Wednesday, December 7, 2022

உடல்=உயிர் =நான்

 ஒரு செயலை செய்வது உடல் ஆயினும் அதை செயலாற்றுவிப்பது உயிர் தான்.நம்முள் உயிரை அறிய அது இன்னமும் அதிகம் சாத்தியம். உயிரை அறியாத காரனத்தால் ‘நான்’ தான் இவற்றையெல்லாம் செய்கின்றேன் என மனம்தன்னுரிமைகொண்டாடுகின்றது. உயிரே உடலை இயக்குகின்றது எனும் திடம் மலர மனம் உரிமை கொண்டாடுவது விட்டு போகும்  அதான் ஞானிகளை அடித்தால் கூட ‘ஏய் ..நீ தானே கேட்டு வாங்கினாய் ..அடி படு” என உடலை பார்த்து சொல்லுவார்கள்...அங்கே அடி படுபவர்கள் கூட உடலும் உயிரும் தான்..’நான்’ இல்லை. அப்புறம் மனம் திரும்பி தன்னையே பர்க்க ‘நான்’ நான்’ என இவ்வளவு காலம் சொல்லி கொண்டிருந்தது யாரென்றால் மனமாகிய நானே..என்னையே நான் என சொல்லிகொண்டிருந்தேன் என புலனாகும்.அங்ஙனம் மயக்கம் அற்றுபோகும்மயக்கம் தெளியத்தான் அது புலப்படும்..அது வரைக்கும் ‘நான்’ வேதாளம் மாதிரி தொங்கிகிட்டு கிடக்கும் தோள் மேல  மனம் தனியாக உடலை இயக்கமுடியாது..அதற்க்குத்தான் உயிர் உடலுக்குள் இருக்கின்றது. இந்த உயிரில் இருந்து தான் பிராணன் மனதுடன் தொடர்பில் உள்ளது.ஒருவர் மேலிருந்து கீழாக பார்த்து கொண்டிருக்கிறார், மற்றொருவர் கீழிருந்து மேலாக சுடர் விரித்து இயக்கமுற்றிருக்கிறார். மனமாகிய நான் மேலிருந்து உயிரின் ஊடாக உடலில் வர்த்திக்கிறேன். உயிராகிய மற்றொரு ‘அவர்’ உடலில் இருந்து மேல் முகமாக பிரணனாகிய சுவாலையை விசிரிம்பித்து மனதுக்கு உஷ்ணம் கொடுத்து உடலில் வழி நடத்துகின்றார்  கீழிருக்கும் உயிரோ ,உயிரில் இருந்து பிரகாசிக்கும் பிராணனோ ‘நான்’ எனும் மமதை கொள்வதில்லை, அதனாலேயே ‘அவர்’ என குறிப்பிட்டடேன். மனம் மட்டும் தான்’நான்’ என மமதை கொள்ளும். உண்மையில் அது வெறும் மமதை மட்டுமே...வெங்காயம் போல உள்ளே ‘நான்’ என ஒன்றுமில்லை. மனம் தான் நானாக இருக்கின்றது அதனாலேயே, ஸ்வாத்மாராமனும் ஹடயோக பிரதீபிகையில் ‘யத மன தத பிரான... தத பிரான யத மன:” என குறிப்பிடுகின்றார்

தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்

தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் ஆதியே துணை.. குரு வாஅழ்க குருவே துணை.. தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் என்ன என்பதை உணரும் தருணம் வாய்த்த முகூர்தம் கிடைத்தது என்பது மகிழ்ச்சியான நிகழ்வே தான். சுத்தமான பாத்திரம் முன்னால் நீட்டப்படும் போது ஈயாது முகம்திருப்புதல் நன்றல்லவே..ஆதலின் ஈந்து விட்டேன்..ஈன்று விட்டேன்..அந்த ஆறாவது அறிவினை..பெற்றவர் பேறு கொண்டவர் என்பதில் மாற்று கருத்தில்லை....எண்ணிலிகோடி சென்மங்களின் பிறவி பலனென்பதில் ஐயமுமில்லை...நமசிவாயம் வாஅழ்க..நாதன் தாள் வாஅழ்க..இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாஅழ்க. வாஅழ்க குருவடி வாஅழ்க வாஅழ்கவே

