Thursday, November 3, 2022

ஈம்

 ====“ஈம்”====


நாம் பொதுவாக முதலெழுத்து என்றால் அது அகரம் என்போம் அல்லவா? ஆனால் அகரம் முதலெழுத்தா என கேல்வி எழுப்பினால் இல்லை எனத்தான் பதில் சொல்வேன், ஏனெனில் நமக்கு முதலெழுத்து தெரியாது.

ஆனா.. ஆவன்னா என நாம் முதலில் எழுத்து படிப்பது பள்ளிகூடத்தில் சென்று தான் அல்லவா?.. அப்போது அதற்க்கு முன் பேசும் திறன் நமக்கு இல்லையா? ..இருக்கிறது..ஒரு குழந்தை முதல் முதலாக உச்சரிக்கும் உயிரெழுத்தே முதலெழுத்து. எந்த மொழியை தாய்மொழியாக கொண்ட குழந்தையும் முதல் முதலாக இயற்கையிலேயே உச்சரிக்க பழகிகொள்ளும் எழுத்தே முதலெழுத்து. அது இயற்கை உண்மை எழுத்து.

”அ-இ” எனும் இரு எழுத்துக்களின் கூட்டு கலப்பாக இருக்கும் ஒரு உச்சரிப்பே முதலெழுத்து, அதுவே ஆதி அகரம். இந்த ஆதிஅகரத்தை சின்ன மழலை குழந்தைகள் உச்சரிக்க காணலாம். ஆனால் நாம் அந்த எழுத்தை மறக்கசெய்துவிடுகிறோம். குழந்தை உச்சரிக்கும் போது அந்த ஆதிஅகரமானது “எ” போன்று ஒலியாக வெளிப்படும். சற்று மழலையிடம் கற்றுகொண்டால் இது புரியும்.

’அ-இ-உ“ மூன்று உச்சரிப்புகளும் மூல உச்சரிப்புகள்., இவை மூன்றும் மூன்று வர்ணங்கலைகொண்டவை, மூன்று நாடிகளாக இயக்கம் பெற்றிருக்கின்றன. அகரம் இடது, உகரம் வலது, இகரம் மத்தியம் என நிலை. இந்த இகரத்தை குண்டலினீ என்பார்கள். போதமுறும் போது “ஈம்” என தெளியும்.ஆதிஅகரம் அக்கினியாகவும், இகரம் அந்த அக்கினியின் வெளிச்சமுமாகவும் விளங்கும். இது சர்வ மந்த்ரார்த்த சூட்சுமம்.

ஜீவ வார்த்தை

 நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது....


நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்?

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்"

அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா?

அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை.

அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை

அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம்

அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது?

மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து.

மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு?

ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை

ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார்

அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை

ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"...

இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன?

சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்...

தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்

அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான்

ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும்

அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே

நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை.
===================================

பைபிளிலே இருக்கிறது என்னண்ணா, நாசியில் முச்சு உள்ளவனை நம்பாதேண்ணு தான்....அப்படீண்ணா அவன் பேசறதை நம்பாதேண்ணு அர்த்தம்...அதுக்காக தான் மூச்சு ஆடாதவன் சொல்றத நம்பலாம் என்கிறேன்...மூச்சு ஆடாதவர் என்கிட்ட பேசணும் என்கிறேன்....தப்பா எடுத்துக்கவேணாம்

===================================

சாலை ஆண்டவர்கள்

 சாலை ஆண்டவர் சொல்லுவதை பாருங்கள்,”"வாயுணவு இந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது,அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை.


னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம். அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள் கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."

"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.

வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."


மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்.

--சாலை ஆண்டவர்கள்


சிவன் ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, எட்டா நாள், ராஞானஸ்னானம், லயிலத்துல் கதிர் ரா முதலான எல்லா குல தலைஇரவுகளையும் ஒரே இரவாக்கி தர வல்லது சாலைத்தமிழ்.ஒருவனுக்கு சேன்ற வயதையெல்லாம் மீட்டுத்தந்து சிரஞ்சீவி ஆக்கவல்லது நம் சாலைத்தமிழ்.இதைப்பார்க்கிலும் பெரிய காரணமும் அதிசயமும் மனுவின் உயிர்க்கு வேண்டியது வேறெங்கே உள்ளது?.இதை தேடி வராமல்,பல்லாயிரகணக்கில் செலவு செய்துகொண்டு பலனாளும் அலைகிறார்களே,எங்கே என்ன அதிசயம் கண்டார்கள்?.

