Wednesday, November 30, 2022

அவதாரம் என்பதன் மெய்ரகசியம்

அவதாரம் என்பதன் மெய்ரகசியம் பிலிப்பு என்பவன் இயேசுவை நோக்கி ஆண்டவரே உம்முடைய பிதாவை காட்டித்தாரும் என கேட்டான்.அதற்க்கு இயேசு,பிலிப்புவே இத்தனை காலம் என்கூட இருந்தும் என்னை அறியாமல் இருக்கின்றாயா .”மெய்யாக மெய்யாக என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்.நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார். சனாதன தர்ம கோட்பாடுகளில் மிக ரகசியம் பொதிந்தது இந்த அவதார தத்துவம்.அதாவது கடவுளே மனிதனாக வெளிப்பட்டு தோன்றி மக்களிடம் வசிப்பது தான் அவதாரம் . இந்த தத்துவ போத உண்மை ரகசியத்தினை உணர்ந்து தெளிந்து பரிபூரணமானவர்களையே அவதாரபுருஷர்கள் என்கிறோம். உண்மையில் இவ்வுலகத்தில் நடமாடும் அனைத்து மனிதகோலங்களும் இறை அவதாரங்களே தான் எனும் ஆழ்ந்த அறிவு மிளிர சடபோதம் கெட்டு அவதாரபோதம் உதயம் செய்யும்.அவர்கள் அவதாரபுருஷர்கள் ஆக அறியபடுகின்றனர். ‘நான்..நான்” என கொண்டாடி அபிமானிக்கும் இந்த உடல் உயிர் இரண்டும் ”‘நான் அல்ல”. “நான் அல்ல” என மறுக்கும் பொருளாக இருக்கும் இவை இரண்டும் மெய்யாகவே மெய்யாகவே சிவசக்தி சொரூபமான மெய்மை கோலம். ஆதி அனாதியான சொரூபம். அறிவு கெட்டு “நான்” என சொல்கிறோம். இருப்பது “அச்சொரூபமே”. என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்., நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்.ஆமென்

கடவுள்-அல்லா-சிவன் -விஷ்ணு இவர்களுக்கு மேல் யார்?

