Sunday, December 4, 2022
இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருள்
இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருள்
Hseija Ed Rian அன்றுமின்றும் அழியா பொருளேதடி சிங்கீ-அது இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருளட சிங்கா
Hseija Ed Rian இருள் இல்லையேல் சோதியின் பிரகாசம் எங்கு பிரகாசிக்குமாம்?
Hseija Ed Rian இருள் மட்டுமே அதுவாகவே அனந்தமாக விரிந்து ஆட்கொண்டு இருந்திருப்பின் ,இருள் இருக்கிறது என அறிவது எங்ஙனம்?. அல்லது ஒளி மட்டுமே ஆட்கொண்டு இருந்திருப்பின் இருளை உணர்வது எங்ஙனமாம்?.ஆகையின், இருளிலே தான் ஒளி பிரகாசிக்கின்றது என காணலாம்
Hseija Ed Rian ஆதியிலே இருந்த அந்த வார்த்தையின் உள் ஜீவன் இருக்கிறது என தான் சொல்கிறார் அல்லவா?அந்த ஜீவனே மனிதருக்கு ஒளியாய் இருக்கிறது..அல்லவா
•
•
•
• Hseija Ed Rian ஆதியிலே இருந்த அந்த வார்த்தையின் உள் ஜீவன் இருக்கிறது என தான் சொல்கிறார் அல்லவா?அந்த ஜீவனே மனிதருக்கு ஒளியாய் இருக்கிறது..அல்லவா
•
Hseija Ed Rian அவர் ஆதி முதல் உலகத்தில் இருந்தார்,ஆனால் உலகமோ அவரை அறியவில்லை
Hseija Ed Rian கிறிஸ்த்து ஒருவரே குருவாக இருக்கிறார்,வேறு ஒருவரையும் குரு என சொல்லாதீர்கள் (ஏசுநாதர்
கோடி சூரிய பிரகாசம்
கோடி சூரிய பிரகாசம்
கோடி சூரிய பிரகாசம்ண்ணு சொல்ல கேட்டிருக்கோம்லியா.. அதென்ன கோடி சூரிய பிரகாசம்ண்ணு நெனச்சிருக்கியளா?. இந்த பிரம்ம பிரகாசத்தை அல்லவா கோடி சூரிய பிரகாசம்ண்ணு சொல்லி மறைச்சு மண்ண அள்ளி போட்டிருக்காவ..!! பிரம்மபிரகாச மெய்வழிண்ணு சொல்ற நடைமுறை இதத்தான் சொல்றது. ஏககோடி கிரணோதயம்ண்ணு சொல்லியிருப்பாவ. ஏககோடிகிரணோதய குருபூமிண்ணு. எதுங்க இந்த சமாசாரம்?..ம்??. ஒரு சூரிய பிரகாசத்தை பாத்தாலே கண்ண இருட்டு கட்டி மறைக்கும்..அப்ப இந்த கோடி சூரிய பிரகாசத்தை பாத்தா அம்புட்டுத்தான்.... கண்ணோடு கண் அம்புட்டு இருட்டு கவ்வும்..லியா?.. அப்ப இருட்டு தானா கோடிசூரிய பிரகாசம்?. குருபூமிண்ணு சொல்ர குரு எங்கிரதுக்கு கு=இருள் ;ரு=பிரகாசம் என விளக்கம் சொல்வான் பாருங்க..அவன கண்டாலே அடிக்கணும்...ண்ண சரியா?
Hseija Ed Rian
Hseija Ed Rian ஓரெழுத்தொரு பொருள் விளங்க கூறிய சீரெழுத்தாளரை சிந்தையில் வைத்து வேரெழுத்து வித்தெழுத்து ரெண்டும் கூட்டி வெளியிலே விளைவுதனை மெல்ல கூடே
எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்
எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம்
Hseija Ed Rian உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று-உலகத்தில் சிறிது ஜனம் வெவ்வேறென்பர் (அகத்தியர்
Hseija Ed Rian உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம்
Hseija Ed Rian Kuppusamy Siddha உடல் உயிர் பூரணம் என மூன்று..அது பதினாறு நான்கு எட்டு என அகத்தியர் சொல்கிறார்..நீங்க இங்கு சொல்வதோ பதினாறும் பனிரெண்டும் என மற்றொரு கணக்கு....எது சரி?
