Friday, November 4, 2022

சன்மார்க்க சாதனை

 சன்மார்க்க சாதனை


அன்பான சன்மார்க்க பெருமக்களே....


எல்லோரும் அறிந்திருக்கிற விஷயங்களில் ஒன்று சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் சாதனை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதே, அப்படியல்லவா?.. ஆனால் சன்மார்க்கத்தில் சன்மார்க்கிகள் செய்வதற்க்கு “சாதனை உண்டு”... அதை சன்மார்க்கிகள் செய்யத்தான் வள்ளலார் பணிந்துள்ளார்.


பேருபதேசம் பகுதி வள்ளலாரால் கடைசியாக வழங்கப்பட்ட பெரருள்... அதை சற்று பார்ப்போம்.

"இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

"அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி"

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்" என்னும் பிரமாணத்தால் உணர்க.””””



மேற்சொன்னது பேருபதேச பகுதி என்பதை கவனிக்கவும்.... இங்கு தான் சாதனை விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது "அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதற்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்... நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்... ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லது புரிதல் வராது.


அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது """"பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்””””””. 


இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம். கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது, “வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை. வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “அறிவு" என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள். இதை சற்று ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.

அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”... இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது... அதனையே "இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.

மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.”””” என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்

குருவின் வித்தை

 குருவின் வித்தை


ஐய்யா, நாம நிறைய்ய ஞானிமார்கலை பார்க்கிறோம், சீடர்கள் ஏராளம் இருக்கிரவங்களும் இருக்காங்க, சீடர்களையே கொள்ளாதவங்கலையும் பார்க்கிறோம். ஆயிரம் சீடர்கள் இருந்தாலும் ஆயிரம் பேரும் ஒரே குருவின் ஒரே வித்தையை ஒரே மாதிரி செய்தாலும் அவங்க ஆயிரம் பேரும் ஞானநிலையை அடைவது இல்லை என்பதையும் கவனிக்கிறோம். ஆனால் அது ஏன் என விசாரிப்பதில்லை தானே?. ஆம், நமுக்கு அதன் நிஜ செய்கை தெரியாது. நாம் எத்தனை பிறவிகலை எடுத்திருக்கிறோம், இனி எத்தனை பிறவிகளை பழைய வினை பயன்கலால் எடுக்க போகிறோம் என்பது தெரிந்தால் தான் ஒரு வித்தையின் முடிவும் தெரியும்.


ஒரு லிட்டர் நெய்யை ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பீங்கானில் ஊற்றினால் அது நிறைந்து தளும்பும் நிலையில் இருக்கும். ஆனால் அதே ஒரு லிட்டர் நெய்யை ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பீங்கானில் விட்டுகிட்டு நிறைந்து தளும்பும் என எதிர்பார்ப்பது எப்படி முட்டாள் தனமோ, அது போலத்தான் ஆயிரம் கோடி கால சென்மத்து வினைபயன் கொண்டவனிடம் ஒரு வித்தையும் நிறைப்பதற்க்கும், நூறு கோடி கால சென்மத்து வினை பயன் கொண்டவனிடத்தில் நிறைப்பதற்க்கும் உள்ள வித்யாசம்.


ஆகவே வித்தையின் விளைவு அவனின் வினை பயன் தொகுப்புகளின் பரிணாமத்தில் இருக்கின்றது. வித்தையானது எத்தனை கால வினைப்பயனை கரைக்கும் என்றோ எரிக்கும் என்றோ தெரியாமல் வித்தையினை செய்கின்றோம். வித்தைகளோ பல கோணங்களில் உள்ளவை. மெழுகுவர்த்தியின் பிரகாசமும் அதன் வியாப்தியும் அதன் வெப்ப அளவும் கொண்டவை முதல் சூரிய தேஜஸும் சூரிய வெப்ப அளவும் கொண்ட வித்தைகள் வரைக்கும் நிலுவையில் இருக்கின்ரன. ஒவ்வொன்றும் வினை புரியும் தன்மையும் வேறுபாடே. ஆனால் நமது வினை தொகுப்பின் ஆழம், எத்தனை பிறவிகளின் சுமையினை சுமந்து கொண்டு திரிகிறோம் என்பது நமுக்கு தெரியாது. இனி எத்தனை பிறவிகள் தேவை எனவும் நமுக்கு தெரியாது.


