பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு"
புருவமத்திக்கும் அண்ணக்கிற்க்கும் நான்கு விரற்கடை அளவு.... இது மேலேறாது இங்கிருந்து வெளிப்படும், புருவமத்தியில் இருந்து கீழ் நோக்கி சலிக்கும் வாயுவுக்கு சந்திரன் எனவும், அபானன் எனவும் பெயர். இது 12 அங்குலம் இருக்கும்... அதாவது உள் மூச்சு. அது போல வெளிப்படும் மூச்சு பிரானன் எனும் சூரியன்... 12 கலையில் நாலு கலை வெளியேறும்.
கீழ்முகமானது சந்திரன், மேல் முகமானது சூரியன்... இத மேல்முகமான சூரியனில் கலை நாலை சோர்ந்து போகாது மதிமண்டலத்தில் செலுத்த அமிர்தமாகும்.
அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்... அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்... கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே... என அகத்தியர் சொல்லுவது இதையே.
பிறந்த குழந்தைக்கு இந்த வித்தை தெரியும்.... அது இயற்கையாக உள்ல வித்தையே.... நாம் அதை மறந்து விட்டோம்... இப்போது அலைகின்றோம்...
"ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே...." --- அகத்தியர் ஞானம்
சதா இருப்பதே சகஜம் என பெயர். இது சகஜ வித்தை ... எப்போதும் செய்யலாம்...
எல்லா மதத்திலும் இது உண்டு... மெய்வழியிலும் இது உண்டு
ரூஹூவென இஸ்லாமில் இருக்கிறது. ஐந்து விதமான ரூஹூக்கல் உண்டு. அதன் யாது நிலைகல் உண்டு.
அறிந்தவர்கள் இருக்கிறார்கள்... இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை... கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்
இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.
அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.... இதுவும் பெருமானார் சொன்னதே...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அந்த உள் நாக்கை சிங்குவை என சித்தர்கள் அழைப்பார்கள்...காகபுசுண்டர்பிரான், பதிபுருவத்தடிமுனைகீழ் அண்ணாக்கென்னும் பவழநிறம்போன்றிருக்கும் திரிகோனந்தான் துதிபெரு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு ==என சொல்லுவார்...அந்த சிங்குவையான மூலாதாரத்தில் இருந்து பிண்ட நாடிகள் தோன்ருகின்றன.
அந்த அகாரத்தை நாக்கை முன்னிட்டு தொடங்குவதால் சிரிஷ்ட்டி எனவும்...நாக்கின் மத்தியில் மனி பூரகம் எனவும்ஸ்தியாகவும் நாக்கின் நுனியில் அனாகதம் எனும் ருத்திரம்சமான சங்காரம் எனவும் சொல்லுவர்...நாக்கின் மத்தியில் மகா இனிப்புள்ள கட்டியாக மணி போன்ரு அரிருதம் இருக்கும் என பஞ்ச அமிர்த ஸ்தானங்கள் எனுமிடத்தில் வள்ளலாரும் சொல்லுவார்...அமிர்தம் மணியாக அனுபவப்படும் இடமே மணிபூரகம்..அது நாக்கு மத்தி
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment