Friday, November 4, 2022

ஞான மணி

 ஞான மணி


இலங்கும் பொருளதனை யெலாவரும் காண்கில் நலங்கு

துனியாவதனை நாடார் விலங்கினங்கள் பத்தாறோடீர் பத்து

நான்கு நூறாயிரத்தில் வற்றாமல் நிற்க்குமறை பொருளை

கற்றார்கள் காட்டினார் பாரெனவே ”காதை வளைத்துட்

பொருளை” பூட்டினார் ஒன்றனவே போதமுற

அறிந்தேனிறையை யறியாத நாளில்லல்லல் பட்டிருந்தேன்

குருவந்துபதேசம் ”காதிலிருத்திய பின்”வருந்தேன்

பலதொன்றும் வையேன் மனதினில் வையகத்தை

பொருந்தேன் புறமகத்திட்டேன் நிறை பூரணமே

--- பீர்முஹமது அப்பா....(ஞான மணி மாலை)


”காதை வளைத்து“ எத்தனை பேருக்கு குருவுபதேசம் தந்திருக்கார், கையை தூக்குங்க

ஒத்த பொருள் யாது?

 ஒத்த பொருள் யாது?


அன்பார்ந்த சன்மார்க்க சாதகர்களே, ஆன்மீக மார்க்கத்தில் பிரயாணம் பண்ணும் சாதகர்கள் முக்கியமாக அற்ந்து கொள்ளவேண்டியது “ஒத்த பொருள்’ என குறிப்பிட்டுள்ள மறை ரகசியத்தையே. அதென்னது ஒத்த பொருள் என கேள்வி எழும்புவது சஹஜமே, ஏனெனில் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்கம் சொல்லுவார்கள், ஆனால் ஒத்தது அறிந்தவர் ஒருசிலரே.அதனாலேயே ‘ஒத்தது அறிந்தார் உயிர் வாழ்வர் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்பெடும்” என்றனர் ஞானிகள்.



உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?.


அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?ஆகையினால் “தாயையும் தந்தையையும்“ அறிவோமாக.
நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர்,ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள்,அல்லவா?.அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்?..


ஆம், அதுவே உண்மை, உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த” விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும்.


ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும்.


இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்” அவ்வுடம்பில் சிரசினில் இருக்கும்.அதில் உயிர் நிலையானது ஆணாகில் விந்துவுடனும், பெண்ணாகில் நாதமுடனும் இசைந்து இருக்கும்..


ஆனால் ,அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ, விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா.


ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது. ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்”, எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,..... என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்... வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்”


விஜயகுமார் சு அன்னையும் பிதாவுமாய் முன் தோன்றும் அகரதெய்வம்.பின் தோன்றும் அன்னைபிதா பிறந்திற(ரு)க்கும் பேதையராம


Hseija Ed Rian ”உண்மையில் தகப்பன் ஒரு பகுதியாகவு ம் தாய் ஒரு பகுதியாக இருந்தாலும்” என்று ஏற்றுகொள்ளுதலில் இரண்டு பேர் இருக்கிறார்கள். இளம் கருவில் மட்டுமே சொல்லப்பட்ட 10 வயதான கன்னியின் தேவை வருகிறது, இந்த உடலை வளர்ப்பதற்க்கு., அது சரியே, அவளே மகர வாலை. அவளெ ஒத்தவள். யாருக்கு என்றால் சிவத்துக்கு . வள்ளலார் சொல்லுவதை போன்று “கருணையும் சிவமே பொருளென கொள்ளும் காட்ச்சியும் பெறுக” . இங்கு கருணையாக மனிதறுக்குள் இருப்பதே அந்த வாலை. அவளே சிவமென கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சிவத்துக்கு “ஒத்ததே” ..அதாவது சிவ பொருளே. அந்த வாலையோ ஆண் பாதி பெண்பாதியாகவே உள்ளாள். “...முன்னாலே பாத்தால் பெண்போலே ரூபம் பின்னாலே பாத்தால் புருஷ ரூபம்... அய்யய்யோ அவளாடும் ஆட்டமதை கானப்போகா...” என்பர் சித்தர் பெருமக்கள்.



Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் கலாங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்ரிற்க்கு உண்வாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?..


Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்கு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?.


Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது.... இது பரம ரகசியமான ஒரு விஷயம்..


Hseija Ed Rian சொல்லி சொல்லி நாம் இப்போது சொல்லக்கூடாத “ ஜீவ விருட்சத்தின் விருட்சத்தின்” மறை ரகசியங்களை நோக்கி பிரயானம் பண்ணுகிறோம் என்பது நான் அறிந்தே பேசுகிறேன். சாலை ஆண்டவர் ஜீவனுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பினை “ஒரு்வாறு” சொல்லி உள்ளார்..அதற்க்குமேல் சொல்லவில்லை, ஏன் சொல்லவில்லை என இங்கு சொல்லதேவை இல்லை. ஆனால் உயிர் இனங்கள் மரனத்துக்கு பின் மரங்களின் வேர் முகாந்திரம் அடுத்த பிறவிக்கு தக்க உடலில் வருகின்றன என “ஒருவாறு” சொல்லியுள்ளார். ஆனால் “ஆதி அவத்தை” என்ன என அவர் சொல்லவும் இல்லை விளக்கவும் இல்லை....இந்த உலகத்துக்கு “உயிர் வந்த வழி” எது என அவர் சொன்னதாக கேட்டதில்லை....கடைசியில் வரக்கூடிய “ஜீவ பிரயாணத்தை” மட்டுமே அவர் சொல்லுகிறார், ஆனால் “ஜீவ வரவு” எப்படி என சொல்லவில்லை.... வரவு எப்படி என அற்ந்தால் மட்டுமே”போக்கு” எப்படி என அறிய முடியும்.... அல்லாதவர்கள்.... ”இருப்பு” எனும் நிலையில் மண்ணறையில் “இருப்பார்கள்”..... வரவு அறிந்த பின் போக்கு அறிவாகும், அதுவரைக்கும் இருப்பு தான்.,,அதாவது சமாதி தான்.


Hseija Ed Rian “தாவர சங்கமத்துள்” என வாசகத்தில் சொல்லுவது கொஞ்சம் ரகசியமானது தான்

ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா?

 ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா??




வள்ளலார் இதற்க்கு விளக்கமாக சொல்லுவது என்ன என பார்க்கலாமா?... 

இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. 

அதில் முக்கிய ஸ்தானம் 2. 

அவை யாவை? 1) கண்டம், 2) சிரம்


சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. 

கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். 


மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; 

அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. 

இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. 

இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.


அப்படியெனில் ஜீவன் என்பது முக்கியமாக இரண்டு வகைகளும், ஆன்மா என்பது முக்கியமாக ஒன்றுமாகும் என காணலாம் அல்லவா? 

இனி ஏன் ஜீவன் இரண்டாக இருக்கிறது என அறியவேண்டாமா? அல்லாது ஏனையா மூன்று ஜீவன்களும் எவை எவை எனவும் அறிய வேண்டாமா?.
ஆன்மாவானது தனித்து இருக்கிறது என கூறும் வள்ளலார் ஜீவன்களில் முதலானது புருவமத்தியிலும், இரண்டாவது ஜீவன் கண்டத்திலும் இருக்கிறதாக சொல்லுகிறார் அல்லவா?. 

முதலாவது சொன்னது சாமானிய ஜீவனும் இரண்டாவது சொன்னது விசேஷ ஜீவனும் ஆக சொல்லுகிறார். ஆனால் இவை இரண்டையும் பரமாத்மா எனவும் ஜீவாத்மா எனவும் பெயரிட்டு அழைக்கவும் செய்கிறார், அப்படித்தானே?.. 

அப்படியெனில் இவை ஜீவனா அல்லது ஆத்மாவா என கேட்க்க தோன்றுகிறதல்லவா?. சரிதானே??
ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?.. அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும், அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.
ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?... அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?.. அப்படித்தானே?.. 

ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்திருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?..
ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?.. அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?.. 

சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?.. செத்துப்போவது சன்மார்க்கமாகாதே..... ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?... அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். 

