Friday, November 4, 2022

இயற்கை உண்மை கடவுள்

 சிவம் என தனியாகஎதுவுமில்லை...தனியாகவெளிப்பட்டிருக்க ஜீவன்எனவும்..மொத்தமாக தோற்றம்பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும்பெயர்.நமக்கு ஜீவன் என தனியாகஇருப்பது போல தோன்றினாலும் அதுதனியான ஜீவன் இல்லை...அது ஒருசங்கிலி தொடரின் அமைப்பு..நமக்கு நம்தந்தையிடம் இருந்து வருகிறது..அவருக்குஅவரின் தந்தையிடம் இருந்து...இப்படிஒரு பின் நோக்கிய அதுவும்முன்னோக்கிய சங்கிலி தொடர்...இந்ததொடர் முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம்என பெயர்.அது நம்முடன் மட்டுமல்ல,இவ்வுலகத்து ஜீவஜாலங்கள்அனைத்திற்க்குள்ளுக்குள்ளாகபிணைந்திருக்கும் தொடர்...அதைஉள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மைவெளிப்படும்.


இந்த புரிதல் என்பதுஅசாத்தியமான சாத்தியபுரிதல்...தனிமையில் இருந்துமுழுமையை உணர்தல்சாத்தியம்....முழுமை முற்றுபெற்றுவிலங்கும் தன்மை அது. அனைத்துஜீவன்களும் ஒரு தொடரே என தெளியசிவமாம் தன்மை விளங்கும் என்பதுஆன்றோர் மதம். சிவம் என தனியாகபின்னமாக நினைத்து வேறுபாடுஉணர்வது அறிவின்குறைபாடு...இருப்பது அகண்ட சிவம்ஒன்றே தான்...முழுபூசணிக்காய்சோற்றில் மறைந்துள்ளது

இயற்கை உண்மை என்பதுஜீவனுக்கு இடுபெயர்...அதுவேஅருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும்கடவுள்...அதுவே உடலான உடலெல்லாம்நிறைந்து அருட்பிரகாசமாகவிரிந்துள்ளது..அதை தனிமையில் உணரமலர்தல் சாத்தியம்..உணராவிடில் ஜீவன்என அறிவு மழுங்கி தன் நினைப்பேவெளிப்பட்டு தான் வேறு எனும்வேற்றுமை உருவாகிறது....அந்தவேற்றுமை மறைய ஒருமை துளிர்க்கிறது.அதனால் நம்முள் இயங்கும் ஜீவனைபார்த்து அறிவோமாக..அதுவே பரஉடலங்களிலும் இயங்குகிறது என்பதுவேஒருமைக்கு மூலாதாரம் 

சிவன் என கங்கணம்பூண்டு திருநீறு பூசி கபால மாலைஅணிந்து அங்க எங்கேயோ கைலாசத்துலபார்வதி தேவியை பக்கத்துல வெச்சுகிட்டுபூதகனங்கள் நடனமாட யாரும்கிடையாது...எந்த ஒரு மனிதன்ஜீவசிவத்தை உணர்ந்துதன்மயமாகிறானே அவனேசிவன்....அதாவது, எவனொருவன்ஜீவனை கண்டு அந்த ஜீவனேஅனைத்திற்க்குள்ளும்பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம்என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன்என பெயர். அல்லாது பாம்பை கழுத்துலதொங்கவிட்டுகொண்டு இருக்கும் ஒருகற்பனை கதாபாத்திரத்திற்க்குஅல்ல...எங்கோ கைலாயத்தில்இருக்கிறார் என கற்பனை கைலாயத்தில்இருப்பவருக்கு அல்ல....இருப்பது ஒன்றேதான்..அதுவே ஜீவனாகவும்ஜீவசிவமுமாக இருக்கிறது

அதனாலத்தான்அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதிஎன ஆண்டவரை திதித்துகொண்டிருந்தவள்ளலார்,அந்த அருட்பெரும்ஜோதியில்கலக்கபோகிறேன் என சொல்லாமல்,”எல்லா ஜீவர்களிடத்தும் கலந்துகொள்ளபோகிறேன்” என விலக்கமாகசொல்லிவிட்டு போனார்..நமக்குத்தான்அது விளங்காமல் போச்சு...அருட்பெரும்ஜோதியில் கலக்காமல் எல்லாஜிவனிலும் கலக்கும் கரணம்இதுவே...இதுவே “இயற்கை உண்மைகடவுள்”

சொல் பிறந்த இடமெங்கே

 சொல் பிறந்த இடமெங்கே 


இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது.. ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது... ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல... அது இறை படைப்பு... அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை... எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா

இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா

மனிதன் நாவு பேசுகிறது.. மிருகங்கள் பேசமுடிவதில்லை... அது மனிதனின் முதிர்வு.. அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்.. அவன் அறிவின் வெளித்தோற்றம்... அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது... அது இருக்ககூடியது , செயற்கை அல்ல.. .அப்படியானது இயற்கை உண்மை... பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்.. ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை.