ஆகையினால் வித்தைகள் செய்வதினால் மட்டும் நாம் முன்னேற்றம் அடைந்து விட முடியாது. நம்முடைய வினை பயன் மூட்டைகளை அவிழ்த்து அவற்றை சாம்பலாக்குதலில் தான் விஷயம் இருக்கின்ரது, அல்லது வினை பயன் மூட்டைகளை களைந்து விடும் மர்மம் நாம் அறிந்திருக்க வேண்டும்.இவை ஒன்றும் செய்யாமல் வித்தையினை மட்டும் செய்து கொண்டு அங்கலாய்ப்பு கொள்வதினால் எந்த பிரயோஜனமும் நிகழபோவதில்லை.


இங்கு தான் இவற்றை கடந்து போக சூட்சுமமான நுணுக்கம் தேவை என புலப்படுகிரது. வாழ்க்கை என்பது ஒரு பருவ மாற்ற நிகழ்வுக்கு உட்பட்டது. சதா ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தக்கபடி மாற்றம் நிகழ்கிறது என காண்கிறோம். பெண் ஏழு வயதிலும் ஆண் எட்டு வயதிலும் மாற்றத்தை அடைகிறான். இது ஒவ்வொரு மடங்காக மாற்றத்தை கொள்கின்றன அல்லவா?


இப்படியான பல மாற்றங்களை சீக்கிரம் கடந்து போக தகுந்த குறுக்கு வித்தை குருமார்கள் கைகொண்டிருப்பார்கள். ஷார்ட் கட் என நாம் சொல்லுவோமே, அப்படி சில சங்கதிகள்.அதுல ஒண்ணு தான் "வாசிமார்க்கம்.

குருடர்கள் ஞானம் பெற முடியுமா?

 குருடர்கள் ஞானம் பெற முடியுமா?


நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.

ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம்.

கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும். காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம்.

முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்... ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது... சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்... அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது... அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்... அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா? அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்... ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை... உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை... அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது... தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்... அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,.. இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்.... தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்....

கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா... செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்... அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்... அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும்

மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும். ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா? அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?


💓💓💓


Kirubanandan Palaniveluchamy உண்மையை பல கோயாபல்சுகள் மறைக்கிறார்கள் இப்படி சின்ன விஸயத்தை மட்டும் செய்தாலே கடவுளை அடைந்து விடலாம் என்பது பலருக்கு கவர்ச்சியாகவும் உள்ளது


Jayamohansamy Mohan நல்ல தகவல்.


Gokulakrishnan Gokul பாவம் அறியாமை முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர் காண்


Tvl Sankaralingam கண்மணி விளக்கம்
அருமை!


Jayamohansamy Mohan கண்ணில் பார்பது எல்லாம் உண்மை அல்ல.நேரில் பார்த்து உண்மை உணர்வது உண்மை.மனம் இயங்காமல் கண்ணிற்கு வேலை இல்லை.


லிங்கேஷ்வரன் ஐயா சூரியன் சந்திரன அகாரம் உகாரம் 8'2என்று கண்ணை ஏன் குறிப்பிட்டார்கள்


Shivaya Nama SivaKumar அய்யா 8க்குள்2அ 8ம்2ம் 10அ../ திருவடி தீட்சை நயண தீட்சை 2ம் வேறுவேறா அய்யா


Hseija Ed Rian தெரியலியே...குருநாதரும் போயிட்டார்...இருந்திருந்தா கேட்டிருக்கலாம்


Paranivasan தூல சூக்கும உடலில் குறித்து கூறியிருக்கிறீர்களே, ஆம் சூக்கும பொருளின் விரிவே தூலம் ஆகும் ஆக சூக்குமம் காரணம் தூலம் காரியம் ஆகும் என்னில் சூக்குமம் அப்படியே அடையாளப்பட்டு தோன்றாமல் அதன் விரிவே தோன்றும் அப்படியென்றால் தூலத்தின் ஆதியை நோக்கிட காரண ஆன்மாவைக் காணலாமோ. தெரியல


Hseija Ed Rian சூக்குமத்தின் விரிவே தூலம்.. தூலம் உடலெனின் சூக்குமம் உயிராம்... இவை இரண்டினும் உள்ளுறை ஆன்மா என பரபடுவது மனமே தான்.. .காரணம் என்படுவது அது சூக்குமத்திற்க்கும் தூலத்துக்கும் காரணம் என கொள்ளதகாது, எனில் இவை மலர காரணி மனமே ஆம் எனவே.


