Wednesday, December 7, 2022

அஜபா காயத்திரி=

===அஜபா காயத்திரி==== வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும். ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”. இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது . “தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்” ‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம் திருசியசூன் யாதிகளே தியான மாகும்; சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதியெனத் தானே போகும்; வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்; அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான் அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’== (காகபுசுண்டர் உபநிடதம்

அன்பே சிவம்

அன்பே சிவம் சிவலிங்கத்தின் தன்மை ஆண்  தன்மையும் பெண் தன்மையும் குறிக்கின்றது    இந்த இரண்டிற்கும் ஆதாரமாக மூலமாக இனைப்பது அன்பு இதனால் அன்பே வடிவானவன் சிவன் என்றும் அன்பே சிவம் என்றும்  குறிப்பிடுகின்றார்கள் இதில்தான் ஆண்-பெண் தத்துவம் உள்ளது இதில் இந்த இரண்டு விதமான அணுக்கள் ஒன்று சேர்வது ஆண்  பெண் தன்மை இதன் மூலமாக உருவாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் சிவலிங்க ரூபமாகவும் ஜீவ தன்மையை  ஆணாகவும் பெண்ணாகவும் குறிக்கின்றது இந்த ஆணுவிற்கு இது ஆணா பெண்ணா என்று இந்த அளவிற்கு தெரியவே தெரியாது இது ஜீவ பரிமாணத்திற்கு வந்த பிறகுதான்   ஐக்கியம் ஏற்பட்ட பிறகுதான் அது ஆணாகவும் பெண்ணாகவும் மலர்கின்றது தற்பொழுது இந்த உலகில் குரோமோசோம் டிஎன்ஏ மாற்றம் செய்யப்பட்டு மிருகங்கள் பறவைகள் முதல் காய்கறிகள் வரைக்கும் இந்த பரிமாணம் இந்த உலகில் நடந்து கொண்டிருக்கின்றது இந்த  அணுவிற்கு  ஜீவத்தன்மை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனால்  அது எக்கோடி காலத்துக்கும்   இந்த அன்பான வாய்ப்பு இல்லாமல்  போகிறது  வாய்ப்பு உண்டானால் தனக்கென்று ஒரு சமூகம் உற்பத்தியாகின்றது இந்த சமூகத்தில் ஆதியில் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இருந்து கொண்டு ஒரு உருவம் நடைபெற்று பல்வேறு விதமான இனப்பெருக்கங்களை செய்துகொண்டு பிறந்து கொண்டே இருக்கின்றது பலவித கோடியான அணுக்கள் ஒன்று சேர முடியாமல் இந்த இருட் கோளத்தில் இருந்து கொண்டும் இருக்கின்றன ஒருசில அண்ட வெளியில் குளிர் பிரதேசமான இடங்களில் இந்த அணுக்களுக்கு உயிர்த்தன்மை கிடைக்காமலேயே போகிறது அதற்கு பொருத்தக் கூடிய வாய்ப்புள்ள அணுக்கள் கிடைக்காமல் அந்த வாய்ப்பு கிடைக்கும் வரை அந்த இயக்கத்திலேயே இருக்க வேண்டிய சூழல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது பலவித அணுக்கள் இந்த பூமியில் வளர ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உற்பத்தியை தொடங்குகின்றது நாம் நினைப்பது போல் இந்த கடவுள் இந்த பூமியை பிரபஞ்சத்தை ஜெபம் செய்து சிவன் பார்வதி என்று ஒரு ஆணையும் பெண்ணையும் ஒன்றுசேர்த்து இந்த பிரபஞ்சம் உருவாக வில்லை இது இந்த கோடான கோடி அணுக்கள் மூலமாகவும் அதில் அன்பாகவும்  வார்த்தையாக இருக்க கூடியது ஆனால் அதில் சக்தி உள்ளது   பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு இந்த பிரபஞ்சம் தோற்றத்தில் உற்பத்தியை செய்து கொண்டே இருக்கின்றது, இந்த ஜீவன் தான் சிவலிங்கம் இந்த ஆண் தன்மையே பெண் தன்மையே ஜீவனாக இருக்கின்றது இந்த ஜீவன் உலகத்தில் இருப்பது அனைத்தையும் அறிந்து கொள்கின்றது புரிந்து கொள்கின்றது அண்டஅண்டாங்கள் கடந்து   அறிவால் பார்க்க கூடிய தன்மை இந்த ஜீவனுக்கு பிரகாசமாக உள்ளது

ஓசை கொண்ட திருநடனம்

ஓசை கொண்ட திருநடனம் " ஆசின் மாமறை ஆதிபுராதன மாசிலாத் தனிகையர் மனுமகன் ஓசை கொண்ட நடனத்தாலே மனு ஈசனாகும் இயல்பெடுத்து ஓதுவாம்." "கூசாமல் ஏறிடும் வாசிமுனையின் மேல் குருபரன் தன்னிடமே அந்தா தேசிகர் ஆடும் திருநடனம் கண்டால் தித்திக்கும் உன்னுயிரே."                           - பிரம்ம பிரகாச            மெய்வழி ஆண்டவர்கள் மெய்ஞானிகளின் சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாடவும்- தங்கள் பாதமெனும்       வாசக் கமலத்தால் தம்மைச் சரணடைந்த சீடர்களை வலிந்து ஆட்கொண்டு ஜ தங்கள் ஓசை கொண்ட நடனத்தாலே மனுவை ஈசனாக்கி விடுகிறார்கள். "ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலங் குருபரன் கொண்டாடத் தேடி உளே கௌஜஜௌண்டு தீர்ந்தற்றவாறே."                      -திருமந்திரம்2760 திருநடனம் புரியும் திருவடி யும், அத்திருவடியிலிருந்து ஒலிக்கும் மறைச்சிலம்பொலியும், அச்சிலம்பொலியிலிருந்து இசைக்கும் பாசுரங்களும் வழங்குவதற்கு வேண்டியே திருக்கோலம் கொண்டெழுந்து வந்தவன் குருபரன்.                             அவன் திருவருளால் அடியேன் என் உள்ளத்தினுள்ளே அவனைத் தேடிக் கண்டு கொண்டேன். என்னை ஆட்கொள்ள வேண்டியே அவன் ஆட நின்றான். அந்த மாமணி ஈசனாகிய குருபரன் மலரடித் தாள் நடனமாட, அது நாதப் பிரம்ம சிவநடனம் ஆமே. குரு பிரானின் ஓசை கொண்ட திருநடனமே நம்மை சிவமாக்கும் .