தமிழ் எனும் சொல்லுக்கிட்ட உரையில் வள்ளல்பெருமான் அட்சரங்களில் “அறிவுகலைகள்” செயல்கொண்டிருக்கிறது என சாட்சியபடுத்துகிறார், சற்று பார்க்கபுலப்படும் ஐயா.

அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும், குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உயிர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்... அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை.. அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான். அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று...

மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்.

இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள்...

அத்வைதம்

 அத்வைதம்


”தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்”.
-வள்ளல் பெருமானார்.

ஒரு கண்ணாடி வைத்து அதன் முன் விளக்கு ஏற்றி சாதனை பண்ணுவதை பார்த்திருக்கின்றோம்,கண்மணி தீட்சை நயன தீட்சை என மக்களை நம்ப வைத்து கண்மணியில் தெரியும் விளக்கின் பிரதி பிம்பத்தை உற்று பார்க்க சொல்லி, அது தான் ஜோதி எனவும், அங்கு தான் ஜீவன் இருக்கின்றது என சொல்லியும், இது தான் வள்ளலார் சொல்லியிருக்கின்ற கண்மணி தவம் என சொல்லியும், இதன் உட்புகுந்து தான் முக்திக்கு செல்ல வேண்டும் என சொல்லியும்,கண்மணியில் உணர்வை வைத்து சாதனை செய்தால் கண்மணியில் மத்தியில் இருக்கும் துவாரத்தில் இருக்கும் மலமாகிய ஏழு திரைகளும் அகன்று திருகதவு திரந்து பிரம்ம ரந்திரம் புகுந்து மோட்சம் அடையலாம் என பிதற்றி திரியும் கூட்டத்தினரை பல இடங்களில் பார்க்கின்றோம். உண்மையில் வள்ளலார் சொன்ன தியானம் இதுவா என சற்று ஆலோசித்து பாருங்களேன்.

“பார்க்கும் தான் கெடுவது அதவைதம், பார்க்கபடும் பொருளும் கெடுவது அதீதம்” என வள்ளலார் எதை பொருளாக சொல்லுகின்றாராம்?. கண்மணியில் பிரதிபலிக்கின்ற விளக்கு வெளிச்சத்தையா,அல்லது கண்மணியில் உருவமாக பாவிக்கப்படும் பிம்பத்தையா?.எனில் ”பார்க்கும் தான்” கெடுவது எங்ஙனம், பார்க்கபடும் பொருளும் கெடுவது எங்ஙனமாம்?.கூமுட்ட பயலுக தானும் கெட்டு இருக்கிறவனையும் கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இருக்கானுவ.

தோ=TAO

தோ=TAO=


இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.

இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்கு இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.

இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.-(VALLALAR )

இருதயம்

 இருதயம்


கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.

*சைவமதம் ஈசன் "இருப்பிடம"் இருதயம்* என்றும்

*வைணவம் "இருதய கமலவாசன்" என்றும்

*கிருத்துவம் புனித "இருதயம்" என்றும்

*இஸ்லாம் கல்பென்ற "இருதயத்தில்" அல்லா உள்ளான்* என்றும்

ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.
காரணம் இங்கே "இருதயம்" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு
புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது.

*இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.*

சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே

குருவே சரணம்.  

சிவராத்திரி என்பதின் மறை ரகசியம்

 சிவராத்திரி என்பதின் மறை ரகசியம் 


சாத்திரங்கள் சம்பிரதாயங்களும் தந்திரங்களும் யோகங்களும் இந்த ஐக்கிய சொரூபத்தினை பலவாறாக விளக்குகின்றன. ஆயினும் முக்கியமாக சொல்லபடுவது சிவ சக்தி இணைதல் என்பதே என்பது கவனிக்கிறோம்.

