Tuesday, November 29, 2022
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாயை இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்... ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்.... நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது... அந்த சாதனையானது ஏதோ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது.
குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்து கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..
ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான். .உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.
அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும்.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார். பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்.... இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோக,, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று "ஒருமை வளரும்".. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும்
Mathi பகவத் கீதையில் முதல் தொடக்கம் அர்ஜுனனைக் குழப்புகிற விசாதயோகம். அர்ஜுனன் மாபெரும் குழப்பதிற்குள் பயணிக்கிறான். பிறகு ஞானம் வந்தது. தேர்ந்த ஞானிகளின் தத்துவம் ஒரு மனிதனின் மனதைக் குழப்பி விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். அதற்கு விடை எந்த மகானிடம் போனாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை. தனக்குள்ளே உதயமாவது மட்டுமே அதற்கு விடையாகும்.
ஒரு மனிதன் மாபெரும் குழப்பத்திற்குப் போகாதவரை, அவனால் ஞானியாக முடியாது. அந்த மனிதனின் குழப்பம் எல்லை மீறிப்போகும் போது, அதற்காக விடை எங்குமே கிடைக்காதபோது, அந்த வேதனையின் உச்சத்தில் ஆறுதலைத் தேடி தமக்குள்ளே மனம் ஆன்மாவைத் தேடும்போது ஆன்மா உரைக்கும் பதிலே ஆன்மிகம் ஆகும்.
மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான். இதனால் சிந்திக்கவே விரும்புவது இல்லை. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு கருத்து உள்ளே நுழைகிறது. நுழைந்தவற்றை அப்படியே பாதுகாத்து கிளிப்பிள்ளை பாடம் போல ஒப்பித்துச் சாவதுவரை பதிவேட்டில் உள்ளதை அழியாமல் பாதுகாக்கும் வேலையைச் செய்துவிட்டுச் சாகிறான்.
ஒரு மனிதனை மாபெரும் குழப்பத்தில் ஆழ்த்துவது மகத்தான சாதனை. இதைக் கடவுள் செய்ய முடியும்.. அல்லது கடவுள் தரிசனம் பெற்ற மகான்கள் செய்ய முடியும். மற்றவர் செய்ய முடியாது. செய்யத் துணியவும் மாட்டார்கள். காரணம், தன்னிடம் வந்தவர்கள், தன்னைவிட்டு பிரிந்து போய்விடக் கூடாது. தனக்கு இணையான தகுதி பெறக் கூடாது என்பதிலேயே கவனமாக வாழ்வார்கள்
Mathi ஒரு மனிதனைக் குழம்ப வைப்பது என்பது மிகப் பெரிய காரியம். உதாரணமாக "அர்ஜுனன் தர்ம நீதிப்படி விட்டுக்கொடுப்பவன் கெட்டு போவதில்லை" என முடிவு செய்து போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வருகிறான். ஆனால், கண்ணன் விடவில்லை. இந்தப் போரை நீ செய்யாவிட்டால் மாபெரும் பாவத்திற்கு ஆளாவாய் உன்னை உலகமே தூற்றும் என குழப்பி விட்டார்.
இந்தச் சூழ்நிலையில் அர்ஜுனன் கற்ற கல்வி, பெற்ற அனுபாவம் அனைத்துமே பயன்படவில்லை. மாபெரும் குழப்பத்திற்கு செல்கிறான். கடவுள் அந்த குழப்பத்திற்கு தீர்வு சொன்ன பிறகே அர்ஜுனன் யோகியாக மாறினான். ஒருவரை தான் பிடித்திருக்கிற கொள்கையிலிருந்து சற்று விலக்கி வைப்பது சாமன்ய காரியமே இல்லை. எளிதில் விலக மாட்டார்கள் வீம்பு கொண்டு மோத வருவார்களே தவிர தனது நோயின் தீவிரத்தன்மையை உணர மாட்டார்கள்.
இதுவரை எத்தனையோ கோடி ஞானிகள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள் ஆனால், யாருடைய கருத்தும் இந்த மண்ணில் வாழும் காட்டு மிராண்டிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல யாருடைய தத்துவத்திற்கும் உள்ளும் நமது வாழ்வை நிலை நிறுத்தவும் முடியவில்லை.
