Tuesday, December 6, 2022
சுத்த சலணம் இல்லாத சைதன்யம்
மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத சுத்த சத்தியமான இருப்புநிலை எவற்றாலும் அறிய முடியாதது தீயினாலும் தண்ணீராலும் அளழிக்கப்படாது எங்கும் கண்களுக்கு ஏட்டப்படாதது இருந்தாலும் ஒரு இருள் இருந்தால் அங்கு ஒளியும் பிரவேசித்து கொண்டுதான் இருக்க வேண்டும் எங்குமா ஊடுருவி அருள் வடிவமாக ஒளி பிரகாசமாக எல்லா இடமும் வியாபித்து இருக்கின்றது
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கக்கூடிய அங்கு எங்கும் இல்லாத படியாக அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கின்றது நாம் இருக்கக்கூடிய நிலையில் ஆனால் வேறு வித கோணத்தில் அனைத்து இடங்களிலும் இந்த கரும் பொருளாக நிறைந்திருக்கின்றது கரும்பொருள் இருண்ட பொருள் என்றும் பல விஞ்ஞானிகளாலும் பேராசிரியர்களா லும் சித்தர்களும் ஞானிகளும் கண்டுபிடிக்கப்பட முடியாத எந்த ஒரு கருவிகளாலும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வஸ்து விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது ஆனால் இதை உருவமாகவும் நிறமாகவோ காணும் பொருளாக இல்லை இன்றும் அவர்களுக்கு அறிவுக்கும் எட்டப்படாத ஒரு விஷயமாக இருக்கின்றது இந்த பரிணாம வளர்ச்சி எப்படி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் ஒரு பொருள் இருக்கின்றது அது துகள்களாக இருக்கின்றது நாம் அறிவு பூர்வமாக அறிந்து கொள்ள முடியுமே தவிர வேறு எந்த கோணங்களிலும் அதை விளக்கிக் கூற முடியாத நிலையில் உள்ளதுஇதற்கு உயிர்ப்பு நிலையும் ஏற்படுகின்றது இந்த பௌதிக உலகில் பஞ்சபூதங்களுக்கு அப்பாற்பட்டு அப்பாற்பட்டதாக இருக்கின்றது இந்த பிரபஞ்சத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத ஒரே நிலையில் களங்கமற்ற நிலையிலும் சுத்த வெளியிலும் இருக்கின்றது இதையே ஆண்மாக்களின் துகள்கள் என்றும் ஆன்மா என்றும் பிரபஞ்ச அண்டவெளியில் அனாதையாக இருக்கின்றது என்றும், கரும்பொருள் என்றும் ஞானிகள் கூறுகின்றனர் இந்த கரும்பொருள் இந்த பிரபஞ்சத்துடன் ஒரு இழப்பு ஏற்பட்டு அதனுடைய பரிணாம வளர்ச்சியில் இந்த பஞ்ச பூதங்களில் இருக்கக்கூடிய உயரிய நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இருந்து மாற்றம் அடைந்து புழு பூச்சிகள் மரம் செடிகள் மனிதர்களாகவும் இருந்து அது வளர்ந்து இந்த அறிவுசொரூபமாக இருந்தும் இந்த நான் மட்டுமே இருக்கின்றது தன்னையறியாமலே இருக்கின்றது இந்த அறிவால் நாம் அந்த கரும் பொருளை பார்க்க முடியாத ஒரு பொருளாகவும் இருக்கிறது அன்றும் இன்றும் அழியாத பொருளாகின்றது இதையே ஞானியர்கள் இந்த மண்ணுலகில் இருந்து விண்ணுலகத்தில் சென்று அடைய வேண்டும் என்று கூறுகின்றார்கள் இந்த இயற்கையோடு சேர்ந்த இந்த கரும்பொருள் இது அப்பாற்பட்ட இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியை அடையக் கூடியதே ஞானிகளின் நோக்கமாக இருந்தது இதையே வள்ளல் பெருமான் அருள் ஒளி என்றும் குறிப்பிடுகின்றார் இந்த ஒளி வேகத்தின் மூலம் அந்த ஒளியிலேயே