Wednesday, August 16, 2023

இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து

 இருப்பை இருப்பின் இயல்புக்கு இசைந்து இயற்கையின் இயல்பாய் இசையும் இயல்பை இசைக்க இன்பம் இயற்றி இயந்தனான் இணை.

 

இருக்கிறது அதன் இருப்பால் இருக்கிறது. அந்த இருப்பு அதன் தன்மையாய் மறைந்தே இருக்கிறது. அந்த இருப்பே அதன் ரஹசியம். அந்த இருப்பை அதன் புரிதலை ஊட்டி விளக்குபவரே சர்குரு. அதை விழலாய் வீணக்காமல் காத்தலே பணிவு.


ரியான்

குருபிரானது திருநாவில்

 ஒருவன் எதனை காக்க தவறினாலும் , குருபிரானது திருநாவில் உதித்த திருவமுத வாக்குகளையேகாத்து,பலனோங்க ஒழுகவேண்டும்.அவையே கனி!. பிற வாக்குகள் , "காய் வாக்குகள்". அந்த "காவாக்கால்" சொல்குற்றமே வரும்.!. அவர்கள் திருநாவினில் நம்மை அடக்கி வாழ்வதுவே , நாவடக்கம்! 


🌷நண்பரின் பதிவு நன்றி 🌷

ஞான மணிமாலை)

 கோன்கண்ட ஞானக் குருவருளாம் மப்பொருளை நான் கொண்டே னென்டு நவிலாதே-ஏனென்றால் வெண்கலத்தின் ஓசை வெகுவாக முழங்கும்பைம் பொன் கலத்தின் ஓசை பொருள். 


(ஞான மணிமாலை)


அடக்கம் அமரருள் உய்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று சொல்றத கேட்டு இங்கிருக்கிறவன், ஜீவ சமாதி வைக்கிற அடக்கத்தை பொருள் கொண்டிருவான்.அடக்கம் என்று எதை குறிக்கிறது எனறு சொல்லி கொடுக்க ஆளில்லை.


 உலகில் பொக்கிஷம் என இருப்பது குரு வாய்மொழி. அந்த ஞானம் தான் உன்னை அமரனாக்க வல்லது. அந்த வாய் மொழி வரத்தை வீணாக்காது பாதுகாத்தல் தான் அடக்கம் .

கொழுமுனையாம் கதிர்முனை

 கொழுமுனையாம் கதிர்முனை


கொழுமுனையாம் கதிர்முனையில் ஆடும் பாதம்... கோடானு கோடி மறைபுகழும் பாதம்...தளிர் இலை பூ காய் பழமாய் சொரிந்த பாதம்... சகல உயிர் ஜீவனிலும் ஆடும் பாதம்..‌. அது பக்தர் உள்ளக் கோயில்  உளம்பூத்த பாதம்... உலகில் ஓடியாடி அத்தனையும் அனுபவிக்க ஒன்றான பாதமாக இருக்கிறது... அந்த பாதங்களை னமஸ்கரிக்கின்றேன் அந்தப் தாமரை மலர்களை வணங்குகின்றேன் பொன்னார் திருவடிக்கு னமஸ்காரம் என்றெல்லாம் அந்தப் பாதத்தைதான் எல்லா கலைக் ஞானங்களும் எல்லா வேதங்களும் எல்லா அருட்பாக்களும் அதையே புகழ்கின்றன.. னம்மையும் ஆட்டுவிக்கின்ற பொருளாக இயக்குகின்றது... அதுதானே இறைவனாகவும் இருந்து ஜீவனாக இருந்து ஆக்குகின்றது... அப்படி என்றால் அதை னாமும் னமஸ்கரிக்க வேண்டும்... இந்த பாதத்தில் கதிர் இலை காய் பூ எப்படி பொருத்துவது... அது அசைவு என்றால் னாம் அசைகின்றோம் ...ஒரு விருட்சத்தில் ஐந்து விதமான பொருள் விளைகின்றன... பழுதனுகா ஆலயத்துள் அது இருக்கின்றது... அது இறைவனே கட்டிய ஆலயம் அது ஓரளவு தான் சொல்ல முடியும் தொடர்ந்து வந்தோர்க்கு தொடரும்... அது திக்குமனு குலத்தவர்கண் காணா பாதம்... அருள் வளரும் அம்பலத்தம் பரத்தின் பாதம்... ஆருத்ரா தரிசனையில் னடராஜர் னடனமாடுகிறார்... அவர் ஆட அனைவரும் ஆடுகின்றார்கள்... பெற்றவர்கள் குடி தலைக்க தன் பெரு வாழ்வே...

உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு

 உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு


நாம் ஒரு நேரம் ஒன்றை மட்டும் சிந்திக்கும் திறமுடையோம். ஒன்றை பாக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதை மட்டும் நாம் அறிகிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் போது சிந்திக்கும் விசயம் மட்டும் உள்ளது. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இருப்பதில்லை. சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தால் சிந்தனை செய்யும் விஷயம் போய் விடும். என்ன சிந்தித்தோம் என்று சிந்தனை செய்தால் சிந்தனை நின்று போய் சிந்தித்த விசயத்தை நினைவு படுத்திக் கொள்ள முயல்கிறோம். சிந்தனை நின்று போகிறது. சிந்தனை செய்கிறோம் என்ற உணர்வும் இருப்பதில்லை. மூளை முழுக்க விசயங்கள் இருக்கிறதே! என்று என்னுகின்றது பார்க்கவும் கேட்கவும் சுற்றிலும் பல விசயங்கள் உள்ளதே!  என்றும் ஒரு விநாடியில் எத்தனை விசயங்களை சிந்திக்கிறோம், அறிகிறோம் ஒரு விநாடியில் ஒரு விசயத்தை மட்டுமே அறிவோம் சிந்திப்போம். அதை விட்டு விட்டே வேறொன்றைப் பற்றுவோம். இது உயிரின் இயல்பு அல்லது  மனதின் குறைபாடு எனலாம்.


பிரியமான  சூஃபி

அவர் சிரிக்கின்றார்

 "அவர் சிரிக்கின்றார் " 


உபணிஷதங்களின்  சாரம் என்பது மரணத்தில் இருந்து மரணமில்லா பெரு வாழ்வுக்கு அழைத்து செல்வாயாக எனும் வேண்டுதலே. இந்த வேண்டுதல் குருவிடம் சமர்ப்பணம் பண்ணப்படுகிறது.


ஆனால் நீயோ பாழாகிய இருளில் நரகலையே நினைத்து உன்னை பொண்டாவரய் குருவை நினைத்து அவர் அன்பை துவம்சம் பண்ணி அன்பெனும் பிடியில் இருந்து நழுவி நரகத்தின் வாயிலில் நிற்கிண்டாய்.


அந்தோ

... அவமரியாதை எனும் அஸ்திரத்தால் அன்பை மறந்தாய். ஆணவ பேயினால் ஆடிகொண்டாய். உன் ஆட்டமேளம் அடங்கி போகும்.


ஏ மூடனே பொய் பேசி நிஜத்தை மறைத்து உன் அழிவை நீயே தேடி கொள்கிறாய்.


வாரி பூசி கொண்ட சாயம் வெளுக்க கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவர் அறிவு ஒருபோதும் அழிந்து போகாது என்பதை மறந்து போனாய்.


ஒரு கனவு கண்டவுடன் விடிந்தது என நினைத்து ஏமாந்து போனாய். பெருமலையில் ஒரு துரும்பை எடுத்து கொண்டவுடன் மலையை பெற்ற தப்பு கணக்கு உன் அறியாமை. துரும்பான இரும்புஊசி கிடைத்ததும் வைர மாணிக்கத்தை நழுவ விட்ட மடக்கூமாளி. குருவை அளக்க பென்சில் போதாது. பணிவே துணை.

நந்தி

 நந்தி               


நமக்குச் சொந்தமாகிய நன்மை பயக்குகின்ற தீ என்று பொருள். 


ஜலத்தில் அக்கினி உருவாய் நின்று உன் தூலத்தைக் காத்து வருகிறது.                  


ஒரு தலைமுறை காலம் உன்னைத்  தூக்கிச் சுமந்து கொண்டு அலைகிறது.      


அந்தத் தீ குளிர்ந்நு விட்டாலோ, உன் உடலும் குளிர்ந்து கட்டி ஏறுகிறது.      நாறி நலம் கெட்டு விடுகிறது.