பிறப்பால் ஒரு நல்லவர் தமது நல்ல குணத்திற்கு சான்றாக ஒரு திருக்குறளை காரணம் காட்டலாமே தவிர, திருக்குறளை ஒரு மூளையில் திணித்து அவரை திருக்குறளார் ஆக்கா முடியாது.. திருக்குறள் படியே வாழ்வைத் தொடர நமது மனம் சட்டம் இயற்றும். ஆனால், அமுல்படுத்தாது. ஆனால், அந்தத் திருக்குறள் நமக்குள் மாபெரும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டால் அதற்குத் தீர்வு இறைவனால் போதிக்கப்படும். அதன் பிறகு திருக்குறளின் நெறியோடு நமது வாழ்வியலை ஒத்துப் பார்க்கிற ஒத்துரிமை உண்டாகும்
Mathi குழப்பத்தை எப்படியும் உருவாக்கலாம் "தர்மப்படி வாழ்வேன்" என்ற அர்ஜுனனுக்கு சூழ்ச்சியாகப் போரிட்டு வெல்ல வேண்டும் என்ற குழப்பத்தை கிருஷ்ணன் உண்டாக்கினார். தகாத வாழ்வு வாழ்ந்த அருணகிரியாருக்கு அந்தற்கு மாறாக வாழக் குழப்பம் செய்தார் முருகப்பெருமான். ஒவ்வொரு மனிதனுகுகும் திருப்புமுனை உண்டாக்க ஒரு குழப்பம் தேவை. திருப்பு முனை இல்லாத சிறப்பான வாழ்வும் செதுக்கி வைத்த சிற்பம் போல அடுத்தவருக்கு அழகாகத் தெரியுமே தவிர தனக்கு எந்தப் பயனும் தராது.
எமது கருத்தும் உமக்குள் செரிமானம் ஆகாவிட்டால் பரவாயில்லை குழிதோண்டி புதைத்துவிடவும். இது நோய்க்கு மருந்தே தவிர, இந்த மருந்தைச் சாப்பிட்டு யாரும் நோயாளியாக கூடாது.
நன்றி: தவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள்.
அருள்-இருள்-மருள்
===அருள்-இருள்-மருள்=====
னாம் என்ன சொன்னாலும் உங்கள் மனதிலே ஒரு அழுத்தமான இருட்டு இருக்கிறதே-அது உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கெட்டியாக அழுத்தி பிடித்து கொண்டிருக்கிறதே-அந்த இருட்டானது என்னவென்றால்-செத்த பிறகு ஒன்றுமில்லை என்று நீங்கள் நினைப்பது தான்,உலகத்தில் உள்ள எல்லோரும் அப்படியே தான் நினைத்து கொண்ட்டிருக்கின்றனர்,
மனிதன் நித்தியத்திற்க்காகவே படைக்கபெற்றவன், இவன் எக்கோடிகாலத்துக்கும் சாக போகிறதே இல்லை என்று தெரியாது.-இப்போதிருக்கிற இந்த அனித்திய தேகத்தில் கஷ்ட்டம் ஏறினால் உயிர் வேறு உடல் வேறாக பிரிந்து கொள்ளும். அதற்க்குப்பின் நித்திய உடல் ஒன்று இவனுக்கு தரபடப்போகிறதே அந்த அடுத்த உடல் எக்கோடி காலத்திற்க்கும் எந்த அவஸ்த்தைக்கும் அழிகிறதே இல்லை.
(னரகதேகம்-சுவர்க்கதேகம்).....அந்த நரகதேகம் எந்த அவஸ்த்தைக்கும் எந்த அடிஉதைக்கும் எப்படிப்பட்ட இம்சைக்கும் அழியவே அழியாது.
சுவர்க்க தேகமோ எப்பொழுதும் 18 அல்லது 20 வயதளவில் நின்று மாறாத தங்கதிருமேனியாக விளங்கும்.
இப்படியாக சுவர்க்கதேகமும் அழியாது-னரக தேகமும் அழியாது..மனிதனை இவ்வாறு நித்தியத்திற்காகவே இறைவன் படைத்தான். இவன் எப்போது்ம் அழிகிறதே இல்லை-இவன் இருந்தால் ஒன்ரு சுவர்க்கத்தில் இருக்கணும்-இல்லாவிட்டால் நரகத்தில் இருக்கவேண்டும்.இந்த இரண்டில் ஒன்று இவன் அடைந்தே தீரணும்-ஆகவே மனிதன் எக்கோடி காலத்திற்க்கும் அழிகிறதே இல்லை-அழியவே முடியாது. இது திட்டமான வார்த்தை.