வாழ்க வள்ளலார் மலரடி

குண்டலினீயின் ரகசியம்

 குண்டலினீயின் ரகசியம்


குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.




ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.


சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.


ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.


இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்

பதி புருவத்தடி

 பதி புருவத்தடி முனைகீழ்அண்ணாக்கென்னும் பவள நிறம்போன்றிருக்கும் திரிகோணந்தான் துதிபெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாகசுபாவ சாதனையினால் மவுனமாச்சுவிதிவிகித பிரார்த்வ கர்மம் போச்சுவிஷயபோகத்தினிச்சை விட்டு போச்சுமதியெனுமோர் வாயுவதும் அமிர்தமாச்சுவஸ்த்துவதேகாரனமாயிருக்கலாச்சே.....இது தான்சித்த வித்தை


வாசி சித்தர்கள் சொல்லிஇருப்பாங்க..படித்துபயன்பெறுங்க...மவுனமும் சித்தர்கள்சொல்லி இருக்காங்க..கற்று தேர்ச்சிஅடையுங்கள்..ரெண்டும் ரெண்டு குருபரம்பரை...வாசிக்கு சிவனார் கைலாயபரம்பரை...மவுனத்துக்கு குருதட்சிணாமூர்த்தி ..மூல பரம்பரை
====================================

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு 

ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்

குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு

அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே

==================================

நானே குரு

 அதனால எனக்கு நானேதான் குருண்ணு தானேசொல்லியிருக்கேன்....என்னுடையஞானத்துக்கு நான் தான் குரு...நான்சொல்லுவது நான் சொன்னதுமட்டுமே..எங்கிருந்தேனும் இரவல் வாங்கிசொல்லிகிட்டு இருக்கலை...என்னுடையகணிப்புகள் அனுமானங்கள் தத்துவவிளக்கங்கள் என எனக்கு பட்டதைசொல்லுகிறேன்...வேறு எதையும்மேற்கோள்காடிகிட்டாஇருக்கேன்...சித்தவித்தைபண்ணுங்கஓண்ணு யாருக்காவதுபரிந்துரைத்துகிட்டா இருக்கேன்....பதிவில்இருக்கிறவர்கள்..உரையாடுபவர்கள்சொல்லுவார்களெ


நான் வங்கின வித்தையிலஅதுவும் ஒண்ணு....சித்த வித்தைஹடயோகமோ அல்லது வேற யோகமோஎனக்குதெரியவேண்டியதில்லை...என்னெல்லாம்வித்தை இருக்கிறதோ அதை எல்லாம்வாங்குரது தான்...உபகாரமோ..இல்லைஉபத்திரவமொ எதுண்ணு தெரியாமபலதும் வாங்கியிருக்கேன்..சிலவை நல்லபுரிதலை கொடுக்கும்..சிலவைஒன்றுக்கும் உதவாமலும்இருந்ததுண்டு..நாளை ஒருவேளைஅவைகூட உபயோகமாகஇருக்குமோண்ணு கூடதெரியாது..எதானாலும் கிடைக்கிறதைவாங்கி ஷெல்புக்குள்ளவெச்சிருவோம்ணுவெச்சிருக்கேன்..அவ்வலவுதான்...நம்மஞானமெல்லாம் இதுஒண்ணுமில்லே...நம்ம ஞானம் நமக்குமட்டும்...நம்முடைய புரிதல் அப்படி...அதுபுரியறவங்களுக்கு புரியும்,,,புரியாதவங்கஇப்படி கத்துவதும் இயல்பே தான்

மனம் ஒரு பேய்

 ஆனால் மனம் எனும் பேய்இதை நம்ப மறுக்கிறது..அது ஆகாயத்தின்மேலே குடியிருக்க்ம் ஏதோ ஒரு கற்பனைஆண்டவரின் துணையே பெரிது எனநினைப்பூட்டுகிறது..அதையே நம்பசொல்லுகிறது...மனம் மனத்தையேஏமாற்றுகிறது...இருப்பதைஏற்றுகொள்ளமறுத்து விட்டு இல்லாததைஏற்றுகொள்ள வலியுறுத்துகிறது..மாயபிசாசே அப்பாலே போ.


