Wednesday, December 7, 2022
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று
என்னல்லாமோ செஞ்சு பாக்குறோம்..ஏதெல்லாமோ படிச்சு பாக்குறோம்..என்ன படிச்சாலும் சந்தேகம்ங்கிறது தீர்ந்தபாடில்லை. நாம இருக்குற நிலமை என்ன...எப்பை மாட்டிகிட்டு தவிக்கிறோம்...எங்க மாட்டிகிட்டு திணறுகிறொம்ம்..இப்படி அல்லோலபட்டு வாழ்க்கை பாழாக போறதுக்கு என்ன பாவம் செஞ்சோம்ங்கிறது எத்தனை காலம் யோசிச்சாலும் புத்திக்கு வராது, தீர தீர கேள்விகள் பல பதிலில்லாமல் பெருகிகிட்டே தா வரும். புத்தர் மாதிரி எங்காச்சும் போயிருந்து துக்கத்துக்கு காரணம் என்னாண்ணு ஆலோசனை பண்ணாலும் பதில் வராது.எண்ணா நாம மாட்டி கெடக்கிற விதம் அப்படி.
ஒரு குண்டாக்கு நூல் கட்டை ஒழுங்கில்லாமல் சின்னி சிதறி அலங்கோலமாக்கி ஒரு குழந்தைகிட்ட குடுத்து அதை அவுத்து சீராக சுற்றி வைக்க சொன்னா நடக்கிற காரியமா என்ன ..அது போலத்தான் வாழ்க்கையும்...எந்த ஒழுங்கும் இல்லாம ஆயிரம் கோடி காலத்து கர்மங்கள் வினை தொகுப்புகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக கோடி முறை குதர்க்கமா குழப்படியா ஒண்ணுக்கு உள்ள ஒண்ணாக, அது மற்றொண்ணுக்கு உள்ளாக , அது எல்லாம் ஆயிர கோடி முறை கண்ணிகளால் இறுக்கபட்டு கண்ணிகள் இறுகுமே தவிர இளகாமல் அமைந்த த்ன்மையால் கடைசியில் சாவு தான் நிச்சயம்ண்ணு வந்து வாய பொளந்து கிட்டு நிக்குது.
அகத்தியர் சொல்ற மாதிரி,அருமையான புரிதல் வந்தா புரியும், ”உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று, உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறென்பர்” என்கிறார். உடல் எங்கிருந்து ஆரம்பம்ண்ணு கேட்டா பதில் இல்ல, உயிரின் ஆரம்பம் கேட்டாலும் பதில் இல்ல, அப்ப பூரணம் என்பது பூரணமாக கைவிட்டு போச்சு.
மனிதன் பூரணமாகவே இருக்கிறான்,பூரணமே அவன் இயற்கை. இதை தான் வேத வசனமும் ‘பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணம் உதச்சதே” என சொல்லுது. அகத்தியரின் வசனத்தின் உயர்ஞானம் இதுவே. உடல் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல. உயிர் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல, அது போல பரிபூர்ணம் உடலுக்கும் உயிருக்கும் வேறல்ல, இவை மூன்றும் ஒன்று தான்.இவை வெவ்வேறு எனுமிடத்தில் மனம் குழப்பம் மிகுந்து புரிதல் இன்றி அலை போல திணறுகிறது. அன்பே சிவம்
மனம்
”மனம் என்பது என்னவென தேடாதீர்கள், அது உங்கள் உடலாக இருக்கிறது.“
மனத்தின் ஆயிரம் கோடி செயல்களில் எண்னமும் ஒன்று.. அதனால் எண்ணமே மனம் என நினையாதீர்கள்...
உடல் தான் மனம் என சொல்லவில்லை... உடலாக இருக்கிறது என சொன்னேன்.
50கிலோகிராம் எடைகொண்ட உடல் தான் மனம் என சொல்லவில்லை...