 அந்த அக்கினி, ஜலத்தில் மூழ்கிப் போகும் முன்னர், ஜலம் சுண்டி உன்பால் தவம் ஏற வேண்டும். 


அப்படித் தவம் ஏறுவதற்கு நீதியாகிய அந்தத் திருமேனியரின் திருவடி நிழலில் நீ தங்கிச் செவியுணவு உட்கொண்ட வண்ணம் இருக்க வேண்டும்.     


அவ்வாறு இருந்தால், உன் பொய் மலங்கள் அனைத்தும் பொசுங்கப் பெற்று, மெய் வீட்டில் குடியேற்றப் பெறுகிறாய்.

சத்தத்தின் உள்ளே சதாசிவத்தை காட்டி

 சிவலிங்கம்  - சிவராத்திரி 


=========    =========


பூவினில் இருந்து மொட்டு மலர்ந்த ரகசியந்தனை கண்டவர் எவரோ அவர் எனக்கும் குருவே. 


"சிவராத்திரியின் ரகசியம் மெய்பொருள் என அறிவாயாக."


சத்தத்தின் உள்ளே சதாசிவத்தை காட்டி


சித்தத்தின் உள்ளே சிவலிங்கத்தை காட்டி 


காட்டி தந்தவரை குருவென்று பணியலாம். 


இது மெய்பொருள் ரகசியம், உலக பொது ரகசியம். எல்லோரிடமும் அமைந்திருக்கும் மெய்பொருள் விஞ்ஞானம்

தகரவெளி சிற்றம்பலவாணர் துணை.

 புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.

புருவமத்தி என்பது புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.

திருச்சிற்றம்பலம்.

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.

முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது “மணி’ என்பது என்ன ? இதை என்ன என்று கூறுமிடத்து வள்ளலார் சொல்லுவதை பாருங்கள், “ நமது புருவமத்தியில் ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது “ என்பார்….அந்த “ஒரு மணியே” மணி மந்திர அவுடதம் என அறிந்து கொள்ளவேண்டும்….அந்த ஒரு மணியே ரெண்டு கண்ணிலும் உயிருக்கு உயிராயும் கருணை கடலாயும் கைபடா கனலாயும் ஜோதியாயும் தந்தையாயும் தாயாயும் குருவாயும் ஞானமாயும் மிளிர்கின்றது. அந்த “ஒரு மணியே குருமணி” என அறிதல் வேண்டும்….அப்படி ”ஆறு பட்டையுடன் கூடிய ஒரு மணியை” தக்க குருவின் துணை கொண்டு அறிதலே ஞான தீக்கை. . அதனை தக்க ஆசாரியன் திருவருளால் அறிந்து திறந்து கொள்ளுதலே “நடுக்கண் பூட்டை” திறத்தல்.அதுவே ஞான சாதனம். .. 



இங்கு கற்றவர் உளத்தே இனிக்கும் என்பது அறியப்படவேண்டியது, கண் நுதல் கடவுள் என்பவர் உளத்தே இனிக்கும் தன்மையினர் என தெளிகிறது..ஆனால் ஊனக் கண் மணியானது உளத்தே இனிக்கும் தன்மை அற்றது. “கண் நுதல்” கடவுள் என்பதுவே அறியப்படவேண்டியது. அதுவே உளத்தே இனிக்கும் தன்மையது. ஆதலின் உளத்தே இனிக்கும் தன்மை உடைய கண்நுதல் கடவுளை அறிதல் வேண்டும். அன்றியும் “கண் மணியே ”இங்கு வள்ளலாருக்கு ஞான மணியாயும் ஞான மருந்தாயும் இருக்கின்றது. ஆதலின் “மணி” என்பது என்னவென்று புரிதல் அவசியம்.. “ மணி மந்திர அவுஷதம்” என்பர் பெரியோர். மணியானது மந்திரமாயும் மருந்தாயும் இருக்கிறது என பொருள். அதையே வள்ளலாரும் தெரிவிக்கிறார்.