கடவுள்-அல்லா-சிவன் -விஷ்ணு இவர்களுக்கு மேல் யார்? - Part 1 சேலம் வாசவி ஹாலில் அந்த நிறைந்த சபையில், ””எம்மைத் தவிர உனக்கு வேறு நாதியே இல்லை-எம் கை விட்டால் எமன் கையில் தான் நீ மாட்டுவாய்”” என்று பேசி விட்டோமே என்று இங்கு வந்த பின் தவநேரத்தில் ஒவ்வொரு தெய்வ எல்லைகளாக இருந்து இருந்து கவனித்து பார்த்தோம்.கடவுள்-சிவம்-அல்லா-மகாவிஷ்ணு என்று சொல்லுகிறார்களே, அந்த ஆட்சிபீட எல்லைகள், அவர்களின் பவிசுகள், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஏறி ஏறி நின்று பார்த்தோம்.அந்த எல்லைகளும் கடந்து அதற்க்கு மேலும் ஏறி ”ஏகராசிகுவியல்” என்று சொல்ல பெறுகின்ற அந்த அதிமகோன்னத எல்லையில் நின்று பார்த்தோம். அங்கு பார்க்கையில் எம்மைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.ஆகவே,நாம் அப்படி சொன்னது சரிதான் என்று தீர்க்கமாக கண்டோம்.-------மெய்வழி என்பதுவும் அந்த பதநிலையில் இருப்பதுவே. ==மார்க்கநாத வான்கோடி மெய்குரு. Surya Chandra ஒரு மனிதன் ஜீவசிவத்தை உணர்ந்து தன்மயமாகிறானே அவனே சிவன்....அதாவது, எவனொருவன் ஜீவனை கண்டு அந்த ஜீவனே அனைத்திற்க்குள்ளும் பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம் என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன் என பெயர். இருப்பது ஒன்றே தான்..அதுவே ஜீவனாகவும் ஜீவசிவமுமாக இருக்கிறது. அதனாலத்தான் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி என ஆண்டவரை திதித்துகொண்டிருந்த வள்ளலார்,அந்த அருட்பெரும்ஜோதியில் கலக்கபோகிறேன் என சொல்லாமல் ,”எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து கொள்ளபோகிறேன்” என விலக்கமாக சொல்லிவிட்டு போனார்..நமக்குத்தான் அது விளங்காமல் போச்சு...அருட்பெரும் ஜோதியில் கலக்காமல் எல்லா ஜிவனிலும் கலக்கும் கரணம் இதுவே...இதுவே “இயற்கை உண்மை கடவுள் Salai Jayaraman Surya Chandra நவகோளின் பிடியில் அகப்பட்டு சின்னாபின்னமாகி மறுபடி மரணம் மறுபடி ஜனனம் என்ற கிரகவினையின் அசைவுநிலையில் 12 ராசி லக்னம் என்ற பிறவிப் பிணியின் ஜனன நிலையினை ஏக ராசி என்ற வைராக்யமணி மேடை கம்பத்தில் மூச்சோடா பெருநிலையில் கை வர வாகப் பெறப் பெற்ற எங்கள் குல தைய்வம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் ஒருவரே தங்கள் பெற்ற அனுபவத்தை பெருங்கருணை கொண்டு அறிவித்துள்ளார்கள். இந்தப் பெருநிலையில் விஷ்ணுவின் அம்சமான இராமபிரான் மட்டும் 7 நிலைகள் கைவரவாகப் பெற்ற வரலாறு உண்டு. ஏழு விருக்ஷங்களை ஓர் அம்பு கொண்டு வீழ்த்தியவன் இராமன். 12 இராசிகளின் வீர்யத்தை ஏக இராசியாக்கிக் கொண்டவர்கள் எம்மான் சாலை ஆண்டவர்கள். அடி முடி நடு கண்டு நடு நின்ற பருப்பொருளை கைக்கொள்ளுதல் ஏக ராசி என விளங்கிக் கொள்க Salai Jayaraman Surya Chandra இது வசனம் இல்லதம்பி வாழ்க்கை. நமக்கு வெளிசுவாசம் தேவையற்ற ஒன்று. நீங்கள் மூச்சிழுக்கவேண்டிய அவசியமே இல்லை. அண்ணாக்கு உண்ணாக்கு போன்ற வார்த்தைகள் தான் புண்ணாக்கான வசனங்கள் (நாக்கைப் புண்ணாக்கும் வசனங்கள் ) தேனடைக்குத் தேன் போன்றதுதான் நமக்கு சுவாசமும்) தேனடை நிரம்பி வழியும் நிலையில் இருந்தாலும் புதிதாகக் ெகாண்டு வரப்படும் தேனை உள்வாங்கிக் கொள்வது போலத் தான் நம் சுவாசமும் . தண்ணீருள் சுவாசிக்காமல் உயிர் பிரியாமல் தாக்குப் பிடித்து உள்ளடங்கி இருப்பது போல் புற வாழ்வில் அண்டப் பெருவெளியைத் தியானிக்காமல் ஆயிரம் கண்கொண்ட ஒரு இருதய வாசலை அறிந்து அதில் ஏகிக் கொண்டோமானால் ஏக ராசி என்ன அண்ட சராசரங்களும் நம் வசந்தான். இருதய அடைப்பா அல்லது திறப்பா என்பது