Hseija Ed Rian அகாரம் உயிரே உகாரம் பரமாய் மகாரம் மலமாய் வரு முப்பதத்துள் என வரும் திருமந்திர கருத்தும் இதை சார்ந்தே தான்....மகாரம் மலம் எனபடுவது மனமாகிய மலகுற்றமுடைய ஆன்மாவேவென அறியபடும்


Paranivasan அந்த கரணங்களுள் ஒன்றல்ல அவை சந்தித்ததுவே ஆன்மா என்றால் மனம் அந்த கரணங்களுள் ஒன்று தானே.


Paranivasan அகாரம் உயிர் மகாரம் மலம் என்று தெளிவாக தெரிந்தது அப்ப மலத்தால் கலப்புற்ற உயிர் ஆன்மா என்று கொள்ளவோ.


Hseija Ed Rian உயிருக்கு மலம் வராது..அது சிவரூபம்


Paranivasan உயிர், மலம் அப்படி னா என்னவென்றே தெரியாது. மெய்ஞானியர் உணர்ந்து சொன்னதை . உணராது அப்பதங்களைப் பயன்படுத்தி பேசுவது நான் ஒருபோதும் அதை தெளிவாக அறிந்து கொள்ள உதவாது என தோன்றுகிறது இது சரியா ?


Paranivasan உயிர் மலமோ , சிவமோ ஏதோ ஒன்றுடன் சேர்ந்துதானே இருக்கும்.


Hseija Ed Rian Im speaking what i have experienced sir


K Nagasubra Maniem சுவாமி விரஜானந்தா, தயானந்தர் குரு, ஒரு அற்புத ஞானி , குருடர்...!



Hseija Ed Rian ஞானி எப்படி குருடர் ஆனார்?


K Nagasubra Maniem ஞானி எப்பொழுதும் குருடன் அல்ல. ஞானமற்றவர்களே குருடர்கள். ஆனால், உலக வழக்கப்படி கண் தெரியாதவன், உலகை பார்கமுடியதவன் குருடன். ஒன்றே பலவாகக் காண்பவன் மனித உணர்வில் உள்ளவன். அவனுக்கு காண்பது கண் வழியாகவே. கண்ணா காண்கிறது? கண்ணிலிருந்து காண்பவன் யர்ர்? பிணம் கண்ணிருந்தலும் கானுமா? எனவே காண கண் மட்டும் போதாது. ஆன்ம உணர்வே கண் காண உதவும். ஞானி கண் இல்லாமலேயே ஆன்ம உணர்வு மூலம் காண்பான். அவனுக்கு எல்லாம் அவன் மயமே.. ஐம்புலன் இருந்தும் அல்லது இல்லாமலும் ஞானியால் எல்லா செயலும் முடியும். ஞானி எப்படி குருடர் ஆனார் என்ற கேள்வி குருடர் ஞானி ஆனார் என்பதே பதில். ஞானி ஒரு உருவம் அல்ல. ஞானி ஒரு ஆன்மா ஆகிவிட்டவன். ஒரு உடல் அல்ல. எல்லா உடலிலும் அவனே உள்ளன். எல்லார் கண்ணிலிருந்து காண்பதும் அவனே. தன கண் வழியாக மட்டுமே பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவன் அமரத்தன்மை அடைவது இப்படியே. அவன் உடல் அவன் அல்ல. எல்லா உடலும், எல்லா மனமும் எல்லா உயிரும் அவனுடையதே. இதுவே அன்பின் பயன். அன்பே அவன்.


Hseija Ed Rian ஆமாம் ஐயா..உண்மை


Jayamohansamy Mohan மனிதனாக பிறந்தவனுக்கு கண் பார்வை இல்லையென்றாலும் மனமானது உணர்கிறது..ஆன்மா என்பது எண்ணங்களின் தொகுப்பு....இந்த ஆன்மாவின் உதவியால் மனம் இயங்குகிறது...ஒருவனின் துர்மரணம் அவனுக்கு மாயா உருவம் இருப்பதை போல் ஆன்மா மனமும் அங்கே இயங்குகிறது...சுத்த ஆன்மா பரவெளியில் எங்கும் பிரயாணம் செய்ய தகுதி கொண்டது..துர்ஆன்மா இருந்த இடத்திலே தன் மனதின் எண்ணங்களை நிறை வேற துடிக்கிறது....
ஆன்மாவே நல்லது கெட்டததிற்கு துணையாக உள்ளது..காரியம் காரணம் மனமே எடுக்கிறது...அதனாலே மனதிற்கு ஆன்மா மூலமாகிறது...மனதிற்கு எண்ணங்கள் தேவைபடுகிறது... இதை ‌நிறைவேற்ற உடல் தேவை..உடல் இயங்க உயிர் தேவை...
எண்ணங்கள் அற்று மனதை இழந்து ஆன்மாவை கொண்டு வாழ்பவனுக்கு அதே உடல் போன்ற சூட்சுமம் வேலை செய்கிறது.....இதுவே உலகம் இருக்கும் வரை பரிமாணிக்கிறது.

சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி?

 சத்விசாரத்தினால் உஷ்ணம் உண்டு பண்ணுவது எப்படி??

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.


அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.


அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.


இங்கு வள்ளலார் அண்ட விசாரத்தையும் பிண்ட விசாரத்தையும் சொல்லுகிறார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இப்படி அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் மட்டும் செய்து கொண்டிருப்பில் ஆன்மாவை தெரியவொட்டாமல் மறைத்திருக்கின்ற அனந்த திரைகள் விலகுமா என கேட்டுப்பாருன்கள்.....பதிலாக தோன்றுவது முடியாது என்பதே. ஆதலினாலே வள்ளல் பெருமானார் வேலாயுத முதலியாரிடம் சத் விசாரத்தினை கேட்டு தெளிவு பெற சொல்லுகிறார்.


இவற்றில் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் பர விசாரமாகுமா என்பது ஆரய்வது அவசியம். இவை சத் விசாரத்தின் கீழ்நிலை விசாரமேயாம்., அல்லது உலக விசாரமேயாம். அப்படியெனில் நாம் விசாரிக்கவேண்டிய பரநிலை விசாரிப்பு எவ்வண்ணமானது என்பதை வள்ளலாரும் குறிக்கவில்லை, வேலாயுத முதலியாரும் விளக்கவில்லை அல்லவா?....ஆதலினால் அந்த ரகசியமான சத்விசாரத்தை நாம் எவ்வண்ணமேனும் அறிந்து கொள்ளுதல் நலமன்றோ?.


சன்மார்க்கிகளின் லட்சிய ஸ்தானம் என்பது “பெரு வெளி’ என்பது திண்ணம். நாம் அடையவேண்டியதும் அறிந்து கொள்ளவேண்டியதும் பெருவெளியேயாகும். அதையே வள்ளலாரும் “இவ்வண்ணம் அண்ட விசாரமும் பிண்டவிசாரமும் செய்து கொண்டிருக்க அறிய வேண்டியதை அறிந்து கொள்ளலாம்” என்கிறார்...அதாவது நாம் அறிந்து கொள்ளவேண்டிய “உண்மை” என்பது பெருவெளி என்பது தான்.


பெருவெளி என்பது என்ன என சத் விசாரம் பண்ணுவதே பரவிசாரத்தின் உண்மை நோக்கம். ஆதலினால் அந்த “தகர மெய்ஞான தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும் ஜோதி” என்ன என்பதை சத் விசாரம் பண்ணக்கடவோம்.... அதுவல்லவா உண்மை பர விசாரிப்பான சத் விசாரம்?...அதுவல்லவா நமக்கு பர இன்பத்தை வழங்கும் தன்மையது?...அதனால் அல்லவா ஆன்மாவுக்கு உஷ்ணம் பெருகும்?....ஆனால்........எப்படி உஷ்ணம் பெருகும்?


தகர நிலை என்ன என்பதும் அதனுள் விளங்கும் அகர நிலை என்ன என்பதும் இப்போதைக்கு சத் விசாரம் பண்ணுவோம்...காலம் கனியட்டும் , விளங்க வேண்டியது உண்மையாக விளங்கும் வள்ளல் குரு பிரானின் ஆசியுடன்.

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்

 வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்



உலகத்தில் தீர்த்தம் என்பது பரிசுத்தமாகும் பண்பை கொண்டதுவாம். ஏதொன்று அசுத்தத்தை மாற்றி பரிசுத்தப்படுத்துகிறதோ அது தீர்த்தம். "அண்ணாக்கென்றதின் மேற்புறத்தில் கொண்டது அக்கினி தீர்த்தமாம் ஞானபெண்ணே” என்பர் சித்தர்கள். அதுவே இறையாத தீர்த்தம், கண்களில் இருந்து வழியும் நீர் இறைக்கப்படுகிறது.... அது இறையாத தீர்த்தம் இல்லை. அப்படியான தீர்த்தத்தில் இருக்கும் புட்பமே எட்டாத புட்பம்... எல்லா நீர்நிலைகளில் இருக்கும் புட்பங்களும் எட்டி பறிக்கமுடியும் தன்மையிலே இருக்க, அக்கினி தீர்த்தத்தில் இருக்கும் புட்பமோ எட்டி பறிக்க முடியாது இருக்கின்றதுவாம். அந்த புட்பத்தின் மத்தியில் இருக்கும் மணியானதுவோ ஷண்முகமான மவுன மணியாயிருக்க அந்த ஷ்ண்முகங்களும் வெட்டப்பட்ட நிலயில் அல்லாமல் சக்கரவடிவமாய் இருக்கிறதாம். ஏனெனில் வெட்டப்பட்ட முகங்களை உடைய மணியானது சக்கரமாய் இருக்காது, ஆனால் வெட்டாத சக்கரமாய் இருக்கும் ஷண்முக மவுனமணியானது புருவமத்தியில் இருக்கும் ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல. அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்ளது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார். அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது.