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் இந்த இருண்ட  துகலானது அதன்  குடும்பத்தில்  உண்டான  உசும்புதலினால் இந்த பிரபஞ்சத்தோற்றத்திற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இந்த பிரபஞ்சத்திற்கு கிடைத்தது இதற்கு முன்னே அன்பானது வெளிப்பட்டு இதில் இருக்கும் இந்த ஈர்ப்பு சக்தியான அன்பு  வெளிப்பட்டு அனைத்து ஜீவராசிகளுக்குள்ளாக அன்பாகவும் மலர்கின்றது ஒரு சிறு  துளி அணுவிற்கு உயிர் கூட ஒரு ஜீவ இனைப்பால் தான்  அன்பு பரிமாணத்திற்கு வருகின்றது அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே இந்த பேரொளியே அன்பு மயமாகவும் தேஜோமயமான இந்த பிரபஞ்சம் முழுவதும் பரந்து  விரிந்து இருக்கின்றது,அன்பு இல்லாமல் எந்த ஒரு ஜீவனும் வாழ தகுதி இல்லாத இடமாக இந்த பிரபஞ்சம் வியாபித்து அமைத்திருக்கின்றது அன்பு மலர்தல் இல்லையென்றால் ஆன்மீகம் உண்டோ அன்பு துளியாக வருவதற்கு அந்த வார்த்தைக்குள் அன்பு என்பது இந்த பிரபஞ்ச சக்தியாகவும் மகா பெரிய தியாக சக்தியாக இருக்கின்றது  இந்த பிரபஞ்சத்தில் ஒருஇடத்தில் உயிர்கள் இல்லாமல்   போனாலும் வெவ்வேறு இடங்களிலும் பல பல பல ஜீவன்களாக பலப்பல உயிர் ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது இவை உயிர்ப்பு பெற அன்பை பரிமாணத்துக்கு கொண்டு வருகின்றது ஒரு அழகான மலர் மீது வண்டு  அன்பான ஓசையில் ரீங்காரமிட்டுக் கொண்டே இந்த மகரந்தத்தை தழுவி மகரந்தத்தின் மூலமாக அடுத்த ஒரு ஜீவ உற்பத்திக்கு நடைபெற ஒவ்வொரு ஒரு ஜீவன்களும் உதவியாக இருக்கின்றது ஒவ்வொரு  ஜீவனும் பிரபஞ்சத்தின் நியதியான அதனதன் தன்மையில் வேலை செய்து கொண்டே இருக்கின்றது எக்கோடி காலத்துக்கும் நடந்து கொண்டே இருக்கின்றது இந்த ஜீவ உற்பத்தி இல்லை என்றாலும் தேக்கம் அடைந்தாலும்  இந்த பரிமாண வளர்ச்சி  வேறு ஒரு கோணத்தில்  பரிமாணத்தில் வேறு ஒரு நிலையில் இந்த மனிதனாகவும் விளங்குகளாகும் அதற்கு  மேற்பட்ட மனிதனே இல்லாது இருக்கின்ற ஒரு சூழலில் இந்த இயற்கை நியதியில் இந்த கடவுள் துகள் அமைத்துக் கொண்டே பிரபஞ்சம் இயங்கி கொண்டு  இருக்கின்றது கடவுளின் தீர்ப்பு இதுவாக இருக்கும் பொழுது ஜீவன் உற்பத்தி நடந்து கொண்டே தான் இருக்கின்றது அதற்கு முடிவே இல்லை ஈர்ப்பு தன்மைக்கும் அளவிலான பேரானந்தமான அன்பிற்கும் வானமே எல்லை.

சிருஷ்டி அன்பு

இதயம் அன்பு என்பதும் இறைவனை குறிப்பது அல்ல, ஆதியில் கடவுளுடைய ஒளித்தன்மையும் இருள் தன்மையின் உசும்புதலினால் கடவுள் தன்மை (முயற்சி)  இதற்குத்தான் அன்பு என்று பெயர், இந்த ஜீவன் என்ற அமைப்பு  அருளபடுவதும் அருள் தன்மை  ஏற்படுவதையே இதையே அன்பு என்பர், மிகவும் அன்பாக இருந்ததும் இதுவே, ஜீவன் என்பது, தனியாக இருக்கக் கூடியது அல்ல இருளாக இருக்கக்கூடிய ஆன்ம அணுவினால் ஒன்றும் செய்ய முடியாதது, இவை இந்த பிரபஞ்சம் உயிரோட்டத்திற்கு வந்தால் தான் ஆண் பெண் தன்மைக்கு வர முடியும் , இந்த இரண்டுக்கும் இடையில் அன்பு என்ற வார்த்தை நிறைந்துள்ளது, இதையேதான் ஆதியில் வார்த்தை இருந்தது, இந்த அன்பு என்கிற வார்த்தையை உண்டாணதினாலே சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானது எல்லாம் அவர் அன்றி உண்டானது வேறொன்றுமில்லை, இந்த  உண்டானதற்கும் உருவாக்கப்பட்டதற்கும் இதற்கு தான் சிருஷ்டி என்று பெயர்,நாம் இதையே கடவுள் என்று சொல்கின்றோம் , அனைத்தையும் படைத்து சிருஷ்டித்தவரை தான் கடவுள் என்று சொல்கின்றோம், ஆக இந்த கடவுளுக்கு மரியாதையாக உள்ள வார்த்தை அன்பு என்கின்ற ஒரே வார்த்தை, இந்த அன்பு என்கிற வார்த்தையில் தான் சிருஷ்டி அடங்கியுள்ளது, சிருஷ்டிக்கு ஆதாரமாக உள்ளது ஆண் பெண் என்கின்ற பகுப்பு, இந்த தன்மையே ஆண்ம அனுவிற்கு செயலற்ற தன்மையாகவும் உபகாரமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த அன்பெனும் அணு அன்பெனும் அணுவில் அகப்படும் மலையே, என்றும் அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே என்றும்,  அந்த அணு தன்மையாக இருக்கக்கூடிய அந்த அனாதி பேரறிவாகவும் நுணுக்கமாகவும் இருக்கக்கூடியது, அறிவுக்கு அறிவாகவும் இருக்கக்கூடியது, எத்தனை பேர்கள் இந்த வார்த்தையை கேட்டார்களோ, தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார்களோ, அத்தனைபேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார், இந்த வார்த்தையும் அதிலுள்ள நுணுக்கத்தையும் பெற்றால்தான் பயனுண்டு, இல்லையென்றால் பிரயோஜனமில்லை, சின்ன வயதில் இருந்து அன்பு என்ற ஒரு வார்த்தை எத்தனை கோடி முறை கேட்டாலும் சொன்னாலும் பாராட்டினாலும் இந்த அறிவுக்கு அகப்படாது,  உயிர்ப்பானது இந்த தெய்வத்தனுடைய வார்த்தைகளை உனக்கு ஆசீர்வாதமாக கொடுக்கப்பட்டுள்ளது, உயிருக்கு ஆதாரமாக இருக்கக்கூடியது, ஆதாரமாகவும் உள்ளது, அன்பு என்ற அந்த வார்த்தை சிருஷ்டிக்கு ஆதாரமானது இரட்சிப்புக்கு ஆதாரமானது, அன்புதான் இந்த இருண்ட பொருளிலிருந்து ஒளிக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே, இந்த அன்பு என்ற ஒரே வார்த்தையில் இந்த இருண்ட பொருள் மலர்ந்ததினால் தான் சிருஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்றது, சிருஷ்டிக்கு புரிதல் வந்ததும் இந்த ஆதாரமான வார்த்தையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ,இதனூடாக இவன் இரட்சிப்புக்கு செல்ல வேண்டும், இங்கு இரண்டும் அடங்கியுள்ளது, ஒன்று சிருஷ்டி மற்றொன்று முடிவான இறுதிநிலை, இந்த இரண்டும் அன்பு என்ற வார்த்தையில் அடங்கியுள்ளது, இந்த அன்பு   ஒளியிலிருந்து வந்ததை  எட்டிப் பிடிக்க முடியாது இது ஜீவ ஓட்டமாக உள்ளது ஒளியை நாம் எப்படி எட்டிப்பிடிக்க முடியும் இந்த மனிதனால் அறிய முடியாதது, இதையே மனிதன் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர், இந்த அன்பு என்ற ஒரு வார்த்தைதான் கடவுள் தன்மையாகவும் உள்ளது,  இந்த அன்பான  ஒளியில் தான் பிரவேசிக்க முடியும் வேறு எந்த உபகரணங்களாலும் அன்பையும்  ஒளியையும் அறிய முடியாது இதை அறிந்தவன் தான் ஆன்மீகத்தில் பயணிக்க முடியும்,புரிந்தவர்களே பாக்கியவான்கள் இறைவனுடைய பிள்ளைகளாக இருப்பர்.