அவனவன் பணிவாலும் விசுவாசத்தாலும் பெறப்படுவது. நம் தலையை சீர் செய்ய சனி பகவானின் த மச குணத்தால தான் முடியும். நூலறிவு கொண்டோரின் தலைக்கனத்தை சனீஸ்வரன் ஒருவரால் தான் தட்டி வைக்க முடியும் உதாரணம் இன்றைய மெய்வழிச்சாலை Salai Jayaraman Surya Chandra ஏக ராசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுவாசிக்கக் கூடாது. கோள்கள் சுவாசிப்பது இல்லை. நித்தியனுக்கு சுவாசம் தேவையற்றது. சுவாசம் பூமியில் உள்ளவர்களுக்குத்தான். தேவர்கள் சுவாசிப்பதில்லை. சாவா வரம் என்ற அமரத்துவத்தை அண்டவெளியில் கைக் கொள்வார்கள். சுவாசிப்பவன் வைராக்யமற்றவன். அசுவாசி வைராக்யமான வன் Hseija Ed Rian Salai Jayaraman ஐயா தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்..நீங்கள் ஆண்டவர் என்றால் மயிரும் மட்டையுமான தூலதெகத்தை கண்டிருப்பீர்கள். நானோ “சர்வ மக்களிடத்திலுமுள்ள யுகவான் சாலை ஆண்டவர்கலை” ena தரிசித்து வாழ்பவன். Salai Jayaraman Surya Chandra வாலையின் மகத்துவம் கேலிக்கு ஆகாது. ஏற்கனவே வித்வகர்மாக்கள் நிறையக் கேட்டு என் மூக்கை உடைத்து சுவாசத்தை நிறுத்தி விட்டார்கள் தாயே. இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆத்ம கலை உங்களுக்கு டைம் பாஸ். நீங்கள் நிறையப் படித்தவர்கள். அடக்கம் அமரருள் உய்க்கும் இது தான் சுவாச ரகசியம் நான் சுவாசிப்பது Hseija Ed Rian அச்சம்,மடம்,னாணம்,பயிர்ப்பு.(மடம் என்பது கணவன் பொய்யே சொன்னாலும் அதை மெய் என்று முழுக்க நம்பும் குணம்.பயிர்ப்பு என்பது அவனுக்கு பணிவிடை,கணவனை தவிர பிறரிடம் புழங்க அருவருப்பு)=ஞான்ம் பெற்றவர்களில் பெண்கள் சிலரே.ஏனெனில் ஒரு மெய்ஞான ஆசாரியரை தெய்வ இச்சையோடு அணுகியதும் ஊரே படர் விரிக்கும்.அதை மிதித்து ஏறவே இந்த நான்கு ஆபரணங்கள் தரபெற்றன. இல்லாவிட்டால் அவர்களில் ஒரு குஞ்சு கூட இருக்கமுடியாது.(சாலை ஆண்டவர்கள் வாக்கு Salai Jayaraman மெய்வழி ஆண்டவர்கள் திருவாக்கியம் ------------------------------ குருபிரான் சன்னதியில் இருக்கும் போதும் அவர்களின் வாசகங்களைக் கேட்கும் போதும் கேட்டு மறுமுறை சிந்திக்கும் போதும் சுவாசம் இலாபத்தில் மாறி விடும் . அதாவது உள்வாங்குவது அதிகமாகவும் வெளியேறுவது குறைவாகவும் இருக்கும் . இவ்வாறு சுவாசம் இலாப முகத்தில் இயங்கும் . இது தான் பிராணாயாமத்தின் இரகசியம் Salai Jayaraman Mathi Salai Jayaraman //அய்யா இதில் அடக்கம் என்பது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?// நிறையச் சொல்ல உள்ளம் விழைகிறது. உணர்வில் ஓர் நெருடல் தடையிடுகிறது. ஆண்டவர்கள் தங்கள் குரு பிரானிடம் பிறவா நெறிப் பிறப்பு என்னும் மறு ஜென்ம புதுப்பிறப்பினை விளக்குங்கால் இவ்வாறு கூறுகிறார்கள். அதாவது தான் பெற்ற அனுபவமானது ."உயிரற்ற உடலில் உயிர் வந்தது போலவும் " போலி பாசாங்கு ஞானத்தினால் தான் அடைந்த உடல் உபாதைகள் நீங்கிப் பேரின்ப பெருவெளியில் தங்கள் திருஷ்டிகள் இரண்டு நிலைக்கப் பெற்றவர்களால் மீண்டும் இப்பூமிப் பரப்பிற்கு திரும்பி வர திருஉளம் இல்லாதவர்களாய் ஆழ்ந்த சொக்க நிலையில் நிலைகொண்டார். மறுபடியும் தங்கள் குரு கொண்டல் அவர்களின் பெரு உதவியால் அசைவுநிலைக்கு பூமிக்குத் திரும்பினார்கள். இதே அனுபவம் வள்ளல் பெருந்தகைக்கு ஏற்பட்டு பொன்னுடம்பில் ஏகிக் கொண்டார்கள். உணர்வற்ற உடலுக்கு உயிர் வருவதும் உயிருள்ள யாக்கையை உணர்வற்ற உயிர்க்கும் போக்குவரத்தாக ஆக்கிக் கொள்வதும் அமரத்து மாகிய அடக்க நிலை என எம்பெருமானர் எங்களுக்கு அருளிச்செய்தார்கள். இதையே அடக்கம் அடக்கமென்பார் அடக்கம் அறிந்திலர். அடக்கி ஆக்க தெரிந்தவர் தாம் வான அனந்தர்க்கே