=சாலை ஆண்குரு
Hseija Ed Rian எனில் ஞானம் என்பது வாழ்வின் லட்சியமா அல்லது சாகாநிலை லட்சியமா என கேட்க்கதூண்டும்
Hseija Ed Rian சாகாதிருப்பவனே சன்மார்க்கி என வள்ளல்பிரான் சொல்லுவதை காணும் போது ,ஞானம் என்பது எதற்க்கு வைக்கப்பட்டது என ஆராய தூண்டும் அல்லவா?
Hseija Ed Rian எனில் ஞானம் முடிவா அல்லது சாகாநிலை முடிவா?
Hseija Ed Rian ஞானம் என்பதற்க்கு விளக்கமாக ஏராளமான பொருள்கள் சொல்லபட்டுள்ளன.தன்னை அறிதல் ஞானம் , இறைவனை அறிதல் ஞானம், சித்தி கிடைத்தல் ஞானம், பிறவி அறுதல் ஞானம், சாகாதிருத்தல் ஞானம், காயசித்தி ஞானம்,அறிவை அறிதல் ஞானம்
Hseija Ed Rian கிழக்கின் மதங்கள் எல்லாம் கர்மம்-மறுபிறப்பு எனவும், மேற்க்கின் மதங்கள் எல்லாம் ஒரு பிறவி-நியாயதீர்ப்பு எனவும் முரண்பட்டு நிற்கின்றன.அதில் சாலை ரகம் இரண்ட்டும் கெட்டு இருப்பது போல தோன்றுகிறது
Hseija Ed Rian நாம் இதற்க்கு பின் மனிதனாக பிறப்பது இல்லை,இதற்க்கு முன்னும் மனிதனாக பிறந்தது இல்லை என சாலை மக்கள் நம்புகின்றனர். ஆனால் கர்மா கோட்பாடோ பலபல கர்ம தொகுதிகளின் பலாபலன்களின் விரிவு சுழற்சி மறுதோற்றம் என அனைத்து விதமாகவும் பிறவிகள் அமையும் என வகுத்து சொல்கிறது. இதில் எதை கொள்ள? எதை தள்ள
னித்தியம் -அனித்தியம் அறிவோம்==
===னித்தியம் -அனித்தியம் அறிவோம்=====
அறிவானது அறிவற்ற தன்மையில் இருந்து மீண்டு அனேக கோடி கால கர்ம மல பரிபாக நிமித்தம் அனேக கோடி கால அனேக கோடி யோனி பேதங்களாக பிறந்து பிறந்து பரிபாகமுற்று ஒருபோது பரிபாகம் மீண்டும் அற்று கீழ்நிலை மேனிலை என சுழன்று உழன்று முடிவில் மனித உருவறிவு பூண்டு வந்து பிறந்திட்டோம் எனில் இதுவும் அனித்தியமே.
முடிவாக தான் மனித தூலம் தரப்பெற்றது எனில் இதன் மாமகத்துவம் சற்று புரியவும்.இப்பிறப்பு நழுவி விடில் அடுத்து மீண்டும் ஒரு மனித தூலம் அமைந்திடும் என இறமாந்திருத்தல் அனியாயம்.ஏனெனில் இனி நீ பிறக்கபோவதில்லை எவ்வுயிராகவும் இவ்வுலகில். நீ பிறவிகளின் பரிணாமத்தில் முற்றுப்பெற்று விட்டாய்.உனக்கு அனேக கோடி தவப்பலனாய் மனிததூலம் வழங்கப்பட்டுவிட்டது.
இவ்வுலகம் போராட்டக்களம்,பரிசும் உன்னிடமே இருக்கிறது,அதை உனக்கு வழங்குபவனும் நீயே தான்.அப்படியான ஜீவபரிசை வாழ்நாள் முழுதும் கொண்டு திரிந்தும் அதன் பலனை அறிவு இழந்து நழுவவிட்டு விட்டால் மீண்டும் ஒரு முறை கூட வாய்ப்பு உண்டு,அப்படி பலகோடி மனிததூலம் கொண்டு பரிசினை வெல்லலாம் என கூமுட்டைகளாக இருந்துவிட்டு போக கிடைப்பதே நித்தியம்.பரிசினை வென்று பிறவியின் பயனை நுகர்ந்து பரிபூரணமுற்று போக கிடைப்பதுவும் நித்தியமே தான்.
அனித்தியம் எனும் பிறவி தோன்றி மறைந்து கொண்டே பல பல யோனி பேதங்களாக சதா நிகழ்ந்து கொண்டிருக்கும். நினித்தியம் எனும் வாழ்க்கையோ முடிவற்றதுவாய் சர்வ காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதுவாம்.