Hseija Ed Rian முப்பதிரெண்டா..யார் சொன்னாங்க இந்த எண்ணிக்கை?..நான் சொல்லவில்லையே ஐயா....உடல் உயிர் பூரனம் என மூன்று பொருட்கள் உள்ளன. ஆனால் நீங்கள் சொல்லி இருப்பதோ இரண்டு பொருட்கள்..பதினாறு என ஒன்று பனிரெண்டு என ஒன்று...இண்ணொண்ணு எங்க
Hseija Ed Rian Jayamohansamy Mohan சூரிய சந்திர அக்கினி கலை விகிதங்கள் ஆளாளுக்கு மாறு பாடாக தான் சொல்லியிருகின்றனர் ஐயா, சூரிய சந்திர கலைகள் மாறி கூட சொல்லி இருக்கிறார்கள், சூரியன் பெண் ஆகவும் சந்திரன் ஆணகவும் கூட திருமூலர் சொல்கிறார், இப்படி ஏறாளம் முரண்பாடுகள் இருக்கின்றன
Hseija Ed Rian ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலைண்ணு மூலர் சொல்கின்றார், இது ஏனைய சத்திரங்களுக்கு முரணானது, வள்ளலாரும் இப்படியே சொல்லுகின்றார், சூரியனுக்கு கலை பதினாறு சந்திரனுக்கு கலை பனிரெண்டு எனவும் வள்ளலார் சொல்லியிருக்கிறார்.இதுல எது உண்மை எது முரண்பாடு
Hseija Ed Rian தாய் சுவாசம் கொண்டு சேய் நுரையீரல் வேலை செய்யவில்லையே...இருந்தும் இருதயம் துடித்ததே...சிரம் வளரும் முன்னே இருதயம் வளர்ந்ததே...எப்படியாம்
Hseija Ed Rian நாலஞ்சு வாரம் கழிந்து தான் சிரசு என ஒரு அமைப்பு உருவாக துவங்கும்....அதுக்கு முன் மத்தியில் இருதயம் துடிக்கும் ஒரு உருண்டை தான் மாமிச ரெத்த உருண்டை மட்டுமே..காலும் இல்லை சிரசும் இல்லை
Hseija Ed Rian உடலுக்கு மூலம் சிரம் இல்லை...தொப்பூழ்
Hseija Ed Rian இரத்தகட்டியான பெண் அண்டத்தினுள் சுக்கில துளி உட்புகுந்த முதல் சந்திப்பே தொப்பூழ்
Hseija Ed Rian Mahesh Deivasiga Mani வள்ளலாரின் பிண்ட இலக்கணம் பார்க்கவும்...நாபியில் இருந்து மேல் நோக்கி ஒரு நாடியும் ,நாபியில் இருந்து கீழ்நோக்கி ஒரு நாடியும் உற்பத்தி ஆகிறது என்கிறார் வள்ளலார்
Hseija Ed Rian நாபியின் உள்ளே நலமுற நோக்கிடின் சாவதும் இல்லை உடம்பு என்பது சித்தர் வாக்கு
Hseija Ed Rian உடல்க்கு ஆதாரமான ‘ஸ்டெம் செல்” என்பது கூட நாபியிலே தான் உள்ளது
Hseija Ed Rian இந்த உடல் எந்த கொடிக்கனி சிங்கா..அது முந்திய தொப்பூழ் மாக்கொடி அல்லவோ சிங்கீ
Hseija Ed Rian மூலத்திருவிரல் மேலுக்கு முன் நின்றதும்..பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்றதும் ஆன குண்டலினீ நிற்க்கும் நிலையே மூலாதாரம்
Hseija Ed Rian பூரணமே தெய்வமென்று உரைத்தாரைய்யா பூரணத்தை இன்னிதென்று புகலவேணும் காரணத்தை சொல்லுகிறேன் கருத்தாய் கேளு கலையான பதினாறும் பூரணமேயாகும்(அகத்தியர்
Navaneethakrishnan Kuppusamy இறுதியில் முடிவதும் இருதயமே! மூளை செத்தவன் கூட உயிரோடே இருக்க முடிகிறது