விதைக்குள் இருக்கும் உயிர்ப்பை விதைக்குளே ஒடுக்குதல்

Navaneethakrishnan Kuppusamy: விதைக்குள் இருக்கும் உயிர்ப்பை விதைக்குளே ஒடுக்குதல் Hseija Ed Rian: விதை என ஒன்று இருக்கா என்ன...விதையும் மரமும் ஒருசேர அல்லவா இருக்கு Navaneethakrishnan Kuppusamy: விதையின் பரிணாம வியாபகமே மரம் இல்லையா? ஆண் என்றும் பெண் என்றும் உள்ள விதைகளை ஆண் அன்று பெண் அன்று என்று செய்வது. பிறப்பறுப்பது முக்தி எனலாமா? தவறு எனில் மன்னிக்கவும் அண்ணன்! அர்த்தநாரீஸ்வரம். Hseija Ed Rian: ஐயா,ஆண் என்றும் பெண் என்பது அற்றுபோனால் அங்கு அர்த்தநாரீஸ்வரம் எங்கே, அதுவும் அற்றுபோகும் அல்லவா?ஆகையினால் ஆண் பெண் எனும் பூரணமே உண்மை, ஆண் என்பது ஒன்றின் பாதி, பெண் என்பதுவோ ஒன்றின் பாதியும் கூட..அல்லவா? அர்த்தநாரீஸ்வரம் என்பது இரண்டும் சரிசம பூரணமே அல்லவா? Navaneethakrishnan Kuppusamy: அண்ணன் இந்த உடலில் இரு பால் தன்மை கொண்டதாய் சொல்லப்படுவது மூச்சு மட்டுந்தான். Hseija Ed Rian: மூச்சுக்கு எங்க இருபால்? ஆன்மூச்சு என தனியாவும் பெண்மூச்சு என தனியாவும் வித்யாசம் இருக்குதா என்ன? Navaneethakrishnan Kuppusamy:: இட கலை Iபிங்கலை : சூரியன் சந்திரன் Hseija Ed Rian: அது இருபால் எப்படி ஆகும்?..ரெண்டு நாசியில் இயங்கும் இயக்கம் மட்டுமே..அதில் ‘பால்’ இல்லை..பாலுனர்வும் இல்லை. ஆணுக்கும் ரெண்டு நாசி ரெண்டு இயக்கம்.பெண்ணுக்கும் ரெண்டு நாசி ரெண்டு இயக்கம் என துவாரங்களில் இயங்குகின்றன...அல்லாது அவை பால் சார்ந்தது அல்லவே. கோமுட்டி பயலுவ வலது ஆண் போலவும் இடது பெண் போலவும் கதை கட்டிவிட நாம நம்பிகிட்டு இருக்கொம். Navaneethakrishnan Kuppusamy: இதை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் இருபால் கூற்றே இல்லை என எடுத்துக் கொள்ளவா குருவே! Hseija Ed Rian: அதுலயும் வேறுபாடு..வலது பெண் எனவும் இடது ஆண் எனவும் சொல்லுரவங்களும் இருக்காங்க..உதாகரணம் வள்ளலார், திருமூலர் என. ஆண் ஆணாகத்தான் இருக்கு, பெண் பெண்ணாகவும்ந்தான்...நாமதான் தெரியாம புகுந்து விளையாட ஆசைபட்டுகிட்டு அலயிறோம் Navaneethakrishnan Kuppusamy: அர்த்த நாரீஸ்வரம் என்பதற்கும் முக்திக்கும் தொடர்பு உளதா? Hseija Ed Rian: வெளி முகமான பரிணாமமானது ஆண் பெண் உடலங்கல்...ஒரு பொருள் ஒரு பரிணாமம் மட்டும் கொண்டு இருக்காது..எப்போதும் அதற்க்கு மறு பரிணாமமும் இருக்கும்...தூலம் இருந்தா அதுக்கு மறுபுறம் நமுக்கு தெரியாத சூட்சம் இருக்கும் கண்டிப்பாக வெளி பர்ணாமமான தூல உடல் கலக்க எழும் உந்துதல் என்பது உள் முக பரிணாமமான சூட்சம் தெரியாததின் விளைவே வெளிமுகமாக உந்துதல் மலர அது சிருஷ்ட்டியாகவும், அதே உந்துதல் உட்பரிணாமமாக மலர அது முக்தியுமாம் எனலாம் எல்லா பிரம்மசரியத்தின் உட்கருத்தும் இதுவே, ஆனால், அந்த ஞானம் மறைந்து, ‘அடக்கு அடக்கு’ என கொள்வதே பிரம்மசரியம் என ஆகிபோனது. Navaneethakrishnan Kuppusamy: சூட்சுமத்தில் பெண் எது? ஆண் எது? புருஷன் ப்ருக்ருதி என்றால் என்ன? Hseija Ed Rian: ஆன்மா புருஷன், உலகம் ப்ரகிருதி. சூட்சுமத்துள் ஆண் எது பெண் எது என அறிந்துகொள்ளும் ஆவலே காமம் என படுகிறது...ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பென் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று. வெளிதூலத்தில் அறியமுற்பட சிருஷ்டி பரிணமிக்கிறது..உட்சூட்சுமத்துள் அறியமுற்பட முக்தி பரிணம்க்கிறது இது ரெண்ட்ம்...வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம். Navaneethakrishnan Kuppusamy:: சிருஷ்டி செயல்வயப்படுவது. முக்திக்காகும் செயல் யாது? Hseija Ed Rian: ஹி..ஹி..ஹி...விந்துநிலை தனையறிந்து விந்தைகண்டால் விதமானநாதமது குருவாய் போகும்-----முந்தாநாள் இருவருமே கூடிசேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே. Navaneethakrishnan Kuppusamy:முற்றும் குருவே சரணம் !