நன்மை புரிந்தவன் நித்தியமான சொர்க்க பலனையும், தீமை புரிந்தவன் நித்தியமான நரக பலனையும் அடைவான்,அவனே தேடி கொண்ட பரிசு அது.
சொர்க்கமும் நரகமும் ஒரு போதும் ஒருவனும் அவன் கடந்து வந்த எந்த கோடிகால பிறப்புகளிலும் அனுபவித்தது இல்லை.மண்ணாக மரமாக புல்லாக புழுவாக பிறந்திளைத்த எந்த பிறவிக்கும் சொர்க்கம் நரகம் என கிடையாது. சொர்க்கமும் நரகமும் மனிதனாக பிறந்தவர்களுக்கு மட்டும் நித்தியமாக வகுக்கப்பட்டுள்ளது.அனித்தியத்தில் இருந்து நித்தியத்துக்கு புகப்பெறுபவன் மனிதன் மட்டுமே. ஏனைய யோனிபேத பிறப்புகளுக்கு இல்லை.
நித்தியத்தில் எத்தகைய நித்தியம் வேண்டும் என்பதை போராடி பெறுவாய்....னித்தியமான சொர்க்கமோ...அல்லது நித்தியமான நரகமோ.
Hseija Ed Rian தூங்குறோம்..அப்போது உலகத்தை அறியவில்லை...ஆனால் உலகம் இருந்தது தான்..... விழிக்கிறோம்..அறிவு வருகிறது...அப்படி உலகமும் வருகிறது.அறிவானது எங்கும் போய்விடவில்லை,ஆனால் அது அறிவற்ற தன்மையில் இருந்ததனால் உலகத்தை அறியவில்லை,பிறவிகளை அறியவில்லை.அவ்வண்ணம் அறிவின் மலர்ந்த சொரூபம் மனிததூலம்
சாவு பொய்யாச்சே என்பது மெய்
==சாவு பொய்யாச்சே என்பது மெய்====
மனுஷன் நரனாக பிறந்து அறிவு மாணிக்கத்தை பெற்று தேவராகணும் எங்கிற யோசனை அருமை தான் ஐய்யனே, ஆயினும் சற்று சந்தேக நிவர்த்தி வேணுங்கிறேன், தெளிவுக்குத்தான்...
சாதி மனுக்குலம் எல்லாம் ஜீவன் என்னவென கண்டறிந்து, அந்த அறிவின் தெளிவினால் ஜென்ம சாபல்ய பலன் அடையட்டும் என்பதும் அருமை தானுங்கோ...
ஆனால் அழியகூடிய தூலத்தை விடுத்து அழியா சுவர்ண தேகம் பெற்று எக்காலத்துக்கும் மரணமில்லா பெருவாழ்வு வாழ எத்தனிப்பதும் அருமை தானுங்கோ...
தன்னில் தனியனாகிய வஜ்ஜிர மாணிக்கத்தை கைபோட்டு அதில் சென்று உட்புகுந்து, அந்த ஜீவமாளிகையில் பரகாய பிரவேசம் பண்ணுவதும் அருமை தானுங்கோ...
ஆனால் நிச்சயமாக அறியவேண்டிய மற்றொரு கேள்விக்கு பதில் கூட தெரியவேணுமுங்கோ...
”உன் ஜீவனை நீ உன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திரும்பி பாராவிட்டால், அது உன்னை தூக்கி போட்டு விட்டு அலகை எனும் பிசாசிடம் உன்னை ஒப்படைத்து விடும் என்கின்றார்களே அது எப்படி?.. உன்னுடைய ஜீவனை அலகை பிடித்து கொண்டு எக்கோடி காலத்துக்கும் நரக வாதனைக்கே ஆளாக்குவான் என்கிறார்களே, அது எப்படி?.. உண்மையில் உன் ஜீவனை அலகை பிடித்துகொள்ளுவான் என்பது நிச்சயமான உண்மை தானா என சற்று சிந்தித்து பதில் சொல் செல்வமே!!.
....”நீ” உன் ஜீவனை பாராமல் அசட்டை செய்தால் உன் ஜீவனை அலகை கொண்டு போய்விடுவான் என்கிறார்களே, அப்போது அதே ஜீவனில் ”நீ” போய் குடியிருந்தால் மட்டும் அலகை உன் ஜீவனை கொண்டு போகாமல் உன்னை நித்திய ஜீவமாளிகையில் வைத்திருப்பான் என்கிறது என்ன அறிவு?