இறைவனின் நியதி

இறைவனின் நியதி இந்த பிரபஞ்சத்தில் யாராலும் சிந்திக்க முடியாத அறியப்படாத அனாதி ஆகவும் எந்த ஒரு செயல்களும் செய்ய முடியாமல் தனித்தன்மையாக அதன் நெருக்கத்திலும் இருந்து கொண்டிருக்கும் ஆன்மதுகள் தன்னைத்தானே அறியக்கூடியதாக   இல்லாத நிலையில் அதனுடைய கூட்டு முயற்சியால் ஒரு கூட்டாக இருந்து ஒரு வினைக்கு எதிர்வினையாக இல்லாமலும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு தனக்கு என்று விடுதலை கிடைக்குமா என்ற ஒரு இடத்திலே இருந்து கொண்டு இருந்துகொண்டு அதனுடைய புழுக்கத்தில் வெளியே வர முயற்சி செய்து அதனால் ஏற்பட்ட இயக்கத்தினுடைய விளைவால் ஒரு முயற்சி உண்டாகி அது முதல் முதலாக தன்முனைப்புடன் வெளியே வருகிறது அந்த வெளியே வந்த அந்த மிகப்பெரிய ஒரு அற்புதமான நிகழ்வை அந்த ஒளி நிகழ்வை இந்த பிரபஞ்சமாக வியாபித்து அந்த ஒளி நிகழ்வுக்கும் இடையில்  ஒரு அன்பு மலர்ந்து இந்த பிரபஞ்சமாக பரந்து விரிந்த கோணத்திலே இருக்கின்றது இது கடவுளின் கிருபையால் இந்த உலகம் முழுவதும் ஒளியால் நிரப்பப்பட்டு அந்த ஒளியிலே ஏகப்பட்ட பிரபஞ்சத்தின் அணு துகள் ஜீவதுகளுடன் மலர்ந்து செடியாகும் கொடியாகவும்  வித விதமான பூச்சிகளாக  84 வகை யோனி பேதங்கள் ஆகவும் அந்த யோனி பேதத்திலே முழுவளர்ச்சி அடைந்து பல பல விதமான அணுக்களினால்  இந்த ஸ்தூலத்தில் பிண்டம் மனிதனாக வியாபித்திருக்க அதற்கு அவன் என்ன புண்ணியம் செய்தேனோ அந்த புண்ணியத்தில் மலர்ந்த இந்த இந்த ஸ்தூலம் மலர்ந்து இந்த பிராகசத்தில் ஒளிர்கின்றது  ஒரு அணு வித்தாக வந்த வித்து இந்த மண்ணிலே வந்து அதனுடைய புழுக்கத்திலேயே நினைந்து நினைந்து அன்பாக மலர்ந்து ஒரு முறை வருவதற்கு அந்த இயக்கத்தின் கவலையிலேயே வெளியே வந்து அந்த ஒளியாகிய அணுவாகிய சூரியனை பார்க்கும் பொழுது அந்த ஆனந்தமும் சந்தோஷமும் அதை பார்க்கும் இந்த ஸ்தூலமும் அதை புரிந்த இருவருடைய சந்தோஷமும் எல்லையில்லா ஆனந்தத்தில் நடனமாடுகின்றது  இதை மனிதனுடைய மனதால் அதை பரந்துவிரிந்த நோக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கிறான் இந்த பிரபஞ்சம் அனைத்திலும் இருக்கக்கூடிய  இருண்ட அணுத் துகள்களே  அதன் வாய்ப்பு  கடந்து இருக்கக்கூடிய ஒளி ஆகவும் வியாபித்து இங்கே எத்தனையோ இயற்கையின் வாழ்வியல் முறைகளை அனுபவங்களை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது  ஒவ்வொரு நீதியும் வளர்ந்தும் மறைந்தும் இல்லாமலும் போகின்றன எவ்வளவோ ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான விண்மீன்களும் நட்சத்திரங்களும் வளர்ந்தும் தேய்ந்தும் போகின்றன ஒரு சிறு அணுவுக்கு கூட இயக்கத்தினால் அது உயிர் பெறுமா இந்த வாழ்வு நமக்கு கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் இந்த ஆன்மஜீவிதம் வியாபிக்க ஒரு துளி கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இந்த பிரபஞ்சத்தில் அது இருந்து கொண்டு தன்னைத்தானே வருத்திக் . கொண்டுள்ளது இதற்குத் துணையாக ஒரு துணை கிடைக்கும் ஒரு இணைப்பு கிடைக்குமோ அந்த இணைப்பே நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு ஸ்தூலத்தில் இருக்க முடியுமோ என்று கருதிக் கொண்டே இருக்கிறதே ,அது எவ்வளவு பெற கடவுளின் நியதி வளர்ந்தும் தேய்ந்தும் வரக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் இதை அறிந்து கொள்ளக்கூடிய அறிவாகிய நம்முடைய அறிவு மனமாக இருக்க கூடிய இந்த மனித குலத்திலேயே இருக்கக்கூடிய மாணிக்கம் ஆனால் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள எத்தனை கோடி தவங்கள் செய்தாலும் கிடைக்குமோ  ஒரு பூச்சிக்கும் எத்தனை அணுக்கள் வரவேண்டியுள்ளது எத்தனை விதமான  சிதைவுகள் உண்டாக வேண்டியுள்ளது இந்த இயற்கையின் சுழற்சி முறையில் வளர்ந்தோம் தெரிந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் மனிதனுக்கோ மனதையும் கொடுத்து அவனுடைய இந்திரியங்களின் கொடுத்து அவன் அறிவுக்கு அறிவாகி இருக்கக் கூடியதை விட்டுவிட்டு இந்திரியங்கள் உறவாக மனம் செய்த போக்கில் நடந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இச்சையைத் தீர்த்துக் கொண்டோம் சுற்றித் திரிந்தான் அவனுக்கு இந்த அறிவு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது அவனுக்குள்ளே இருக்கும் அற்புதமான மலர்வது ஒரு காலமும் நிகழாமல் அவன் சுத்தி திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆன்மிகத்தில் ஒரு சிறு சிறு நிகழ்வுகளும் அவருடைய ஒரு ஒரு நிகழ்வும் அவனை மாற்றத்திற்கு உட்பட்டது அந்த மாற்றம் என்றும் அதுவரை அவனுக்குள் மலராத வரை அவனுடைய ஆன்மீகம் வெறும் காவி உடை உடுத்தி சுத்தி திரிந்து கொண்டு இருக்க வேண்டும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டும் இருக்க வேண்டும் தந்தை வழி தெரியாமல் தாய் வழி தெரிந்து என்ன புண்ணியம் நினைந்து நினைந்து தொழ தெரியாமல் அவன் அறிய வேண்டியதை அறியாமல் இருந்தால் அவனுக்கு என்ன புண்ணியம் வந்த வழியும் தெரியவில்லை போகின்ற வழியும் தெரியவில்லை இப்படிப்பட்ட அவனுக்கு ஊசி முனை வாசல் தெரியவே தெரியாது இந்த பிரபஞ்சத்தின் ஸ்தூலமாக வந்த நீ உனக்கு இந்த பிரபஞ்சம் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றது எவ்வளவு பெரிய மகத்தான உன்னதமான ஒரு செயல் அந்த செயல் நிகழாத வரை நீ இந்த பிரபஞ்சத்தில் ஜிவிப்பாயா உனக்கு இந்த வகை வகையான கண்கவரும் இந்த உலகத்தை நீ ரசிப்பாயா ஒரு சிறு கொசு முதல் நீ பார்க்க முடியுமா பார்க்கவே முடியாது என்றென்றும் நீ அந்த தன்முனைப்பு இல்லாத ஒரு ஜடமாக தான் இருந்திருப்பார் இந்த ஜடமாக இருந்தாயே உனக்கு இவ்ளோ பெரிய கருணையுடன் இறைவன் உனக்கு இந்த பரிசை கொடுத்திருக்கின்றான் அந்த பரிசைப் பெற்ற நீ நீ இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கிறாய் உன்னை நீ திரும்பிப் பார்க்காமல் ஏதோ ஒரு விஷயத்தை தேடிக்கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றாயே இருக்கின்றாயே இந்த பிரபஞ்ச பால்வீதியில் பிறக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் அவன் அருளாலே நடக்கின்றது உன் சிறு முயற்சியாலேயே நன்மையும் தீமையும் நடக்கின்றது ஒரு மழை பொழிந்தாலும் அவன் இல்லாமல் இந்த மழை கிடையாது ஒரு உயிர் வந்தாலும் அவன் இல்லாமல் கிடையாது ஒரு அணு இல்லாமல் எந்த அசைவும் இல்லை இதுவே இறைவனின் நிலையாக இருக்கின்றது ஆதியில் வந்தவன் அந்த ஆவியை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் நீ வந்த வழியை அறிந்து கொள்ள வேண்டும் ஆதி ஆதிக்கு முன்னால் இருந்த அன்பு மயமான கோலத்திலேயே இருக்கின்றதே அது ஒரு நாளும் நீ அறிந்து கொள்ள மாட்டாயா என்ற ஏக்கத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றான் நீ இந்த பூமியில் வந்து தஞ்சம் அடைவதற்கு நீ என்ன புண்ணியம் செய்தாய் உன்னை உன்னை அனுதினமும் தொழுது நிற்கின்ற இந்த சக்தியாகிய இந்த ஜீவன் உன்னிடத்தில் இருந்தால் தானே நீ இந்த உலகத்தில் ஜீவிக்க முடியும் இந்த ஜீவனை பெறுவதற்கு நீ எத்தனை கோடி காலம் தவம் இருந்தாலும் இந்த ஜீவன் உன் அன்புக்கு ஈடாகுமா அந்த ஜீவனை நீ அறிந்து கொள்ள முடியுமா இந்த ஜீவன் உனக்குள் பரிணமிக்க நீ என்ன புண்ணியம் செய்து இருப்பாய் இந்த ஜீவன் இருந்ததனால் பிறந்த  உன் அறிவு மலர்கின்றது உன் மனம் மரணமடைந்தது இந்த மலரும் தன்மையால் நீ ஆனந்தத்தில் மூழ்கின்றாய் அன்பை அன்பே சிவமாகும் இருக்கின்றாய் உன் இந்த ஒரு வாய்ப்பு உனக்கு இந்த சிவன் கொடுத்த அதனால் அந்த சிவன் ஆகிய இந்த அனு அதனாலே உன் தாயின் கருவறைக்குள் நீ உள்புகுந்தா யே உள்புகுந்து அந்த பிண்டமாக மலர்ந்து அந்த நாடித்துடிப்பு டன் முதல் நாடியாக உருவாகி மலர்ந்து மலர்ந்து கண் காது கை கால் இருதயம் மூக்கு என எத்தனை பரிணாமங்கள் எடுத்து வந்தாயே ஆதியிலே இந்த பரிணாமங்கள் மனித வளர்ச்சிக்கு ஒரு தனித் தனி ஒரு ஆளாக தனித்தனி மனிதராகவும் எத்தனை கோலங்களாக மனிதர்களாக நீ பிறவி எடுத்து இருந்தாய் இந்த மனித கோலமும் எத்தனை சமூகமும் அறிந்து கொண்டு அறிந்து கொண்டு இந்த பல உருமாற்றங்கள் அடைந்து ஊறிய அறிவு விருத்தியாகி இன்று இந்த மானிடச் சட்டை போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் இதற்கு ஈடு செய்யும் இந்த பிரபஞ்சம் இந்த உன் கருணையே கருணை இந்த மனிதப் பிறப்பில் உனக்கு ஆண் பெண் என்றும் இந்த ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வைத்து படைத்த இறைவனுக்கு ஒரு ஒரு சப்தம் கொடுத்து அவளுக்குள்ளே ஒரு ஆனந்தத்தையும் கொடுத்து ஒரு மகிழ்வையும் கொடுத்து இருக்கின்றார் படைத்துள்ளான் உன்னை நீ அறிவதற்கு உன் ஜீவ அறிவு இருக்கு உனக்கு நீயே அறிவுபூர்வமாகவும் விடுகின்றாய் ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி அந்த ஜோதி அனுபவமாகவும் தேஜோமய வாழும் ஆண்மகன் உருவாகும் உனக்குள்ளே இருக்கின்றது ஆனால் உனக்குள்ளே அந்த அணுவையும் ஒளியையும் காண முடியுமா உன் உடலிலே உன்னால் ஆன்மாவை காணமுடியுமா எக்கோடி காலத்துக்கும் உன்னால் காணமுடியாது இயற்கையின் சுழற்சியில் இந்த மனித உடல் மண்ணாகி தான் போகுமே தவிர  மண் போன்றுதான் இருக்கும் அதனுல் உறவிலும் ஸ்பரிசம் காணமுடியுமா இந்தசுழற்ச்சியின்  காலச்சக்கரம் இந்த காலச்சக்கரத்தில் உன் கர்மா  செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும் இது நியதி அணு முதல் அனைத்தும் தன் தன் வேலையை செய்து கொண்டு  வருகின்றது இந்த கர்மா உன்னை சுற்றிக் கொண்டே தான் இருக்கும்  இருக்கின்றோம் உண்மை