திரு விளங்குதல்

ஸ்தோத்தரித்தல் தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா? மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி? சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா? ”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்..... அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன.... சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன.... நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம். இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள் தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார் ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?... “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள் திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார். அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள் இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்... அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும் அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார் கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”..... இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர் உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்... இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை... ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை

குரு பாதம்

குரு பாதம் ---------- " பன்னீர் ஒழுகும் உன்றன் பாதமலரை என்றன் சென்னிமிசை மீதேற்றி அருள்செய்வாய் மனோன்மணியே!"            - குணங்குடியார் குரு பெருமானார் திருவடியை," பன்னீர் ஒழுகும் பாதமலர்" என்கிறார் குணங்குடி யார். மணம் கமழும் பாதமலர் என்கிறார்.       "நின் பாதமெனும் வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே!"           - அபிராமி பட்டர் "நின் பாதமெனும் வாசக் கமலம்".... என்கிறார் அபிராமி பட்டர். தன்னை ஆட்கொண்ட குருபிரான் திருவடியை மணக்கும் தாமரை என்கிறார் அபிராமி பட்டர். " சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாட" என ஔவைப் பிராட்டியார் விநாயகர் அகவலில் குறிப்பிட்டுள்ளார். குளிர்ந்த மணம் கமழும் சிவந்த செந்தாமரை போன்ற பாதமலர் என்கிறார் ஔவையார். குருவின் திருவடியை மெய்ஞ்ஞானிகள் அனைவரும் வாசம் கமழும் பாதமலர் என்கிறார்கள். அஃது என்ன வாசம்- மணம்? வள்ளலார் அருளிய திருவருட்பாவில், " என் அறிவெனும் பதம் என்அறிவினுக்கறிவாய் இருந்த செங்கமலப் பதம்" என்கிறார். சிவந்த செந்தாமரை பதம் என்பது அறிவெனும் பதம்- அறிவினுக்கு அறிவாய் இருந்த பதம் என்கிறார். குருபாதம் என்பது அறிவு மயமானது.அறிவே வடிவமானது.  அறிவு மணம் கமழுவது. அங்கிருந்தே நம் ஆன்மாவிற்கான  அமிர்த வர்ஷிப்பு பொழிகிறது. " அறிவாய் இருந்திடு நாதவொலி காட்டியே அமிர்தப் பிரவாக சித்தி அருளினை"... என்கிறார் தாயுமானவப் பிரபு. ஆசானின் ஆடும் திருவடியை நாடி நின்றாரைச் சும்மா இருக்கும் சுகம் தானே தேடி வரும். " தேசிகன் ஆடும் திருநடனம் கண்டால் தித்திக்கும் என்னுயிரே" என்றும் " ஆசின் மாமறை ஆதி புராதன மாசிலாத் தனிகையர் மனுமகன் ஓசை கொண்ட நடனத்தாலே மனு ஈசனாகும் இயல்பெடுத்து ஓதுவாம்" என்றும் பிரம்ம பிரகாச மெய்வழி ஆண்டவர்கள் குருபாதம் குறித்து அருளியுள்ளார்கள். தேவ நடனம் புரியும் திருப்பாதம் அது. அங்கிருந்து தான் ஓசை கொண்ட திருநடனம் எழுந்து மனுவை ஈசனாக்கும் செயல் நடக்கிறது என்கிறார்கள். திருஆலவாய் தலத்தின்-  திரு அம்பலத்தே குருபரன் ஆடும்   ஓசை கொண்ட நடனத்தால் வெளியாகும் நாதவொலியை செவிமடுத்து கேட்டலே தவம் நிஷ்டை தியானம் என்பதாகும்.

காத்துள்ள போதே தூத்திக்கொள்"

"காத்துள்ள போதே தூத்திக்கொள்" என்பது போல காத்துள்ள போதே மெய் பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் னீ அறியா பருவத்து சிறு பிள்ளையாக இருந்தால் னம் வாக்கினால் என்ன பயன்? ஒன்று மில்லையே அப்படியிருக்க சுணசுணப்பாண அறிவுடைய பருவத்திலே உன் செவியிலே எம் வார்த்தை விழுகிறது என்றால் அது எப்பெரும் பேறு! அதுவும் உன் மொழியிலேயே எம் வாக்கு பிறக்கின்றது என்றால் அது எப்பேர்கொத்த வாய்ப்பு! இப்பேர் கொத்த வாய்ப்பைத்தான் னினைந்து னினைந்து மனம் கரைந்து கரைந்து உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ! சாலை ஆண்டவர்கள்