=சாலை ஆண்டவர்கள்

உன் மூச்சு சொற்படி கேட்கிறதா? அல்லது சொற்படி கேளாமல் அன்னியமாக இருக்கிறதா ?
-அன்னியமாய் சத்துருவாய் இருக்கிறது . அதை உன் சொற்படி கேட்கச் செய்கின்றவர்களே ஆசான் , னீ அவரிடத்தில் அன்னியமின்றி பழகினால் உனது சுவாசமும் அன்னியமில்லாமல் உன் சொற்படி கேட்கும்.

-திருவருட் கொரல் திருவாக்கியம்:- 135


னித்தியமாகிய பேரின்பத்தை அடைய*
*ஒரு ஜீவன் முத்தரின் அன்புக்கு இவன் பாத்திரவானாக இருந்நால் போதும் .*
ஆனால் , மெய்யான ஜீவன் முத்தர் கிடைப்பதுதான் அருமை . அது கிடைத்துவிட்டால் போதும் 
- சர்வக்ஞ வாழ்வுவரம் இவன் கைக்கு வந்நுவிடும் .
மேலே சொன்னோமே ,
அது போல ,
அவர்கள் திரு முன்னர் னாற்பதடிக்குப் பக்கத்தில் போனாலே அவருடைய பவர் எட்டிவீசி அடிக்கிறது என்றால் , அது என்ன லேசான ஜீவ கரென்டாகவா இருக்கும்! 
இவனாகவே தன்னறிவில் சாய்ந்நு என்ன தவம் செய்து கிழிக்கப்போகிறான் ?
ஜீவனிருக்கும் எல்லைக்கு இவன் போனால் அது எட்டி உதைக்குதே !
இது பிரத்தியச்ஷ அனுபவமல்லவா ? 
இதைக்கூட தெரியாதபடிக்கு 
வாயில்வந்நபடி 
கன்னே பின்னே என்று ,
குண்டலினி சக்தி ,
அகம் பிர்மாஸ்மி ,
மகா மாயி ,
ஓம் ஆம் ஊம் ,
ஆய்ரா ஊய்ரா என்று உளறுகிறான் .
இதனால் என்ன வந்நுவிடும் ?
அவனைப் பார்த்து 
- முதலிலே 
'னீ என்ன ஜாதி ஐயா ' 
என்று கேட்டால் ,
' னான் சைவன் ' 
என்று சொல்லுகிறான் .

'முதலிலே உனக்குப் பஞ்ஞாட்சரம் 
- அந்ந பிரம்மரகசிய முதலாகிய பஞ்ஞாட்சரம் அல்லவா வெளியாக வேண்டும் .
அதை விட்டு 
வாயிலே ஆய்ரா ஊய்ரா என்கிறாயே ' 
என்று கேட்டால் விழிக்கிறான் 
...
என்று 
னமது குலதெய்வம் 
... மெய்வழி சாலை ஆண்டவர்கள்... எமபடரடிபடு கோடாயிதக்கூர் இராஜகெம்பீர பிரசங்ஙம் வாக்கியம் 290 
ல் அருளியுள்ளார்கள்

சித்தவித்தை

 சித்த வித்தை வாங்கும் போது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையில் ஒரு விளைக்கை கொளுத்தி வைப்பாங்க...உண்மையில் சித்தவித்தைக்கும் அந்த விளக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....அது ஒரு “சாட்சி”...அப்படி “நிரபராதியாகிய சாட்சியை” வைத்து வித்தை கொடுப்பார்கள்...அதை “சத்தியம்” என கூறுவார்கள்...ஆனால் வித்தை வாங்கிய பிற்பாடு வாழ்க்கையில் ஒரு வேளைகூட அந்த “சாட்சி”யாக இருக்கின்ற விளக்கை யாரும் கவனிப்பதில்லை. அந்த சாட்சியை மறந்து விடுகின்றனர்...அதையே நாம் கடவுள் என்கிறோம்...வித்யார்த்திகள் “நிபராதியான ஆத்மா” என்பார்கள்..ரெண்டும் ஒன்றுதான்