     ஆயினும் *சிவராத்திரி என்பதின் மறை ரகசியம்* அறியபடவேண்டியதே தாம். சற்று நின்று உற்று கவனிக்கில் ஒரு சங்கதி புலப்படும். சக்தி யோனி எனும் ஆவிடையில் அமைந்திருக்கும் சிவ லிங்க அடையாளத்தின் தன்மை ஆகும். யோனியில் இருந்து லிங்கம் பிறக்கும் தன்மையிலே தான் நாம் காண்கிறோம். லிங்கமானது யோனியில் உட்செல்லும் அமைப்பில் இல்லை. யோனியில் உட் செல்வது போகம்.

     ஆனால் இங்கே நாம் காண்பதோ லிங்கமானது *உட்செல்லாமல் வெளி வரும் அமைப்பே* தான். லிங்கத்தின் தலை பகுதி அதாவது மொட்டானது பூவினில் பொருந்தபெறவில்லை. யோனியில் உள் பொருந்த அமைக்க பெறவில்லை. பூவினில் இருந்து மொட்டு மலர்ந்த ரகசியந்தனை கண்டவர் எவரோ அவர் எனக்கும் குருவே. *சிவராத்திரியின் ரகசியம்.மெய்பொருள் என அறிவாயாக.* 

அகத்தியர் ஞானம்

 உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம்)

அறிவறி பாடம்

 அறிவறி பாடம்






பாடம் -1

இந்த யுகமுடிவு நாளையிலே வருகிற மனுக்கள் எக்குலத்தவராயினும் எம்மொழியினவராயினும் கடைத்தேற வேண்டுமென்றால் கட்டாயம் தமிழை கற்றாக வேண்டும் என்று ஞானகுபேர பேரருள் தேரையர் கால கணக்கறிந்து வலியுறித்தியுள்ளார்கள்.


ஆச்சப்பா தமிழினுட பெருமை கேளு
அப்பனே அகத்தியர்தான் நின்றாரப்பா
வாச்சப்பா வடுகருக்கும் ஆகும் பாரு
வகையான பிராமணர்க்கும் ஆகும் பாரு
காச்சப்பா கன்னடியர்காகும் பாரு
கலையான குச்சலியர்க் காகும் பாரு
மாச்சப்பா மராஷ்டருக்கும் ஆகும்பாரு
மறையான மிலேச்சருக்கும் ஆகும்பாரு


பாரப்பா அனைவருக்கும் வேணும்வேணும்
பாங்கான க்‌ஷத்திரியர்க்கு வேணும் வேணும்
நேரப்பா வைசியர்க்கு வேணும் வேணும்
நிலையான சூத்திரர்க்கு வேணும் வேணும்
தேரப்பா துலுக்கருக்கு வேணும் வேணும்
தெளிவான கலிங்கருக்கு வேணும் வேணும்
ஏரப்பா எடுத்திருக்கும் அண்டத்தோர்க்கும்
இயலான தமிழதுதான் வேணும் பாரே.


பாடம் -2

ஆண்டவர்கள்-; அறிவறி பாடம் முதலிலிருந்து சொல்லுங்க.
மேய்வழி வரதராஜ அனந்தர்-;ஆதி துணை ,ஆதியே துணை ,ஆதியை அறிய குருவே துணை என்று ஓத ஆரம்பிக்க...


ஆண்டவர்கள்-;அதை நாம் சொல்ல சொல்லவில்லை,முதல் முதலில் திண்ணை பள்ளிகூடத்தில் நீ படித்தாயே,அதை சொல்லு...


மெய்வழி வரதராஜ அனந்தர்-;அ ஆ னா ,ஆ வன் னா, இ ஈ னா, ஈ என் னா.......


ஆண்டவர்கள்-;என்ன! எல்லாம் “னான்..னான்..” என்று சொல்லுகிறாயே.ஆகவே எல்லா அக்‌ஷரங்களும் னீ தானா?(கேட்டறியாத இந்த அற்புத விளக்க உதயத்தை கேட்டு சபையோர் ஆச்சரியத்தில் மூழ்கி நிற்க)


ஆண்டவர்கள்-; அட்சரங்களின் உதயம்.இருப்பிடம் ஆகிய அனைத்தும் மனிதன் தான் என்பதை நம் தமிழில் உள்ள அறிவுஅறிபாடம் நமக்கு உணர்த்துகின்றதல்லவா?. என்ன ஆச்சரியம்! தமிழ் அட்சரங்களின் உச்சரிப்பை எவ்வளவு பொருள் நிறைத்து, என்ன உயர் அறிவை களஞ்சியமாகவாக்கி அமைத்திருக்கிறார்கல் என்று பார். இதுகாலம் வரைக்கும் இந்த நுண்ணிய நுணுகிய மதினிறை விடிவு வெளியாக்கப் பெறவில்லை.


