிவான் கட்டாக விளங்குவதுதான் அந்த மெய்ப்பொருள் என்றும்
தெய்வத் திருக்குமாரர் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் அவர்கள் அருளியுள்ளார்கள். ...
ஆக ....
எல்லாப் பாஷைகளிலும்
இலங்கும் ஏகாட்சரமாக
விளங்குவதே மெய்ப்பொருளாகும்....
மேலே மெய்ப்பொருள் பற்றி சிந்தித்தோமல்லவா.......
அது யாருக்கு வேண்டும்?
யாருக்கு வேண்டாம்.....
நம் ஆண்டவர்கள் ஒலினாடாவில் ......
மனிதனுக்கு இல்லாத கயிலாயம் வேறு யாருக்கு?
சிவனோட சித்தப்பன் பிள்ளைகளுக்கா....?
யாருக்கு வேண்டும்... யாருக்கு வேண்டாம். ....
என்று அருளியுள்ளார்கள். ...
அப்ப அந்த மெய்ப்பொருளை அறிந்தால்தான்
கயிலாயம் என்னவென்று அறிய முடியும்.
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் மற்ற ஐம்புல நுகர்ச்சிகளை ஒரே மாதிரி அனுபவிக்க வைத்துள்ள இறைவன்.......
இந்த மெய்ப்பொருளையும்
இந்த உலகத்தில் உள்ள மனுத்தலைகள் அனைவரும் அறிய வேண்டும் என்றுதான் திருவுளம் பூண்டார்கள்.
தௌகீது காமில் என்ற பகுதியில். .....
னல்லகதினிலை னிலவுலகெலாம் விளங்க...
இதை
எல்லவர்க்கும் சொல்ல என்றன்
இச்சை மதி குதிக்க. ...
இச்சை குதி குதிப்போர்க் கெய்தும் சமதானி
என்றருளியுள்ளார்கள்.
யாரெல்லாம் இந்த மெய்யின்பால் இச்சை கொண்டு தேடி வருகின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த நல்ல கதினிலை கிடைக்க வேண்டும் என்பது நமது மார்க்கனாதப் பெருமானவர்களின் இச்சையல்லவா.....
மேலும்
ஞானமுறையீட்டில்....
எல்லோருமே இந்த இன்பம் அறிந்திட என்றனிட னாட்டம்...
ஏக பராபரப் பூரணமே தினம்
என்னிதயத் தோற்றம் என்றும் அருளியுள்ளார்கள் என்றால் ....
இது வெறும் வாய் வார்த்தைகளா?
அவர்களின் உத்திரவு அல்லவா .....
அப்பேற்பட்ட மகோன்னத...
பூரண னிலையையே இனாமாக வழங்கத் திருவுளம் பூண்டவர்களல்லவா நம் தந்தை.
நமது மூலமந்திரத்தில்...
சதுர் யுகங்கோடிகால மக்கள் இடத்திலுமுள்ள சர்வ மூலமந்திரத்தையும் னிருபனை செய்ய வந்த மகா ஆண்மையர் யுகவான் சாலை ஆண்டவர்களே முத்திபாலிப்பு என்றுதானே தினமும் உச்சரித்து வருகின்றோம்....
அது செயலாகவல்லவா இருக்கின்றது. ...
தினமும் காலை 7 மணிக்குச் சொல்லும் மகா சங்கல்ப மந்திரத்தில்.....
யதார்த்த னன்மனத்தினர் யாராக இருந்தாலும்....
மெய்வழியில் சேர்ந்து தேவப்பிறப்பில் பிறந்து ஆகிக்கொள்வதற்கு ஆண்டவர்களின் ஆசிர்பாதம் என்றுதானே நம் ஆண்டவர்கள் கருணையுடன் எடுத்து நாம் வைத்து தினமும் சொல்லி வருகின்றோம்.....
அப்ப
நம் ஆண்டவர்கள் .....