உழைப்பவனுக்கு உயர்வாகவும் இருக்கும் இந்த உண்மையை ஒழுக்கமாக இருக்கின்ற அவனுக்கு நல்லது நல்லவனாகவும் தீயவனாகவும் அமைத்துக் கொண்டே இந்தப் பிரபஞ்சம் தோற்றுவித்து உன்னை ஆட்டுவித்து கொண்டிருக்கும் உன்னுடைய இந்த பிறவியிலேயே உன்னுடைய உன்னுடைய ஒரு சிறு அனுப்புதல் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த அணுவிலே ஆதியிலே வினையின் செயல்பாடாக இருந்தால் உனக்கு இந்தப் பிறவி விட்டு அடுத்து பிரறவி வைப்பதற்கு நீ செய்த புண்ணியம் பலனாக இருக்கும் அந்த ஒரு வாய்ப்பு கிடைக்குமோ என்று ஏங்கும் இந்த அணுக்களுக்கு நீ நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் நீ அவற்றை தொழுது கொண்டே இருக்கவேண்டும் ஸ்தோத்தரி த்துக் கொண்டே இருக்க வேண்டும் ஒரு நாள் ஒரு காலம் கனிந்து உன் வாழ்வில் மலர்ச்சி உண்டாகும் வரை இந்த பிறவி வாய்ப்பு உனக்குக் கிடைக்கும் வரை நீ காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் அன்பே உருவான இந்த இதயம் இதயத்தின் பால் நீ தொழுது கொண்டிருந்தால் நீ இந்த ஒளிமயமான இந்த விண்ணிலிருந்து வந்தவன் நீ அதை அறிந்து கொண்டு மண்ணிலிருந்து விண்ணுக்கும் பயணப்படுவாய் இல்லை என்றால்  இறந்தவனை பார்த்துக் கொண்டிருப்பாய் இந்த விண்ணிற்கும் மண்ணிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால் நீ கோடி காலத்துக்கும் அந்த மனிதத்தின் சடலத்தை மீட்டு பாராமல் இந்த ஸ்தூல வாழ்க்கையை நினைத்து பாராமல் என்றென்றும் அன்புமயமான இந்த ஜோதிமயமான அருட்பெருஞ்ஜோதி நீ மிகவும் நீண்டு கொண்டே இருந்து பல கோடி காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அன்பு மயமான துருவமாக கூடிய அந்த இறைவனின் ஒளிமயமான பாதைக்கு நுழைந்துகொண்டு என்றும் இந்த ஒளி பாதையிலேயே பேசிக்கொண்டிருப்பாய் ஒரு அணுவின் வித்து வந்த வித்து மலர்வதற்கு  எத்தனை கோடி தவமிருந்து இருக்க வேண்டும் அந்த வித்து இந்த இந்த பூமியில் வாழ்ந்து அது மலர்வதற்கு அது எங்கிய ஏக்கம் அதனுடைய இயக்கத்தில் வந்து ஒரு மலர் மலர்ந்து  ஒரு அரும்பு வெளியே வந்து அது வளர்ந்து வரும் பொழுது செடியாக அதனுடைய மலராக அதனுடைய காயாக அந்த அதே புசிப்பதற்கு இந்த மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இதை புசித்தால் தான் மனிதன் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான் இல்லையா  முதல் வித்து இல்லையேல் அவனுக்கு இந்த பூவுலகில் உணவும் கிடையாது உணவு படைக்க வைத்த பிறகே இறைவன் மனிதனை படைத்தான் உணவு இல்லையேல் மனிதன் இல்லை அவன் இந்த பிரபஞ்சத்தில் ஜீவிக்க முடியாது நீ எத்தனை கோடி தவங்கள் செய்தாலும் ஜெப தவங்கள் செய்தாலும் உன்னை படைத்தவனை நீ அறியா விடில் நீ பாடுபட்ட மனத்தினாலே இந்திரியங்களின் ஊடாக நீ பயணித்துக் கொண்டு இருப்பாய் உன் வாழ்வில் வசந்தம் உண்டாகும்   வசந்தத்தை ஏற்படுத்தியது இந்த முதல் அனைவரின் பேரொளி பற்றிக்கொண்டு ஆனந்தத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பாய் ஆனால் துன்பமும் இன்பமும் மாறிக்கொண்டே வரும் இது உன் கர்ம வினையா நீ செய்யும் செயலில் இருந்து கொண்டே இருக்கின்றது நீ ஒரு பொருளைத் தொட்டாலும் அது கருணாநிதிதான் அதை பார்த்தாலும் கருணைதான் அதுக்குள்ளே ஊடுருவி நிற்கும் கர்மத்தை நீ காலாகாலத்துக்கும் செய்து கொண்டு இருக்கிறாய் இந்த கர்மத்தில் நீ மீண்டு வர வேண்டுமென்றால் நீ எந்த உறுதியான இறைவனின் பாதையை இறைவனின் திருவடியைப் பற்றிக் கொண்டு இருந்தால் தான் நீ இந்த ஒளிமயமன பாதைக்கு செல்ல வேண்டும் சூரியன் முதல் சந்திரன் வரை அது அது தன்னுடைய அணுக்களால் நிரம்பியது அது அதனுடைய தன் தன் வேலைகளை செய்து கொண்டே இருக்கின்றது தினமும் ஓயாமல் உனக்கு ஒரு செயலை செய்து கொண்டே இருக்கின்றது அந்த செயல் இப்படித்தான் நீயும் இந்த ஸ்தலத்தில் செய்து கொண்டிருக்கின்றாய் அதை தெரிந்து கொள்ளாமல் நீ சுற்றிக் கொண்டு இருக்கின்றாய் ஒரு செடியாக இருக்கட்டும்   ஒரு காய் காய்ப்பதற்கு  ஒரு வாய்ப்பு, கொடுக்காத இந்த பிரபஞ்சம் நமக்கு வாய்ப்பு கொடுக்காதா என்று ஒரு செடியின் ஏக்கமும் இருக்கின்றது ஒரு பழுவிற்கு இன்னும் ஒரு நாள் இரண்டு நாள் இன்னும் அதிக காலம் நாம் வாழ்வோம் ஏக்கமும் அதற்கு இருக்கின்றது ஆனால் ஆனால் இந்த மனிதனுக்கு ஆன்மீகத்தில் அறிவுப்பசி தான் இருக்கிறதே தவிர அந்த அறிவுப்பசி என்னவென்றே புரியாமல் தன்னுடைய இந்த மரணத்தை நீட்டிப்பதற்கு இந்த மரணத்தை வெல்வதற்கு அவன் உடலைப் பேணிக் காக்கின்றான் ஆனால் இந்த உடலில் ஒன்றுமே இல்லையே உடல் இருந்தால் தான் இருக்கும் ஆனால் உடலை தாங்கிய சூட்சுமமான விஷயங்களை அவன் புரிந்து கொண்டால் இந்த உடல் அவனுக்கு அவசியப்படாது அவன் ஒளியை புரிந்து கொண்டால் ஒளியை