பிரவேசிக்க வேண்டும் அந்த ஒளியிலேயே கலந்து கொள்ள வேண்டும் என்றும் இருக்கின்றார்கள் இந்தப் பிரபஞ்சத்தில் கலந்துகொள்வதற்கு வரலாறும் முயற்சி செய்து கொண்டிருந்தது அந்த மூன்றாவது நான்காவது கோணத்தில் இருக்கக்கூடிய அந்த பிரபஞ்ச ஒலியும் மற்றும் இருண்ட பொருள் இருக்கின்றது இந்த இருண்ட பொருளும் இந்த பிரபஞ்சமும் இந்த ஒளியும் நம் அறிவு என்ற அந்த ஒளி பாதையில் பயணிப்பதற்கு நாம் முயற்சி செய்வோமாக
துன்பமே அடையாத நாக்கு
துன்பமே அடையாத நாக்கு
எல்லாம் வல்ல அருட்சக்தி யான இறைவன் நமக்கு நாவை கொடுத்திருக்கின்றான் இறைவனின் படைப்பில் மகத்தான சிறியதொரு சதை துண்டு தான், இதனால் விளையும் விபரீதங்கள் பல உண்டு, அந்த சக்தி வாய்ந்த இந்தப் பொருள் உள்ளத்தின் கருத்துக்களை அதுவாகவே படம்பிடித்து காட்டுகிறது, நல் வழியை பின்பற்றி நடக்கிறேன் என்று சொல்வதும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்று சொல்வதும் அது தான் உங்களுக்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப் படுத்திக் காட்டுவதும் ,இந்த ஒரு சிறிய சதை துண்டு தான், இந்த சிறிய சதை துண்டு தானே இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் விளக்குகின்றது, கற்பனையில் உள்ளதையும் உண்மையில் கண்டதையும் அது கண்ணாடியில் தோன்றுவதைப் போல தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது, தான் அறிந்த அனைத்தையும் இந்த நாவின் உதவியால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறவும் செய்கிறது, சில வேளைகளில் இந்த அண்டத்தின் பிரபஞ்சத்தையும் உலகத்தையும் அளந்து பார்க்கின்றது, சூரியன் முதல் சந்திரன் வரையும் எடை போட்டுக் கொண்டு இருக்கின்றது, இறைவனையும் அவர் படைத்த உயிரினங்களையும் வம்புக்கு இழுக்கிறது, இந்த சிறிய சதை துண்டுக்கு உள்ள ஆற்றல் மனிதனின் அவயங்களில் வேறு எதற்கும் கிடையாது, இறைவனே இறைவனே என்று துதிக்கும் மறு சமயம் அந்த இறைவனையே வசை பாடுகின்றது நாவை கட்டுப்படுத்தாமல் பெரும்பாலோர் துன்பத்திற்கு ஆளாகிறார்கள், உங்கள் நாவின் இயக்கத்துக்கு கட்டுப்பாடு தேவை, சமாதானத்திற்கும் வழிவகுக்கும் இந்த நாக்குதான் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதிலும் இந்த நாக்கு தான் செயல்படுகிறது, ஒரு சில அறிவாளிகள் கூட தட்டுத்தடுமாறி இந்த நாக்கால் அவர்கள் துன்பம் அடைகின்றார்கள், ஒரு சில நல்ல காரியத்திலும் நாக்கு உரிமை காட்டினாலும் கெட்ட காரியத்துக்கு அது என்றைக்கும் தயங்கியதில்லை மற்றவர்களின் மர்மங்களை எல்லாம் சந்திக்கு இழுக்கும், நாம் இதில் தான் எத்தனை இன்பம் அடைகின்றோம், பொய் பேசுவதிலும் இது அதிகமான உச்சமான இன்பத்தை அடைகின்றது , எதையேனும் பேசிக்கொண்டிருப்பதை விட மௌனம் சாதிப்பது மிகச்சிறந்தது.தங்கள் மனம் போன போக்கில் எதுவும் பேசாதீர்கள் நமக்கு பயன் படாத எதையும் பேசாமல் இருப்பது நல்லது.
இருண்ட அழியாத கோளங்கள்
இருண்ட அழியாத கோளங்கள்
அன்றும் மின்றுமழி யாப்பொரு ளென்னடி சிங்கி?- அது கண்ணையு மூட விருள்ளழி யாப்பொருள் சிங்கா!
