"அவர் சிரிக்கின்றார் "
உபணிஷதங்களின் சாரம் என்பது மரணத்தில் இருந்து மரணமில்லா பெரு வாழ்வுக்கு அழைத்து செல்வாயாக எனும் வேண்டுதலே. இந்த வேண்டுதல் குருவிடம் சமர்ப்பணம் பண்ணப்படுகிறது.
ஆனால் நீயோ பாழாகிய இருளில் நரகலையே நினைத்து உன்னை பொண்டாவரய் குருவை நினைத்து அவர் அன்பை துவம்சம் பண்ணி அன்பெனும் பிடியில் இருந்து நழுவி நரகத்தின் வாயிலில் நிற்கிண்டாய்.
அந்தோ
... அவமரியாதை எனும் அஸ்திரத்தால் அன்பை மறந்தாய். ஆணவ பேயினால் ஆடிகொண்டாய். உன் ஆட்டமேளம் அடங்கி போகும்.
ஏ மூடனே பொய் பேசி நிஜத்தை மறைத்து உன் அழிவை நீயே தேடி கொள்கிறாய்.
வாரி பூசி கொண்ட சாயம் வெளுக்க கொஞ்சம் தாமதம் ஆனாலும் அவர் அறிவு ஒருபோதும் அழிந்து போகாது என்பதை மறந்து போனாய்.
ஒரு கனவு கண்டவுடன் விடிந்தது என நினைத்து ஏமாந்து போனாய். பெருமலையில் ஒரு துரும்பை எடுத்து கொண்டவுடன் மலையை பெற்ற தப்பு கணக்கு உன் அறியாமை. துரும்பான இரும்புஊசி கிடைத்ததும் வைர மாணிக்கத்தை நழுவ விட்ட மடக்கூமாளி. குருவை அளக்க பென்சில் போதாது. பணிவே துணை.
No comments:
Post a Comment