சிவ சிவாகலிகாலம்...மனமே கேட்டு படி...அங்ககைலாயத்துல இருந்துகிட்டு சிவனார்பிரபஞ்சத்தை படைத்தார் என்பதைகற்றுணர் ..மனமே...ஏய் உன்னையத்தான்மனமே உன்னையத்தான்...ஏன்பிதற்ருகிறாய் என் மனமே ஏன்பிதற்றுகிறாய்...நீயும் மாயசொப்பனத்தின்வடிவழகு கண்டுமலைத்தாயோ...சிதம்பரத்தில் வாதவூரார்கண்ட சிவன் பொற்சிலைக்குள் மாயமாய்மறைந்ததையும் கண்டாயோ..ஏய் மனமேஇன்னும் தெளிவிலையோ உனக்கு..ஏய்அழகிய பல உலகங்கலை உன் சிற்றணுதொகுப்பால் காட்டி வித்தை புரியும்மனமே நீ உனராயோ..

கண்டதெலாம் அனித்தியமேகேட்டதெலாம் பழுதெ நீ உண்டதெலாம்மலமே என வள்லல் பெருந்தகை பாடிசென்ரது கூட உணராமல்இருக்கின்றாயோ மனமே...நீ திருந்துவதுஎப்போது...உன்னையே கட்டி மேய்த்துஓய்ந்து விட்டேன் மனமே..என்று நீ உன்கற்பனை கொட்டைக்குளிருந்து மீண்டுவரபோகிராய்...யுகங்கள் எத்தனையாககற்பனைகட்டிகொண்டாய்...கற்பாந்தங்கள்எத்தனையென கனவுகட்டிகொண்டாய்...இது தான் உன் நித்தியவேலையோ என் மனமே..உணர்வாய்திரும்பி எழு என் மனமே மாய்ந்துவிடாதே..கற்பனை சாகரத்துள்மீழ்கிவிடாதே...ஏய் கொள்லிபிசாசேஉன்னைத்தான் சொல்லுகிறேன்..ஏன்இப்படி பிதற்றல்?..ஏன் இந்தமயக்கம்..எண்ணிலொகோடி தேவர்கள்ஆமே என எண்ணிலொகோடிதவமிருந்தாயே..இன்னுமா உன் மயக்கம்மாறவில்லை..??விழி மனமே விழி

.மனம் பக்தியில் முதிர்ந்துசித்தியில் சிறந்து விடினும் மயக்கம்மாறா....ஏனெனில் பக்தியெலாம்சித்தியெலாம் மனத்தின் மயக்கமேதாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்து விடும்தருணம் வரைக்கும் மனத்தின் மயக்கம்இருக்கும் தொடர்வுறாது நிற்க்கும்.பிற்பாடு தான் மனம் தன்னையேமாய்க்கும் தருனம் வரும்...அப்போது தான்“உன்னுடைய்ம் உன் உயிரையும் எனக்குதந்தாய்..என்னுடலையும் என்னுயிரையும்நீ கொண்டாய்” என்பது மலரும்..மனம்ரெண்டற்று பக்தனும் பரமனும்ஒன்றாவர்...உடலும் ஒன்றாகி உயிரும்ஒன்றாகும்....அது கடைசி நிலை...மனம்ரெண்டற்று போனபின்னர்நிகழ்வது....அது வரை கற்பனைதான்...மனத்தின் மாபெரும்கற்பனை....பக்தெனும் பரமனும்இணைந்து விட்ட பிறகு பக்தி என்பதுபயனற்று போய்விடும்

====================================

ஆன்மாவே ரெண்டாகிமனம் என திரிகிறது..உண்மையில்மனமே ஆன்மா..மனமில்லையெனில்ஆன்மா என தனியாகஒன்றுமில்ல்லை...ஆன்மாவும் மனமும்ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும்மனமும் இரண்டு என பேதலிக்கவைக்கிறது

 நான் நான் என ஆன்மாவைசுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம்தான்..அது தன்னையே தான் எனசுட்டிகாட்டுகிறது...வேறு அதை விட்டுபின்னமாக இருக்ககூடிய வேறொருபொருளை அல்ல...மனமே மனத்தைசுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்கவைக்கிறது

பார்ப்பவனும் நானே..அதைபார்க்க வைப்பவனும் நானே..இது தான்நிலை....இது மயக்கம்

இவை ரெண்டுமாகஇருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்

புற உலக காட்சியைகண்னை கட்டியும் நிறுத்தலாம்...புற உலககேள்வியை காதை பொத்தியும்நிறுத்தலாம்...ஆனால் மனம் ??

விழிப்புறாது..தான் தான்மனமாகவும் ஆன்மாகவும் இருக்கிறேன்என மனம் உனராது...மனம் உணராதுஎன்றால் ஆன்மாவும் உணராது

மனமே கற்பனைகட்டிகொண்டு உலகைருசிக்கிறது...அதுவே அதை பலனையும்அனுபவிக்கிறது....எது வரை?..ரெண்டாகஇருக்கும் வரை இது தொடரும்

அந்த ‘நான்” எனும் ஆன்மாமனதினால் நிலை பெறுகிறது

இப்படி மனம் வேறு ஆன்மாவேறு என நில்லாதிருப்பது அத்வைதம்

அப்போது ஆன்மா பிரம்மம்எனவும், மனம் மாயை எனவும்பகுக்கபடுகிறது

இதையே மாயைஅகலுதல்...அல்லது மாயை லயிப்பதுஎன்றார்கள்...தானாக பிளவு பட்டிருந்தமனமே ஆன்மாவாக ஒன்றாகிறது

ஆம்...எக்காலமும்ரெண்டாகவே தான்இருக்கிறோம்..ஏனெனில் அது அதன்இயற்கைஆனால் சீக்கிரம்முடிவதில்லை..மனம் தானே ஆன்மா எனஅறிவதில்லை..அதன் உபாயவும்தெரிவதில்லை..அந்த அனுபவம்எக்காலத்திலும் அது கண்டதுமில்லைகேட்டதுமில்லை

ஆன்மா ஆன்மாவாகவேஎக்காலமும்சுழன்றுகொண்டிருக்கும்...மனமும்எக்காலத்துக்கும் மனமாக ஆன்மாவிடம்ஒட்டி அனுபவிப்பித்து கொண்டிருக்கும்

பகவான் என்பதும் மனதின்வேலையே தான்...தன்னில் இருந்துபிறிதாக ஒரு பகவானும் இல்லை

பகவான் என்பது துணைக்குஒரு ஆளை மனமே செய்யும் ஏற்பாடு தான்

இயற்கை உண்மை கடவுள்

 சிவம் என தனியாகஎதுவுமில்லை...தனியாகவெளிப்பட்டிருக்க ஜீவன்எனவும்..மொத்தமாக தோற்றம்பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும்பெயர்.நமக்கு ஜீவன் என தனியாகஇருப்பது போல தோன்றினாலும் அதுதனியான ஜீவன் இல்லை...அது ஒருசங்கிலி தொடரின் அமைப்பு..நமக்கு நம்தந்தையிடம் இருந்து வருகிறது..அவருக்குஅவரின் தந்தையிடம் இருந்து...இப்படிஒரு பின் நோக்கிய அதுவும்முன்னோக்கிய சங்கிலி தொடர்...இந்ததொடர் முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம்என பெயர்.அது நம்முடன் மட்டுமல்ல,இவ்வுலகத்து ஜீவஜாலங்கள்அனைத்திற்க்குள்ளுக்குள்ளாகபிணைந்திருக்கும் தொடர்...அதைஉள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மைவெளிப்படும்.