ன் ண் ல் ள் அட்சரங்கள்

அட்சரங்கள் அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம். ன் ண் ல் ள் என்பவை வெவ்வேறு ஓசை நயத்தினை கொண்டது..அவை துடும் இடங்களும் வெவேறானவை...பொதுவாக உயிர் எழுத்துக்கள் எங்கும் படாமல் வெளிவரும்,, மெய்யெழுத்துக்கள் படகூடிய இடங்கள் ஒவ்வொன்றும் வெவேறு இடங்கள்...க் என சொல்ல அது ஒரு இடத்தில் ஒட்டி இருக்கும்..ங் என சொல்ல வேறொரு இடத்தில் ஒட்டும்...ச் என அப்படி ந் வரை ஒவ்வொரு இடம் இருக்கிறது....ஆனால் உயிர் எழுத்துக்கள் எங்கும் பதியாது நீர் ஒழுகி வருவது போல ஒழுகும் தன்மை உடையது.. உயிர் அறிவுகளில் ஆறரிவு கொண்டவன் மனிதன், அந்த ஆறாவது அறிவு என்பது வாக்கறிவு...அதாவது பேச்சறிவு..பேசும் திறன்..இது மனிதனை ஏனையவைகளில் இருந்து வேறிட்டு காட்டுகிறது. இது இயற்க்கை விளக்கம், இயற்க்கை உண்மை . இ்யற்கை வெளிப்பாடு. இங்ஙனம் வாய் மொழியான ஓசைகள் மனிதன் கண்டு அறிந்து அதனுள் இருக்கும் அறிவுகளைகளை உயிரில் பதித்து உயிர் தூய்மையை அடையவே அனாதி இயற்க்கை கடவுளருளால் வழங்கபட்டிருக்கிறது. இதனை வாக்கு என வள்ளல் பெருமான் விளக்கி இருக்கிறார்..அதாவது சூட்சுமை பரா பைசந்தி மத்திமை வைகரி என நுண் ஓசையிலிருந்து விரிந்து செவிபுலனுக்கு வருவதை வைகரி என முடிக்கிறார்...இப்படி சூட்சுமை எனப்படும் வாக்கானது வைகரி நிலையினால் காதுக்கு எட்டுகிறது. இது அட்சர நிலை சுருக்கம். அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும் ~❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

மூலம்

"மூலம் அறிந்தாக்கால் குதம்பாய் முக்தியும் உண்டாமே" என குதம்பை சித்தர் பாடல். எனில் மூலம் என்றால் என்ன என வினவுமிடத்து மும்மூலங்கலை யாவரும் சொல்ல காண்கிறொம். அவையாவன கீழ் நடு மேல் என மூன்று. இவையை உற்று நோக்குங்கால் "உடல், உயிர், பூரணம்" என நம் சிற்றறிவால் உணரலாம், எனில் “உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்தில் சிறிது ஜனம் வெவ்வேறென்பர்" என அகத்திய பெருந்தகையும் சொல்லுகின்றார். ஆகையின் மூலமே முக்திக்கு முதற்படியாயிற்று. "நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் இஃதின் பயனறிவாரில்லை வேதியராயினும் விளக்கவொண்ணாதது தேவியுந்தானும் திகழ்ந்து நின்றாலே" என திருமந்திரத்தில் கிடக்க காண்கின்றோம். ஒளவைபிராட்டியாரும் "உந்தியுன்னே ஒருங்க சுடர் பாய்ச்சின் அந்தி அழலுருவாம்" என சொல்ல காண்கின்றோம். எனின்,மற்றொரிடத்தும் "நாபிசுழியை நயமுற நோக்கிடின் சாவதுமில்லை உடம்பு" எனவும் சொல்ல பட்டிருக்கிறது. பதஞ்சலியாரோ தமது யோகசாதனை நூலிலும் நாபி சக்கரத்தில் சம்யமம் பண்ண தூல உடலின் ரகசியங்கள் அத்துணையும் அவ்யோகிக்கு கிடைக்கபெறும் என பகன்றுள்லமை காணலாம். எனில் அவ்விரகசிய நிலை என்னவோ எனின் அது நாம் அறியவேண்டியதுவும் அல்லவோ அன்றோ? வள்ளலர் பிரான் தாம் விளம்பியிருக்கின்ற திரு அருட்பா உரைநடை மூலமாக எண்ணிறந்த ஞான ரகசியங்களை விட்டு சென்றிருக்கிறார். அதின்கண் பார்க்கையில் சன்மார்க்க கொடியின் ரகசியமே மேலோங்கி நிற்கின்றது. அதை விளக்குமிடத்து "நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது, அந்த நாடியின் மேற்புறம் புருவமத்திக்கு உட்புறம் ஒரு சவ்வு தொங்குகின்றது. அதில் ஏறவும் இறங்கவும் செய்ய நாடிகள் இருக்கிறது" என்கிறார். இவையெல்லாம் சுட்டிகாட்டுவது அந்த பராசக்தி நிலையமகின்ற பர நிலை குறிப்பே ஆம் அல்லவா?. உடலுக்கு என கீழ் மூலம், உயிருக்கு என நடு மூலம், பூரணத்துக்கு என மேல் மூலம். இம்மூன்றையும் அறிண்ட்நிருக்கின்ற யோகியவனே மும்மூ்ல யோகி. “அடியாகி முடியாகி மூலந்தன்னில் முப்பொருளும் தானாகி நடுவுமாகி அடியாகும் மூலமதே அகாரமாகி அவனவளாய் நின்ற நிலை அணுவதாமே”                                 ~திருமூலர் ஞானம். ~ ❣️ திரு ரியான் அய்யா அவர்கள் ❣️