இந்த மெய்ச்செயலானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் என்றோ. ... தனது சொந்த பந்தங்களுக்கு மட்டும்தான் என்றோ உத்தரவிடவில்லை. ...
அந்த மதிமாமனச் செம்மல் அவர்கள் நம் மீது இரக்கம் கொண்டு.....
நாம் இந்த
மனுத்தூலமெடுத்து அறிவுகாலம் வந்தும் நபுசுடைய வணக்கத்தைச் செய்துகொண்டும் ....
ஐம்புல நுகர்ச்சியில் வெளியிலே ஓடிக்கொண்டிருந்த நம் அனைவரையும் தமது அமுதனா அருள் வர்ஷிப்பு மூலம் உள்முகமாகத் திருப்பி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பதிப்பித்துள்ளார்கள்...
இந்தச் செயல் யுகங்கோடிகாலமும் நிலவுகின்றது. .....
ஒரு காலத்தில் ஒரு மாதிரியும் இன்று வேறு மாதிரியாகவும் இல்லை...
அது
பிறந்தது இனி இறவாது பேசும் பஞ்சாட்சரமாக இருந்து கொண்டு அருளை வாரி இறைக்கின்றது.
இந்த மெய்வழிக்கு குருகிய வட்டத்தைப் போட்டு யாரும் திருப்தி அடைந்து விடாமல். ...
இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனுத்தலைகளும் பெற. ..
அந்த ஆகாய வெளி வீதி
விளையாட்டு யோக
குணாதீதர்
அருயுள்ளதுபோல் ....
அந்த உத்திரவை நாம் சிறமேற் தாங்கி செயல்படுத்துவோம்...
பலன் கொடுப்பவர்கள் நம் ஆண்டவர்கள். ...
அதையல்லாமல் மற்றவர்களைக் குறை கூறுவதன் மூலமோ underestimate பண்ணுவதன் மூலமோ பெருமை கிடைக்கும் என்று எண்ணினால்....
அதற்கும் நம் ஆண்டவர்கள் தான் பலனை அளப்பார்கள்....
பெரியோர்க்குத் தொண்டு செய்வாரைத் தடுத்திடும் பேதையரும்
சரியான னடுனிலை சார்ந்தவர்க்கு அல்லல் சமைப்பவரும் பரிவான தீட்சை கொண்டாரை மறிக்கும் அப் பாதகரும்
எரிவாய் கொடுனரகில் எண்ணில்துயரில் இருப்பரன்றோ...
ஆகையினால் னரியதன் வால் கொண்டு கடல் ஆழம் காட்ட முற்படாமல்
அவரவரும் கடைத்தேற
நம் எண்ணம் சொல் செயலில் நன்மையை மட்டுமே செய்து நற்கதிக்காக நம் தந்தையிடம் முறையிடுவோம்.
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...
எப்பேர்ப்பட்ட பாவச்செயல் புரிந்திருந்தாலும் அவனைப் பாவியென்று சொல்லாதே என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
அவர்கள் கருணாமூர்த்தி அல்லவா. ..
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நாம் நமது கடமையைச் செய்வோம்.
அவரவர் கடைத்தேற வேண்டியவர்களாக உள்ளோம்.
குரு வாழ்க குருவே துணை.
செத்தவன் ரகசியம்
====செத்தவன் ரகசியம்====
ஒரு விஷயம் ரகசியம் என்றால் அதை மூடி வைக்கிறோம். மூடி வைக்கபட வேண்டியதே தான் ரகசியம். அப்போ செத்தவனுக்கு எதை மூடி வைக்கிறோம் என்றால் அவன் கண்ணையே அல்லவா?.
செத்தவனின் கண்ணை மூடி வைப்பது அதன் ரகசியம் வெளிப்படாமல் இருக்கவே, ரகசியமாக இருக்கவே. எந்த ரகசியம் என்றால் அவன் செத்தானா அல்லது ஜீவபிரயாணம் ஆனானா எனும் ரகசியம்.