இந்த புரிதல் என்பதுஅசாத்தியமான சாத்தியபுரிதல்...தனிமையில் இருந்துமுழுமையை உணர்தல்சாத்தியம்....முழுமை முற்றுபெற்றுவிலங்கும் தன்மை அது. அனைத்துஜீவன்களும் ஒரு தொடரே என தெளியசிவமாம் தன்மை விளங்கும் என்பதுஆன்றோர் மதம். சிவம் என தனியாகபின்னமாக நினைத்து வேறுபாடுஉணர்வது அறிவின்குறைபாடு...இருப்பது அகண்ட சிவம்ஒன்றே தான்...முழுபூசணிக்காய்சோற்றில் மறைந்துள்ளது

இயற்கை உண்மை என்பதுஜீவனுக்கு இடுபெயர்...அதுவேஅருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும்கடவுள்...அதுவே உடலான உடலெல்லாம்நிறைந்து அருட்பிரகாசமாகவிரிந்துள்ளது..அதை தனிமையில் உணரமலர்தல் சாத்தியம்..உணராவிடில் ஜீவன்என அறிவு மழுங்கி தன் நினைப்பேவெளிப்பட்டு தான் வேறு எனும்வேற்றுமை உருவாகிறது....அந்தவேற்றுமை மறைய ஒருமை துளிர்க்கிறது.அதனால் நம்முள் இயங்கும் ஜீவனைபார்த்து அறிவோமாக..அதுவே பரஉடலங்களிலும் இயங்குகிறது என்பதுவேஒருமைக்கு மூலாதாரம் 

சிவன் என கங்கணம்பூண்டு திருநீறு பூசி கபால மாலைஅணிந்து அங்க எங்கேயோ கைலாசத்துலபார்வதி தேவியை பக்கத்துல வெச்சுகிட்டுபூதகனங்கள் நடனமாட யாரும்கிடையாது...எந்த ஒரு மனிதன்ஜீவசிவத்தை உணர்ந்துதன்மயமாகிறானே அவனேசிவன்....அதாவது, எவனொருவன்ஜீவனை கண்டு அந்த ஜீவனேஅனைத்திற்க்குள்ளும்பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம்என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன்என பெயர். அல்லாது பாம்பை கழுத்துலதொங்கவிட்டுகொண்டு இருக்கும் ஒருகற்பனை கதாபாத்திரத்திற்க்குஅல்ல...எங்கோ கைலாயத்தில்இருக்கிறார் என கற்பனை கைலாயத்தில்இருப்பவருக்கு அல்ல....இருப்பது ஒன்றேதான்..அதுவே ஜீவனாகவும்ஜீவசிவமுமாக இருக்கிறது

அதனாலத்தான்அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதிஎன ஆண்டவரை திதித்துகொண்டிருந்தவள்ளலார்,அந்த அருட்பெரும்ஜோதியில்கலக்கபோகிறேன் என சொல்லாமல்,”எல்லா ஜீவர்களிடத்தும் கலந்துகொள்ளபோகிறேன்” என விலக்கமாகசொல்லிவிட்டு போனார்..நமக்குத்தான்அது விளங்காமல் போச்சு...அருட்பெரும்ஜோதியில் கலக்காமல் எல்லாஜிவனிலும் கலக்கும் கரணம்இதுவே...இதுவே “இயற்கை உண்மைகடவுள்”

சொல் பிறந்த இடமெங்கே

 சொல் பிறந்த இடமெங்கே 


இயற்கை உண்மை என்பது அனாதிகாலம் முதல் மனிதன் என்று நாவினால் சத்தங்கலை உச்சரிக்க கற்றுகொண்டானோ அன்றிலிருந்து இருந்து வருவது...எந்த மொழியும் இயற்கையாகவே அமைந்தவை அல்ல...மொழி என்பது மனிதன் தனக்கு தானே ஏற்படுத்திகொண்டது.. ஒரு சமூகம் ஏற்படுத்திகொண்டது... ஆனால் ஓசை என்பது சமூகம் ஏற்படுத்திகொண்டதுவல்ல... அது இறை படைப்பு... அதற்க்கு மொழிவேற்றுமை இல்லை... எம்மொழியாயினும் இறை சம்மதம் ஒன்றே தான்,..அல்லவா

இறை அருளாளர்களான ஞானிகள் ஓசைகளை சீரமைத்து ஒரு தனி முறையாக அமைத்து அதை சரளமாக உபயோகிக்கும் தரத்தில் கற்பித்து இலக்கணமும் வகுத்து வைத்திருகின்றனர், அவ்வளவே தான்...அவர்கள் கொண்ட ஓசைகள் தேசத்துக்கு தேசம் இடத்துக்கு இடம் மாறுபடும்...ஆனால் மனித நாவில் வரும் ஓசை ஒன்றே...அல்லவா