அறிந்து கொண்டால் ஒளியை பிரவேசித்தவனாவான் அவனுக்கு இந்த உலகத்தில் எதற்குமே பயப்படாத அவனுக்கு மரண பயமில்லை மரணத்தை வென்றவன் ஆவான் ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அந்த மழை அந்த மழை பெய்து ஒரு இரும்புக் கம்பி அந்த இரும்புக் கம்பி அந்த மழைநீரால் தேங்கி தேங்கி தேங்கி அது துருப்பிடிக்கின்றது துருப்பிடித்து அந்த இரும்பு காலப் போக்கில் உருக்குலைந்து போகின்றது அந்த உருக்குலைந்து போன இரும்புகள் என்னவாகிறது அதுவும் ஒரு இயற்கை சுழற்சியில் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது ஒரு இரும்புக் கம்பிக்கு அந்த சுழற்சி நிலை என்றால் நீ இந்த அணுயவில் இருந்து இந்த உலகத்தில் ஒளியில் இருந்து வந்தவன் ஆயிற்று உனக்கு ஒரு இயற்கை சுழற்சி கிடைக்காமலா போகப் போகின்றது ஒளி பிரபஞ்ச  இயற்கை சுழற்சியின் பரிமாண வளர்ச்சியில் நீ வளர்ந்து கொண்டு தான் இருப்பாய் நீ வளர்ந்து கொண்டும் தேய்ந்து கொண்டும் மாறி மாறிப் பிறந்து கொண்டுதான் இருப்பாய் உன் ஆன்மா என்றும் நிலையானதாக இருக்கின்றது இந்த ஆன்மாவை அறிய எவராலும் முடியாது எவர் கையிலும் அகப்படாது எவர் கண்ணுக்கும் தெரியாது இந்த ஆன்மா இங்கிருந்து இங்கிருந்து வேறு ஒரு உடலை தேர்ந்தெடுக்கும் இங்கிருந்து அஸ்ட்ரோ ட்ராவலிங் என்று சொல்லக்கூடிய இந்த ஆன்மா வேறு ஒரு உருவத்தில் நிற்கும் என்று நாம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு இந்த மனம் செயல்படும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது ஆன்மாவிற்கு அழிவில்லை ஆனால் உன்னுடைய உடல் இந்த ஜீவனுக்கு என்றும் அறிந்து கொண்டே இருக்கின்றது இந்த அணுக்கள் சிதைந்து கொண்டே இருக்கின்றது இது இந்த பிரபஞ்சத்தின் இறைவனின் நியதி இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது இந்த எவரும் என்பது ஒரு சொல் தானே தவிர அந்த சொல்லுக்கு ஆயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இந்த ஒரு வாய்ப்பினால் அற்புதமான ஒரு வாய்ப்பினால் கிடைக்கப்பட்ட இந்த மனித குலம் இதன் உபயோகத்தால் நாம் இந்த பிராணனை ஒழுங்குபடுத்தி இதனால் அறிவு விருத்தியாகி தோத்திரங்கள் செய்து என்றும் தொழுது கொண்டே இருப்பேன் ஆனால் உன்னுடைய அறிவு ஆட்சிக்கு வரும் உன்னுடைய அறிவு வளர்ச்சிக்கு வர உன்னை நாடி வந்த ஒரு குரு உனக்குள்ளே இருந்த ஆன்மீக குரு உன்னை ஒரு ஒரு படி நிலையையும் ஏற்றி வைப்பார் உன்னுடைய ஒழுக்கமும் உடைய ஆன்மீக ஒழுக்க நெறியும் இந்த இறைவன் அன்பால் உன்னை இழுத்துக் கொண்டு இறைவன் உனக்கு அருளை பரிபூரணமாக கொடுத்துக்கொண்டே இருப்பார் இது இந்த இயற்கையின் பிரபஞ்சத்தின் நீயே நீ இது யாராலும் மாற்ற முடியாது யாராலும் மாற்ற முடியாது நீ உனக்குள்ளேயே ஸ்தோத்திரம் செய்வதனால் உன்னுடைய மனம் சீர் நிலைபெற்று உனக்குள்ளே அறிவு மலரும் இந்த அறிவே இயற்கையின் உருவமாகவும் இருக்கின்றது அன்பே அறிவே உடனான அருட்பெருஞ்ஜோதியே உனக்குள் தீபமாக ஒளியாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது இதனை அறிந்து செயல்பட்டு இந்த கடவுள் தன்மையை இறைத் தன்மையை உணர்ந்து நீ கோடான கோடி வாழ்ந்துகொண்டிருக்கும் உன் அன்புக்கு நன்றி செலுத்துவாயாக இந்த இறைவனால் படைக்கப்பட்டது அனைத்திற்கும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது அது மரணமாக இருந்தாலும் ஜனனமாக இருந்தாலும் ஒரு மீன் குஞ்சு வளர்ந்து கொண்டிருக்கின்றது அந்த மீன் குஞ்சு அடி ஆழத்திலும் கீழுமாக ஆனந்தமாகவும் நீந்திக் கொண்டிருக்கின்றது தன்னுடைய உறவினர்களுடன் ஒருநாள் அந்த மீன் குஞ்சு மேலே சிறுசிறு மழைத்துளிகள் பெய்து கொண்டிருக்கின்றது ஆனந்தமாக இருக்கின்றதே அப்படி என்று நினைத்து மேலே வருகின்றது அப்பொழுது அங்கு ஒரு நீர் மீன் கொத்தி பறவை காத்துக்கொண்டிருக்கிறது அந்த மீன் கொத்தி பறவை அந்த மீனை கவ்விக் கொண்டு சென்று விடுவது ஒரு மீனுக்கு ஜனனம் எப்படி உருவானதோ அதனுடைய மரணமும் நீதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது அதேபோல் அந்த மீன் கொத்தி பறவை ஒரு பொந்தினுள் மரத்தில் இருக்கும் பொழுது அது மற்றொன்றிர்க்கு இறையாக இருக்கின்றது அதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கின்றது இப்படி இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாய்ப்பு பிரகாசமாகவும் அமைகின்றது இருளாகவும் அமைகின்றது இந்த ஒளியும் இருளும் நிறைந்த வாழ்க்கையே பிரபஞ்சமாக இருக்கின்றது நாம் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு நான் நான் என்று ஏக குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது ஆனால் படைத்தவன் எவனோ இது தன்னிலை மறந்து நான் நான் என்று ஓலமிட்டு கொண்டிருக்கின்றது இன்னும் தொடரும்