பீர்முகம்மது அப்பா
அன்றும் இன்றும் அழியா பொருளாகவும் நம் கண்களுக்கு தெரியாத இருண்ட பொருளாகவும் இருக்கக் கூடியதாக உள்ளது அந்த ஞான பொருள் அன்றும் இன்றும் அழியாப் பொருள் கண்ணை மூடினால் ஒரு இருள் எப்படி தெரிகின்றதோ நம் புலன்களுக்கு எட்டப்படாத வகையிலும் அருள் வடிவமாகவும் இருக்கக் கூடியதாக அருள்சக்தி வடிவமாய் இருக்கக்கூடிய ஒன்று அணுவாகவும் இருக்கின்றது
வள்ளலாரும் ஆகாயம் அனாதி அதுபோல் அதற்குக் காரணமாகிய உருவாக்கிய கடவுள் அனாதி அனாதியான ஆகாச வெளியில் காற்றும் அனாதி காற்று எப்படி அனாதியோ அதுபோல் கடவுள் எனும் அருட்பெரும் ஜோதி அருட்சத்தி வடிவமும் அனாதியாக உள்ளது ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது ஆன்மாக்கள் முழுமையாக நிறைந்து உள்ளதால் இந்த இடத்துக்கு ஆன்ம ஆகாயம் என்றும் அங்கு அணுக்கள் சந்தான மாயமாய் நிரம்பியிருக்கின்றன அங்குதான் இந்த அணுக்களுக்கு ஆன்மா என்ற ஒரு பெயர் உண்டு இந்த அணுக்கள் இப்பூவுலகில் நாம் என்றும் நான் என்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் தங்கும் சொந்த இடமாக இருக்கின்றது இப் பூவலகில்
ஐயா
ஐயா
என்ற ஒரு வார்த்தை நாம் சிறுவயதில் இருந்தே நமக்கு நம் பெற்றோர்கள் கற்று கொடுத்துஇருக்கின்றார்கள்,அதுபோல் பள்ளிக்கூடத்தில் நாம் ஐயா என்று தமிழ் வாத்தியாரை அழைப்போம், அதுபோல் வீட்டில் நம்முடைய தந்தையையும் ஐயா என்று அழைப்போம்,, தந்தைக்கு தந்தையும் ஐயா என்று அழைப்போம், இது ஒரு பாரம்பரிய மிக்க வழக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு வார்த்தை, இந்த வார்த்தை அக்காலத்தில் மிகவும் நுண்ணியமாக நுணுக்கமாகவும் நமக்கு பெரியோர்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஞானியர்கள் இந்த ஐயா என்ற ஒரு வார்த்தையை இன்றும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்த வார்த்தையை வடிவமைத்து கொடுத்திருக்கின்றார்கள், இந்த ஐயா என்ற வார்த்தை மிகவும் தமிழில் அழகாகவும் இருக்கின்றது இந்த வார்த்தையை கூப்பிடும் பொழுதும் திரும்பிப் பார்க்காதவர்கள் யாராவது இருப்பார்களா, நம்முடைய தமிழருக்கு சொந்தமான தமிழுக்கே சொந்தமான இந்த ஐயா என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்துவது நாம் ஜீவனுக்கு உரிய விஷயம் அல்லவா, இந்த வார்த்தை மிகப்பெரிய அளவிலான ஆச்சரியமான விஷயத்தை நம் ஞானியர்கள் பழக்கபடுத்தி வைத்துள்ளார்கள், ஆமாம் அய்யா என்கிற ஒரு வார்த்தையில் மிகப் பெரிய ஞான ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது ஜுவ சிம்மாசனம் ஆன ஞானப் பொக்கிஷம் இந்த வார்த்தைக்குள் மறைந்துள்ளது, என்று எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள், சென்ற நூற்றாண்டிலே அவதரித்த மகா உன்னதமான ஞானியர் ஐயா வைகுண்டர் அவர்கள் எடுத்து வைத்த அய்யாவழி என்கிற ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளார்கள் இதனுடைய மிகப்பெரிய ஞான மந்திரமாக இருப்பதும் ஐயா உண்டு, ஐயா உண்டு, ஐயா உண்டு, இந்த மந்திரம் என்ன என்பதை உங்களுடைய ஞான சத்குருவிடம் அணுகிதெரிந்து கொள்ளவும்
அய்யாவழி வந்த இந்த மகா ஞான ரகசியம் அனைவருக்கும் தெளிவு பெற தெளிந்திட ஐயா அருள் புரியட்டும்.