பொற்சபை நடஞ்செய் புண்ணியரை கண்ணினுள் மணியாயும் ,கைபடா கனலாயும், கறைபடா மதியாயும் ,கணிப்பரும் கருணை கடலாயும், தெய்வமாயும் கருதி திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்றே வள்ளலார் பாடுகின்றார்.ஆதலின் இங்கு ஊன கண்மணியே தான் கடல் என கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் மதியென கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணிதான் கனலாயும் கொள்ளுதல் தகுமோ?..அப்படி கொளின் ஊன கண்மணி தான் கடல் எனவும் கொளவேண்டுமே.? ஒரு ஊன் உறுப்பு, ஊன்பொருள் எப்படி கனலாகவும் கடலாகவும் இலங்கும் என்பதை சற்று கூர்ந்து நிச்சயித்தல் நன்றல்லவா?. ஆதலின் இஃது உவமையாக கொண்டதே அன்றி ஊன கண்மணி தான் கனல் என்றோ, ஊன கண்மணி தான் கடல் என்றோ, ஊன கண்மணி தான் மதியென்றோ, ஊன கண்மணி தான் பொற்சபை என்றோ கொள்ளுவதெங்ங்னே?. இப்பாடலில் வள்ளலார் உபயோகிக்கும் வார்த்தையானது “தெய்வமே என நான் நின்னையேகருதி” என்பதாகும். அதாவது மேற்கூறியவை உவமையாகும். அதாவது,கண்ணின் மணி போலவும், கைபடாத கனல் போலவும்,கறைபடா மதி போலவும், கருணை கடல் போலவும் புனைந்துரைக்கின்றார் பெருமான் அவர்கள்.ஆதலின் “கண் நுதல் கடவுளை என்பது மேற்சொன்ன “மணி’ என் தெளிதல் நலம்.



அடுத்து மெய்ஞானம் என்ன என வினவுமிடத்து வள்லலார் கூறும் மெய்ஞானமானது “தகரமெய்ஞானம்” எனப்படும். அதை “தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும்ஜோதி” என்பார் அகவலில். அப்படியான தனிப்பெரும் வெளியினி விளங்கும் தனிப்பெரும் கருணையளரே அகர நிலையான அருட்பெரும் ஜோதியார்., அப்படியல்லவா?.ஆகையினால் ஊனக்கண்ணும் அதில் இருக்கும் மணியும் தனிப்பெரும் வெளியாவதெங்ங்னே என சிந்தித்தல் நன்மை பயக்கும். முன்சொன்ன ஆறுபட்டையுள்ள மணியிலங்கும் தலமே ”தகர வெளி”. அல்லாது செத்துபோகும் போது அழுகி மண்ணோடு மண்ணாகி போகும் தன்மையான ஊனகண்மணி தகர மெய்ஞானமாகாது.




அன்றியும் மெய்பொருள் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட தூல பருப்பொருளக இருக்கமுடியுமா என சிந்தித்து தெளிதல் நலம். கண் என்பதும் கண் மணி என்பதும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதும் மரணகாலத்தில் அழிவை தருவதும் ஆகும். ஆனால் வள்ளலார் கூறும் தகரவெளியில் விளங்கும் மணியானது பஞ்ச பூத சேர்க்கையினால் உருவாக்கபடாததும் அனாதி முதல் இருப்பதுமாகிய “உண்மை வஸ்த்து”. அதை ”ஏக வஸ்த்து” என்பர் சான்றோர். அதுவே “மணி”, கண்ணுக்கு கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும்,மாமருந்தாகவும் கைபடா கனலாகவும் , இன்பத்தை தரும் அமிர்தமாகவும் உள்ளது. அதையே கண்ணார் ஒளி எனவும், ஒளியின் கதிர் எனவும் சொல்லுவர்.




கதிர் என்பது கதிரவனை குறிக்கும்,அதை ஞான சூரியன் என்பார், அல்லது சிவசூரியன் என்பாருமுளர். “தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த கண்களில் செலுத்தவேண்டும்” என வள்ளலார் சொல்வதை சற்று கவனிக்க அதன் உண்மை புலப்படும். அதாவது சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த ”கண்களில் ” செலுத்தவேண்டுவது கடமை. சூரிய கலை என்பது ஒரு கண்ணில் அல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள், அப்படியெனில் ஏன் வள்ளலார் “கண்களில்’ என பன்மையில் குறிப்பிடுகின்றார்? ரெண்டு கண்களிலும் எப்படி சூரிய கலை வரும் என நினைக்கவேண்டாமா? 



”விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்


வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன் கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்கலந்துநின்ற கதிரே”, என்பதில் வரும் கதிரே ”அகர ” நிலைப்பதியான அருட்பெரும் ஜோதி, இதில் வரும் விண்ணே என்பது ”தகர வெளி” எனப்படும். ஆகையினால் தினமும் சூரிய கலையான “அகர’ நிலையின் பால் மனதை செலுத்தவேண்டும்.. இதுவெ வள்ளலார் கூறும் தகர மெய்ஞானம். அல்லாது யோக சாத்திர சம்பிரதாயப்படியான அகரம் என குறிப்பிடும் சூரியகலை இயங்கும் வலது கண் இல்லை என தெளிதல் நலம் அன்றோ



மேற்படி விளக்கங்களினால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?. 



மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.



நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.


பாரடா புருவமத்தி யேதென் றக்கால்


பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி


நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி


நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு


வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!


மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது


காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து


கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே


தகரவெளி சிற்றம்பலவாணர் துணை.

பதி புருவத்தடி முனைகீழ்

 பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு"


புருவமத்திக்கும் அண்ணக்கிற்க்கும் நான்கு விரற்கடை அளவு.... இது மேலேறாது இங்கிருந்து வெளிப்படும், புருவமத்தியில் இருந்து கீழ் நோக்கி சலிக்கும் வாயுவுக்கு சந்திரன் எனவும், அபானன் எனவும் பெயர். இது 12 அங்குலம் இருக்கும்... அதாவது உள் மூச்சு. அது போல வெளிப்படும் மூச்சு பிரானன் எனும் சூரியன்... 12 கலையில் நாலு கலை வெளியேறும்.


கீழ்முகமானது சந்திரன், மேல் முகமானது சூரியன்...  இத மேல்முகமான சூரியனில் கலை நாலை சோர்ந்து போகாது மதிமண்டலத்தில் செலுத்த அமிர்தமாகும். 


அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்... அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்... கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே... என அகத்தியர் சொல்லுவது இதையே.


பிறந்த குழந்தைக்கு இந்த வித்தை தெரியும்.... அது இயற்கையாக உள்ல வித்தையே.... நாம் அதை மறந்து விட்டோம்... இப்போது அலைகின்றோம்...


"ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே...." --- அகத்தியர் ஞானம்


சதா இருப்பதே சகஜம் என பெயர். இது சகஜ வித்தை ... எப்போதும் செய்யலாம்...


எல்லா மதத்திலும் இது உண்டு... மெய்வழியிலும் இது உண்டு


ரூஹூவென இஸ்லாமில் இருக்கிறது. ஐந்து விதமான ரூஹூக்கல் உண்டு. அதன் யாது நிலைகல் உண்டு.  


அறிந்தவர்கள் இருக்கிறார்கள்... இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை... கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்


இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.


அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.... இதுவும் பெருமானார் சொன்னதே...

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

அந்த உள் நாக்கை சிங்குவை என சித்தர்கள் அழைப்பார்கள்...காகபுசுண்டர்பிரான், பதிபுருவத்தடிமுனைகீழ் அண்ணாக்கென்னும் பவழநிறம்போன்றிருக்கும் திரிகோனந்தான் துதிபெரு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு ==என சொல்லுவார்...அந்த சிங்குவையான மூலாதாரத்தில் இருந்து பிண்ட நாடிகள் தோன்ருகின்றன.

அந்த அகாரத்தை நாக்கை முன்னிட்டு தொடங்குவதால் சிரிஷ்ட்டி எனவும்...நாக்கின் மத்தியில் மனி பூரகம் எனவும்ஸ்தியாகவும் நாக்கின் நுனியில் அனாகதம் எனும் ருத்திரம்சமான சங்காரம் எனவும் சொல்லுவர்...நாக்கின் மத்தியில் மகா இனிப்புள்ள கட்டியாக மணி போன்ரு அரிருதம் இருக்கும் என பஞ்ச அமிர்த ஸ்தானங்கள் எனுமிடத்தில் வள்ளலாரும் சொல்லுவார்...அமிர்தம் மணியாக அனுபவப்படும் இடமே மணிபூரகம்..அது நாக்கு மத்தி

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