செத்து போகிறதை நாடணுமா

செத்து போகிறதை நாடணுமா சாகாமல் இருக்கிறதை நாடணுமா? வள்ளலார் சொல்லுவதில் இருந்து,"சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும்”. சாமானியமானதும் சிரசில் இருப்பதுமான சாகாத ஜீவன் மேலானதா அல்லது விசேஷமானதுவும் கண்டத்தில் இருப்பதுவுமான சாகும் தன்மை கொண்ட ஜீவன் மேலானதுவா?. சாமானியம் மேலானதா அல்லது விசேஷம் மேலானதா? ..எதை நாடி பிரயானம் பண்ணனுமாம்

கட்டும் அவிழ்ப்பும்

====கட்டும் அவிழ்ப்பும்==== தன்னை அறிதல் முதற்கடமை, தன்னிலை உணர்தல் முதல் படி.வாழ்வின் ஆதாரம் வாழ்வின் கட்டு, வாழ்வின் சுழற்சி எது எப்படி எவ்விதம் என ஆழமாக புரியாமல் போவதினாலேயே கற்பனையாக கோட்பாடுகள் உருவாக்கபடுகின்றன. இருப்பதை இருப்பின் உள்ளமைப்பின் படி அறிதலே தன்னிலை உணர்தல். நீ இரண்டு வஸ்துக்களில் பிறந்தவன் என அறிந்திருக்கிறாய்.அந்த இரண்டு வஸ்துக்களும் இணையும் முன்பு நீ அந்த இரண்டு வஸ்துக்களில் எதனூடு வசித்து வந்தாய் என அறிதலே மெய்திறம்.உன் உடலை பார், ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் உன் உடல் யாருடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறது என காண்பாய். தாயே உன் உடலுக்கு நேரடி தொடர்பு அல்லவா, உன் நாபி அவளிடமே நேரடி தொடர்பு அல்லவா?. உன் தந்தையிடம் உனக்கு தொடர்பு இருந்திருக்கிறது என எந்த ஒரு அடையாளத்தையும் உன்னால் காட்டமுடியுமா என்ன?, முடியாதே, ஏனெனில் நீ தந்தையிடம் நேரடி தொடர்பு அற்றவன். தாயே தந்தைக்கு வழிகாட்டி. சற்று உற்றுப்பாராய், “நான்..நான்” என சதா கொண்டு திரியும் வஸ்து ஒன்று, “நான்..நான்” என சொல்லாமலேயே சதா உயிர்ப்பாய் இயக்கமுறும் வஸ்து மற்றொன்று. இவற்றை ஆழமாக பகுத்து ஆராய்வாக மனமே.இந்த உடலை கட்டமைத்தது சொல்லப்பெறும் “நான்” எனும் வஸ்துவா, அல்லது உயிர்ப்பான வஸ்துவா? என கேட்டுப்பாரேன் மனமே.அனைத்து நிகழ்வுக்கும் மத்தியில் “நான்” எனும் வஸ்துவே முன்னிட்டு நிற்கின்றது. நான் என்றும் என்னுடைய என்றும் இந்த வஸ்து எல்லா விஷயங்களுக்கும் உரிமை கொண்டாடுகின்றது, உடலுக்கு உரிமை வேண்டுகின்றது, மனதுக்கு உரிமை வேண்டுகின்றது, அனைத்து நிகழ்வுகளுக்கும்,அனைத்து செயல்களுக்கும் உரிமை வேண்டுகின்றது.ஆனால் இந்த “நான்” எனும் வஸ்து உண்மையில் எதனூடும் எந்த ஒரு தொடர்பும் ஒருபோதும் கொண்டதில்லை, அது என்ன அதன் தரம் என்ன, அதன் ரூப குணம் என்ன என ஆராய முற்பட்டால் அது தன்னை மறைத்து இருள் ரூபமாகவே அறிவுக்கு புலப்படாமல் நிற்கின்றது. அடுத்து நிற்கும் வஸ்து உயிர்ப்பானது, கரு உற்பத்தி முதல் உன் ஊடாக ஊடுருவி நிற்கும் அரும்பொருள், அது எப்போதும் தன்னை தானே அடையாலப்படுத்தி கொள்வதில்லை. அது பாட்டுக்கு அதன் செயலை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டமைக்கின்றது, ஒவ்வொரு துளி ரெத்தத்தையும் ஊடுருவி நின்று உருவாக்குகின்றது, தசைகள் தமனிகள், நிறம் வண்ணம் குணம் என அனைத்தையும் உருவாக்கி அரூபமாக விளங்கி நிற்கின்றது, அது யாரிடமும் யோசனை கேட்ப்பதில்லை, உடலின் அளவு எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என அது எவரிடமும் யோசனை கேட்பதில்லை, ரெத்தத்தை எப்படி உருவாக்க வேண்டும் என தயங்கி நிற்பதில்லை, கால்கை மூட்டிகளில் எந்த விதமான பொருட்களை எந்த விகிதத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என அது எவரிடமும் யோசனைக்கு நிற்பதில்லை, எல்லாவித உள்ளுறுப்புகலையும் எப்படி படைப்பது, எப்படி சீரமைப்பது எப்படி நடைமுறைபடுத்துவது என அனைத்தும் அதற்கு தெரியும். ஆனால் எப்போதுமே “நான்” இதை செய்கின்றேன், நான் தான் இதற்கு அதிகாரி, நானே இந்த உடலுக்கும் இதன் உள்ளுறை செயல் செயல்பாடுகளுக்கும் பூரண அச்சுக்கோர்வை என அது சொல்லி திரிவதில்லை, நினைப்பது கூட இல்லை. ஏனெனில் அதற்கு மனம் இல்லை. இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மனமோ, இவை அனைத்தையும் நானே நடத்துகிறேன், நானே இங்கு அதிகாரி ,நானே இந்த மனுத்தூலத்தின் மையப்புள்ளி என அபிமானித்து செயல்களில் மூழ்கி, செயல் பயன்களையும் துய்க்கின்றது.இவ்வண்ணம் இந்த வாழ்நாள் முழுதும் “நான்” முன்னிட்டே வாழ்வு அமைகின்றது, நான் செயல் புரிகிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் விளைவுகளை சுமக்கிறேன் என வாழ்வு நீண்டு போகின்றது.இவ்வண்ணம் “நான்” எனும் ஆன்மா உள்ளுறையும் “ஜீவன்” எனும் உயிர்ப்பை அறியாமல் மாண்டுபோகின்றது.மூடமாகிய ஆன்மா ஜீவன் எனும் வஸ்து தன்னிலிருந்தே பிறந்து தன்னிலே நிலை நிற்கின்றது எனும் கற்பனை அபிப்பிராயத்தால் தன்னை இழக்கின்றது.ஜீவாஅன்ம தன்னிலை விளக்கம் அறிய அறிய தன்முனைப்பு கெடும்.