நந்தி
நந்தி
"நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே"
திருமந்திரம்
ஆதியில் குரு பெருமான் அருள் பெற்று நந்தி யானவர்கள் எட்டு பேர் என்று திருமூலர் நமக்கு தெரிவிக்கின்றார்கள் நந்திகள் நால்வர்= சனகர் ,சனந்திரர், சனாதனர், சனத்குமாரர். இவர்களோடு சிவயோக மாமுனி, பதஞ்சலியார், வியாக்கிர பாதர், நந்தி,நந்திகள் என்பர். இவர்கள் எல்லாம் குரு பெருமானுக்கு உடல் பொருள் ஆவி தத்தம் செய்து குருகுலவாசம் செய்து குரு சொன்ன உபாயபடி தவம் செய்து குருவானவர்கள், நந்தியாகிய குருபெருமான் ஒரு மெய்ஞ்ஞான ஜோதி அவர் பெருமையை அளக்க முடியாது அவரை நினைத்து நடந்தால் கயிலை நம் கைவசம் ஆகும்.
ரியான் குண விளக்கு
ரியான் குண விளக்கு
உண்ணு மட்டும் உண்டு விட்டு
உணர்வு கெட்டு பேண்டு விட்டாள் மண்ணில் இந்த சீடனுக்கு மறுபிறவி தான் வாய்க்குமோ!
குன்றிலிட்ட விளக்கினால் குணங்கள் உண்டு கேண்மிரோ !
பண்டுதொட்டு பணங்கிழங்கு காகம் தின்பது இல்லையே.
எண்ணங்களின் பல வகை வேறுபாடு
எண்ணங்களின் பல வகை வேறுபாடு
எண்ணங்களற்று தன்னை உணர்வதோ, இறைவனாக தன்னை உணர்வதோ, இறை நிலை அடைவது எதுவாக இருந்தாலும் தாண்டி செல்ல வேண்டியது மாயை உண்டாக்கும் எண்ணங்கள். எண்ணங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு எண்ணங்களை என்னிடமிருந்து உருவாகிறதா அல்லது எண்ணங்களை நான் அறிகின்றேனா? எவ்வாறு? எல்லாமே எண்ணங்கள் என்றாலும் எல்லாம் ஒரே மாதிரியான எண்ணங்கள் இல்லை.
எண்ண அலைகள் வலியுள்ளவை, வலியற்றவை
மெய்யறிவு, பொய்யறிவு, கற்பனை, உறக்கம், ஞாபகம்
பட்டறிவு, யூகம், ஆகமம் ஆகியவை மெய்யறிவு,அஞ்ஞானம்,
உண்மைக்குமாறாகப் புரிந்து கொள்ளும் அறிவு பொய்யறிவு
இதுவரை எண்ணங்கள் ஏற்படுத்திய நினைவுகளைக் கொண்டு உண்மையில்லாமல் பொய்யாய் உணர்வது கற்பனை.
உணர்வில்லாத ஒரு தனியான விருத்தியே உறக்கம்
அனுபவித்த விசயங்களைத் நினைவில் கொள்ளும் தன்மையே ஞாபகம்
எண்ணங்கள் பல விதம். பார்த்து அறிகிறோம், அதாவது புலன்களால் நேரடியாக அறிகிறோம். புலன்களால் அறிவதை சிந்தித்து உணர்கிறோம். கற்பனை செய்கிறோம், இறந்த காலத்தை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறோம், எதிர் காலத்தை யூகிக்கிறோம், இப்படி எண்ணங்கள் பல விதம். அறிவியலின் படி சிந்தனை, எண்ணங்கள் மூளையின் வேலை. ஆனால் மூளை அறிவதற்கு வேறு சிலவற்றின் இயக்கம் தேவை என்பதை அறிவியல் அறிய மாட்டாது. அதுவே உயிரும் உயிரோடு இணைந்த பிராணனும் ஆகும்.
நாதம்
அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் புத்தி அகங்காரங்கள்
செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும்
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்கு மாறும்
பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும்.
ஆணவ மூலமடி …..அகப்பேய்
அகாரமாய் வந்ததடி
கோணும் உகாரமடி …..அகப்பேய்
கூடப் பிறந்ததுவே.