ஒரு வயது குழந்தைக்கு உடலாக இருப்பதுவும் மனம்... 100 வயது முதியவருக்கு உடலாக இருப்பதுவும் மனம்
உடல் என்பது ஒரு டிசைன்.... அந்த டிசன் ஆக இருப்பது மனம்.. டிசைன் மாறுபட்டால் உடல் மாறுபடும்... நாய் உடல் என்பது நாய் மனத்தின் வெளிப்பாடு
நாய்க்கும் எண்ணங்கள் இருக்கும்.. மனிதனுக்கும் எண்ணங்கள் இருக்கும், ஆனால் நாய் மனமும் மனித மனமும் ஒன்றல்ல....
இரண்டையும் ஒரே அளவுகோலில் பொதுவாக மனம் என்பது தவறு
உடம்பு எவ்வண்ணமோ அவ்வண்ணம் தான் மனம் இருக்கும்.. நாய் உடல்கொண்ட உயிரினத்துக்கு மனித மனம் இருக்காது
கை கால் என விரிந்திருக்கும் ஒவ்வொரு அங்கங்களும் மனதின் வெளிப்பாடே தான், மனதையும் எண்ணங்கலையும் ஒன்றென கருதும் போது பொருள் மாறுபடுகிறது.. மனதின் வெளிப்பாடாக இருக்கும் காரணத்தினால் தான் மனம் அங்கங்கள் முழுதும் வியாபித்து இயங்குகிறது
உடல் என்பதை மாமிசம் என கருதாதிர்கள்.. உடலாக என்பது உணர்வாக இருப்பதை குறிக்கும்.. உணர்வு இல்லையெனில் மாமிசம் இருந்தும் பிரயோசனம் ஒன்றுமில்லை..
அதுவும் பொய் நானும் பொய், இரெண்டும் மனதின் கற்பனை.
மனதே அது, இது, நான், நானற்றது என பொய் மயக்கம் கொண்டிருக்கின்றது.
நிலையில் இவை இரண்டும் இல்லை. இரண்டற்றதுவே ஞானம்... 😂😂😂
மனிதனுடைய=அரபு எழுத்துக்கள
மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் கோர்க்க பட்டுள்ளது.
இதை இல்முல் ஹர்ப் அதாவது அட்சரங்களின் ஞானம் என்பார்கள்.
சூபி ஞானிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள்.
ஷெய்ஹுல் அஃக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதல் தக்கலை பீர்முஹமது ஒலியுல்லாஹ் வரை இக்கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவர்களே.
இன்சானை குறிக்கும் இந்த ஹர்பில் முதலாம் எழுத்து
அலிப் என்பது புருவமத்தியாகும்.
பே எனும் இரண்டாம் எழுத்து வலப்புருவமாகும்.
தே எனும் மூன்றாம் எழுத்து இடப்புருவமாகும்.
ஸே எனும் எழுத்து நெற்றியாகும்.
ஜீம் எனும் ஐந்தாம் எழுத்து தலையாகும்.
ஹா எனும் ஆறாம் எழுத்து வலத்தோளாகும்.
ஹாஆ எனும் ஏழாம் எழுத்து கண்ணாகும்.
தால் எனும் எட்டாவது எழுத்து வலது முழங்காலாகும்.
த்தால் எனும் ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்.
றா எனும் பத்தாவது எழுத்து வலது விலாவாகும்.
ஷ எனும் பதினொராம் எழுத்து இடது விலாவாகும்.
ஸீன் எனும் பன்னிரெண்டாவது எழுத்து வலது மார்பாகும்.
ஷீன் எனும் பதிமூன்றாவது எழுத்து இடது மார்பாகும்.
ஸாத் எனும் பதினாந்காவது எழுத்து வலது செவியாகும்.
ழாத் எனும் பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்.
தொ எனும் பதினாறாவது எழுத்து வலது கரண்டையாகும்.
ளொ எனும் பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்.
ஐன் எனும் பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்.
கைன் எனும் பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்.
பா எனும் இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்.
காப் எனும் இருபத்தொன்றாவது எழுத்து இடது புறங்கையாகும்.
ஹாப் எனும் இருபத்திரெண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்.
லாம் எனும் இருபத்து மூன்றாம் எழுத்து தொடைப்பொருத்தாகும்.