பாடல்

 கண்ட நாசியை விட்டொன்று விட்டொன்று கலங்கியே மடிந்தனர் கோடி தினமொரு நாழி வாசி கொண்டேற்றிச் சிவபுரம் மேவினர் ரொரு கோடி அம்புவி தனிலே மறையவும் சூழ்செய் தனிதும் பதுங்கினோர் கோடி தெளிந்தவர் அறிந்துமே செப்ப தேறிடும் வாசி யோகத்தின் பெருமை திருத்தமாய் உரைத்திடலாமே"".....


இதுவே  நாதாந்த  திறவுகோல்....நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்...இதுவே திருமூலர் கூறும் கருத்து...”காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே”....அந்த கருத்தே இதுவாம்..

விசாரம் ஒரு பார்வை

Hseija Ed Rian இந்த மூணும் இகத்தில் இல்லாத விஷயங்கள்...சத் விசாரம் என்ன என்பது தெரிந்தால் இது மூன்றும் தெரிந்தாகி விட்டது. சத் என்பது சத்தியத்தை குறிக்கிறது....அதையே தேட வேண்டும்...அதையே கேட்க்கவேண்டும்...அதையே திறக்க வேண்டும்






Bramhasri Raghu நாம் இந்த மாயையில் பிறந்த உடன் தொலைத்துவிட்ட ஒன்றை தேடவேண்டும்,,,
நாம் தொலைத்துவிட்டதை
மனம் உருகி கர்த்தரிடம் கேக்க வேண்டும்,,,
நாம் தொலைத்ததை இறைவன் நமக்குத் திருப்பி தருவதை கொண்டு பிரம்ம லோகத்தின் கதவை தட்டவேண்டும்,,,,





Hseija Ed Rian சித்த வித்தை வாங்கும் போது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையில் ஒரு விளைக்கை கொளுத்தி வைப்பாங்க...உண்மையில் சித்தவித்தைக்கும் அந்த விளக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....அது ஒரு “சாட்சி”...அப்படி “நிரபராதியாகிய சாட்சியை” வைத்து வித்தை கொடுப்பார்கள்...அதை “சத்தியம்” என கூறுவார்கள்...ஆனால் வித்தை வாங்கிய பிற்பாடு வாழ்க்கையில் ஒரு வேளைகூட அந்த “சாட்சி”யாக இருக்கின்ற விளக்கை யாரும் கவனிப்பதில்லை. அந்த சாட்சியை மறந்து விடுகின்றனர்...அதையே நாம் கடவுள் என்கிறோம்...வித்யார்த்திகள் “நிபராதியான ஆத்மா” என்பார்கள்..ரெண்டும் ஒன்றுதான்.....





Hseija Ed Rian சாட்சியை மறந்து விடவேண்டாம் என்பதே என் எளிமையான வேண்டுகோள்...வித்தை எதுவாக இருப்பினும் செய்யுங்கள்...நிரபராதியான சாட்சி உங்கள் அருகில் “சத்தியமாக” இருப்பதை மற்ந்து விட்டால் வித்தையினால் பலன் இல்லை....





Hseija Ed Rian இதையே கிறிஸ்து “ரெண்டு பேர்கலது சாட்சி” மெய்யென்று சொல்லி இருக்கிறதே...”நானும் என் பிதாவுமாக இருக்கிறோம்”..ஆதலால் என் சாட்சி மெய்யானது சத்தியமானது என சொல்லுகிறார்...இதை புரிவது என்பது மிக கடினமான ஆன்ம சாதனை





Hseija Ed Rian மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்





Hseija Ed Rian இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...