“அச்சரமனைத்துமினும் கோடிபல பாஷை மெச்சுமதனுச்சனிலை மேனகையனைத்தும் இச்சைபிறங்ஙீட்டு திருச்சாலையிலலாது பொச்சையுல கோர்க்கது புறம்புமுதுகாமே”

என்ற செய்யுளை சபையோர் பாடி தோத்தரித்து மகிழ்ந்தார்கள்.


பாடம் -3

ஆண்டவர்கள்-; ஞானம் என்பது இன்ன செயல் என்று இன்று நாம் வெளியாக்க போகின்றோம்.ஒரு சாமானை உறை போட்டு மூடியிருந்தால் அது என்ன சாமான்,என்ன வர்ணம்,என்னத்திற்க்காகும்,என்ன மதிப்புடையது என்று விளக்கமாக கண்டறிய முடியுமா?முடியாது.அதை மூடியிருக்கும் மறைப்பை கிழித்து நீக்கிவிட்டு அது இன்னதென்று அதைப்பற்றி நன்றாக அறிந்துள்ளவர்கள் எடுத்து காட்டி பேசினால்தானே,உள்ளிருக்கும் பொருளின் முழுவிவரமும் தெரியும்.அதேபோல,ஞானம் என்ற சொல்லில் ஒரு உன்னத உள்ளமைச் செயலானது மறைத்து வைக்க பெற்றுள்ளது.அதை விண்டு வெளியாக்கினால்தான் தெரியும்.


ஞானம்=ஞா+னம்;அதாவது “னான்..னாம்” என்று ஆகிகொள்ளுவது.இதுவே வேதத்தின் உட்பொருள்.”னான்..னான்” என்று உன்னுள் இருந்து சதா சொல்லிகொண்டிருக்கும் வஸ்து,”வந்த வேதமாக” திருவுரு தாங்கி,முன்னிலை குருவாக வெளியாகினின்று தன்னை அறிவிக்க,அதாவது உன்னுள் அறியபடாததாய் இருக்கும் ஆத்மாவே குருவுருவாகவந்து தன்னை அறிவிக்க,உன்னை நீ அறிகிறாய்.அதோடு காலமெல்லாம் ஓட்டி பழகி அறிவு விளைவேற்றம் ஏற ஏற,’னான் னாமாகுதல்” கைவரவாகும்.அதனால் மெய் அறிவு சித்திக்கும்.


பாடம் -4

உன் உன்னதமாகிய நினைவில்”னாம்” இல்லை என்றால் கடைசியில் எமன் தான் அங்கு வருவான்.எமனுக்கு நடுவன் என்று ஒரு பெயர் உண்டு,னடு என்றால் மையம்.அதாவது இந்த பக்கமோ அந்த பக்கமோ சாயாத நீதி எல்லை.ஆகையால் என உஜாரோடு,ஆசான்பால் அன்புமறவாத நினைவில் “இந்த மெய்யின்பால்” ஓட்டி நீ நடந்து வரவேண்டும் என்று எண்ணிப்பார்.இந்த ஜாக்கிரதை சதா உன்னிடம் இருக்கவேண்டும்.


அன்பானவர்களே, சற்று கூர்ந்து கோர்வையாக்கி “மெய்நிலை” அறிவீர்களாக.புரியாதவர்கல் புரிந்தவர்களை நாடுவீர்களாக. அடியேனின் “ஆதிமெய் உதயபூரண வேதம்” எனும் நூல் கிடைக்கபெற நாடுங்கள்.கீழே குறிக்கபடும் நபர்களை அன்புடன் கேளுங்கள்,இலவசமாக பெற்றோம்..இலவசமாக பெற்றுகொள்ளுங்கள்

முத்துக்கள்

 மனித பிறப்பு போன்று எண்ணமற்ற பிரபஞ்ச பரிணாமங்களில் இந்த ’பூ’ உலகு அருமையானது, விடுதலைக்கு ஏற்ப ஒருங்கே அமையபெற்றது.இதில் வந்து கருக்கொண்டவன் பூத்து மலராமல் போனால், இனி என்று வாய்க்கபெறும் இப்படியொரு பிறப்பு

====================================

செபம் தபம் தானம் எல்லாம் அதற்க்கான படித்துறைகள் தாம், கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் உச்சத்தை தொட மவுனம் பூக்கிறது

===================================

செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா?