Hseija Ed Rian இந்த விதை இதுவரை மண்ணுக்குள் முளைக்கும் தன்மையை பெறவில்லையே...ஆனால் தெரியாமல் முளைக்கும் என கருதி புதைத்து வைக்கிறார்கள்
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
மஹாபிரளயம் ஆகும்போது அனைத்தும் அழிந்துவிட மும்மூர்திகள் மிஞ்சுவார்களாம், பிரளயம் மேலும் வலுக்கும் போது அவர்களும் அழிந்துவிடவே மஹாபிரளயம் மீண்டும் மேலும் வலுப்படுமாம், அப்போது மாமஹரிஷி மார்கண்டர் மட்டும் ஜலப்பிரளயத்தில் நீந்தி கொண்டிருப்பாராம் அப்போது ஒரு மாமரக்கிளை மிதந்து வருமாம்,மார்கண்டர் அந்த மாமரக்கிளை பிடித்து ஏறவே அந்த மாமரம் வளர்ந்து மேலே சென்றுகொண்டிருக்குமாம், அதன்மேலே ஏறிபோன மார்கண்டர் அங்கே கண்டது விசித்திரமாய் ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானவரும், அனந்தங்கோடி பிரளயங்களுக்கு சாட்சியானவரும் மகரமெனும் மவுனவித்தைக்கு ஆசானானவருமான பிரம்மரிஷி காகபுசுண்டர் அவர்கள் மாமர லிங்கத்தை பிடித்துகொண்டு “மகர தவம்” செய்து கொண்டிருந்தாராம்,. நாலுவேதங்களும் பூமியில் இறங்கிவந்து தோத்திரம் செய்த மாமரமானது காஞ்சியில் காமாட்சிஅன்னையின் தலவிருட்சமாய் கற்பாந்தகாலமாய் நிலைகொண்டுள்ளது. அப்படிப்பட்ட கற்ப விருட்சத்தை அறிந்து “மகர தவம்” செய்ய அன்புடன் அழைக்கின்றேன் அறிந்தே
அவ்வலு தீனி மஹ்ரிபத்திலாஹி" என்று எம்பெருமான்
"அவ்வலு தீனி மஹ்ரிபத்திலாஹி" என்று எம்பெருமான்
ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் அவர்கள்,
அறிவுத்துள்ளார்கள்.
மஹ்ரிபத்துல்லாஹி என்பது,
ஷரீ-அத்,
தரீகத்,
ஹக்கீகத்,
என்ற மூன்று நிலைகளைக் கடந்து வந்து,
இறைவனைப்
பற்றிய மெய்யறிவை உணர்ந்து,
அறிந்து அதில்,
தரிபடுகின்ற நிலை.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்,
" தீனுடைய பாதையில் முதல் காரியம்,
இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைவது"
என்று கூறிய,
பிறகும்,
"இறைவனைப் பற்றிய ஞானம் தேவையில்லை"
அவனுடைய ஏவல்கள், கட்டளைகளை ஏற்று,
நடந்தால் போதும்"
என்று சொல்லும் கூட்டத்தாரோடு
சேர்ந்து விடாதீர்கள்.
சிலரிடம் மெய்ஞானம் தேவையில்லை என்ற
கருத்து நிலவி வருகிறது.
அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டு அவனளவில் மீள்வதே
மார்க்கத்தின் சாரமாகவும், மனித வாழ்வின்
இலட்சியமாகவும் இருக்கின்றது.
அல்லாஹ்வைப் பற்றிய அறிவும், தேடலும் நமக்கு இருந்தாலன்றி,
அவன் மீது நாம் கொள்கின்ற நேசம் முழுமை
ஆகாது.
இதைத்தான்
"அவ்வலு தீனி மஹ்ரிபத்துல்லாஹி"
என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றுள்ளார்கள்.
அல்லாஹ்வைப் பற்றிய அறிவு அல்லது ஞானம்,
எங்கே கிடைக்கும்..?
அதை எப்படி அடைவது...?