Bramhasri Raghu மிக்க மகிழ்ச்சி தாங்கள் சித்தவித்தை அல்லாமல் பல உபதேசங்கள் பெற்றவர் ஆனால் நாம் வெரும் சித்தவித்தை உபதேசம் மட்டுமே பெற்று அனு அளவும் அப்பாவின் கட்டளைகளில் தவறாமல் சதா வாசியே கதி என கிடக்கிறோம் அதனால் எமக்கு வேற் எதுவும் தெரியாது அப்பா தந்த சித்தவித்தையை தவிர எம்மால் அப்பாவின் கட்டளைகளை மீரி பேச இயலாது அன்பு சகா,,,
ஓம் உலக சாந்தி 
சர்வம் ஜகத்ஜேதிக்கே சமர்ப்பனம் 
ஆத்ம நமஸ்காரம் அன்பு உள்ளமே,,,





Hseija Ed Rian சாட்சியை கருதுவதுண்டா என்பதையாவது சொல்லலாமே...அல்லது புரிதல் வரவிலையென்ரால் நாம் ஆத்ம சகோதரங்கள் அல்லவா/





Hseija Ed Rian சாட்சியை கொள்வது சித்தவித்தையின் ஒரு அங்கமே...அதை மறுக்கமுடியாது...வாழ்நாள் முழுதும் சாட்சியில்லாமல் கட்டலை இல்லை...கட்டலை இல்லாமல் உபதேசம் இல்லை.....ஆதலால் “சாட்சியை” இதுவரை கருத்தில் கொள்ளவில்லையெனில் இனி முதல் கொள்ள அன்போடு அழைக்கிறேன் சகோதரமே...





Hseija Ed Rian வித்தையும் , சாட்சியும் சதா உறவோடு இருக்க பழகவேண்டும்....என்பதே கட்டலைகளில் பிரதானமாக இருக்கிறது அதையே நாம் வித்யார்த்திகள் சத்தியம் என சொல்லி ஏற்றுகொண்டுள்ளோம்...அதை மறக்கவும் முடியாது , மறுக்கவும் முடியாது....புரிதல் இல்லாமல் போவது ஆன்ம விளக்கம் தடைபடுவதாலே...அது “சாட்சியை கொண்டு வரும் போது விளக்கமடையும்...ஏனெனில் சாட்சி என்பது விளக்காகும்...அது விளக்கும் தன்மை உடையது...உண்மை





Bramhasri Raghu நான் தானாக எதற்கு ஐயா சாட்சி இப்புவியில் நாம் கானும் அனைத்தும் நம் என்னங்களின் பிரதிபிம்பமே நாம் வெளியில் காண்பவைகள் வெளியே இருக்கட்டும் அவைகளை எக்காரணத்தை கொண்டும் உள்ளே தினிக்க வேண்டாம்





Hseija Ed Rian வெளியே இருப்பவை வெளியே இருப்பவை அல்லவே...அவை உள்ளின் பிரதிபலிப்பே...உள்ளின் புர தோற்றமே..உள் என்பதுவே வெளியாக பரினமித்துள்லது...உள் என்பது வெளியின் மறு புறம்...வெளி என்பது இருக்கும் வரை உள் என்பது இருக்கும்...இது ரெண்டும் அற்றதே சாட்சி...எனும் அத்வைதம்...ரெண்டற்ற தன்மை





Bramhasri Raghu அந்த சாட்சியாய் இருப்பது நம்முள் இருந்து நாம் இந்த மாயையில் இயங்க காரணமாக உள்ள மனத்தின் சாட்சி மட்டுமே





Hseija Ed Rian ‘நாம்’ நம்மை அறியும் வரை வெளி இருக்கும்...அறிந்தால் வெளி இல்லை...அதுவரைக்கும் ..நாம் நாமல்லவே...அப்போது சட்சி இருக்கத்தானே வேண்டும்...நாம் தான் எல்லாம் எனில் வித்தை எதற்க்கு?





Bramhasri Raghu நாம் வித்தையை உபதேசம் பெரும் போது நம்முன்னே வைக்கப்படும் விளக்கில் ஐந்து திரிகளிட்டு விளக்கேற்ற வேண்டும் அவை நாம் இந்த மாயையில் இயங்க காரணமாக உள்ள ஐம்புலன்களின் சாட்சியே





Bramhasri Raghu உண்மைதான் நாம் நம்மை அறிந்தாலும் சமாதிவரை இங்கே இருந்தாகவேண்டும் ஆனால் மற்றொன்றின் சாட்சி கொண்டல்ல நம் ஆன்ம சாட்சி கொண்டு நாம் இங்கே இருக்கும்போதே இறைவனை உணர்ந்து இறையில்கலந்து உண்மையை உணரவேண்டும் கடைசிகாலத்தில் சமாதிக்கு பிறகே அனைத்தும் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது அதற்கு பிறகு நடப்பவை நாம் அரியாதவை