வள்ளலார் சொல்லுவதில் இருந்து, "சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”.

சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா?

..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்

உடலிருக்கும், உணர்விருக்கும், மன்மிருக்கும், உயிரிருக்கும் ஆனால் ”தான்” இருக்காது, நனொன்றில்லை, நீயொன்றிலை, நாந்தான் எனவொன்றிலை, நீவேறென்றிலை..அந்தபடியான போதம் ஒன்றுமிலையான நிலை

====================================

மோசே கடலை பிளந்து போனதுபோல்..மாயகடலை பிளக்க கோடரிவாள் இப்போ அனைவருக்கும் தேவை.அதற்க்கு செய்யவேண்டியது அட்சர அப்யாசமே தான்.பட்டி தொட்டி ஏல்லாம் தமிழ் மெய்ஞான மணம் வீசணும்.அ-ஆ-னா என சத்தம் முழங்கணும்..ஓதி ஓதி தான் தெளியணும்..ன்கர மெய் வரைக்கும் சத்தம் பிளக்கணும். வேற மெய்வழி என ஒண்ணும் இல்லை.

====================================

தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்

===================================


என்னிலே இருந்ததொன்றை யானறிந்ததிலையெ என்னிலே இருந்ததொன்றை யானறிந்து கொண்டபின் என்னிலே இருந்ததொன்றும் யானுமாகி நின்றனே எனும் பாடல் தான் நினைவுக்கு வருகிற்து.இந்த பாடலில் சொல்லியிருக்கின்ர அந்த பொருள் எதுவென்று உலகம் முழுக்க அலைஞ்சாலும் கிடைக்காது.காட்டித்தருபவர் காட்டித்தந்தால் நிமிட நேரத்தில் முடிந்துவிடும்.ஒரு க்‌ஷ்ன நேரம் தான், ரெம்ப நேரம் ஒண்ணும் இல்ல....நமுக்கு ரெம்ப பக்கத்துல இருக்கும் அந்த பொருள் , அறிவுக்கு வரும் முன் ரெம்ப ரெம்ப தொலைவாக இருக்கும்

===================================

ஆதியில் கடவுளை யாரும் அறிந்திருக்கவில்லை,ஏனெனில் அவரை அறிவிக்க யாரும் அவரை தெரிந்திருக்கவில்லை,அங்ஙனம் அறியாமையே இருந்தது.அந்த அறியாமையே அறிவுக்கு தூண்டுகோலாய் மலர்ந்தது.அறியாமையே யாரும் அறியாவண்ணம் காரிருட்கோளமாய் எல்லையற்ற இருட்பிழம்பாய் வியாபித்திருந்தது.அங்ஙனம் இருந்த இருளுக்கு ‘கு’ என பெயர். அவ்விருளில் நின்று முதன்முதலாய் இறைவனே அறிவாக விரிந்தான்.அவனையே ‘ரு’ என சொல்லப்பட்டான்.குரு வாழ்க குருவே சரணம்.

===================================


தமைநோக்கும் வல்லபர்க்கு யெல்லாம் சொல்வேன்


தாது உயிர் நின்றவிடம் மனிதருக்கே


உமைநோக்க நெற்றியடி புருவ மத்தி

ஊசிமுனை மூக்கினடி மத்தியாமே

--  காகபுசுண்டர் பெருநூல் காவியம் 102
தமை நோக்கும் வல்லபம்” என்பது முதல் தகவல், ”தாது உயிர் நின்ற இடம்” இரண்டாவது தகவல் சாமீ. நல்லா பாருங்க சாமீ...இதுல தமை நோக்கும் இடம்,அதாவது ”உமை நோக்க” வகுத்த இடம் தான் நெற்றியடி புருவமத்தி சாமியோவ். இரண்டாவது தாது உயிர் நின்ற இடம்,அந்த இடம் தான் ஊசிமுனை. ஊசிமுனை மூக்கினடி மத்தி சாமியோவ். நா சொல்லல ..காகபுசுண்டர் சொல்றார் சாமியோவ்