விசாரம்

அனைத்தையும் அண்டத்தில் படைத்தான், பிண்டத்திற்கு தேவையானதையும்  கொடுத்தான்  படைத்ததை  ரசித்து சுவைத்து உண்டு கண்டு உணர்ந்து  அனுபவிக்கின்றாய் இதில்  நான் தான் என்று கூறிக்கொள்கின்றோம் சற்று கவனமாக பார் நீ ஒரு கருவியே  இந்த வாழ்க்கை ஒரு மயக்கம்  வாழ்க்கை என்பதும் ஒரு பேறறிவு வருகையில் விளங்கவரும்  அந்த அறிவையும் இறைவனே கொடுக்க உள்ளங்கை நெல்லியாய் தெரியவரும்

அறிவியல் ஆன்மீக தேடல்

==== அறிவியல் ஆன்மீக தேடல் === முதல்ல ஒரு காந்தத்துக்கு காந்த வலயத்துக்கு உணர்ச்சி கொடுத்து காமியுங்க ஐயா காந்தம் மனமாகி ருசியாகி புலனாகி என சொல்லிகிட்டு இருக்காம... ஒரு பீஸ் காந்தத்தை தருகிறேன் ...அதற்க்கு மனம் உருவாக்கி காமியுங்கள்.. அதற்க்கு ருசி உணரும் தன்மை உருவாக்கி காமியுங்கள்... அதை ரிசெர்ச்ச் பண்ணுவோம்...வாருங்கள் மாடல் என்பது இப்படித்தான் இருக்கும்... உயிர் வராது... உணர்வு வராது புலன் வராது.. இச்சை வராது..அறிவு வராது...மரனம் கூட வராது....காந்தம் காந்தமாகவே இருக்கும் அருள் வெளிக்குள்ளே நிறை துகள்கள் வந்தது எங்ஙனம்?...இதைத்தான் CERN லே லார் ஹேட்ரான் கொலைடர் மூலமா பாத்துகிட்டு இருக்காங்க...அவங்களும் இதுவரை கண்ட பாடில்லை கோடானுகோடி வருடங்களாக ஆனாலும் ஒளியானது சடப்பொருளாக விரியாது உருவாகாது...ஒலியானதும் சடப்பொருளாக உருவாகாது...அப்போது இந்த சடப்பொருள்கள் எப்படி வந்தன..இது உலக விஷயம் அதெல்லாம் தியரி தான் சார்...வாஸ்த்தவம் இல்லை...தேடி தெடி போயி ஒண்ணும் புடிகிடைக்காம அலைஞ்சுகிட்டு இருக்காங்க...தியரி எல்லாம் பாத்தா சரியானதாக தோன்றும்...வாஸ்த்தவத்தில் உதைக்கும் இதையே கண்டு பிடிக்கமுடியலை...பின்ன எங்க ஆன்மாவையும் உயிரையும் கண்டுபிடிக்க போறாங்க? சும்மா ஒரு தியரி தான் ஜீவகாந்தம் என்பது... மொதலில் இந்த ஜீவகாந்தம் எங்கிருந்து எப்படி உருவானது என கேட்டால் பதில் இல்லை....அண்ண்டண்டங்களுக்கு அப்பால் இருக்கிறதா சொல்லப்படும் ஏதோ ஒண்ணை காமிச்சு மீண்டும் கதை ஓடும்..அதிலேர்ந்து உருவாச்சுண்ணு...பாவம் தெரியாத புள்ளைங்க நம்பிகிட்டு திரியும் அறிவியல் துணைக்கொண்டு ஆன்மாவை எக்காலத்துலயும் உணர முடியாது. சைன்ஸ்ஸால எல்லாத்தையைம் எப்போதும் விளக்க முடியாது, எதை விளக்கப்புகுந்தாலும் மிச்சம் ஒன்னு இருக்கும் அதை அதனால் நெருங்கக்கூட முடியாது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்னா இணைச்சு பிழைப்பை வேணா ஓட்டலாம் எக்காலத்திலயும் உண்மையை உணர முடியாது. --- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள்.  ❣️