மனிதன் நாவு பேசுகிறது.. மிருகங்கள் பேசமுடிவதில்லை... அது மனிதனின் முதிர்வு.. அவன் வளர்ச்சியின் முன்னேற்றம்.. அவன் அறிவின் வெளித்தோற்றம்... அது இயற்கையாக வெளிப்பட்டிருப்பது... அது இருக்ககூடியது , செயற்கை அல்ல.. .அப்படியானது இயற்கை உண்மை... பஞ்ச பூதங்கள் சிவனின் அங்கங்கள்.. ஆனால் பஞ்சபூதங்களால் பலபல ரூப பேத நாமபேதங்கலாய் திரிவது தான் பேதம் எனும் மாயை.

தமிழ் எனும் சொல்லுக்கிட்ட உரையில் வள்ளல்பெருமான் அட்சரங்களில் “அறிவுகலைகள்” செயல்கொண்டிருக்கிறது என சாட்சியபடுத்துகிறார், சற்று பார்க்கபுலப்படும் ஐயா.

அனாதிகாலத்துக்கு முன்னே மனிதன் மிருகங்களோடு மிருகங்களாக அடர்ந்த காட்டுகளிலும், குகைகளிலும் இயற்கையை ஒன்றி இயற்கையோடு இயற்கையாக பன்னெடுங்காலம் எந்த சமூக சூழலும் உருப்பெறாத காலகட்டங்களினூடே தான் வளர்ந்து பலுகிபெருகி வந்துள்ளான். உண்மையை சொல்லப்போனால் நம்முடய முன்னோர்கள் அனைவரும் என சொல்லப்படுபவர்கள் அனாதி இயற்கை மனித உயிர் பிறப்புகளாக இயர்கையோடு வாழ்ந்த மனிதர்கள் என அழைக்க தகுதையானவர்களாக இருந்த ஓர் உயிரினம் தான்... அவனுக்குள் விசேஷமாக இருந்தது ஒன்று மட்டுந்தான், அது நாவசைத்து ஓசைகளை உருவாக்கிகொள்ளும் திறமை.. அந்த விவித தரமான ஓசைகலை மனிதன் சொற்களாக பிரித்து அமைத்துக்கொண்டான், சொற்கள் என அமைக்கப்படும்போது அதற்க்கு பொருள் கொள்ளப்படுகின்ரன...அப்படி பொருள் கொண்டு சீராக்கி புரிந்து கொள்ளத்தகுந்த படி ஓசைகலை அமைத்து தங்களுக்குள் பரிமாறிகொண்டனர்...அவ்விதம் ஒவ்வொரு குலத்தினிரிடமும், பிற்பாடு ஒவ்வொரு சமூகம் எனவும் அந்த பேச்சு சொற்றொடர்கள் வியாபித்தன., பொருள் கொள்ளப்பட்டன, அவை மொழியென அறியப்படுகின்றன.அதன் பிற்பாடே மொழிக்கு என இலக்கணமாக வறையறுத்துக்கொண்டான். அல்லாது ஆதியிலிருந்தே இலக்கணமும் மொழியும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஓசைகள் என்பது எல்லா மனிதரிடத்தும் அவன் நாவினில் குடிகொண்டிருந்தது. அது மனித இயற்கை உண்மை ஓசைகள். அவ்வோசைகள் எல்லா தேசத்து மக்களுக்கும் எல்லா இனமக்களுக்கும் அவ்வோசையானது நாவினில் வழங்கும் படி இறை இயற்கையால் அமைந்திருக்கின்றன..ஆனால் மனிதன் அவற்றை சொற்றொடர்களாக உருவாக்கி பல பல பொருள்கள் கொள்ள அவை பலபல பாஷைகள் ஆயின. வேற்றுமை உருவாகின....மனிதனின் நாவினில் கொடுக்கபட்டிருந்த அனாதி இயற்கைஉண்மை ஓசையின் பயனை அவன் மறந்து விட்டான், அது எதற்க்கு வழங்கபட்டது என புலப்படாமல் போயிற்று, வெறும் மொழி அறிவோடு அது சுருங்கி போயிற்று...