இந்தக் கவலை உண்மையில் ஒருவனுக்கு,
ஏற்படுமானால்,
அவன் கவலையின் அளவுக்கேற்ப,
தேட்டமும்,
தேட்டத்தின் அளவுக்கு உரிய ஞானமும்,
அவனுக்கு கிடைக்கும்.
"வ அன்லய்ஸனில் இன்ஸானி இல்லா
மாஸாஅ”
"எதற்காக ஒரு மனிதன் முயற்சி செய்கின்றானோ,
அதனையே அவன் அடைந்து கொள்வான்"
என்பதை,
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
.
எனவே
"ஒருவனுடைய தேட்டத்தின் அளவைப்
பொறுத்துதான் ஞானம் பெருகும்."
நாஹூர் ஆண்டகை அவர்கள் வரலாற்றிலிருந்து.
Courtsy;Nasoordeen Cassim
என்ன தான் பண்றோம்ண்ணு
என்ன தான் பண்றோம்ண்ணு இவனுக்கு தெரியாது, எதுக்குத்தான் பண்றோம்ண்ணும் தெரியாது,ஆனா எதையாச்சும் பண்ணிகிட்டே இருக்கான், எதுக்குண்ணு கேட்டா ஆன்ம விடுதலைக்கும்பான்.எதுக்கு ஆன்மாவை விடுதலை பண்ணணுமாம்ண்ணா தெரியாது, சரி ஆன்மா விடுதலை இல்லாம தவிச்சுகிட்டு இருக்குண்ணு யாரு சொன்னதுவாம்ண்ணா எவனையாவது சுட்டி காட்டுவான், அவர் என் குரு அவர் சொன்னாரும்பான்,அல்லது அந்த நூல்ல இருக்கு இந்த நூல்ல சொல்லியிருக்கும்பான்.உனக்கு தெரியுமாண்ணா நின்னு முழிப்பான், குருவுக்காவது தெளிவா தெரியுமாண்ணாலும் இதே கதை தான்.
என்னமோ பண்ணி தொலைக்க வேண்டியது. அதிகாலைல எழுந்திருச்சா தான் ஆன்மீகம் விளங்கும்பான்,அப்பத்தான் சுழுமுனையில ஆன்மா வரும்பான்.இவன் நெனப்பு ஆன்மாங்கிறது இவன் உடல் முழுசும் அங்கிங்க ஓடிகிட்டு இருக்கும் போல என்கிறது தான். வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் என கால்பெருவிரல் நுனிமுதல் அங்கிங்கென ஓடிட்டு இருக்கும்ங்கிறான்.அதை புடிச்சு அடக்கணும்ங்கிறான், ஏதோ காற்றை புடிச்சு பலூண்ல அடைக்கிற மாதிரிஆன சங்கல்பம் பண்ணிக்குவான்.குருமார்கள் கூட இப்படித்தான் சொல்லிண்டிருக்காங்க.
நாம எதை செய்யுறோம், எதுக்கு செய்யுறோம்ங்கிற தெளிவு இல்ல,குண்டலி என்பான், ஆதாரம் என்பான், வாசி என்பான்,சுழுமுனை என்பான், ஏதேதோ சொல்லிகிட்டு தனையே தான் ஏமாத்திகிட்டு இருக்கானே ஒழிய ஆழமாக தெளிவு நிலைக்கு வர இவன் தயாரில்லை.தனக்குண்ணு ஒரு கூட்டம் இருக்க ஆசைபடுவான்,தான் சொல்றதை அவங்க ஏத்துக்கணும் அவ்வளவு தான் இவன் வாழ்க்கை, முடிஞ்சு போச்சு கதை.
சிவகாரண பூரணம்
====சிவகாரண பூரணம்===
“கண்டு தொழும் சிவகாரணம் ஏதடீ சிங்கி?-நம்மை உண்டுபடுத்தின உள்ளொளிவானதே சிங்கா.
எப்படி கண்டே இறையை வணங்கலாம் சிங்கி?-அது நட்புடன் ரெண்டு நடுநிலை காண்பது சிங்கா.
நடுநிலையானதை நாடுவதெப்படி சிங்கி?-அது நாட்டம் தேட்டம் ஓட்டம் ஆட்டம் ஒன்றாகினால் சிங்கா.”