ஒலித்துப் பாருங்கள். அகாரம் உயிரை மேலும் கீழும் செலுத்துகிறது. உகாரம் பக்கவாட்டில் திரும்புவதைப் போல் தோன்றுகிறது. “ம்” என்னும் மகாரம் ஓரிடத்தில் பற்றி நிற்கும் உணர்வைத் தருகிறது.
ஓட்டுமொத்தஎழுத்துஓங்காரம்.
அதன்பிரிவுகளானஅ, உ, ம, விந்து, நாதம் ஆகியவையே இந்த அந்தக் கரணங்களை இயக்குகின்றன, அந்தந்த எழுத்துக்களையும் இயக்குவது ஒவ்வொரு கடவுள் தன்மை நாத வடிவம் உயிர், அதாவது நிலை பெற்ற பிராணன் என்றும் அகாரம், உகாரம் மகாரம் எல்லாம் எப்படி இருக்கும் அதுவும் நிலை பெற்ற பிராணன், மற்றும் இயங்கும் பிராணனே ஆகும். நாதமே(உயிரே) மேலும் நீண்டு நிலை பெற்று இயங்கி அறிகிறது அறிவை இயக்குகின்றது.
தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~இயேசு கிறிஸ்து
“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~இயேசு கிறிஸ்து”
இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர். நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதல்லே குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள்.
குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன.
உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை.
சித்தர்களை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம்.
நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது.
அதனாலேயே பக்குவ நிலை பேதம், குணபேதம், சுபாவ பேதம், கருத்து பேதம், கோட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது.
ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது, ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்றத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர்.
இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன். அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை.
குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை.
இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர்.
குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிரஞ்சீவிதத்துவம் அது.
குரு வாழ்க, நற்றாள் துணை.
“குரு மரபு”
=========
உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான்.
"தன்னை" இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர். "தன்னை" இழப்பது தான் குருமொழிமவுனமான பாஷை.
வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை.. .வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்.. அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது... அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது... வித்தையே குருவாகின்றது... இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....
விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும்
விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய்,
சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது,
முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே
--- அகத்தியர் உயர்ஞானம்... வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்”
நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே.
ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே.
ஆதியும னாதியாய் அஹமதுமு ஹம்மது
சோதியா யேக சுபசொரூபாய் -நீதியாய்
இப்புவியில் வந்துயிர்க் ளெல்லவர்க்குந்
நிற்பவரை நெஞ்சே நினை.
ஆதிபெரும் பொருளே யழிவில் லானே
அன்னை யிலுமன் பானபெரி யோனே
சோதியிறை யோனே துவக்கமில் லானே
துய்யவனே யெல்லாம் படைத்தமிழிப் போனே
நீதிபெற வெங்கு நிரம்பிநின் றோனே
நிச்சயப் பொருளே நிகரில்லா ஞானமே
ஓதியுணர் வல்லார்க்கு முத்தமப் பொருளே
உண்மையா யென்மனத் தழுக்கறுப் பாயே.
உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு
உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு
நாம் ஒரு நேரம் ஒன்றை மட்டும் சிந்திக்கும் திறமுடையோம். ஒன்றை பாக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதை மட்டும் நாம் அறிகிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் போது சிந்திக்கும் விசயம் மட்டும் உள்ளது. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இருப்பதில்லை. சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தால் சிந்தனை செய்யும் விஷயம் போய் விடும். என்ன சிந்தித்தோம் என்று சிந்தனை செய்தால் சிந்தனை நின்று போய் சிந்தித்த விசயத்தை நினைவு படுத்திக் கொள்ள முயல்கிறோம். சிந்தனை நின்று போகிறது. சிந்தனை செய்கிறோம் என்ற உணர்வும் இருப்பதில்லை. மூளை முழுக்க விசயங்கள் இருக்கிறதே! என்று என்னுகின்றது பார்க்கவும் கேட்கவும் சுற்றிலும் பல விசயங்கள் உள்ளதே! என்றும் ஒரு விநாடியில் எத்தனை விசயங்களை சிந்திக்கிறோம், அறிகிறோம்? ஒரு விநாடியில் ஒரு விசயத்தை மட்டுமே அறிவோம் சிந்திப்போம். அதை விட்டு விட்டே வேறொன்றைப் பற்றுவோம். இது உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு எனலாம்.
Subscribe to:
Posts (Atom)