===================================

4000 கோடியா 4000 லட்சம் கோடியா அல்லது 4000 கோடி கோடியா ஆகிவிட்டது உலகம் உருவாகி... அதோ இது உருவாகாமல் நிலை கொண்டுள்ளதோ.... உயிரானது என்று தோன்றியதோ அல்லது தோன்றாமலே நிலை கொண்டுள்ளதோ.....அதை தெரிந்தவனே கூறவேண்டும்...அதை உணர்ந்தவனே சொல்லவேண்டும்...அவனே மகா குரு...அவனே அன்றும் இன்றும் என்றும் நிலை கொண்டுள்ளான்... அவனை அறிவதே அறிவு....அவனே தட்சிணாமூர்தியும் ஆதிகிறிஸ்துவும்

===================================

இல் எனும் எழுத்ததை பற்றி-இரு வாசலை பூட்டிஅடைத்துப்பிடித்து-கொல்லந்துருத்தி கொண்டூதி-கோலமாய்மூலகுகயை எழுப்பி-வில்லின்மேல் ஞாணம்பை ஏற்றிவெகுவேகமாய் ஒன்பதுவாசல் அடைத்து-அல்ஹம்துலில் லொன்றாகி நின்றநந்தமாதியை நன்றாககண்டுகொண்டேனே.

===================================

கண்ணு மாட்டினதுஇல்லே....எனக்கு இயற்கை கொடுத்தவரபிரசாதம் அது...பார்வை எப்பவும் ஒருகண்ணுலத்தன் இருக்கும்..மறு கண்பார்க்காது...வலது கண் பார்க்கிறப்பஇடது கண் பார்க்காது..இடது கண்பார்க்கிறப்ப வலது கண் பார்க்காது

===================================

நான் இங்கு இல்லை’ எனும் பிரக்ஜை ஊன்ற அது ஞானத்துக்கு இட்டுச்செல்லும்.கர்மங்கள் பலனற்று போகும். ‘நான்’ என்பதில் தான் கர்மங்கள் பலன் பெறுகின்றன

===================================

செபம் தபம் தானம் எல்லாம் அதற்க்கான படித்துறைகள் தாம், கொஞ்சம் கொஞ்சமாக அறிவின் உச்சத்தை தொட மவுனம் பூக்கிறது

===================================

உடலிருக்கும், உணர்விருக்கும், மன்மிருக்கும், உயிரிருக்கும் ஆனால் ”தான்” இருக்காது, நனொன்றில்லை, நீயொன்றிலை, நாந்தான் எனவொன்றிலை, நீவேறென்றிலை..அந்தபடியான போதம் ஒன்றுமிலையான நிலை

==================================

மோசே கடலை பிளந்து போனதுபோல்..மாயகடலை பிளக்க கோடரிவாள் இப்போ அனைவருக்கும் தேவை.அதற்க்கு செய்யவேண்டியது அட்சர அப்யாசமே தான்.பட்டி தொட்டி ஏல்லாம் தமிழ் மெய்ஞான மணம் வீசணும்.அ-ஆ-னா என சத்தம் முழங்கணும்..ஓதி ஓதி தான் தெளியணும்..ன்கர மெய் வரைக்கும் சத்தம் பிளக்கணும். வேற மெய்வழி என ஒண்ணும் இல்லை.

===================================

இல் எனும் எழுத்ததை பற்றி-இரு வாசலை பூட்டிஅடைத்துப்பிடித்து-கொல்லந்துருத்தி கொண்டூதி-கோலமாய்மூலகுகயை எழுப்பி-வில்லின்மேல் ஞாணம்பை ஏற்றிவெகுவேகமாய் ஒன்பதுவாசல் அடைத்து-அல்ஹம்துலில் லொன்றாகி நின்றநந்தமாதியை நன்றாககண்டுகொண்டேனே.

===================================

அஞ்சும் அடக்கடகென்பர்அறிவிலர் அஞ்சும் அடங்கில்அசேதனமாமென்றிட்டு அஞ்சும் அடக்காஅறிவறிந்தேனே....இது மூலர் பிதற்றல்

==================================

ஞானம் என்பது வடமொழிகையாளல், தமிழ் மொழியில் அது அறிவுஎன கையாளுகிறோம்.இன்னும் அதைசிற்றறிவு எனவும் பேரறிவு எனவும்பிரித்து கொள்கிறோம், எங்ஙனமாயினும்ஞானம் என்பதின் தமிழ் சொல் அறிவுஎன்பதே தான்.வேறு சொல் இல்லை.