=(தக்கலை பீருமுஹம்மது ஒலியுல்லாஹ் அருளிய ஞானரத்தின குறவஞ்சி.)
தொழுகையின் ரகசியம் என்பது இறையை கண்டு தொழுவதாகும்.தொழுகையின் போது ஒன்று நீ இறையை பார்கின்றாய் அல்லது இறைவன் உன்னை பார்கின்றார் எனும் போதமே தொழுகையின் ரகசியம் என நபியவர்கள் விளம்புகின்றார்கள்.
இறை தொழுகை என்பது எங்கோ மறைந்திருக்கும் ஒருவனை தொழுவதல்ல,உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஒருவனை தொழுவதே ஆகும்.இரண்டு கைகளையும் உயர ஆகயத்துக்கு உயர்த்தி கும்பிட்டு தொழுவதல்ல தொழுகை, தூல பிரபஞ்ச ஆகாயத்துக்கு மேல் இருக்கும் பர ஆகாயத்தில் அல்ல இறைவன் வசிக்குமிடம் என்பதை உணர்ந்தோர் தொழுகையின் ரகசியத்தை முற்றும் அறித்தோர் ஆவார்கள்.
நம்மை படைத்தவனையே பார்த்து தொழுவதே தொழுகையின் ரகசியம்.இதைத்தான் பீர்முஹம்மது அப்பா அவர்களும் சொல்கின்றனர்.நாம் கண்டு தொழ வேண்டிய சிவகாரணம் எதுவென வினவி அதற்குண்டான பதிலையும் தருகின்றனர்.
எதைத்தான் நாம் கண்டு தொழ வேண்டுமாம்?,நம்மை உண்டுபடுத்தின அந்த பேரொளி சொரூபத்தையே நாம் கண்டு தொழ வேண்டுமாம்.நம்மை உண்டுபடுத்தின பேரொளிவு எங்கே இருக்கின்றதாம்?
நாம் நமது தாய் தந்தையரின் கருவிந்துநாதம் மூலம் பிறந்திருக்கின்றோம் என்பது இயற்கை உண்மை அல்லவா?.அப்போது நம்மை உண்டுபடுத்தின அந்த பேரொளிவானது விந்துநாதம் எனும் கருநிலையின் உள்ளாக அல்லவா ஒளிவாக நிறைந்திருக்க வேண்டும்,அல்லவா?.
அதைத்தன் எப்படி கண்டு இறையை வனங்கலாம் என வினவி அதற்கு பதிலையும் சொல்கின்றார் அப்பா அவர்கள்.இவ்விரண்டு நாதவிந்துக்களின் நடுநிலையை அறிந்து அதனுட்கலந்திருக்கும் இறையொளிவான நடுநிலையை பொருந்தி தொழுவதே சூஃபிக்களின் அறிவுநிலை தரீக்கா.
முக்குண பொருப்பு
===முக்குண பொருப்பு=====
ஆகாயம் அனாதி அதுபோல ஆகாயத்தில் அணுக்களும் அனாதி,அதுபோல ஆன்ம ஆகாயத்தில் ஆன்ம அணுக்களும் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன=வள்ளலார்.
ஆகாயம் என்பது தூல பிரபஞ்ச விரிவு கொள விரிந்து பரந்து விசிரிம்பித்து நிற்கும் அண்டவெளியே ஆம்.எல்லையற்ற விரிவும் பரப்பும் கொள்ளளவும் கொண்டு அனைத்தையும் அடக்கி நிற்கும் அனாதி இருப்பு நிலையே ஆம்.இவ்வாயாகத்தில் விளங்கி நிற்கும் தூல அணுக்கள் தத்தமது இயற்கை உண்மை தனித்தன்மையுடன் இயற்பு இயல் வேதி இயல் மின் இயல் மின்காந்த இயல் தொகுப்பு இயல் பகுப்பு இயல் அணுக்கரு இயல் என தத்தமது இயற்கை உண்மை இயல்களை கொண்டு பிரபஞ்ச இயலாக இருக்கின்றன என்னவும்.இத்தகை அணுக்கள் கொள்வதும் சார்வதும் இழப்பதும் பகிர்வதும் எனும் கொள்கையின்படியும் மற்று தத்தம் இயற்கை உண்மை தனித்தன்மையுடன் பொருந்தி விளங்கி, உருமாற்ற அணுமாற்ற பொருள் மாற்ற இயல் மாற்ற வேதி மாற்ற மின்மாற்ற காந்தமாற்ற தன்மை இயல் கொண்டு பிரபஞ்சமாக உருகொண்டு தோற்ற பொலிவுக்கு வருகின்றன என்னவும்.