Hseija Ed Rian அப்போது “சாட்சியான ஆதமா “ வேண்டாம் என்கிறீர்களா?..ஐம்புலன்களின் சாட்சியான மனமே தான் ஐந்து திரி விளக்கு என்கிரீர்களா? ...இது யார் கொடுத்த விலக்கம் ஐயா/..சற்று தெரிந்து கொள்ளலாமா?......சத்திய வாசகம் சொல்லும் போது மட்டும் நிரபராதியான ஆத்மாவை சாட்சியாக கொண்டு வித்தையை பெற்ற பிறகு அந்த சாட்சியான ஆத்மா வேண்டாம் என்கிறீர்களே...இது யாருடைய கட்டளை என்பதனை அறிந்து கொள்ளலாமா?..Brammasri YasaganBrahmasri Ganesh Muthu Kumar





Bramhasri Raghu ஐயா ஊர்த்துவ கதியானது அப்பா நமக்குத் தந்ததல்ல அது நம்மில் நாம் மறந்து போன நம் ஜீவனின் கதி சிவானந்தர் ஊர்த்துவ கதியை நமக்குத் தரவில்லை நாம் மறந்து போனதை சித்த வித்தை உபதேசம் மூலம் நம் ஜீவனுக்கு நினைவூட்டுகிறார்





Hseija Ed Rian தோன்றி மறையும் மனம் எப்போது சாட்சியானது/. ஐம்புலன்களுக்கு சாட்சியான மனம் தான் ஐந்து திரி விளக்கு என யார் விளக்கம் கொடுத்தது?.. தூக்கத்தில் மனம் இருப்பதில்லையே ..அப்போது ஜீவனுக்கு சட்சி யாது?...மனமும் இந்திரியங்களும் தனித்து இயங்கும் தன்மை பெற்றதில்லையே...அது எப்படி சாடசியாக பரிணமித்தது?





Bramhasri Raghu ஐயா சிருஸ்டியில் இந்த பூமி சகல ஜீவராசிகளுக்கும் தன் வடிவமாய் தன்னை போலவே படைத்துள்ளது நாம் வேரல்ல இந்த பூமி வேரல்ல நாம் இப்போது மாயையால் நம் உண்மைநிலை மறைக்கப்பட்டுள்ளது நாம் நாம் நம்நிலை உணர்ந்து இப்புவியுடன் ஒன்றி வாழ ஐம்புலன்களே காரணமாகிரது





Hseija Ed Rian கடவுளே.... .@@@@@ !!!!!! அறிவுண்ணு ஒண்ணு இல்லாம ஐம்புலன்களால் ஆவதென்ன யாசகன்? ஜடமான பிரபஞ்ச பொருளும் சித்தான நாமும் வேறல்ல என்கிறீர்கள்...உங்கள......ம்ம்ம்ம்ம்ம் 





Hseija Ed Rian சித்தில் இருந்து ஜடம் எப்படியய்யா தோன்றும்?//அல்லது சித்திலிருந்து ஜடம் எப்படியய்யா தோன்றும்? அல்லது ஜடத்திலிருந்து சித் எப்படி தோன்றும்?

 





Bramhasri Raghu அறிவு என்பது சலனமற்ற நிலை இப்போது நாம் சிந்திப்பதற்கு பெயர் அறிவல்ல நம் ஜீவனை அனு அனுவாக கொலை செய்வது  நிச்சயமாக நாம் வேறல்ல இப்புவி வேறல்ல





Hseija Ed Rian சொல்லி வாரத பாத்தா வெளிச்சத்தில் இருந்து தான் இருள் உண்டாச்சுண்ணு சொல்லுவீங்க போல...  யாசகன் நிச்சயம் அப்படி இருக்காதல்லவா?...இப்புவி என்பது மாயா சொரூபம்..அப்படியென்றால் மாயா சொரூபம் நாம் தான் என்றாகி விடுகிறதல்லவா?





Hseija Ed Rian தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை====அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?





Hseija Ed Rian மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? அதுவும் மஹா மந்திரம் என சொல்லபட்டுள்ளது?...ஏன் “தயவு” என மட்டும் சொன்னால் மக்களுக்கு புரியாதா என்ன?..எதற்க்கு நீண்ட ஒரு மந்திரம்?