செத்தவனுக்கு கருவிழி இருக்காது என்பது ஞானபாரவான்களின் கூற்று. ஆனால் இங்கோ செத்தவனை சந்தனம் பன்னீர் பூசி அவன் கண்ணை ரகசியமாக மூடி யாரும் அடையாளம் கண்டுவிடாதபடிக்கு மறைத்து ஜீவபிரயாணம் ஆகி விட்டான் என பத்தடையாளம் சொல்லி தம்பட்டம் அடித்துகொண்டிருக்கிறார்கள் கூறு கெட்ட குமண்டிகள். அய்யகோ..
கண்மூடி வித்தையெல்லாம் மண்மூடி போக விண்நாடி வந்தலவோ விண்ணாடி போக.. பத்து அடையாளம் இருந்தும் என்ன பதினெட்டு அடையாளம் இருந்தும் என்ன, அடையாளம் இருக்கு என சொல்லுவது அந்த அடையாளமானதை எல்லோரும் கண்டு இது மெய்யான அடையாளம் தான் என நிர்ணயிக்கவே அல்லவா?.
அதை விடுத்து அடையாளம் இருக்கு என சொல்லுபவர்களே அந்த அடையாளத்தை யாரும் சோதித்து பார்க்ககூடாது, சோதிப்பது கொடுஞ்செயல் என தடுத்து வைத்தால் அடையாளத்தினால் ஆன பயன் யாது?. சும்மா இருக்கு இருக்கு என கோரஸாக சொல்லிகிட்டு இருக்கலாமே ஒழிய வேலைக்கு ஆகாது அல்லவா?
உன்னிடம் அடையாளம் இருக்கிறது எனில் அதை வெளிப்படையாக காட்டு பார்க்கலாம் என ஒருவன் கேட்டால் நீ கூமுட்டைத்தனமாக கோவம் கொள்ளுவது ஏனோ?. ஏன் உன்னிடம் அதை வெளிப்படையாக நிரூபிக்க இயலாமை உள்ளது எனத்தானே பொருள். சரி, அப்படியே விட்டுவிடுவோம் அந்த பரிசுத்த அடையாளங்களை என வைத்துகொள்ளுவோம். ஆயினும் இந்த கருவிழியின் அடையாளமானது உன் பரிசுத்த அடையாளத்தில் ஒன்று அல்ல அன்றோ. இதையாவது வெளிப்படையாக வெளிப்படுத்தவோ சோதித்து பார்க்கவோ நீ அனுமதிக்கலாம் அல்லவா? அப்புறம் ஏன் ஜீவபிரயாணம் என சொல்லிகொண்டு கண் இரண்டையும் மூடி வைத்திருக்கிறாயாம்? என்ன??. மெய்யான பத்து அடையாளங்களோ பதினெட்டு அடையாளங்களோ நாலு அடையாளங்களோ ஒண்ணாவது இருக்கிறதை பார்த்தால் அதை விட பெரும்பேறு என்னவாக இருக்கும்.. அது அருமையே தான். ஆனால் செத்தவனை எல்லாம் பத்து அடையாளம் இருக்குண்ணு முத்திரை குத்தினா அது நிச்சயம் வலியே தான். ஆயினும் செத்தவனுக்கெல்லாம் சலாம்.
நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.