Hseija Ed Rian இது கண்ணை காட்டி ஓட்டு புடிக்கிறவங்களுக்கு சவாலான படம்...கண்ணை கட்டி நாக்கை நீட்டி காட்டும் வித்தை.

ஞான மணி

 ஞான மணி


இலங்கும் பொருளதனை யெலாவரும் காண்கில் நலங்கு

துனியாவதனை நாடார் விலங்கினங்கள் பத்தாறோடீர் பத்து

நான்கு நூறாயிரத்தில் வற்றாமல் நிற்க்குமறை பொருளை

கற்றார்கள் காட்டினார் பாரெனவே ”காதை வளைத்துட்

பொருளை” பூட்டினார் ஒன்றனவே போதமுற

அறிந்தேனிறையை யறியாத நாளில்லல்லல் பட்டிருந்தேன்

குருவந்துபதேசம் ”காதிலிருத்திய பின்”வருந்தேன்

பலதொன்றும் வையேன் மனதினில் வையகத்தை

பொருந்தேன் புறமகத்திட்டேன் நிறை பூரணமே

--- பீர்முஹமது அப்பா....(ஞான மணி மாலை)


”காதை வளைத்து“ எத்தனை பேருக்கு குருவுபதேசம் தந்திருக்கார், கையை தூக்குங்க

ஒத்த பொருள் யாது?

 ஒத்த பொருள் யாது?


அன்பார்ந்த சன்மார்க்க சாதகர்களே, ஆன்மீக மார்க்கத்தில் பிரயாணம் பண்ணும் சாதகர்கள் முக்கியமாக அற்ந்து கொள்ளவேண்டியது “ஒத்த பொருள்’ என குறிப்பிட்டுள்ள மறை ரகசியத்தையே. அதென்னது ஒத்த பொருள் என கேள்வி எழும்புவது சஹஜமே, ஏனெனில் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்கம் சொல்லுவார்கள், ஆனால் ஒத்தது அறிந்தவர் ஒருசிலரே.அதனாலேயே ‘ஒத்தது அறிந்தார் உயிர் வாழ்வர் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கப்பெடும்” என்றனர் ஞானிகள்.



உயிர் என்பது உலகில் இருக்கும் ஒரு பொருள், அதை அறிவது மாபெரும் பாக்கியமே ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த உயிர் உலகத்தில் வரவேண்டுமெனில் ”இரு” பொருள்கள் ஒன்று சேரவேண்டும். ஆகையினால் “உயிரானது உலகில் வாழ” இரு பொருள்கள் சேர்ந்தால் அல்லாது ”வாழாது”. அதனால் “வாழ்வு” என்பது “இரு பொருள்களின்” சேர்க்கை என்பதில் ஐயமில்லை அன்றோ?.


அந்த “இரு பொருள்கள்’ யாதெனில்” தாயும் தந்தையுமே” ஆகும். அதாவது தாயையும் தந்தையையும் அறிந்தவன் உயிர் வாழ்வான், ஏனையவர்கள் செத்தவர்களிடம் சேர்க்கப்படுவார் என்பதில் ஐயம் வேண்டாம், அப்படித்தானே?ஆகையினால் “தாயையும் தந்தையையும்“ அறிவோமாக.
நம்முடைய உடலில் உயிர் இருக்கிறது என்பது நமக்கு தெரிகிறது, ஆனால் அது எங்கிருக்கிறது என தெரியாது, அப்படித்தானே?. ஆகையினால் உயிர் எங்கிருக்கிறது என்பதை அறிய எளிய மார்க்கமானது அது எங்கிருந்து வந்தது என்பதை அறிதலேயாம்.அல்லவா?.அதாவது நமது தாயும் தந்தையும் நமக்கு இரண்டு பொருள்களை தந்துள்ளனர்,ஒன்று விந்து , மற்றொன்று நாதம். இவை இரண்டுமே அவர்கள் நமக்காக தந்த மேலாம் பொருள்கள்,அல்லவா?.அப்படியாயின் உயிரானது இவ்விரண்டையும் சார்ந்து தானே இருக்கவேண்டும்?..