இவ்வண்ணம் ஆன்ம ஆகாயம் எனும் கரும்பொருள் தொகுப்பும் இயற்கை உண்மை தனிச்சிறப்பு கொண்டு கரும்பொருட் தொகுப்பு அணுக்களின் திரட்சியாகவே மற்றோர் பிரபஞ்சமாக விளங்குகின்றது எனினும், அதன் மலர்சி நிலை பிரபஞ்ச தோற்ற தொகுப்பினூடேயே தான் ஆகுதல் என வகுக்கபட்டிருக்கின்றது என்னவும்.ஆன்ம அணுதொகுப்பு ஆன்மகூட்ட ஆகாய விரிவு எல்லைகுட்பட்ட இவ்வனைத்தும் தூல பிரபஞ்ச அணுத்தொகுப்பு கூட்ட மலர்சியுடன் பொருந்தி எண்ணற்ற காலம் தன்நிலை மலர்சியுடனூடு பக்குவமுற்று தனித்தனி பொருட்களாகவும் கற்களாகவும் கோள்களாகவும் விண்மீன்களாகவும் மின்காந்த அணுக்கருவியல் முறைப்படி தொகுக்கப்பட்டு விரிகின்றது. இக்காலமனைத்தும் அதனூட ஆன்ம ஆகாய கரும்பொருட் கூட்டமும் தோற்ற பரிமாணத்துக்கு வருகின்றது.
இவ்விரண்டு தோற்ற பரிமானங்களும் ஒருங்கே நிகழும்போது அதனுட் பதிப்பிக்கபட்டிருக்கும் உயிர்திரட்சி பரிமானமும் மற்றோர் பரிமானத்தில் தோற்றநிலைக்கு பயணித்து கொண்டிருக்கின்றது என்பதுவும் ஆன்றோர் அறிந்தநிலையே ஆம்.இவை மூன்றும் தாமசம் ராஜசம் சாத்விகம் என சொல்லலாம்.தாமசமான ஆன்ம அணுக்களுக்கு சாத்வீகமான உயிர்திரட்சி அமையும் பொருட்டு ராஜசமான தூல பிரபஞ்சம் பொருந்த வகுக்கபட்டிருக்கின்றது என்னவும்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை !!
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை !!
நிலையானது எது?. எது தான் நிலையானதாக இருக்கமுடியும்? நிலையற்ற ஒன்று எவ்விதம் ஆனந்தமாக அமையும்? நிலையற்ற எது தான் மெய்யென அறுதியிட முடியும்?இல்லையே அல்லவா?..?..?....
இங்கிருக்கிறவன் அங்கு சென்றால் சந்தோஷம் கிடைக்கும் என நினைக்கிறான், உடையில்லாதவன் உடை இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான், உடை இருக்கிறவன் வீடு இருந்தால் சந்தோஷம் என நினைக்கிறான்...இவ்விதம் மனிதன் ஒன்றிலும் பூரண சந்தோஷத்தில் நிலைப்பதில்லை.ஆசை அவனை அலைக்கழிக்கிறது, ஒன்று விட்டு மற்றொன்று என அவன் காலம் பூராவும் நித்தியமான சந்தோஷத்துக்கு என பிரயாணம் பண்ணிகொண்டே இருக்கிறான்.
உலகத்தில் வந்து பிறக்காத ஆன்மாக்களுக்கு உடல் கிடைக்காத துக்கம், அவை ஒரு வாய்ப்புக்காக எண்ணற்ற கோடி கற்பாந்தங்களாக காத்து கிடக்கின்றன, ஒன்றுமே அறியாத, அறிய அறிபுலம் இல்லாத காரிருட்கூட்டத்து கருமை செறிபுலத்தே அவை புழுங்கி மழுங்குகின்றன, மக்கி மருண்டு திகைக்கின்றன,என்று தான் விடிவு காலம் என விம்முகின்றன..விம்மவும் அறியா மட்கியநிலை...