ஜீவன்

ஜீவன் அண்டத்தின் இருண்ட  கலப்புகள் கூட்டத்தின் துகள்கள் ஒன்று கூடும் பொழுது அங்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அதன் மூலம் ஒரு விசை ஏற்பட்டு அங்கு ஒரு சக்தி பிறக்கின்றது அந்த சக்தியின் இரண்டு தொடர்புகள் ஏற்படுகின்றது ஒளி தொடர்பு ஏற்படுகின்றது அந்த இரண்டு தொடர்புகளால்  கலப்பினால் ஏற்பட்டு இதில்  பிரபஞ்ச பெரிய ஒளியாக அருட்பெரும்ஜோதி ஒளியாக மாறி மலர்ந்து விரிந்து அது சுத்த ஒளியாக பிரபஞ்சத்தின் வழியாக நிகழ்கின்றது அந்த  இருண்ட பிரபஞ்ச பெரிய ஆழ் கடல் ஒளி  அதில் ஒரு பிரதிபலிப்பு ஏற்படுகின்றது முதல் முயற்சி தன்மை ஏற்படுகின்றது அதுவே முதல் சுழற்சியின் வித்தாக ஜீவனாக இந்த பூவுலகிற்க்கு வருகின்றது அங்கிருந்து அதிலிருந்து இருந்த ஜீவன் இந்த ஏகத்துவ மான இறைவன் அந்த ஜீவனின் சொரூபம் இந்த ஜீவன் தொடர்புதான் வழிவழியாக  நமக்கு வந்து கொண்டிருக்கின்றது சிவமாக இருக்கின்றது எக்கோடிகாலத்திற்கும் இருக்கக் கூடியதாக உள்ளது இந்த இறைவனின் தொடர்பு என்றென்றும் வழி வழியாகவும் வம்சா வழியாகவும் நமக்குள் தொடர்ந்து மலர்ச்சி நடந்து  கொண்டே இருக்கின்றது இதை அறிந்து போற்றி தொழுது வாழ்வோமாக அறிவு அண்ட கோடி பிரகாசம் தோற்ற பிரபஞ்சத்தில் இந்த மகா பெரிய விரிவேஉருவாகவும் அறிவாகவும் அரு உருவாகும் இருக்கக்கூடிய ஊடகங்களாக உள்ளது  இதனுள்ளே ஏழு வானங்களும் மற்றொரு கோணத்தில் இருண்ட தன்மையாகவும் ஒளி தன்மையாகும் தோற்றத்திற்கு வந்தது பேரண்டம் இதில் உள்ளது ஏழு வானங்களும் ஏழு உலகங்களும் அனைத்தும் நிறைந்துள்ளன இந்த மகா சாகரத்தின் ஜீவ ஜாலங்கள் நடந்துகொண்டிருக்கின்றன இதில் அனைத்தும் அடங்கும் இதில் இருந்து வந்த ஒரு அணுசிதறல் தான் நாம் இப்பொழுது இருக்கும் ஜீவனும் ஜீவ உடலும் இதில் இருக்கக்கூடிய வேகமாக இருக்கக்கூடிய ஏகமான ஏகத்துவமாக அந்த இருண்ட துகளும் ஊடாக இருந்துகொண்டே இயங்கிக் கொண்டே இருக்கின்றன