ஆம், அதுவே உண்மை, உயிரானது நமது தந்தையானவர் நமக்கு தந்த” விந்து” எனும் நிலையத்தில் இருக்கிறது., அது கோடி சூரியபிரகாசத்துடன் இருக்கிறது என்கின்றனர் ஞானிகள். இங்கு ஒரு விஷயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், மேற்சொன்ன “விந்துவும் நாதவும்” ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளது என்பதாகும்.அதாவது “விந்துவும் நாதவும்” கருப்பையில் சேர்ந்து ஏழு நாட்கள் அவை ஆனாகவோ பெண்னாகவோ அறிவு பிரியாமல் ”இரண்டுமற்ற” தன்மையில் இருக்கும், பிறகு ஆணாகவோ பெண்ணாகவோ அலியாகவோ பிறவி எடுக்கும்.


ஆண் தன்மை மிகுந்தது ஆனாகவும் பென் தன்மை மிகுந்தது பெண்ணாகவும் இருக்கும். அப்போதும் ஆணிடத்தில் கொஞ்சம் பெண் தன்மையும் , பெண்ணிடத்தில் கொஞ்சம் ஆண் தன்மையும் இருக்கவே இருக்கும்.


இப்படியான “விந்துவும் நாதவுமே’ “ஒத்த பொருட்கள்”., இவை இல்லையெனில் உயிர் நிலை என்பது உலகத்தில் வராது. எந்த ஒரு உயிரும் உலகத்தில் வந்து முதிர்ச்சி அடைந்தாலும், அந்த உயிரின் அடிப்படை கூறான “ விந்துவும் நாதவும்” அவ்வுடம்பில் சிரசினில் இருக்கும்.அதில் உயிர் நிலையானது ஆணாகில் விந்துவுடனும், பெண்ணாகில் நாதமுடனும் இசைந்து இருக்கும்..


ஆனால் ,அவ்வுடம்பில் குடி இருக்கும் ஆன்மாவானது உயிரையோ, விந்துவையோ நாதத்தையோ அறியாது “நான்’ எனும் அகந்தையினால் அறிவழிந்து கெட்டு மரணத்தை அடைகின்றது. ஆகையினால் அப்படி போகாது உயி நிலையை கண்டடைந்து கொள்ளவேண்டின் நாம் “ஒத்த பொருள்களை” கண்டடையவேண்டும். அந்த இரண்டு பொருட்களையும் “அகர உயிர் எனவும் உகர உயிர் எனவும் “ கொளளுவர் ஞானிகள். இவை இரண்டும் “தாய் தந்தை” அணுக்களேயாம், அல்லது “நாத விந்துக்கள்”, அடுத்து இவ்விரண்டின் சேர்க்கையினால் பிறக்கும் உயிரே “ம்” எனும் ஜீவ ஆன்மா.


ஆனால், ஜீவான்மாவானது அகர உகர பொருட்களை அரியாது ,தன்னுடைய உயிர் நிலையை அடையாது மரணத்தை அடைவது பரிதாபகரமானது. ஆகையினால் இவ்விரண்டு “ஒத்தபொருட்களை” அறிந்து உயிர் காப்போம், குழூஉக்குறியாக இவற்றை “பிச்சி மொட்டாகவும்”, எலுமிச்சை பழமாகவும் உருக்கொள்வார்கள். ஏனெனில், பிச்சி மொட்டானது விந்தணுவின் பரியாயமாகவும், எலுமிச்சை பழமானது சுரோனிதத்தின் பரியாயமாகவும் சொல்லுவர் ஞானிகள். இவற்ரையே “குரு தட்சிணையாக” கொள்ளுவது “குரு மரபு”.விந்து நிலை தனை அறிந்து விந்தை காண விதமான நாதமது குருவாய் போகும் ,விதமான நாதமது குருவாய் ஆனால் ஆதிஅந்தமான குரு நீயேயாவாய், சந்தேகமே இல்லையடா புலத்தியனே ஐயா சகலகலை ஞானமெல்லாம் இதுக்கொவ்வாது, முந்தாநாள் இருவருமே கூடிச்சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே,..... என அகத்தியர் சொன்னதுவே உயர்ஞானம்... வாழ்க குரு “திருவடி, வாழ்க சிவபாதம்”


விஜயகுமார் சு அன்னையும் பிதாவுமாய் முன் தோன்றும் அகரதெய்வம்.பின் தோன்றும் அன்னைபிதா பிறந்திற(ரு)க்கும் பேதையராம