மண்மனம்

=====மண்மனம்==== கொஞ்ச நாள் சாப்பிடாம இருந்தா என்னாகும்?..கொஞ்ச கொஞ்சமா சோர்வு வரும்,கொஞ்ச கொஞ்சமா தூக்கம் அதிகரிக்கும், கொஞ்ச கொஞ்சமா அசதியாகும், கொஞ்ச கொஞ்சமா நினைவு தடுமாறும், கொஞ்ச கொஞ்சமா மயக்கம் அதிகரிக்கும், கொஞ்ச கொஞ்சமா நினைவு தவறும், கொஞ்ச கொஞ்சமா கோமாவுக்கு போவோம்.தண்ணீர் அருந்தாமல் இருந்தாலும் இப்படியே ஆகும், கடைசியில் சாவு வரும். ஏன் இப்படி நிகழ்கின்றது?. உடலுக்கு உணவு தேவை அல்லவா, தண்ணீர் தேவை அல்லவா?. இதெல்லாம் அத்யாவசியமான விஷயங்களாயிற்றே, இது கூடவா தெரியவில்லை என நீங்கள் சொல்வது கேட்கின்றது.உயிர் வாழ இவை இன்றி அமையாது அல்லவா?.சரி தான். இவை முக்கியமானவை தான், ஆனால் இதை விட முக்கியமானவையும் இருக்கின்றன. அது என்னவாம்?. உடலுக்கு மனதுக்கு ஒவ்வாமை எனும் குணம் கூட இருக்கிறதல்லவா?. உணவு என எதையும் சாப்பிட்டால் உடல் ஏற்று கொள்ளுமா,இல்லை அல்லவா? நீர் என்று நீர் தன்மை கொண்ட எதையும் உடலும் மனமும் ஏற்று கொள்ளுமா, இல்லை அல்லவா?.உடலுக்கு தேவையான சத்துக்கள் விட்டாமின்கள் புரதம் கால்சியம் சல்பர் என அனைத்து தனிம இயற்கை விஷயங்களும் தக்க அளவில் தக்க முறையில் மட்டுமே உடலும் மனமும் ஏற்றுகொள்ளும் அல்லவா?. எதாவது ஒரு தனிமம் அல்லது ஒரு நுண் ஊட்டசத்து அதிகமாயினும் உடலுக்கும் மனதுக்கும் சிக்கல் தால், குறைந்து விட்டாலும் சிக்கல் தான் அல்லவா?. தேவையானவை தேவைக்கு உள்ளே சென்றால் தான் உடலும் மனமும் ஒத்து இயங்கும், ஆரோக்கியமாக நிலை நிற்கும். இல்லையெனில் நோய் வந்து மரணம் நேரிடும். இவை விகிதாசார முறைப்படி உட்கொள்ளப்படவில்லையென்றாலும் அந்த குறைவு நோய் போல உடலிலும் மனதிலும் தென்பட்டு பிரச்சினைகளை உண்டு பண்ணிகொண்டிருக்கும் அல்லவா? இந்த உலகத்து தனிம ,சத்துக்களையே உடலும் மனமும் ஏற்று கொள்ளும், இதுல போயி பல விதமான சத்துக்களும் தனிமங்களும் செடி கொடிகள் காய் கனிகளும் விஷங்களாக இருக்கின்றன.இப்படியானவற்றை ஏன் விஷ வகைகள் என்கிறோம், அவை உடலுக்கும் மனதுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கின்றன என்பதனாலேயே அல்லவா?.உண்மையில் அவை விஷங்களா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். ஏனெனில் அவை மனித உடலுக்கும் மனதுக்கும் தான் விஷங்களாக அமைகின்றன. நாம் விஷம் என ஒதுக்கி வைத்திருக்கும் பொருட்களை உண்ணுகின்ற சில விலங்குகளை பார்கின்றோம், அவை நாம் விஷங்கள் என ஒதுக்கி வைத்திருக்கின்றனவற்றை உட்கொண்டால் அவற்றிற்க்கு எந்த நோயோ பிரச்சினைகளோ இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதையும் காண்கின்றோம்.ஏனெனில் அவற்றின் மரபணு மூலகூறுகள் அந்த தன்மையில் இருப்பதினால் நாம் விஷம் என கருதும் பொருட்கள் அவற்றிற்கு விஷம் அல்லாமல் அமைகின்றன. அப்போது விஷம் என்பது அந்த பொருளில் இல்லை, உடலின் ஒவ்வாத தன்மைக்கே விஷம் என கொள்ளப்படுகின்றது என புரிந்து கொள்ளலாம்.