*கடவுளை விட குருவே உயர்வானவர்*
ஒரு சீடனின் வீட்டுக்கு *கடவுளும் சீடனின் குருவும்* வருகை தந்தனர்.
கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் *பாதத்தை தொட்டு வணங்க சென்றான்* .
உடனே கடவுள் அவனைத் தடுத்து, “ *முதலில் நீ உன் குருவை வணங்கு* ” என்று சொன்னார்.
சீடன் குருவினை பணிய சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்று சொன்னார்.
*குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.*
"அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.
சீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.
“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் *அனைத்துக்கும் பொறுப்பானவர்,* ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.
மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான்.
*கடவுள் யார்?*
*குரு என்பவர் யார்?* என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன்.
நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் *கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன்* .
ஆனால் *குரு* என்பவர் அப்படியல்ல. அவர் *தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்* .
என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார்.
அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார் சீடனின் *கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார்.*
அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதை செய்வதே இல்லை. ஆகவே *கடவுளை விட குருவே உயர்வானவர்*” என்றார் கடவுள்.
*குருவே துணை ! ஸ்ரீ குரூப்யோ நமஹ !*
No comments:
Post a Comment