Hseija Ed Rian ”உண்மையில் தகப்பன் ஒரு பகுதியாகவு ம் தாய் ஒரு பகுதியாக இருந்தாலும்” என்று ஏற்றுகொள்ளுதலில் இரண்டு பேர் இருக்கிறார்கள். இளம் கருவில் மட்டுமே சொல்லப்பட்ட 10 வயதான கன்னியின் தேவை வருகிறது, இந்த உடலை வளர்ப்பதற்க்கு., அது சரியே, அவளே மகர வாலை. அவளெ ஒத்தவள். யாருக்கு என்றால் சிவத்துக்கு . வள்ளலார் சொல்லுவதை போன்று “கருணையும் சிவமே பொருளென கொள்ளும் காட்ச்சியும் பெறுக” . இங்கு கருணையாக மனிதறுக்குள் இருப்பதே அந்த வாலை. அவளே சிவமென கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சிவத்துக்கு “ஒத்ததே” ..அதாவது சிவ பொருளே. அந்த வாலையோ ஆண் பாதி பெண்பாதியாகவே உள்ளாள். “...முன்னாலே பாத்தால் பெண்போலே ரூபம் பின்னாலே பாத்தால் புருஷ ரூபம்... அய்யய்யோ அவளாடும் ஆட்டமதை கானப்போகா...” என்பர் சித்தர் பெருமக்கள்.



Hseija Ed Rian இந்த உலகத்தில் “உயிர்’ என்பது தாவரங்களை சார்ந்தே நிலை கொண்டுள்லது, இவ்வுலகினில் தாவரங்கள் இல்லையெனில் ஏனைய உயிர் கலாங்கள் உயிர் வாழ முடியாது, இறைவன் இவற்ரிற்க்கு உண்வாக தாவரங்களையே முதன்முதலாக படைத்து அருளி உள்ளான். அன்று தாவர தோற்றம் முந்தி விளைந்து, உயிர்காற்று எனும் அமிர்த காற்றினை உலக ஆகாயத்தில் விரிவுபடசெய்தது, தாவர உயிர்களே உலகில் முதலில் மழையினை அருளிசெய்தன என்பதும் இயற்கை உண்மை.நாம் காணும் ஒவ்வொரு புல்லும் உலகிற்க்கு உயிர் காற்றையும் மழைதுளியையும் உற்பத்திசெய்துகொண்டே இருக்கின்றன என்பது கண்ணுற்று நோக்கவேண்டியது ஆகும் அல்லவா?..


Hseija Ed Rian இவ்வுலகில் உயிர் வாழ”தனியாக” இயலாத மனித விலங்கு புழு பூச்சி இனங்களுக்கு “உயிர் துணை”யாகவே தாவரங்கள் விளங்குகின்றன என்பதும் இயற்கை உண்மை. அப்படி இருக்க ஏனைய உயிர்க்கு முன்னின்று விளங்குவது தாவர உயிர் எனும் அதிசயமே, அதுவே அதிசயத்திலும் அதிசயமானது. அதன் அதிசயம் என்பது கடவுளின் “முதல் பிள்ளை” என்பதாகும்.கடவுள் இவ்வுலகில் படைத்த “முதல் உயிர் பிள்ளை” தாவர படைப்புகளே என்பதும் இயற்கை உண்மை அல்லவா?.


Hseija Ed Rian தாவரங்களுக்கு “ஆன்மா” இல்லை என்பது ஒரு மறைபொருல். அவற்றிற்க்கு “ நான்” எனும் போதம் இருப்பதில்லை. உயிர் இருக்கும் ஆனால் ஆன்ம அறிவு இருக்காது.... இது பரம ரகசியமான ஒரு விஷயம்..