தேவாதி கூட்டம் என ஒரு விதம், மற்றோர் உலகத்தோர்கள் கூட்டம் என மற்றோர் வகை, இங்ஙனம் எண்ணற்ற பிரபஞ்ச கூட்டத்தே விரிந்த தொகுப்புகளுக்கு இடையே பல்லுயிர்கள் கூட்டங்கள், எந்த விடிவுமின்றி சதா அலைந்து தவழ்கின்றன.எங்குமே இதற்க்கு விடிவு காலம், முடிவு காலம் என ஒருநாளும் இருந்ததில்லை. பல்லுடலங்கலில் புகுந்தாயிற்று, கர்மங்கள் பலகோடி நிறைந்தாயிற்று...எது தான் இவற்றிற்க்கு புகும் சரணாலயம்?
தூல உலகத்தில் வந்து பிறந்தவன் இதை நித்தியம் என மருள்கின்றான், தனது தேவைக்கு என பொருள் கொள்கின்றான், தான், தனது சுற்றம் முற்றம் அயலார் என ஒரு வட்டம், வட்டத்துக்கு வெளியே கோட்டை என வகுத்து கொள்கிறான். இப்படி கிராமம் ஒரு கோட்டை, நகரம் ஒரு கோட்டை, நாடு ஒரு கோட்டை தேசம் ஒரு கோட்டை என பலவித பரிணாம கோட்டைகளில் அவன் சுற்றித்திருகிறான், பிரபஞ்சம் அவனுக்கு பெரிய கோட்டை.,எல்லையில்லா விரிந்த கோட்டை. இந்த கோட்டைகளில் உழலுகின்ரவன் கொஞ்சம் அறிவு வர இதற்க்கு அப்பால் உள்ளது மெய் என நினைகின்ரான்.பிரபஞ்சத்துக்கு வராதவன் பிரபஞ்சத்துக்கு வர எத்தனிப்பது போன்று, பிரபஞ்சத்தில் இங்கு இருப்பவன் பிரபஞ்சத்துக்கு அப்பால் போக எத்தனிக்கிறான், இது இவனது இயல்பு.அப்பால் இருப்பவை மெய்யான நித்தியம் என இவன் நினைத்து கொள்கிறான்.
செத்தவனை பார்த்து சாகாதவன் நகைக்கிறான்,சாகாதவனை பார்த்து செத்தவனும் நகைக்கிறான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளுவதில்லை. கடலின் ஆழம் கடலில் குதித்த பிறகே தான் தெரிய வரும்.செத்தவனுக்கு சாவு விடுதலை, சாகாதவன் உலகத்தில் மாட்டிகிட்டு முழிக்கிறதை செத்து உலகத்தில் இருந்து விடுதலை அடைந்தவனுக்கு நகைப்பாக இருக்க தவறில்லை. உண்மையில் அவனும் இவனும் ஒன்றே,ஒரே கதி தான். யாரும் எங்கும் எப்போதும் பூரன விடுதலையை பெறுவதில்லை.இவனுக்கு இது நிஜம், அவனுக்கு அது நிஜம்.இங்கே இருக்கிறவன் எதிர்பார்ப்பு அவனுக்கு ஒரு கற்பனை உலகத்தை வளர்க்கிரது, அழகான சொர்க்கம் என அவன் கற்பனையில் எண்ணி அதற்க்கு என பாடுபடுகிறான்.அழகான சொர்க்கத்தை அடைந்தவன் ஒரு கட்டத்தில் அதுவும் நிரந்தரம் இல்லை என உணர்கிறான், அதுவும் அழிந்து போககூடியது எனும் நிஜத்தை புரிகிறான்.அவனுக்கு அதை விட பெரிய கற்பனையாக ஒன்ரு இருக்கும், அதை நம்பி எதிர்பார்த்து தவம் கிடக்கிறான். இப்படி எல்லா கோட்டைகளும் பொய் கோட்டைகளே என அவன் அறிந்து உணர்ந்து கொள்ல எண்ணற்ற கோடி எண்ணிலடங்கா கோடி முடிந்தாலும் முடிவதில்லை , கற்பனைக்கு மேல் கற்பனை என அவன் சதா பிரயாணப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்.