விஜயகுமார் சு வள்ளலார் பல இடங்களில் குறிப்பிடும் அமுதம் என்பதே சாதனம் என நினைக்கிறேன்.அதை கொண்டே வாதம் பித்தம் கபம் என்ற திரிதோசத்தை சமநளைபடுத்தி உடலிலே உஷ்ணத்தை தங்க வைத்திருக்க கூடும்.





Hseija Ed Rian கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி?





Hseija Ed Rian சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?





Hseija Ed Rian அமுதம் சாத்தியம்...இங்கு அந்த சாத்த்யத்தை அடைய உதவும் சாதனை தான் முதலில் தேவை படுகிறதல்லவா?





Indranx Avataram Hseija, Anndavisaaranai endral Paravisaaranai allava? Yhen ningel irrendeiyum verru-verra pirikiringeh?





Hseija Ed Rian பரம் என்பது ஆகாயத்தையோ...நட்சத்திரங்களையோ விசாரிப்பது என கருதுகிறீர்களா?...



ஓது ஓது

 ஓதுவது எல்லாம் அறிந்து ஓதாவிடில் அது திருவாசகம் ஆனாலும் சரி  திருவருட்பா ஆனாலும் சரி சும்மா பாட்டு மட்டும் தான் நடக்கும்... ஈசன் சேவடி சேராது, இறைவன் கேட்க்கமாட்டான்.


இறைவன் கேட்க்க பாடுவதே பாட்டு. அதற்க்கு தன்னுக்குள் இறை இருக்கும் தலம் கணு அந்த இறைவனிடம் பாடி தோத்தரிக்கவேண்டும்.

அவர் கிட்ட பாடாம அடுத்தவன் வீட்டுல போயி பாடிகிட்டு இருந்தா அவருக்கு என்ன லாபம் நமக்கு என்ன லாபம்?.. செத்து தொலையவேண்டியது தான்...

இதை தான் கிறிஸ்த்து சொல்லுவார்,  “நீங்கள் என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். அவர் சத்தத்தையும் கேட்டதில்லை. பிறகு எப்படி நான் சொல்லுவதை ஏற்றுகொள்ளுவீர்கள்?” 

ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்

அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே

இப்படி அகார ஜிவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு


மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்

 இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...

மறைப்பு

 வள்ளலாரே மறைப்பாகத்தான் சாகாத தலையறிந்து சின்னம் பிடி வேகாத கால் அறிந்து சின்னம் பிடி என சொல்லி போயிருக்கிறார்...மக்களை ஆண்ட இருளில் இருந்து கொஞ்சமாவது முன்னேறவைக்கும் முயற்ச்சியே ஜீவகாருண்யம், சிம்பிளாக விஷயத்தை சொல்லிவிட்டு போயுள்ளார்..இது புதிய கருத்து ஒன்றுமில்லை, பழையது தான் , அதிகம் ஆழமாக விளக்கியுள்ளார்கள்..அவ்வளவுதான், ஆனால் மறைஞான விஷயங்களை எல்ல மக்களும் புரிந்து செயலுக்கு கொண்டுவருவது என்பது கடினம், ஆனாலும் ஆசை தான், எல்லோரும் முக்தி அடையவேண்டும் என, அவரின் சிடர்களை கூட பாருங்கள், யாரும் அடைந்ததாக தோன்றவில்லை, ஏனில் பேசுவது சுலபம், செயல் கடினம், மக்களால் கடினமக இறை அன்போடு அன்மீகத்தில் செயலாற்றமுடியாது..கோடியில் ஒருவன் வருவான், அவன் மறையானதை எடுத்துகொள்ளுவான், அவனின் தீரம் அளப்பரியது, அவனே அடைவான், வேறுயாரும் அடையபோவதில்லை, சும்மா வறட்டுஞானம் பேசி திரியலாம்