அல்லவா?. நீரழிவு நோயாளிகளுக்கு சாதாரணமாக சீக்கிரம் கிட்னி செயலிழந்து விடும், அதனால் அவர்கள் ரெத்தத்தில் இருந்து உப்பு பிரிந்து செல்லாமல் உடலிலேயே தங்கி விடும் பிரச்சினை அதிகம் இருக்கும். இதை யூரிக் ஆசிட் டெஸ்ட் என பார்த்து தெரிந்து கொள்ளுவார்கள். அதிகமாக ரெத்தத்தில் யூரிக் ஆசிட் கூடிகொண்டே வந்தால் இந்த நோயாளி ஒரு வித பைத்தியக்காரன் போலவே ஆகிவிடுவான்.ஏனெனில் இந்த யூரிக் ஆசிட் இவன் மனதில் வினை புரிய ஆரம்பித்து விடும்.மனம் தன் இயல்பு நிலையில் இருந்து யூரிக் ஆஸிட்டின் தாக்கத்தால் தன்னுடைய இயல்பு  ஃப்ரீக்வன்ஸி நிலையில் இருந்து மாறும்.இதுபோலத்தான் உடலில் பல விகிதாசார முறைப்படியான சத்துக்களும் தனிமங்களும் ரெத்தத்தில் அதிகமாகவோ குறைவாகவோ அமைய ஏற்பட்டால் மனம் தன் இயல்பு நிலையில் இருந்து மாற்றம் பெற்று மற்றொரு அலைவரிசையில் இயங்க் ஆரம்பிக்கும். இவ்வண்ணம் உணவு முறைகள் மாற்றத்தினாலும் அருந்தும் தண்ணீரின் மாற்றத்தினாலும் மனம் இயல்பு நிலை மாற்றம் அடைந்து அலைவரிசை மாற்றம் பெற்று கோபம் எரிச்சல் சோர்வு தள்ளாட்டம் மவுனம் போதை எனும் அவத்தைகளுக்கு போகின்றது. சரக்கு அடிச்சு கிக்கு ஏறினவன் கண்டமேனிக்கு பேசிகிட்டு திரிகிறது இதனால் தான்.மனம் சுய இழப்பு நிலைக்கு போய் விடுவதினால் தான் இது ஏற்படுகின்றது. ஆகையினால் ,இந்த பூமியின் மண்ணின் விளைச்சலுக்கு ஏற்ப காய் கனிகளுக்கு தனிம சத்துக்களும் விட்டாமின்களும் செறிவு உண்டாகின்றது. ஒவ்வொரு பிரதேசங்களில் விளையும் ஒரே ரகம் ஒரே விதமான காய்கனிகள் கூட வித்யாசமான ஊட்டசத்து தனிம சத்து வேறு பாடு கொண்டவையாக இருக்கும்.அவற்றை உண்பதினால் வேறுபாடான உடல் மன நிகழ்வுகள் உண்டாகும்.மண் வேறு பாட்டினால் மன வேறுபாடு உண்டாவது இயற்கையான நிகழ்வு. அல்லவா?. இந்த பூவுலக மண்ணில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் தனிமங்களினால் இந்த உலகில் வசிக்கும் நம்முடைய மனமும் கட்டமைக்கபட்டிருக்கின்றன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். வேறொரு கிரகத்தில் இருந்து கொண்டு வந்த எதாவது உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த கிரகத்தின் தன்மைக்கு நம் மனம் மாறுபாடு கொள்ள ஆரம்பித்துவிடும்.இங்கே இருக்கும் கஞ்சா அடிக்கிறவன் கூட ஏதோ கிரகத்தில் மிதக்கிறான் எனில் ஏதோ ஒரு கிரகத்தின் உணவுகளையே இங்கிருக்கிறவன் சதா உட்கொள்ளுகின்றான் எனில் அவனுடைய மனமானது நம்முடைய மன எண்ண அலைவரிசையில் இன்றி மற்றொரு அலைவரிசைக்கு போய் விடும்.அப்போது நாம் அவனை பைத்தியம் என சொல்லிவிடுவோம். அவனுக்கு இங்கே இருக்கும் பச்சை நிறம் மங்சளாக தெரியும், தீயில் கைபட்டால் சுடு உணர்ச்சி தெரியாது. எந்த கசப்பு சாப்பிட்டாலும் கசப்பு உணர்ச்சி தெரியாது. அதி தூரத்தில் இருக்கும் மணத்தையும் அவன் நாசி உணர ஆரம்பிக்கும் என மனம் மற்றொரு கோணத்துக்கு விரிய ஆரம்பிக்கும்.எல்லாம் நாம் உண்ணும் உணவும் அருந்தும் தண்ணீரும் செய்யும் ஜாலம் தான், மற்றொன்றுமல்ல. இனி மற்றொரு பதிவில் கர்ம பிறப்பும் மன நிகழ்வும் பற்றி விரிவாக விசாரம் பண்ணுவோம்.