===================================

மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர, தியான சம்பிரதாயங்கள்...

பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...

முடிவு ஒன்றே... வழிமுறை வேறு வேறு....

சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...

===================================

எதுவொன்று தூல உடலமாக மலர்ந்துள்ளதோ அதுவே சிவரூபம் என அறிவாயாக, அத்தூலத்துடன் அத்வீதமாக இயங்கியிருப்பதுவோ அதன் சக்தி சீவரூபமென அறிவாயாக, இவை இரண்டினும் "நான்" என மதித்திருக்கும் நீயோ மூடனே என அறிவாயாக.

+++ரியான் அத்வைத பாடம்

====================================

வைத்தியனும் "மருந்து" குடுப்பான், ஆசிரியனும் "மருந்து" குடுப்பான், மந்திரவாதியும் "மருந்து" குடுப்பான். பெயர் என்னமோ ஒண்ணு தான், ஆனால் ஒவ்வொருவனும் குடுக்கிறது ஒவ்வொண்ணு போல, தியானம் என்பது யோகிக்கு ஒண்ணு, ஞானிக்கு ஒண்ணு, சித்தனுக்கு ஒண்ணு முக்தனுக்கு ஒண்ணு அடிநிலை சாதகனுக்கு ஒண்ணு என பொருள்படும். 

--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

===================================

விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே

===================================

உண்மையான சீடனுக்கு தகுந்த குணநலன்கள் கொண்ட பிற்பாடு அல்லவா உண்மையான குருவை அடையாளம் காண்பது எவ்விதம் என விழையவேண்டும் அல்லவா

தூலமான உடலை கண்டு என்ன பிரயோசனம் ஐயா...அறிவான உருவை அல்லவா அறிதல் நலம்.அது எங்கிருந்தால் என்ன...விருந்து சாப்பிட்டால் போதும் அல்லவா?

 சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்

===================================

செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா?




வள்ளலார் சொல்லுவதில் இருந்து, "சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”.

சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா?

..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்

==================================

ஆவியில் எளிமையானவர்கள் பாக்கியமானவர்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது...இது தான் “இடுக்கமான வாசல் வழியாக நுழைஞ்ச்ய் போகிறதுக்கு “சின்னதாக” மாறும் முறை...

வாசல் வழியாக ஒருசிலர் தான் நுழைஞ்சு போவார்கள்...”பெருசா” வெச்சுகிட்டு இருக்கிறவன் ஒருத்தனும் இந்த வாசலை கடந்து போகமாட்டான்... பரலோகத்திற்க்கு செல்ல இது தான் வாசலாக இருக்கிறது. இந்த வாசலை விடுத்து மற்றொரு வாசல் வழியாக நுழைகிறவனை கிறிஸ்த்து அருமையான பெயரால் அழைக்கிறார். திருடர்கள் மட்டுந்தான் நேரான வாசலை விடுத்து கொல்லைபுற வாசல் வழியாக நுழைவார்கள் என

===================================


ஆதியின்றி அந்தமின்றி அருளு வந்துதித்ததோ
நீதியின்றி நிறமுமின்றி நிர்மலமும் கதிச்சதோ
வேதமின்றி விறகுமின்றி நீரதுவும் கொதிச்சதோ
பூதமஞ்சினும் புகுந்த கொள்ளி பூசையதுவும் கொண்டதோ.

                   ~~~   ரியான் பஞ்சவர்ணகிளி

===================================







கர்ம பலன்

 இவனின் மூடபுத்தி பலபல கர்மங்கலை செய்யவே இவனை தூண்டும், அப்படி கர்மங்களிலேயே மீண்டும் மீண்டும் அகப்பட்டு என்று தான் கிடைக்கும் விடுதலை என ஏங்கி ஏங்கி சென்மங்கள் பல புகுந்து கொண்டிருப்பான், கர்மங்கள் சம்பாதித்துகொண்டுமிருப்பான்.விடுதலை என்பது அசாத்தியமாக இஅவனுக்கு தோன்றும். மாயவலைக்குள் சிக்கி தவித்து தவித்து கர்மபலன்களால் மீண்டும் மீண்டும் பிரந்து கொண்டேயிருப்பான்