ராப்பகல் ஜெபித்து பாருங்கள் புலப்படும்...மனம் அதற்க்கு அடிமையாகிவிடும், சும்மா எந்திரத்தனமாக நாம் சொல்லாமலே ஜெபம் நடக்கும்..எந்த பிரயோசனமும் இருக்காது... ஆனால் பஞ்சாக்கரத்தின் உண்மை அறிந்து என்னசெய்ய்வேண்டுமோ அதை செய்தால் நடக்கிறது ஞானவாழ்க்கை.... அட்சரங்கள் எல்லாம் ஒரு மாயாஜால விளையாட்டு தான் , மறைத்து கட்டிவிட்டார்கள்

மனம்

 மனம் தன்னைத்தான் சுட்டி ‘நான்’ என்கிறது என புரிந்து கொள்ளாமல் வேறு எதையோ மற்றொரு பொருளை தான் ‘நான்’ என்கிறது எனும் மயக்கம் விடையற்ற தேடுதலுக்கு உத்வேகம் உருவாக்கி தேடி தேடியே தோல்வியை அடைகிறது மனம்

மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்

ஏனெனில் மனத்தை தவிர அங்கு மனத்தின்ல் தேடுவதற்க்கு ஒன்றும் இல்லை.அதுவே தான் நானாக இருக்கிறது.இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை தேடுகிறாய் ஞானதங்கமே

பேய் பிடித்த நாய் வருகிறவன் போகிறவன் என எல்லோரையும் கடிக்கும்...அதுபோலவே மனமும் ‘நான்’ யார் என தெரியாமல் தனக்கு கிடைத்ததையெல்லாம் ‘நான்’ என எண்ண ஆரம்பிக்கும்....உடலை நான் என்னும்.உயிரை நான் என்னும்...பிராணனை நான் என்னும் இந்திரியங்களையும் நான் என்னும்.

===================================

ஆனால் மனம் எனும் பேய்இதை நம்ப மறுக்கிறது..அது ஆகாயத்தின்மேலே குடியிருக்க்ம் ஏதோ ஒரு கற்பனைஆண்டவரின் துணையே பெரிது எனநினைப்பூட்டுகிறது..அதையே நம்பசொல்லுகிறது...மனம் மனத்தையேஏமாற்றுகிறது...இருப்பதைஏற்றுகொள்ளமறுத்து விட்டு இல்லாததைஏற்றுகொள்ள வலியுறுத்துகிறது..மாயபிசாசே அப்பாலே போ.

சிவ சிவாகலிகாலம்...மனமே கேட்டு படி...அங்ககைலாயத்துல இருந்துகிட்டு சிவனார்பிரபஞ்சத்தை படைத்தார் என்பதைகற்றுணர் ..மனமே...ஏய் உன்னையத்தான்மனமே உன்னையத்தான்...ஏன்பிதற்ருகிறாய் என் மனமே ஏன்பிதற்றுகிறாய்...நீயும் மாயசொப்பனத்தின்வடிவழகு கண்டுமலைத்தாயோ...சிதம்பரத்தில் வாதவூரார்கண்ட சிவன் பொற்சிலைக்குள் மாயமாய்மறைந்ததையும் கண்டாயோ..ஏய் மனமேஇன்னும் தெளிவிலையோ உனக்கு..ஏய்அழகிய பல உலகங்கலை உன் சிற்றணுதொகுப்பால் காட்டி வித்தை புரியும்மனமே நீ உனராயோ..

கண்டதெலாம் அனித்தியமேகேட்டதெலாம் பழுதெ நீ உண்டதெலாம்மலமே என வள்லல் பெருந்தகை பாடிசென்ரது கூட உணராமல்இருக்கின்றாயோ மனமே...நீ திருந்துவதுஎப்போது...உன்னையே கட்டி மேய்த்துஓய்ந்து விட்டேன் மனமே..என்று நீ உன்கற்பனை கொட்டைக்குளிருந்து மீண்டுவரபோகிராய்...யுகங்கள் எத்தனையாககற்பனைகட்டிகொண்டாய்...கற்பாந்தங்கள்எத்தனையென கனவுகட்டிகொண்டாய்...இது தான் உன் நித்தியவேலையோ என் மனமே..உணர்வாய்திரும்பி எழு என் மனமே மாய்ந்துவிடாதே..கற்பனை சாகரத்துள்மீழ்கிவிடாதே...ஏய் கொள்லிபிசாசேஉன்னைத்தான் சொல்லுகிறேன்..ஏன்இப்படி பிதற்றல்?..ஏன் இந்தமயக்கம்..எண்ணிலொகோடி தேவர்கள்ஆமே என எண்ணிலொகோடிதவமிருந்தாயே..இன்னுமா உன் மயக்கம்மாறவில்லை..??விழி மனமே விழி

