Wednesday, August 16, 2023

உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு

 உயிரின் இயல்பு அல்லது மனதின் குறைபாடு


நாம் ஒரு நேரம் ஒன்றை மட்டும் சிந்திக்கும் திறமுடையோம். ஒன்றை பாக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்ப்பதை மட்டும் நாம் அறிகிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் போது சிந்திக்கும் விசயம் மட்டும் உள்ளது. நாம் சிந்திக்கிறோம் என்ற உணர்வு இருப்பதில்லை. சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்தால் சிந்தனை செய்யும் விஷயம் போய் விடும். என்ன சிந்தித்தோம் என்று சிந்தனை செய்தால் சிந்தனை நின்று போய் சிந்தித்த விசயத்தை நினைவு படுத்திக் கொள்ள முயல்கிறோம். சிந்தனை நின்று போகிறது. சிந்தனை செய்கிறோம் என்ற உணர்வும் இருப்பதில்லை. மூளை முழுக்க விசயங்கள் இருக்கிறதே! என்று என்னுகின்றது பார்க்கவும் கேட்கவும் சுற்றிலும் பல விசயங்கள் உள்ளதே!  என்றும் ஒரு விநாடியில் எத்தனை விசயங்களை சிந்திக்கிறோம், அறிகிறோம் ஒரு விநாடியில் ஒரு விசயத்தை மட்டுமே அறிவோம் சிந்திப்போம். அதை விட்டு விட்டே வேறொன்றைப் பற்றுவோம். இது உயிரின் இயல்பு அல்லது  மனதின் குறைபாடு எனலாம்.


பிரியமான  சூஃபி

No comments:

Post a Comment