”நீ” ஜீவனோடு ஐக்கியமானால் உன்னை அலகை விட்டு விலகிவிடுவானாம், ஆனால் ஜீவனோடு ”நீ” சேராவிட்டால் ஜீவனை அலகை கொண்டு சென்றுவிடுவானாம், அது எப்படி? ஜீவனை விட ‘நீ’ பெரியவனோ?..உண்மையில் அலகை கொண்டு போவது யாரை-உன்னையா அல்லது உன் ஜீவனையா
Hseija Ed Rian சொப்பனத்தில் வந்த குரு சொன்ன உபதேசம் சேவலில்லா பெட்டை முட்டையிட்டதொக்கும்(பீரப்பா
குருவின் வேலை
குருவின் வேலை ஒரு சீடனை பரமபதத்திற்கு ஏற்றும் வரை உள்ளது.இக்கடத்தை நீக்கி அக்கடத்துள் ஆக்கும் செயல் அவர்களுடைய கையில்தான் உள்ளது.அவர்களே வழியும் அவர்களே சத்தியமும் அவர்களே நம்முள் ஜீவனுமாக உள்ளார்கள்.அவரே பரமாத்மா நாம் அனைவரும் ஜீவாத்மா
குருவே கண் கண்ட தெய்வம்
ஈசனோ அரூபத்தில் உள்ளதால் இந்த ஊனக் கண்கள் கொண்டு காண இயலாது.அந்த ஈசனே ரூபம் தங்கி மானிட பிறப்பெய்து வரும் பொழுது அவரை சற்குரு என்றழைப்பதுண்டு.அவர் லோகத்திற்கு ஒருவர்தான் என்பதனால் லோக குரு என்றும் சொல்வதுண்டு
மனிதன் பிறந்தது சாகிறதற்கே அல்ல
மனிதன் பிறந்தது சாகிறதற்கே அல்ல
நிச்சயமாக அறிவிக்க வந்தவர்கள் அனைவரும் இதனை அறிவித்தே சென்றிருக்கின்றனர். உன் மூடபுத்தி, மழுங்கி இருக்கின்றபடியினால் உன் அறிவு இதனை பற்றிகொள்ளவில்லையென செத்து சாவோடு ஐக்கியமாகின்றாய். அவ்வண்ணம் சாகாமல் ஞானபிழம்பினராய் கொலுவீற்றிருக்கும் நந்திமகன்றனை புந்தியில் வைத்து சாகா கலை அடியினை பற்றிடுவோம்
வாசி யோகம் + குளறுபடிகள்
வாசி யோகம் + சித்த வித்தை குளறுபடிகள்”
இன்று ஆன்மீகவாதிகள் முதலில் கற்க விரும்பும் வித்தை என்பது வாசி யோகம் அல்லவா? .ஆனால் அவர்கள் முதலில் தீட்சையாக பெற்றுகொள்வதோ எதுவெனில் சித்த வித்தையையே தான் அல்லவா/.ஏனெனில் வாசி யோகம் என்பது நாடைமுறையில் வழக்கத்தில் இல்லை என்பதே உண்மை.ஏன்,எப்படி என்பதை சற்று கூர்மையாக சிந்திக்கில் விளங்கும்.
'வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை ”
(கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1)’.புசுண்டர்,போகர் தட்சிணமூர்த்தி போன்ற அனேகம் சித்தர்கள் நூலில் இவ்வண்ணம் வாசி என்றும் மவுனம் என்றும் இருவகை சம்பிரதாயங்கள் உண்டு என சொல்ல கேட்கின்றோம் அல்லவா? அவை குறித்து பார்ப்போம்.
இரண்டு வித்தைகளும் பிராணாயாமங்கள் என பொதுவாக வரைமுறைபடுத்தப்பட்டுள்ளன என்பது போக அதன் நிஜசொரூபம் விளங்க சொல்லபடவில்லை அல்லவா?.வாருங்கள் பார்ப்போம்.
பூரகம் ரேசகம் என இரண்டு மூச்சு,உட்கும்பகம் வெளிகும்பகம் என இரண்டு இடைவெளி நிறுத்தம் ,ஆக என நான்கு பிரிவு.இதில் சந்திர சூரிய அக்கினி ந கலை மூன்று, இடை பிங்கலை சுழுனை நாடி இயக்கம் மூன்று.இவை சாத்திரங்களால் விளக்கபெற்றவை. எனின் வித்தைகளின் வித்யாசம் என்பது சூட்சுமம் தான்.