மீம் எனும் இருபத்துநான்காம் எழுத்து நெஞ்சு முதல் மூளை வரை ஆகும்.
நூன் எனும் இருபத்தைந்தாம் எழுத்து உயிரின் நிலையாகும்.
வாவ் எனும் இருப்பத்தாறாம் எழுத்து தொப்புளாகும்.
ஹ எனும் இருப்பத்தேழாம் எழுத்து இருதயமாகும்.
லாமலிப் எனும் இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்.
அம்ஸ் எனும் இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்.
நன்றி
ஆத்மா
ஆத்மா
இந்த உலகத்துலே எங்காச்சும் ஏதாச்சும் பொருட்கள் செயலற்று இருக்குதோ!? இல்லையே!!
அணுத்துகள்கள் கூட தத்தம் செயலில் சதா மும்முரமா இருந்துட்டுதானே இருக்குதுங்க, ஏன் அங்க கர்மம் கர்த்தா இல்லாம நடக்கறது கண்கூடா பாக்றோம்லியா?!
நாம கூட சதா நாசியால சுவாசம் பண்ணிண்ட்டுருக்குகோம்லியா,?! அதை கர்த்தா என ஒருவர் இருந்துகிட்டா சுவாசத்தை பண்ணிண்டிருக்கார்? இல்லையே! அல்லவா?.
ஜாக்ரதத்தில் இருக்கறச்சேயும் சுவாசம் நடக்கறது, தூங்கறப்பவும் அது பாட்டுக்கு நடக்கிறது. கர்த்தா என அங்க உன்னிப்பா செயலாற்ற யார் இருக்காவளாம்,??? யாருமில்லையே அல்லவா?.
அப்ப கர்மாங்கிறது கர்த்தா இல்லாமலும் நடக்கும்ங்கிறது புரியுதுலியா,! அப்போ எங்குமே மவுனம் என்பது அசாத்தியம்ங்கிறது தெளிவாகிறதுல்லியா?.
இப்படியான செயல்களில் எங்குமே ஆத்மத்தின் தேவையில்லைங்கிறது புரியறதில்லியா?.
அப்போ ஆத்ம அமைதிங்கிறதுக்கு தேவைங்கிறது இல்லைண்ணு தெளிவாகிறதில்லையா. ஏன்னா, ஆத்மம் அமைதியின்றி இருக்கிறதுங்கிறது என ஒரு சங்கதி இருந்தாத்தானே அதை அமைதி படுத்துறதுக்குண்ணு ஏதாச்சும் கர்மம் செயலாற்ற வேண்டியிருக்கும்.
ஆனால் ஆத்மாங்கிறது எக்கூட்டத்தும் கலப்பில்லாமல் இருக்குறதுங்கிறவங்களே எதுக்கு அதை அமைதி படுத்திக்கணும்ண்ணு அலையுறாங்களாம்?
சரி, ஆத்மா தான் இதையெல்லாம் பத்தி கவலைபடலைண்ணு வெச்சுக்குவோம், இருந்தாலும் எது எதை தான் சமாதானபடுத்தணுமாம்,?! அப்ப சொல்றீங்க "நீங்க" தான் ஆத்மாவை உணரணும்ண்ணு. அப்ப இந்த "நீங்க" எங்கிறது? எது-ஆத்மா எங்கிறது எதுங்கிற கேள்வி உசுப்புமே? அப்ப "நான்" யாரு-ஆத்மா யாரு? சாந்தமில்லாம இருக்குற "நான்" வேற-சதா சாந்தமா இருக்குங்கிற நெனப்புல வெச்சுண்டிருக்குற ஆத்மா வேறுண்ணு தோணுதில்லையா? இதுல பாத்தீங்கண்ணா இன்னும் "நான்"ங்கிறது உண்மையா இல்லை "ஆத்மா"ங்கிறது உண்மையாண்ணு கொஞ்சம் ரமணரை கேட்டு சொல்லுங்கோண்ணேன்
வேறொவருக்கு எட்டும் புஷ்பம் வெட்ட வெளி சாதனை
=== வேறொவருக்கு எட்டும் புஷ்பம் வெட்ட வெளி சாதனை ======
😂😂😂😂😂
சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்தி கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்ண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..
ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தி வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான்..உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.
அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும்.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
===🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺
ஒலி_ஆலோசனை
ஒலி_ஆலோசனை -
எல்லோருக்குள்ளும் இருப்பதைப் போல உங்களுக்குள்ளும் தொடர்ந்து ஒரு உள்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ,அதைக் கேட்பதற்கு நாம் மெளனமாக இருக்கவேண்டும். தலை ரொம்பவும் சத்தம் போடுகிறது. ,அதனால் நிசப்தமான, இதயத்தின் மெல்லிய குரலைக் கேட்க முடியாது, மேலும் அது மெல்லிய, சிறிய குரல். எல்லாமே அமைதியாக இருந்தால் மட்டுமே அதை கேட்கமுடியும், ஆனால் அதுதான் உங்களுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு. ஒருமுறை கேட்டுவிட்டால், நீங்கள் எங்கே இணைந்து, எங்கே தொடர்பாகி, எங்கே பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரிய வரும். ஒருமுறை அதை கேட்டு விட்டால் நீங்கள் அதனுள் சுலபமாக செல்லலாம். அதில் கவனம் வைத்தால் பின் நீங்கள் எளிதாக அதை கேட்கலாம். நீங்கள் எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ, அப்போதெல்லாம் அது உங்களுக்கு புத்திளமை அளிக்கும். அது உங்களுக்கு அற்புதமான பலத்தை கொடுக்கும், மேலும் மேலும் அதிக உயிர்ப்போடு வைத்திருக்கும்.
ஒருவர் அந்த உள்சத்தத்தை மறுபடியும் மறுபடியும் கேட்டால் அவர் , தெய்வீகத்தோடு உள்ள தொடர்பிலிருந்து விலகமாட்டார். அவர் இந்த உலகில் வாழலாம், ஆனாலும் அந்த தெய்வீகத்தன்மையோடு தொடர்பிலேயே இருக்கலாம். இப்படியே நாளடைவில் இந்த தந்திரத்தை தெரிந்துகொண்டால், சந்தையில் இருந்தால்கூட உங்களால் அதை கேட்கமுடியும். ஒருமுறை அதை தெரிந்து கொண்டு விட்டால் பின் அதை கேட்பதில் சிரமம் எதுவும் இருக்காது. முதல்முறை கேட்பதில்தான் பிரச்னை, காரணம் எது எங்கிருக்கிறது, அல்லது அது என்ன அதை எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை.
அதற்கு தேவையானதெல்லாம் மேலும் மேலும் மெளனமாக இருப்பதுதான்.
.
மெளனமாக உட்காருங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், தினமும் ஒருமணிநேரம், எதுவும் செய்யாதீர்கள் உட்காருங்கள் கேளுங்கள். சுற்றிலுமுள்ள சத்தங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள், எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லாமல், எந்த காரணமுமில்லாமல் கேளுங்கள். அங்கே ஒரு சத்தம் இருக்கிறது. அதனால் அது ஒருவரால் கேட்கப் படுகிறது.
மெதுவாக, மெதுவாக, மனது மெளனமாக இருக்கத் துவங்குகிறது. சத்தம் கேட்கப்படுகிறது ஆனால் மனம் அதற்கு இனிமேலும் விளக்கம் கொடுப்பதில்லை. இனிமேலும் அதை பாராட்டவில்லை, இனிமேலும் அதைபற்றி யோசிப்பதில்லை. திடீரென்று அந்த இருப்பு மாறுகிறது. மனம் மெளனமாக இருக்கும்போது,, வெளிசத்தத்தை கேட்கும்போது, திடீரென்று ஒரு புதியசத்தம் கேட்கிறது ஆனால் அது வெளியே இருந்து இல்லாமல், உள்ளேயிருந்து கேட்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டால், பிறகு கயிறு உங்கள் கையில்தான்.