மனித நாவிற்க்கு வரும் ஓசைகள் ஜீவனிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன, அதை “வாக்கு” என வள்ளலார் சொல்லுவார். அங்ஙனம் ஜீவனை அடைந்து கொள்ள மனிதர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் ஓர் ஏணியே அட்சரங்கள் ...அவை பிறந்த இடத்தை நாடி செல்ல உதவும் ஏணி...ஜீவனுக்கான வாசல் என சொல்லலாம்.

இந்த பூவுலகில் பிறந்த எவருடைய நாவிலும் வருகின்ற ஓசையமுதமே இவைகள்...இறைவன் அருளால் அமைத்த அரும்பெரும் உணவு...இவற்றை கொண்டிருப்பதனாலேயே மனிதன் மேல்குலத்தவனாம் ஆறறிவுடையவன் என்னப்படுகிறான், ஏனைய புல்பூண்டாதி தாவரசங்கமங்களுள்ளும் , புழு பூச்சியாதி வன்மிருகங்களுள்ளும் எவற்றின் நாவிலும் விளையாத விளைவான ஜீவபயிர் கதிர் இதுவே...இதை கொய்து உண்பவன் ஜீவ உணவை உண்டவன்.அவன் எக்குலத்தவனாயின் எத்தேசத்தவனாயினும் எம்மொழியை உடைத்தவனாயினும் இவை அவன் நாவினில் அனாதியாக அமர்ந்திருக்கும் வாணியின் கலைகள் அறுபத்துநாலு..அவள் அக்கினியாகவும் பிரகாசிப்பாள், தண்மதியமிர்தமாகவும் பொலிவுற்றிருப்பாள்...

அத்வைதம்

 அத்வைதம்


”தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்”.
-வள்ளல் பெருமானார்.

ஒரு கண்ணாடி வைத்து அதன் முன் விளக்கு ஏற்றி சாதனை பண்ணுவதை பார்த்திருக்கின்றோம்,கண்மணி தீட்சை நயன தீட்சை என மக்களை நம்ப வைத்து கண்மணியில் தெரியும் விளக்கின் பிரதி பிம்பத்தை உற்று பார்க்க சொல்லி, அது தான் ஜோதி எனவும், அங்கு தான் ஜீவன் இருக்கின்றது என சொல்லியும், இது தான் வள்ளலார் சொல்லியிருக்கின்ற கண்மணி தவம் என சொல்லியும், இதன் உட்புகுந்து தான் முக்திக்கு செல்ல வேண்டும் என சொல்லியும்,கண்மணியில் உணர்வை வைத்து சாதனை செய்தால் கண்மணியில் மத்தியில் இருக்கும் துவாரத்தில் இருக்கும் மலமாகிய ஏழு திரைகளும் அகன்று திருகதவு திரந்து பிரம்ம ரந்திரம் புகுந்து மோட்சம் அடையலாம் என பிதற்றி திரியும் கூட்டத்தினரை பல இடங்களில் பார்க்கின்றோம். உண்மையில் வள்ளலார் சொன்ன தியானம் இதுவா என சற்று ஆலோசித்து பாருங்களேன்.

“பார்க்கும் தான் கெடுவது அதவைதம், பார்க்கபடும் பொருளும் கெடுவது அதீதம்” என வள்ளலார் எதை பொருளாக சொல்லுகின்றாராம்?. கண்மணியில் பிரதிபலிக்கின்ற விளக்கு வெளிச்சத்தையா,அல்லது கண்மணியில் உருவமாக பாவிக்கப்படும் பிம்பத்தையா?.எனில் ”பார்க்கும் தான்” கெடுவது எங்ஙனம், பார்க்கபடும் பொருளும் கெடுவது எங்ஙனமாம்?.கூமுட்ட பயலுக தானும் கெட்டு இருக்கிறவனையும் கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இருக்கானுவ.