வாசிக்கு ஆதாரம் சிவம், சிவ எனும் மந்திரம் மூச்சோடு வாசிக்கபடுவதனால் வாசி என்றாயிற்று. ‘வாசி வாசி என வாசித்த பொருள் ஒன்று,சிவா சிவா என சிந்தித்த பொருள் ஒன்று’ என்பது சித்தர் பாடல்.வகரம் உள்மூச்சினில்கொண்டு சிகரத்தை ரேசிக்க வாசியாம்.’அம்’ என மூலத்திலும் ‘மம்’ என துவாதசாந்தவெளியிலும் சிந்தித்து கும்பித்தல் நடைமுறை. வகரம் என்பது சிவ ரூபம் சிகரம் சக்தி ரூபம் என கொள்ளபடுகின்றது. வகரம் இடை நாடியின் கண்ணும் சிகரம் பிங்கலை நாடியின் கண்ணும் அகரம் சுழினையின் கண்ணும் நிலைநிறுத்தபடுகின்றது.இவ்வண்ணம் ஏகதேசம் பொருள் ஒருவாறு கொள்க.
மவுனம் எனும் வித்தைக்கு ஆதாரம் நாதம் விந்து என்பவை மட்டுமே.இவ்வித்தையில் இடைபிங்கலை என இருநாடி பிரிவு கவனத்தில் கொள்ளபடுவதில்லை, கும்பகம் என்பதும் செய்யபடுவதில்லை. பூரகம் ரேசகம் எனும் இரு பிரிவு மட்டுமே ஆதாரம்.உட்புகு மூச்சு விந்து எனவும் வெளியாகும் மூச்சு நாதம் எனவும் கவனத்தில் கொள்ளபடுகின்றது.உட்புகும் சுவாசமானது உள்ளே விந்துவினில் சென்று புகுந்து சுழன்று அக்கினி பீடத்தில் உரசி வெளியாக நாதமாகின்றது. ஆக பிரம்மசரியம் பிராணாயாமம் என கொண்டு இயக்க நடைமுறை..
ஆனால் மக்கள் இவற்றின் வேறுபாடு இயக்க சாத்திய சங்கதிகள் அறியாமல் வாசி யோகம் என்றால் சித்த வித்தையே எனவும் போட்டு குழப்பி கொள்கின்றனர்.
வாசிக்கு ஆதார சக்கரங்கள் சுழுனை நாடி சூரிய சந்திர கலை மந்திரங்கள் என உண்டு,மூலமுதல் ஆறு ஆதாரங்கள் முடியாக சஹஸ்ராரம்.ஆனால், மவுன வித்தைக்கு இவை ஒன்றும் இல்லை, கண்டத்தின் மேல் ஸ்தான இயக்கம்.கண்டத்தில் இருந்து பதினாறு ஸ்தானங்கள்.மனோன்மணி முடி
திருமெய்ஞ்ஞான கொரலமுது
திருமெய்ஞ்ஞான கொரலமுது
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு”
விளக்கம்:-:
"எழுத்தெல்லாம் அகர முதலாக ஆதிபகவனால் உலகின் முன் விரிக்கப்பட்டது”
உரை:-:
“ எழுத்தெல்லாம் என கூறப்பட்டதினால், எல்லா எழுத்துக்களும் அகரம் எனும் முதற்பொருளை முன்னாக வைத்து அமைபட்டுள்ளன. அதாவது எல்லா எழுத்துக்களும் அகர மெய்பொருளை முதலாக கொண்டுள்ளன என மறை கருத்து.
உயிரெழுத்துக்களாயினும் மெய் எழுத்துக்களாயினும் உயிர்மெய் எழுத்துக்களாயினும் அவ்வெல்லா எழுத்துக்களும் முப்பொருட்களாகிய “அகரம்-அவ்வு-ஏகம்” எனுப்பட்டவையின் முதல் பொருளான அகரத்தை தன்னகத்தே முதலாக கொண்டது என உரை விரிவு-எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதும் இதுவே ஆம், என சாகா கல்வியின் முதல் படி முற்றும்
உண்ட பின் வாய் கழுகாதிரு
உண்ட பின் வாய் கழுகாதிரு
நேற்று ஒரு ‘கனா’ கண்டேன்... ஒரு மவுனஞானி என்னோடு பேசினார்... ”உண்ட பின் வாய் கழுகாதிரு..நீ உண்டது அசுத்தமானதுவா?..ஏன் அசுத்தமானதை உண்டுவிட்டது போல வாய் கழுகி கொள்கிறாய்?”.