ஓ ஓ என்னுயிரே

ஓ..ஓ..என்னுயிரினும் மேலான இன்னுயிரே..என் காதலனே..நீ ஒருவனேயன்றோ நான்?... ஓ என் ஆதியாம் உடலமே... என் உடன் பிறப்பே..என்னுடன் கருவோடு அமர்ந்து வளர்ந்தவனே..ஓ..ஓ..உன்னையே நான் மறந்தேனல்லவா??..மன்னித்துவிடு ..என்னருமை உடலமே..!!! ஓ..ஓ..சிற்றணு வடிவேவென  என் அன்னை கற்பமதில் உருவோடுருவாய் அருவேயருவாய் உருவருவாய் உயிராய் உயிர்காதாரமாகினவனே உனை எந்தோ மறந்தேன் ..மன்னித்தருள்வாய் என் ஆருயிர்க்காதாரமாகினவனே..எந்தாயும் தந்தையே...!! அகமென்றார் அலைந்தலைந்தேன் புறமென்று நீயிருக்க புகின்றறியேன்...எத்தன்மையென பகிர்ந்தறியேன்...பித்தனாய் திரிந்தேன் உன்னுள் நானே..உன்னையறியாமலே....எந்தையே தாயே..என்னுயிர் காவலனே..உயிர் காக்கும் உடலமே...!! அகமென்று நானிருக்க புறமென்று நீயிருந்தாய் எஞ்ஞான்றும் காவலாய் கருத்தாய்...கண்ணிருந்தும் காணறியேன் உன்னை கருவாயோடுருவாய் காத்து நின்றோனே...உன்னுள் என் உயிரிருந்தும் உணர்ந்தறியேன் உயிரின் உயிராமென் உடலமே...நீயன்றி என்னுயிரெங்கே..கண்டறியாது கலங்கி நின்றேனே கருணை புரிவாய் கருத்தோனே...!!!! உயிரென்றார் உணர்வறியார்...உணர்விற்க்கு ஆதாரமாம் உடலறியார்..அழியார் எனினும் புகுந்தறியார் ..உயிரோடு புகுந்தோமென்பார்..உடலமே நீயன்றி உயிர் கொண்டதெப்போதென பகிர்ந்தறியா குற்றமே எனவறியா புலம்புகின்றனரே..பொறுத்தருள்வாய் எந்தையே தாயே....!!! ஒத்ததாகி உனர்வாகி உயிராகி இத்திசை கொண்டெழும் வேந்தே எத்திசை நோக்கினும் உன் உடலமே உன் உருவேயன்றி மாற்ரொன்றுமிலையே கருணையே கடலாய் பூவாய் பல்லுயிராய் பலதாய் பலப்பலதாய் பல்லுயிராய் படைப்பிற்காதாராமகி பலகோடி அண்டமெல்லம் தானாய் நிறைந்து தானலதாய் விலங்கும் தம்பிரானே உனை மறந்த குற்றம் நினையாது என்னுடன் மேவி எஞ்ஞான்றும் இருந்தருள்வாயே....!!! நீயிருக்க என்னுடன் உயிராய் உன் நிறை அகலுமென பாரானபாரெலாம் நான் பறந்து திரியாமல் என்னுடன் நீயும் உன்னுடன் நானும் பலவல்லாமல் பதிந்திருப்போமாக...பரமனாம் பதியே பதமருள்வாயே பதறாமல்..என்ந்தையே தாயே உயிர் காவலாம் தனித்துணையே...!!! அண்டபகிரண்டமெலாம் நீயே இறைவாய் அந்த பகிரண்டத்தினுள் வந்து பிறந்தேன்..நீயே எனை வளர்த்தாய் உன்னுயிரை தந்தே..