மரணமில்லா பெருவாழ்வு என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் சகல சுக அமைப்புகளுடன் ஏராளமான வசதிகளுடன் சுவர்க்கத்து ரதிக்கொப்பான இளம் மங்கைகளுடனான வாழ்க்கை என ஒரு கூட்டம், சொர்க்கத்தில் நீண்ட காலம் உல்லாச வாழ்க்கை என ஒரு கூட்டம்....இப்படி அனேக வித கூட்டங்களுள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லாம் கற்பனை கூட்டங்களே என அறிய காலம் வரும்.இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையான கதை தான் எல்லாம். அனைத்தும் கற்பனை, அனைத்து வாழ்வுகளும் கற்பனை, ஒன்றும் நிரந்தரமில்லை, எல்லா தவமும் கற்பனையாக கற்பனை கனவுகளுக்காக கற்பனையாக காத்திருக்கும் வீண் கற்பனைக்கோலம்.......
மூர்த்தி தீர்த்தம் தலம்
மூர்த்தி தீர்த்தம் தலம்
கோடானுகோடி கற்ப காலங்கள் தவம் செய்யினும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கோ மும்மூர்த்திகளுக்கோ கிடைக்காத ஒரு அரும் பொக்கிஷம் ஒன்று உன்னிடம் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறாய். அது உன் உயிர் என நினையாதே, உயிரினும் மேலானது. ஏன் உன் உயிரினுக்கும் ஆதாரமானது கூட,; ஆயினும் அதை நீ மதியாதிருக்கிறாய். அதை நீ கவனியாதிருக்கிறாய்.சலனமறிருந்தும் சலியாமல் அசைவற்ற சிவம். அதுவே மெய் என்றறிவாயாக. அதை பெற்றிருக்கும் நீ நிச்சயம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மும்மூர்ர்த்திகளுக்கும் மேலானவனே ஆம் என்பது நிச்சயமான நிச்சயம். இதுவே மெய்.உடலுக்கே மெய் என பெயர். பொய்யானது எனில் இதை மெய் என்பானோ? மெய்யே தான் மெய்.
_______________________
Navaneethakrishnan Kuppusamy பின்வரும் கருத்துக்கள் கர்மவினைகளின் பலாபலன்களின் தொகுப்பே இவ்வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. 'நல்லாற்றுப் படூஉம் புனை போல் ஆருயிர்', ' அதிகமாம் புண்ணியர்க் கிந்த யோகம்', 'ஜென்மாந்த்ர க்ருதம் பாபம் வ்யாதி ரூபேணாம்' என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க கர்மாக்கள் (பாவ புண்ணியக் கூறுகள்) உண்டென்றும் அவையே நமது அன்றாட வாழ்வின் போக்கினை மேன்மையை நிர்ணயிக்கின்றது என்பது எம் நம்பிக்கை. வரும் வினைகளின் பலன்களை, இன்பமோ துன்பமோ அதை துய்ப்பது இந்த உடலாகிய மனம், மனம் மட்டுமே. இன்னும் இந்த சங்கிலித் தொடரினின்று விடுபட்டு உய்வதற்கும் ஆகிய புண்ணியமும் இவ்வுடலாகிய மனம் இன்றி அசாத்தியமே. ஏதோ ஒரு புள்ளியில் இக்கணக்கு நேர் செய்யப் பட்டு சுதந்திரம் வயப் படுகிறது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.
- குருவின் துணையுடன்
Hseija Ed Rian நாம் சாதாரணமாக வழக்கில் “அவனுக்கு அளந்த அரிசி முடிந்துவிட்டது” என சொல்லகாண்கிறோம்.கர்மவினைத்தொகுப்பு அதன் பகுப்பு அதன் நிர்ணய வினைபோக அனுபோக பயன் நிலை யாது யாது எனவும் அதன் தொடர்பு உண்ணும் அரிசியும் எவ்வாறு தொடர்பு நிலை கருத்துள்ளோர் இயம்ப கேட்க்க ஆவல்
Subscribe to:
Posts (Atom)