நந்தி
நமக்குச் சொந்தமாகிய நன்மை பயக்குகின்ற தீ என்று பொருள்.
ஜலத்தில் அக்கினி உருவாய் நின்று உன் தூலத்தைக் காத்து வருகிறது.
ஒரு தலைமுறை காலம் உன்னைத் தூக்கிச் சுமந்து கொண்டு அலைகிறது.
அந்தத் தீ குளிர்ந்நு விட்டாலோ, உன் உடலும் குளிர்ந்து கட்டி ஏறுகிறது. நாறி நலம் கெட்டு விடுகிறது.
அந்த அக்கினி, ஜலத்தில் மூழ்கிப் போகும் முன்னர், ஜலம் சுண்டி உன்பால் தவம் ஏற வேண்டும்.
அப்படித் தவம் ஏறுவதற்கு நீதியாகிய அந்தத் திருமேனியரின் திருவடி நிழலில் நீ தங்கிச் செவியுணவு உட்கொண்ட வண்ணம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால், உன் பொய் மலங்கள் அனைத்தும் பொசுங்கப் பெற்று, மெய் வீட்டில் குடியேற்றப் பெறுகிறாய்.
No comments:
Post a Comment