உன்னுயிரை அறியா பேதை  என்னுயிரென்றேன் பொறுத்தருள்வாய் புண்ணியனே என்னுடலமே எந்தாயே தந்தையே...!!! உன்னுளே இயங்குகின்றேன் அந்நாள் தொடூ நாம் ஒத்திசைந்த தருணமாம் காலத்தே இத்திசை யனைத்தும் நிறை கொண்டெழும் பேராற்றல் விளக்கே..அருமையே ஒருமையின் நாயகனே உள்ளுணர்வே உணர்வாய் உடலமாய் மறைந்திருக்கு மறை பொருளே...மறைக்குமெட்டாத மணிவிளக்கே..மணிமன்றில் ஆடும் வேந்தே...!!! அகமென்று அலைந்தன ரொருகோடி அகத்தின் அகமென திரிந்தனரொரு கோடி உயிரென மலைத்தனரொரு கோடி உயிரினுயிரென திகைத்தன ரொரு கோடி அந்தோ இழந்தனரொரு கோடி எந்தாய் நீயோ அவர் எவராலும் பகுத்தறியா வண்ணம் பரத்தில் பரமாய் பகுத்தறியா விதமாய் இகத்திலோர் உயிர் கொண்ட உடலமாய் தரித்திருக்க கண்டறியா பேதைகள்..அந்தோ எஞ்ஞான்று சொல்வேன் உன் திருத்திற மதனை எங்ஙனம் புற்றுதல் எளிதோ எந்தாயே தந்தையே..தனிப்பெரும் தலைவனே....!! தத்துவ குப்பைகள் தனித்தனி கடத்தியெனை தத்துவாதீத உறுபொருளை காண்பித்தாய்...இத்தல மொக்கும் பரந்திருக்கு பரமனே பராபர பரதலமே..எத்திசை தேடினும் காணா திருப்பொருளே...என்னுடல் நாயகனே உயிர்காவலனே உணர்வாய் வீற்றிருப்போனே..நீயே எனையாட்கொண்டாய்..நீயே திருவீற்றிருக்கின்றாய்...நானே சிற்றடியேன் உந்திருமார்பில் உன்கருணை திருதிறத்தால் வாழ்ந்திருக்கின்றேன் உன்னுடன் இசைந்தே...எந்தையே தாயே தயாபரனே....!!!! மந்திரங்கள் பலகோடி நூறாயிரம் படைத்து நீயே உன்னாவில் பகிர்ந்திருக்கின்றாய்..நீயே அதை உச்சரிக்கவும் செய்கின்றாய்..ஆனால் நானோ நானே உச்சரிக்கின்ரேன் என மதிமறந்தேன்..செயெலெலாம் நீயே செய்கின்றாய் எந்தையே எனினும் நானோ நானே செய்கின்றேன் என மதித்திருந்தேன்...மனமே உடலென  வெறுத்திருந்தேன் மனமறியாமல் நீயே மனதுக்கும் மறலியாய் கொண்டிருப்பதை இருப்பறியேன்... மறந்தருள்வாய் மறலி தீண்டா உருவோனே..மாகாகாலனே..!!! உன்னை மறந்தோர் பலகோடி கொண்டழிந்தார் பலகோடி ஜென்மங்கள் நிறைபொழுதும்..இசைந்தங்கிருந்தார் ஒருபேர் சொல் பேரறியா பரமேஸ்வரர்கள்... ஈசனென சொல்வார் ஈசன் வடிவறியார், வடிவே வாழ்வாக வந்திங்கமர்ந்திருக்கும் திருவடிவே இங்கு உன் வடிவே அன்றி எவ்வடிவில் உயிர் தங்கும் இறையே...புறத்தார் புகன்றாலும் புகுமாறில்லையே பரமே குருவே பராமகமே....!!! Z