அந்த சங்கிலியையே பின்பற்றுங்கள், அதில் ஆழமாக இன்னும் ஆழமாக செல்லுங்கள். உங்களுடைய இருத்தலில் மிகஆழமான பகுதி ஒன்றுள்ளது, அதில் போகதெரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகத்தில், ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள். -
ஓஷோ
குரு பூர்ணிமா வாழ்த்துகள்
குரு பூர்ணிமா வாழ்த்துகள்
" குருவே சிவன் எனக் கூறினன் நந்தி" திருமூலர்
அவருடைய மெய்ஞ்ஞான தீப ஒளியே விந்துவாகும்.
அதிலிருந்து பிறந்து வரும் வாக்காகிய நாதம்- வாக்கியம்- பிரணவம் சொரூபமானது. கேட்டு உணர்வோரைப் பிரணவ சொரூபம் ஆக்க வல்லது.
அதைச் செவிக்கு உணவாக உண்பதுவே யோக உணவு எனப்படும்.
அதுவே நம் பிராணனை வசப்படுத்தி அடக்கி மனோலயம் பெற்று சமாதி அடைவதற்கு சித்தர்கள் கூறியுள்ள வழி. வேறு வழியே இல்லை.
ஆன்மா = மனம்
மனம் புத்தி சித்தம் அகங்காரம் இவை நான்கும் நான்கு பொருட்கள் அல்ல, இவை அனைத்தும் ஒரே பொருளின் பல்வேறு நிலைப்பெயர்களே, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு பெயர்கள், வீட்டில் மனைவிக்கு கனவன் பிள்ளைக்கு தந்தை, பணியாளுக்கு எசமான் அலுவலகத்தில் மேனேஜர், ஆனால் இருக்கிறது ஒரு நபர், இந்திரிய தொடர்புடன் இருக்க மனமாகவும், இந்திரிய தொடர்பில் பெற்றதை கிரகிக்க புத்தியாகவும், கிரகித்ததை உட்கொண்டு நிர்ணயம் செய்ய சித்தமாகவும் அகங்காரம் என ‘நான்’ ஆகவும் இருப்பது ஒன்றே அதுவே ‘நான்’ எனும் மனம்
இந்த சித்தாந்த மனம் தன்னை விடுத்து தலைவன் ஒருவனை கொள்வதினால் தன்னில் இருந்து அன்னியமான ஒன்று இருக்கிறது என மயங்கி தலைவனை ஆராதிக்கிறது.அதன் சித்தாந்தம் அப்படி கொள்வதினால் மனமே பிளவுபட்டு தானான மனம் எனவும், தனக்கு அன்னியமான தலைவன் எனவும் மனமே இரண்டாக நிற்கும் அவஸ்த்தை உருவாகின்றது. இதுவும் கடந்து போகும்
ஆத்ம போதத்தின் அடுத்த நிலை வெட்ட வெளி, எது ஒன்று இருக்கிறது என நினைத்து கொண்டு பிரயாணம் ஆரம்பிக்கிறோமோ, முடிவில் அது இல்லாமல் வெட்ட வெளி தன்னிலே கலந்து ,மனம் அகல ஆன்மாவும் அகன்று விடுகின்றது. மனம் இருக்கத்தான் ஆன்மா என ஒரு போதம் கற்பனையாக எங்கும் கலந்து நிற்கின்றது. மனமும் ஆன்மாவும் இரண்டும் ஒன்றின் இரு துருவங்களே, ஒன்று பொய் எனில் மற்றையதும் பொய். வெட்டவெளியே மெய்
இறைவன் என்பது மனதின் ஒரு கற்பனை கதாபாத்திரம் தான், மெய்நிலை உதயம் செய்ய ஒரு உபாயம் தான் . ஒரு நிலைக்கு மேல் கடவுள் தன்மை கூட தூர தூக்கி எறியத்தான் வேண்டும், என்றாலே தான் அடுத்த மேல் நிலைக்கு பிரயாணம் ஆரம்பிக்கும். இல்லையெனில் கடவுள் கூட தடையே தான்
//இங்கு மனமில்லையேல் எனினும், உடல் இல்லையேல் எனினும் ஆன்மா உண்டு என்பது மனதின் மனமாக இருக்கும் தன்மையில் கிரகிக்கபடும் தன்மையே தாம் அல்லாது நிதர்சனமாக அதற்க்கு நிரூபிக்கும் உறுதுணை ஒன்று மனதுக்கு இல்லை, மனம் அப்படி கருதுகின்றது, தன்னை விடுத்து அந்த பக்கம் அப்பால் எதுவும் இல்லை எனும் அறிவை அறியாது.