===================================

அட்சரங்கள் ஒர் உயிர் அறிவு

அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும் 

உயிர் அறிவுகளில் ஆறரிவு கொண்டவன் மனிதன், அந்த ஆறாவது அறிவு என்பது வாக்கறிவு...அதாவது பேச்சறிவு..பேசும் திறன்..இது மனிதனை ஏனையவைகளில் இருந்து வேறிட்டு காட்டுகிறது. இது இயற்க்கை விளக்கம், இயற்க்கை உண்மை . இ்யற்கை வெளிப்பாடு. இங்ஙனம் வாய் மொழியான ஓசைகள் மனிதன் கண்டு அறிந்து அதனுள் இருக்கும் அறிவுகளைகளை உயிரில் பதித்து உயிர் தூய்மையை அடையவே அனாதி இயற்க்கை கடவுளருளால் வழங்கபட்டிருக்கிறது.

அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம்.

ன் ண் ல் ள் என்பவை வெவ்வேறு ஓசை நயத்தினை கொண்டது..அவை துடும் இடங்களும் வெவேறானவை...பொதுவாக உயிர் எழுத்துக்கள் எங்கும் படாமல் வெளிவரும்,, மெய்யெழுத்துக்கள் படகூடிய இடங்கள் ஒவ்வொன்றும் வெவேறு இடங்கள்...க் என சொல்ல அது ஒரு இடத்தில் ஒட்டி இருக்கும்..ங் என சொல்ல வேறொரு இடத்தில் ஒட்டும்...ச் என அப்படி ந் வரை ஒவ்வொரு இடம் இருக்கிறது....ஆனால் உயிர் எழுத்துக்கள் எங்கும் பதியாது நீர் ஒழுகி வருவது போல ஒழுகும் தன்மை உடையது


அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம்.

ன் ண் ல் ள் என்பவை வெவ்வேறு ஓசை நயத்தினை கொண்டது..அவை துடும் இடங்களும் வெவேறானவை...பொதுவாக உயிர் எழுத்துக்கள் எங்கும் படாமல் வெளிவரும்,, மெய்யெழுத்துக்கள் படகூடிய இடங்கள் ஒவ்வொன்றும் வெவேறு இடங்கள்...க் என சொல்ல அது ஒரு இடத்தில் ஒட்டி இருக்கும்..ங் என சொல்ல வேறொரு இடத்தில் ஒட்டும்...ச் என அப்படி ந் வரை ஒவ்வொரு இடம் இருக்கிறது....ஆனால் உயிர் எழுத்துக்கள் எங்கும் பதியாது நீர் ஒழுகி வருவது போல ஒழுகும் தன்மை உடையது..

உயிர் அறிவுகளில் ஆறரிவு கொண்டவன் மனிதன், அந்த ஆறாவது அறிவு என்பது வாக்கறிவு...அதாவது பேச்சறிவு..பேசும் திறன்..இது மனிதனை ஏனையவைகளில் இருந்து வேறிட்டு காட்டுகிறது. இது இயற்க்கை விளக்கம், இயற்க்கை உண்மை . இ்யற்கை வெளிப்பாடு. இங்ஙனம் வாய் மொழியான ஓசைகள் மனிதன் கண்டு அறிந்து அதனுள் இருக்கும் அறிவுகளைகளை உயிரில் பதித்து உயிர் தூய்மையை அடையவே அனாதி இயற்க்கை கடவுளருளால் வழங்கபட்டிருக்கிறது.

இதனை வாக்கு என வள்ளல் பெருமான் விளக்கி இருக்கிறார்..அதாவது சூட்சுமை பரா பைசந்தி மத்திமை வைகரி என நுண் ஓசையிலிருந்து விரிந்து செவிபுலனுக்கு வருவதை வைகரி என முடிக்கிறார்...இப்படி சூட்சுமை எனப்படும் வாக்கானது வைகரி நிலையினால் காதுக்கு எட்டுகிறது. இது அட்சர நிலை சுருக்கம்.

அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்