Hseija Ed Rian சொல்லி சொல்லி நாம் இப்போது சொல்லக்கூடாத “ ஜீவ விருட்சத்தின் விருட்சத்தின்” மறை ரகசியங்களை நோக்கி பிரயானம் பண்ணுகிறோம் என்பது நான் அறிந்தே பேசுகிறேன். சாலை ஆண்டவர் ஜீவனுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பினை “ஒரு்வாறு” சொல்லி உள்ளார்..அதற்க்குமேல் சொல்லவில்லை, ஏன் சொல்லவில்லை என இங்கு சொல்லதேவை இல்லை. ஆனால் உயிர் இனங்கள் மரனத்துக்கு பின் மரங்களின் வேர் முகாந்திரம் அடுத்த பிறவிக்கு தக்க உடலில் வருகின்றன என “ஒருவாறு” சொல்லியுள்ளார். ஆனால் “ஆதி அவத்தை” என்ன என அவர் சொல்லவும் இல்லை விளக்கவும் இல்லை....இந்த உலகத்துக்கு “உயிர் வந்த வழி” எது என அவர் சொன்னதாக கேட்டதில்லை....கடைசியில் வரக்கூடிய “ஜீவ பிரயாணத்தை” மட்டுமே அவர் சொல்லுகிறார், ஆனால் “ஜீவ வரவு” எப்படி என சொல்லவில்லை.... வரவு எப்படி என அற்ந்தால் மட்டுமே”போக்கு” எப்படி என அறிய முடியும்.... அல்லாதவர்கள்.... ”இருப்பு” எனும் நிலையில் மண்ணறையில் “இருப்பார்கள்”..... வரவு அறிந்த பின் போக்கு அறிவாகும், அதுவரைக்கும் இருப்பு தான்.,,அதாவது சமாதி தான்.


Hseija Ed Rian “தாவர சங்கமத்துள்” என வாசகத்தில் சொல்லுவது கொஞ்சம் ரகசியமானது தான்

ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா?

 ஜீவனும் ஆன்மாவும் இரண்டா ஒன்றா??




வள்ளலார் இதற்க்கு விளக்கமாக சொல்லுவது என்ன என பார்க்கலாமா?... 

இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. 

அதில் முக்கிய ஸ்தானம் 2. 

அவை யாவை? 1) கண்டம், 2) சிரம்


சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. 

கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். 


மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; 

அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. 

இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. 

இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.


அப்படியெனில் ஜீவன் என்பது முக்கியமாக இரண்டு வகைகளும், ஆன்மா என்பது முக்கியமாக ஒன்றுமாகும் என காணலாம் அல்லவா? 

இனி ஏன் ஜீவன் இரண்டாக இருக்கிறது என அறியவேண்டாமா? அல்லாது ஏனையா மூன்று ஜீவன்களும் எவை எவை எனவும் அறிய வேண்டாமா?.
ஆன்மாவானது தனித்து இருக்கிறது என கூறும் வள்ளலார் ஜீவன்களில் முதலானது புருவமத்தியிலும், இரண்டாவது ஜீவன் கண்டத்திலும் இருக்கிறதாக சொல்லுகிறார் அல்லவா?. 

முதலாவது சொன்னது சாமானிய ஜீவனும் இரண்டாவது சொன்னது விசேஷ ஜீவனும் ஆக சொல்லுகிறார். ஆனால் இவை இரண்டையும் பரமாத்மா எனவும் ஜீவாத்மா எனவும் பெயரிட்டு அழைக்கவும் செய்கிறார், அப்படித்தானே?.. 

அப்படியெனில் இவை ஜீவனா அல்லது ஆத்மாவா என கேட்க்க தோன்றுகிறதல்லவா?. சரிதானே??
ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?.. அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும், அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.
ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?... அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?.. அப்படித்தானே?.. 

ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்திருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?..
ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?.. அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?.. 

சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?.. செத்துப்போவது சன்மார்க்கமாகாதே..... ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?... அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். 

வாழ்க வள்ளலார் மலரடி

குண்டலினீயின் ரகசியம்

 குண்டலினீயின் ரகசியம்


குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.




ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.


சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.


ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.


இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்

பதி புருவத்தடி

 பதி புருவத்தடி முனைகீழ்அண்ணாக்கென்னும் பவள நிறம்போன்றிருக்கும் திரிகோணந்தான் துதிபெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாகசுபாவ சாதனையினால் மவுனமாச்சுவிதிவிகித பிரார்த்வ கர்மம் போச்சுவிஷயபோகத்தினிச்சை விட்டு போச்சுமதியெனுமோர் வாயுவதும் அமிர்தமாச்சுவஸ்த்துவதேகாரனமாயிருக்கலாச்சே.....இது தான்சித்த வித்தை


வாசி சித்தர்கள் சொல்லிஇருப்பாங்க..படித்துபயன்பெறுங்க...மவுனமும் சித்தர்கள்சொல்லி இருக்காங்க..கற்று தேர்ச்சிஅடையுங்கள்..ரெண்டும் ரெண்டு குருபரம்பரை...வாசிக்கு சிவனார் கைலாயபரம்பரை...மவுனத்துக்கு குருதட்சிணாமூர்த்தி ..மூல பரம்பரை
====================================

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு 

ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்

குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி

பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு

அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே

==================================