உடலெடுத்த காலத்து குழந்தையாக இருக்க மனமானது இவ்வண்ணம் எந்தவொரு ஆன்ம தத்துவத்தையும் உணர்வதில்லை, காலபோக்கில் த்தத்துவ குப்பைகளினால் எதாவது ஒன்றினை பற்றி அக்கரை செல்ல முற்படுகின்றது ,அதன் விளைவே ஆன்மா எனும் ஒரு கோட்பாடு, அல்லது இறை எனும் கோட்பாடு, அல்லது தன்னை விடுத்து தனக்கு மேலாக தன் ஆளுமை எல்கைக்கு எட்டாத ஒன்று இருக்கின்றது எனும் போர்வை ரொம்ப ஆவேசத்துடன் மனம் போர்த்திக்கொள்ள ஆவல் கொள்கிறது.இதுவும் களையப்பட வேண்டிய போர்வையே
பேசுவதனால் எல்லாம் வார்த்தை ஜால விளையாட்டே தாம் ,எனினும் பேச்சினூடாய் மலரும் புரிதல் என்பது அருமையானது...புரிதலினால் அவித்தையானது அகன்று போகின்றது..மெள்ள மெல்ல ஞானம் அரும்புகின்றது..மனதில் அசைவுக்கு இடம் குறைகின்றது..திருப்தி உருவாக உருவாக ஆனந்தம் களைகட்டும்...இனம் புரியாத மகிழ்ச்சி..தியானத்தை ஆழ்கடலுக்கும் இட்டுச்செல்லும்
எதுவொன்று தன்னுக்குள்ளே “நான்” “நான்” என சதா தன்னிலை போதமாக நிலைநிற்கின்றதோ, எதொவொன்று “நான்” என சகல செயல்களுக்கும் அச்சாணியக இருக்கின்றதோ, எதுவொன்று “நான்” என மனதுக்கு அறியபடாத ஒன்றாக சதா வியபரிக்கின்றதோ அது உண்மையில் மனமே என தெளிந்து சசூட்மம் கண்டு விட்டால் ஆன்மா என சொல்லும் கொட்பாடு அற்றுத்தான் போகும்
வாசல் படி தாண்ட மாளிகையின் பிரம்மாண்டம் புரிகிறது...மனதின் மயக்கம் அகலத்தான் வித்தையின் ஆழம் புரிகிறது
பிறப்பு =மறுபிறப்பு
மறுபிறப்பு என சொல்ல வரும் பொழுது முன்னைய பிறப்பில் இருந்து ஆரம்பமாகும் தன்மையை சாதாரணமாக சொல்வார்கள்,
இரண்டாவது முன்னைய பிறப்பை எடுத்தால் முதற்பிறப்பு நிகழ்ந்தது எங்ஙனம் என ஆராயவேண்டும்.
எனில் பிறவிக்கும் ஆதாரம் காரணம் எதுவென ஆரய வேண்டும்,
பிறப்பில் தான் எது பிறக்கிறது உயிரா உடலா ஆன்மாவா மனமா என ஆராயவேண்டும்,
கர்மம் எது , எது தர்மம், கர்மம் பிறவிக்கு இட்டு செல்வது எங்ஙனம், அதன் காரணி எது, அதன் ஊடுதளம் எது என விசாரிக்கவேண்டியிருக்கும். கர்மம் எதை கொண்டு நன்மை தீமை என நிர்ணயிக்கபடுகின்றது என விசாரம் வேண்டும்...
தான் அற்றவன் தலைவன்
தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன்
’தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை.
தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல
தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்
Subscribe to:
Posts (Atom)