கிறிஸ்த்துவை பார்த்து யூதர்களின் புரோகிதர்கள் கேட்டர்களாம் “நீயும் உன் சீடர்களும் ஏன் உண்ணும் போது கை கழுகாமல் இருக்கின்றீர்கள்?
பிரம்மஸ்ரீ
==பிரம்மஸ்ரீ===
இந்த கவுரவ பட்டம் சித்த வித்தை கைபெற்றவர்கள் தங்களுடைய அடையாளமாக போட்டுகொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.உண்மையில் பிரம்மஸ்ரீ என்பது சித்த வித்தை பெற்றவர்கள் உடனேயே தங்களுக்கு இந்த பட்டத்தை போட்டுகொள்வது உகந்ததா என ஆராய்ந்தால் இல்லை என்பதே பதில், அப்போது பிரம்மஸ்ரீ என்பது யாருக்கு சேரும்?.
ஒரு வித்யாலயத்தில் கல்விக்கு செருகின்றோம்,சேர்ந்த உடனேயே யாராவது பிஎச்டி பட்டத்தை போட்டுகொண்டால் எப்பட்டி இருக்கும்? அது போலத்தான் இதுவும்.சிவானந்த பரமஹம்ஸரும் பிரம்மஸ்ரீ பட்டம், இண்ணைக்கு வித்தை வாங்கினவனுக்கும் பிரம்மஸ்ரீ பட்டம், என்னங்கப்பா இது நியாயம்?.
ஸ்ரீ என்றால் ஐஸ்வரியம்,விளக்கு, பிரகாசம்,அழகு, செல்வம் என பல பொருள்கள் உண்டு.இவனில் இருந்து பிரகாசமான பொருள் அதோகதியாக நசித்து போய்கொண்டிருப்பது தடைபட்டு ஊர்த்வகதியாக திரும்பும் போது ஸ்ரீ எனும் நிலை அந்த நசித்து கொண்டிருக்கும் பிரம்மத்துக்கு உண்டாகின்றது.ஸ்ரீ என்பதற்க்கு விஷம் என்ற ஒரு பொருளும் உண்டு,ஸ்ரீகண்டன் என்றால் கண்டத்தில் விஷம் பொருந்தியவன் என பொருள். கண்டத்தில் இருந்து அதோகதியாக நசிப்பது விஷம்.
ஆகையினால் “கண்டத்தை கட்டி” ஸ்ரீ” எனும் நிலைக்கு பிரம்மத்தை ஊர்த்வகதியாக செய்கின்றவன் தான் பிரம்மஸ்ரீ என பட்டம் கொள்ள தகுதியானவன்.”கண்டத்தை கட்ட” தெரியாமல் உபதேச தருணத்தில் செய்து காட்டப்படும் சித்தவித்தையை காலம் பூராவும் செய்துகொண்டிருப்பதினால் பலனில்லை.
ஏனெனின், உபதேச சமயம் செய்து காட்டப்படும் சித்தவித்தை என்பது தன்னில் இருந்து வெளியாக அருகில் அமர்ந்திருக்கும் நபருக்கு புரியும் படி விளக்கி கொடுக்கும் நிலை.அது தன்னில் தானாக அடக்கி வாசிக்கும் நிலை அல்ல.தன்னில் தானாக கண்டத்தை கட்டி அடக்கி வாசிக்கும் தருணத்தில் மட்டும் பிரம்மமானது தன்னில் இருந்து வெளியாகாமல் ஊர்த்வகதியாகின்றது.உண்மையில் ஊர்த்வ கதி என்பது தான் பிரம்மஸ்ரீ என்ற நிலை.
ஊர்த்வகதி என்பது வேறு, உபதேச நிலை என்பது வேறு. இவை இரண்டின் வித்யாசம் தெரியாமல் போவதால் தான் ஐம்பது வருஷம் சித்த வித்தை பண்ணினாலும் ஊர்த்வகதி அடையாமல் இருப்பது உண்டாகின்றது.கண்டத்தை கட்டி ஊர்த்வகதி அப்யஸிக்கும் போது மட்டும் தான் சிவானந்த பரமஹம்ஸர் அவர்கள் அருளி செய்துள்ளபடி சுவாசமானது வெளியே செல்லாமல்,சப்தமானது அருகில் அமர்ந்திருப்பவருக்கு கூட கேட்க்காமல், வயறோ நெஞ்சு பகுதியோ எந்த வித அசைவும் இன்றி, சுவாசம் இருக்கிறதா இல்லையா என பக்கத்தில் வந்து பார்த்தால் கூட புலப்படா வண்ணம் சின்னதாக ஒரு ‘துடிப்பு’ மட்டும் ஆக இருக்கும்.அது தான் நிஜமான ஊர்த்வகதியாம் சித்த வித்யயாம் பிரம்மஸ்ரீ.