பர அறிவு
==========பர அறிவு=======
நீ எங்கிருந்து வந்தாய் மகனே...எங்கே செல்கிறாய்.... நில்....கவனி....நிச்சயம் அதை நீ உணர்வாய்....அறியப்படவேண்டியது உன்னுள் இருந்தால் அது உன்னுள் ஏன் மறைந்து இருக்கவேண்டும்?...இருளான ஆன்மாவுக்குள் ஒளியான இறைவன் ஒளிந்திருப்பது எங்ஙனம்?...அதனால் சிந்திப்பாயாக...இறைவன் ஆன்மாவுக்குள் மறைந்து இருக்கமுடியாது......(1)
அவனுக்குள் நீ இருக்கிறாயா அல்லது உன்னுக்குள் அவன் இருக்கிறானா?....மகனே நீ கவனி.....அவன் என்று சொல்வதற்க்கு இங்கு எவரும் இல்லை என கண்டாய்.....ஆனால் நீ இருக்கிறாய்.....ஆனால் உன்னையே நீ உருவாக்கி கொள்ளவில்லையே?....அப்படியெனில் நீ எங்கிருந்து வந்தாய் மகனே ...எங்கே போகிறாய்?.... எதற்க்கு வந்தாய் என அறிந்தால் நீ யார் என அறிவாய்....(2)
தனியாக நீ வரவில்லை என காண்பாய்....எனில் தனிமை எப்படி உனக்கு உறுதுணையாகும்....தனிமையே உன் உயிர்ப்பு எனில் இயற்கையில் ஒன்றி ஏன் நீ பிறந்தாய்?...நில் கவனி...மகனே உன்னை நீ அறிவாய்...உன்னை நீ இழக்கும் போதே உன்னை நீ அறிகிறாய்......நீ இருக்கும் போது உன்னை நீ அறிவதில்லை....உன் தனிமையே நீ என உணர்வாய்..அதனால் உன் தனிமையை கொன்றுவிடு.....(3)
உன் தனிமையில் நீ உன்னுக்குள் செல்கிறாய்... இருளுக்குள் உனக்கு என்ன இருக்கிறது தேடுவதற்க்கு?...இருளுக்குள் தேடுபவன் இறைவனை அடைவதில்லை கண்டாய்....ஒளிக்குள் தேடுபவனே இறைவனை காண்பான்... ஏனெனில் அவர் ஒளியினில் வசிப்பவர்....அவர் வசிக்கும் இடத்தினிலன்றோஅவரை காணமுடியும்?.அவரை அவர் இடத்தினில் தேடுவாயாக மகனே...(4)
உன்னை சுற்றி கவனி...நீ எங்கிருக்கிறாய் என காண்பாய்...நீ ஒளியிலே இருக்கிறாய் ஆனால் அதை அறியாமல் கழிக்கிறாய்...உன் இருளே உன்னை அறியவொட்டாமல் செய்கிறது....ஆதலால் இருளான ஆன்மாவை விட்டுவிடு...ஒளியான இறையை கண்டடை...நில் மகனே கவனி....உயிரற்ற ஆன்மா உனக்கெதற்க்கு? ..உயிருள்ள ஒளியினையே அறிவாய் கண்டாய்....(5)
உயிர்ப்புடன் இருப்பதற்க்கு உயிர்ப்பையே அணைவாய்...உன்னிலில்லா உயிர்ப்பை உன்னைச்சுற்றி காண்பாய்...நில் மகனே கவனி...நீ தனிமையில் இருக்கவில்லை...ஒளியிலே இருக்கிறாய்....உன் ஆன்மாவை விட்டுவிடு ஒளியினை காண்பாய்...உன்னை சூழ்ந்த உயிராதியை காண்பாய்...ஆன்மாவல்லாத உயிரொளியை காண்பாய்...ஆன்மா இல்லா உயிரது காண்..(6)
உயிரான உயிரதுதான் ஓசையாகும்...உணர்வான நாதமுதம் அதுவேயாகும்...துறையான மரத்தினுக்கோர் ஏணியாகும்...சொல்லரிய சூட்சமது பரத்திலாடும்...பயிரான பயிர்வகைகள் பரத்திலாகும்...பரமென்றால் அம்பரமும் அப்பாலாகும்...அப்பரத்தின் படித்துறையை படித்துறையே...உறையாத மனமதுக்கு உரையதாக... உயிரான ஒருமொழியே ஓமதாமே...(7)
நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.
வாயுணவு
"வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."
"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."
"மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்.
ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது."
---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம்
Subscribe to:
Posts (Atom)