கண்

கண் என்பது அது அனைத்திற்க்கும் மையமாக இருப்பதினால் கண் என புனை பெயர், ஊற்றுக்கண் என சொல்லுவது போல. அதிலிருந்து தான் ஜீவ வெப்பம் கிளம்புகிறது.. அது இரெத்தத்தின் ஊடாய் கலந்து உடம்பு முழுதும் ஜீவனை பிரதிபலிக்கிறது...அது கெட்டுபோகாமல் இருக்க செய்வது உபாயத்தால் ஆகும். உடலில் எங்காவது உஷ்ணம் அற்று போனால் அந்த இடம் முழுதும் மரத்து போய்விடும்., பிறகு அது ஜீவனற்று விடும், உணர்ச்சிக்கு வராது, புலனுக்கு வராது. அப்படி தன்னுக்குளே இருக்கும் அக்கினிக்கு உணவு கொடுப்பதே உண்மை ஹோமம். --- ரியான் அய்யா சத்விசாரத்திலிருந்து

ஆன்ம விடுதலை

===== ஆன்ம விடுதலை ===== முக்தி என்பது உடலுக்கு உயிருக்கோ, உனக்கோ அல்ல. முக்தி என்பது சுழற்சியின் *விடுதலை*. கர்மம் எனும் மகா சாகரம் சதா ஓயாமல் அலை வீசி, நொடிக்கு நொடி ஆசையெனும் காற்றில் அலைவீசி கொண்டிருக்கும் தன்மையில் இருந்தும் விடுதலை. *கர்மம் எனும் சக்கரத்தில் இருந்து விடுதலை.* ஒவ்வொரு பிறவியும் கர்மத்தின் எச்சங்கள் தான், கர்மங்கள் தான் மறு பிறப்பு கொள்கின்றன, அவையே பிறப்பின் பீஜம், பிறப்புக்கு ஆதாரம், இவ்வண்னம் கர்மங்களினால் பிறவிகள் நிலைகொண்டுள்ளன. "நீ" ஒவ்வொரு பிறவியிலும் செத்து போகிறாய், உண்மையில் சாவு என்பது உன் மனதின் சாவு, "நான்" எனும் உன் எண்ணத்தின் சாவு, "நான்" எனும் தற்போதத்தின் சாவு.... வந்த வந்த பிறவிகள் எல்லாம் சாவு கொள்ளும், ஞானியென்றோ சித்தனென்றோ சாவுக்கு வேறுபாடு இல்லை, "நீ" இந்த சாவிலிருந்து தப்ப போவதில்லை. எத்தனித்தாலும் இல்லையென்றாலும் செத்துத்தான் போவாய். இதெல்லாம் உன் கற்பனையின் சாவு தான், உன்மையில் நீ ஒருபோதும் மறு பிறப்பு எடுப்பதில்லை, ஏனெனில் ஒரே “நான்’ அதே "நானாக” பல பல பிறவிகளில் அதே “நான்” ஆக இருப்பதில்லை. "நான்" சதா மாறிகொண்டிருக்கும், மனமும் மாறி கொண்டிருக்கும், உடலும் மாறிக்கொண்டிருக்கும்... கர்மம் மட்டும் நிலையாக சுழன்றுகொண்டிருக்கும். *இந்த கர்ம சுழற்சியில் இருந்து விடுதலை என்பதே முக்தி.* -❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️ கர்மாவே காரணி எனும் அறிவு மலர மனம் மணக்கும், அதனுட் அகந்தைக்கு அழிவு வர ஆரம்பிக்கும். பொய்யான கர்வம் போய் தொலையும், கெட்ட நாற்றம் அகல அறிவு மணக்கும். அறிவு மணக்க ஆனவம் அகலும், ஆணவம் அகல ஞானம் தென்படும். ஞனத்தில் ஊன்ற *விடுதலை* சித்தியாகும். முதுமை பிணி மரனம் என்பவை ‘நான்’ எனக்குத்தான் நிகழ்கின்றன என வருத்தமுற்றேன், இல்லை இங்கு ‘நான்’ இருக்கவேயில்லை, அப்புறம் இவை எனக்கு எங்ங்னம் வரும் என தெளிவுற்றேன், இவை ‘என்னை’ பற்றியிருக்கவில்லை, ‘நான்’ தான் இவைகலை பற்றியிருக்கின்றேன் என அறிவறிந்தார், *விடுதலை* அடைந்தார். மரணம் என்பது எப்படி உறுதியானதோ, அப்படி விடுதலையும் உறுதியானதே. பிறந்தவன் மரணத்தாக வேண்டும், அதுபோல சுழலில் சிக்கியவனும் கரையடைந்தாகவேண்டும். இது முற்றான நியதி விக்ரக வழிபாடு முதல் தபசெபங்கள் அனைத்தும் உபாதிகளெ, மனதை செம்மையாக்கும் பணிகளே அவை செய்கின்றன. சூட்சுமம் அறிந்து செயல்பட கர்ம விடுதலை நிகழ்கின்றது. தன்னலமற்ற குணம் வலர்து பூத்து காய்த்து தன்னை இழக்கும் போது ஞானம் மிளிர்கின்ரது, விடுதலை சித்திக்கின்றது. விடுதலை என்பது விடுதலை ஆனவர்களின் உனர்வுநிலை அன்று. அவர்களுக்கு விடுதலை எனும் உனர்வு இருக்காது. சிறை எனும் உணர்வும் இருக்காது. இவை இரண்டும் அற்ற நிலை. எனக்கு விடுதலை கிடைத்து விட்டது எனும் உணர்வு அவனில் எழுந்தால் அக்கனமே அவன் சிறைவயப்பட்டுவிடுவான்.அவ்வலவு நுணுக்கமானது இதன் தன்மை ஆனால் இவனின் மூடபுத்தி பலபல கர்மங்கலை செய்யவே இவனை தூண்டும், அப்படி கர்மங்களிலேயே மீண்டும் மீண்டும் அகப்பட்டு என்று தான் கிடைக்கும் விடுதலை என ஏங்கி ஏங்கி சென்மங்கள் பல புகுந்து கொண்டிருப்பான், கர்மங்கள் சம்பாதித்துகொண்டுமிருப்பான்.விடுதலை என்பது அசாத்தியமாக இஅவனுக்கு தோன்றும். மாயவலைக்குள் சிக்கி தவித்து தவித்து கர்மபலன்களால் மீண்டும் மீண்டும் பிரந்து கொண்டேயிருப்பான்.. --  .திரு. ரியான் ஐயா அவர்கள்

Tuesday, November 29, 2022

மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு

Friday, August 3, 2018 மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு மூச்சு தான் பெருசு என கம்பு சுத்தும் ஞானிகளுக்கு சமர்ப்பணம். மூச்சினோடு இயங்கி நிற்க்கும் பொருள் உணர. Hseija Ed Rian ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன் =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ்) Hseija Ed Rian ”ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”...இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து Hseija Ed Rian பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் Hseija Ed Rian இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது Hseija Ed Rian ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நௌ முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன் =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ் Hseija Ed Rian சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது.ரெம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை Hseija Ed Rian பீர்முஹம்மது அப்பா மேலே இருக்கிற பாடலில் அருமையாக சொல்லியிருக்கிறார்,”மூச்சினோடியங்கி நிற்க்கும் முடிவிலா பொருலை நோக்கி....”என்ற நான்கு வரிகள்.இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது

அல்லா என்றால் என்ன

அல்லா என்றால் என்ன ஹூவாகும் றூஹூ நிலை ஹூவும் நினைவாகும் ஹூவதுவும் மூச்சதுவும் ஹூவே குத்தூசு ஹூவே குத்தூசியது ஹூவதுவும் அல்லா ஹுவுக்குள்ளே குறிகொண்டு நாமிருப்பதாமே. இருக்கும் பொருள் ஹூவுடைய இடத்தை இனி சொல்வேன் இதனடியில் அல்லாவென்ற அட்சரமூன்றெழுத்தும் அல்லா என்றால் என்ன அது அதன் பொருளை கேளும் ஆலமெல்லாம் நிறைந்த அழியாது பழுதில்லை. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும் நிற்க்குமிரு லாமும் அடிமூலத்திரு புறமும் நிஜமாக ஆதம் ஹவ்வா ஆகும் இரு லாமும் ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்                       =(பீருமுஹ்ம்மது ஒலியுல்லாஹ்)