வியர்வை வெளியாகும் வரை அப்யஸிக்க வேண்டும் என்பது சித்தவித்தை விதி. சாதாரணமான சித்தவித்தை செய்வதால் இப்படி வியர்வை பத்துமணி நேரம் உட்கார்ந்து செய்தாலும் வராது.ஆனால் ஊர்த்வகதி உண்டானால் ஏசி அறையில் இருந்தாலும் இமயமலையில் பனியில் இருந்தாலும் வியர்வை உண்டாகும். இது ஊர்த்வகதிக்கு அடையாளம்.ஆத்மனமஸ்காரம்
Hseija Ed Rian அப்படி கற்றுத்தர முடியாது ஜீ..நாம தான் அதன் நுணுக்கம் புரிஞ்சுக்கணும்...சுவாசமானது சிட்டுகுருவி மாதிரி நொடிக்குநொடி பாஞ்சுகிட்டு இருக்கும்...அது சகஜமா அமைதிக்கு வரவே பலகாலம் ஆகும்..அப்புறம் தான் அதை ‘தளைக்கும்’ மர்ம்மம் புரியவரும்...வித்தை வாங்குறப்ப அந்த நுணுக்கம் யாருக்கும் சொன்னா கூட புரியாது ஜீ
Hseija Ed Rian வேகமாக சுத்துற சக்கரத்துக்கு ப்ரேக் போட்டு வேகம் குறைக்கிற மாதிரி சுவாசமான சக்கரத்துக்கும் வேகம் குறைத்துகொள்ள ஒரு நுண்ணிய ப்ரேக் இருக்கு. அதை சரியாக அழுத்தி அழுத்தி சுவாசத்தை கட்டுக்குள் கொண்டுவருவதே வித்தையின் நுணுக்கம்
Hseija Ed Rian ஏகதேசம் 25 வருஷம் முன்னாடி குமரிமாவட்டம் மருத்துவாமலையில் ஒரு சித்தவித்யார்த்தி பாம்பு கடிச்சு இறந்துட்டார்.அவர் கேரள மாநிலத்தை சார்ந்தவர்,சின்ன பைய்யன் தான் சுமார் 24 அல்லது 25 வயது இருக்கலாம்.சித்தவித்தை உபதேசம் வாங்கி சிறிது காலம் தான் ஆகியிருந்தது,,என்றால் ஒரு வருடத்திற்க்கும் குறைவான காலம் தான் ஆகியிருந்தது. இங்கிருந்து அவர் ஊருக்கு பக்கத்து ஆசிரமத்தை சார்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து உடலை கொண்டு சென்றார்கள். சித்தவித்தை வாங்கி அற்பகாலம் மட்டுமே ஆகியிருந்தபடியினால் யாரும் அவரை அவ்வளவாக கவனிக்கவில்லை. ஆனால் அவர் உடல் அவருடைய சொந்த ஊருக்கு போய் சேர ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.அவர் உறவினர்கள் வந்து அப்புறம் எல்லோருமாக அங்கு சென்று நல்லடக்கம் செய்ய உடலை ஆம்புலன்ஸில் இருந்து கீழிறக்க உடலானது இன்று மரணித்த மாதிரி ஆகி மரண சமயம் இருந்த படியே அலுங்காமல் இருந்தது.எல்லோருக்கும் ஆச்சரியம்,ஏனெனில் அவர் வித்தை துவங்கி சிறிது மாதங்கள் தான் ஆகியிருந்தது. மட்டுமல்ல இறப்பு விஷம் தலைக்கு எறியும்.ஆனால் உன்னத சமாதி நிலையில் உடல் இருந்தது. அதே நேரம் 60 வருடம் சித்த வித்தை அப்யஸித்து ஆசிரமத்தையே சார்ந்திருந்து வந்தவர் ஒருவர் கடைசியில் சுவாசம் உள்ளுக்கு எடுக்கவே சிரமபட்டு அழுதுகொண்டு விம்மியதையும் பார்த்திருக்கிறேன்,நல்லடக்கம் ஆகவில்லை.ஏன் என ஆராய்வது நலம்.
Subscribe to:
Posts (Atom)