ஆன்மாவும் கர்மாவும்

ஆன்மாவும் கர்மாவும் பூலோக பிரபஞ்சத்தில் பிரபஞ்சத்திலும் ஜீவ துகள்கலும் இருண்ட துகள்களும் இந்த பிரபஞ்சத்தில் அது தன்னுடைய வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றன அதனுடைய வேலைகள் சரிவர செய்து கொண்டிருப்பதால் எங்கிருந்தோ ஒரு சிறிய ஒரு இரண்டு செல்கள் அணுக்கள் ஒன்று கூடி இந்த  கோடி இந்த பிரபஞ்சத்தில் சிறு புல் வகைகள் மரங்களின் பலவிதமான மலர் வகைகள் தரக்கூடியதுமான மரவகைகள் தரக்கூடிய பூத்துக்குலுங்க கூடியவைகளாகவும் இந்த மனித உடலுக்கு மருத்துவ குணத்தை தரக்கூடிய பலவிதமான செடி கொடிகள் இவை அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் மனிதன் ருசிப்பதற்கும் அவனுடைய ஆரோக்கியத்திற்காகவும் இந்த கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது,  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தில் நாம் இன்று காணக்  கூடிய செயல்கள் அனைத்தும் நாம் அனுபவிக்க கூடியது, அது போல் இந்த ஸ்தூல பிரபஞ்சத்தில் பலவிதமான பறவைகள் மிருகங்கள் பூச்சிகள் அனைத்தும் இந்த பிரபஞ்சத்தில் அதனதன் கடமையையும் அதன் வாழ்வியலுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து கொண்டும் தன்னுடைய இனப்பெருக்கத்தை செய்து கொண்டும் அதன்தன் கர்மங்களை செய்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இது ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள விலங்குகள் அனைத்தும் அடங்கி உள்ளன இது போல் இந்த மனிதனுக்கு ஆறாவது அறிவு என்று ஒரு படிப்பறிவும் அவனுக்கு மனம் என்றும் அது அவனுக்குள் வியாபித்து உள்ளது  இந்த பிரபஞ்சத்தில் ஆறறிவு படைத்த அவனுக்கு மனம் அறிவு கை கால் கண்  என்று இந்த உலகத்தைப் பார்த்து மகிழக்கூடிய ஒரு ஆனந்தமும் சந்தோஷமும் கொடுத்து இந்த பிரபஞ்சத்தில் அவன் சுகமும் துக்கமும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதில் இந்த மனிதன் பிரபஞ்சத்தில் அவன் செய்வது அனைத்தும் நல்வினை தீவினை யாக இருக்கின்றது ஒரு நல்வினை செய்யும் பொழுது அது அவனுக்கு நன்மையாக படுகின்றது அந்த நல்வினை செய்யும் பொழுதும் யாரோ ஒருவருக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் தான் அது அவன் மனதுக்கு வலியாக செயல்படுகின்றது அதேபோல் ஒருவனுக்கு தெரிந்தே அவன் தீவினை செய்கின்றான் அதனால் அவனுக்கும் இது அவனுக்கு எதிராக இருக்க கூடிய நபர் பல துன்பங்களை அனுபவிக்கின்றார் அவன் வாய் வழியாக அவனை திட்டுகின்றான் கோபத்தில் கொலை செய்கின்றான் பலவிதமான சூழ்நிலைகள் அவனுக்கு உண்டாகின்றது அதனால் இந்தப் பூவுலகில் அவன் மனிதனாலும் காயப்படுத்தபட்டு காயப்படுத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இது அனைத்தும் அவருடைய பிறவி கர்ம வினைகளா என்று பார்க்கும் பொழுது அவருடைய காரண காரணிகளான கர்ம வினைகள் அவனை தொடர்ந்து வருகின்றது என்று பலராலும் கூறப்படுகின்றது இது எங்கிருந்து வருகின்றது என்பதை அறிவதற்கு நம்மிடம் போதிய அறிவு இல்லை இது இதிகாசங்களிலும் ஞான விஷயங்களிலும் இதைப்பற்றி சரியாகவும் குறிப்பிடவில்லை இந்த ஜீவன் இருக்கின்றது இந்த ஜீவன் ஆன்மாவாக இருக்கின்றதா இந்த ஒரு மனிதனுக்கு உடல் பிரிந்து விட்டால் அவன் இந்த உலகத்தை விட்டு அவருடைய உடலை விட்டு ஆன்மா பிரிந்தது என்று எல்லோரும் கூறுகின்றார்கள் அந்த ஆன்மா பிரிந்து விட்டால் அது போய் தங்கக் கூடிய இடம் ஒரு இடமாக இருக்க வேண்டும் அல்லவா ஆன்மா எங்கு செல்லும் என்றும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு ஆச்சரியமான தகவலாகவே உள்ளது இந்த ஆன்மாவை மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து வருகின்றது என்றும் நம்பிக்கையில் பலவிதமான கோணங்களிலும் இருக்கின்றனர் இது ஒரு பக்கம் இருக்க அவரவர் செய்த கர்ம வினைகள் அவரை சாரும் அவர் குடும்பத்தை சாரும் என்றும் நம்மிடம் வழக்கம் உள்ளது இதையும் நாம் இந்த உலகத்தில் நம்பிக் கொண்டு இருக்கின்றோம் இதில் நான் என்பது அனைவரும் அறியக்கூடியது அந்த நான் இதுவரை எங்கிருந்தது அது நமக்குள் எப்படி மலர்ந்தது  இதில் அறிவும்  என்ற சுவை உள்ளது அந்த அறிவு வெளிப்படாமல் இருக்கின்றது , மனம் மனதை கடந்த உள் வெளியில் விரிந்து பரவி முழுவதுமாக மலந்த அறிவு உணர்வாக பரிணமிக்கின்றது உலக அனுபவத்தில் அடிப்படையாக இருக்கக் கூடியதாக உள்ளது  ஒரு குழந்தை பிறந்தவுடன் இறக்கின்றது அதே குழந்தை பிறந்தவுடன் அதற்கு கை கால்கள் பிரச்சினை இருக்கின்றது காது கேட்பதில்லை கண்கள் தெரிவதில்லை இன்னும் இந்த மாதிரியான குறைபாடுகளும் உள்ளது இருந்தாலும்  இந்த மனித சமுதாயத்தில்   எந்த வயது இருந்தாலும் ஒரு க்ஷண நேரத்தில் மனிதனின் மரணம்  ஏற்படுகின்றது நோய்வாய் ஏற்படுகின்றது பலவிதமான கோர விபத்துகள் நடக்கின்றன இந்த பிரபஞ்சத்தினால் இயற்கையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களினால் இந்த மனிதன் மரணித்து விடுகின்றான் இவையெல்லாம் எப்படி ஏற்படுகின்றது என்பது ஒரு கேள்விக்குறியாகவே இந்த கர்மாவின் தொகுப்பாக இருக்கின்றது இதில்  அண்டத்தில் இருண்ட பொருளின் ரகசியம் இருக்கின்றதா என்றும் இந்த அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருப்பு  உள்ளது போல் ஒரு காரணம் காரியமாக இருக்கின்றது கர்மவினை சூழ்ச்சி எல்லா இடங்களிலும் தன் வேலையை செய்து கொண்டும் இருக்கின்றது இது புரிந்தால் அந்த இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பையும் நாம் அறிந்து தெரிந்து கொள்ளலாம் ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு புரிதல்களும் இருக்கின்றன இதில் பார்ப்போமானால் இந்த உலகத்தில் சமயங்கள் உள்ளது எனில் சுயம் என்பது ஒன்று இருக்கின்றது அது அறிவு உணர்வு, அகம் பிரம்மாஸ்மி நான் உள்ளதாக இருக்கின்றேன், அயம் ஆத்மா பிரம்மா, என்னுடைய நான் உணர்வாகவே பிரம்மமாக இருக்கிறது, தத்வமசி, நீ தான் அது, என்றும் சொல்கின்றன இந்த வேதத்தின் நான்கு மகாவாக்கியங்கள், நான் அந்த நான்தான், என்கிறது பைபிளில் பழைய ஏற்பாடு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்கிறது புதிய ஏற்பாடு, கடவுள் மட்டுமே இருக்கிறது கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை, குரான்.

Dark Mater

இந்த அனாதியான இருண்ட பொருள் என்பது இந்த பிரபஞ்சத்தில் துளி அளவும் கலக்கவில்லை, ஆனால் எங்கும் நிறைந்துள்ளது புராணங்கள் இதிகாசங்கள்  இதை முன்னும் பின்னுமாக கருத்துக்களை கூறுகின்றது, இந்த இருண்ட பொருளை ஒரு மைக்ராஸ்கோப் மூலமாகவும் எதைவைத்து அளவுகோலாகும் அளக்கமுடியாதது, பார்க்கவும் முடியாது, இதற்கு முன் பின்னும் நமக்கு தெரியாது, உள்ளும் வெளியும் அற்ற இடத்தில் உள்ளது, என்றும் கூறியுள்ளார்கள் ,அதாவது இந்தப் பொருள் என்பது இந்தக் கோணத்தில் இருக்கும் இல்லை என்று கூறமுடியாது, இந்தத் தன்மை வேறு ஒரு கோணத்தில் உள்ளது, என்றும் சொல்லவும் தெரியவில்லை, இருண்ட பொருள் என்ற இறைத்தன்மை என்பதும் வேறு ஒரு கோணத்தில் இருக்கக்கூடியது, இந்த  நிறைய துகள்கள்  நிறைந்த அவஸ்தையுடன் சர்வ வியாபியாக அதுவும் இந்தப் பொருள்களாக துகள்களாக நிரம்பியுள்ளது, இந்த துகள்களுக்கு நீண்ட  காலமாக இருந்துவரும்பொழுது ஒரு கலெக்டிவ் தன்மை உண்டாகின்றது,இதனால் அங்கு  ஒரு சக்தி உண்டாகின்றது, எந்த ஒரு இரண்டு அல்லது மேற்பட்ட பொருள்கள் கூடும் பொழுது அதற்கு சக்தி உண்டாகின்றது, அப்படி ஒரு சக்தி உண்டாவதால் தனித்தனி வஸ்த்துக்களாக பயணிக்கும்போது இரண்டு அல்லது மூன்று நான்காக ஒன்று சேரும் பொழுது இப்படி ஒரு ஸ்திறமாக சேர்ந்தாலும் இந்த இருண்ட தொகுப்பால்  வேறு ஒன்றும் செய்யவும் முடியாது, தனித்தன்மையாக இருந்து கொண்டே இருக்கும், வேறு எங்கும் செல்லவும் முடியாது, இந்தத் துகள்கள் மட்டும் தான் இருக்கும் இது எல்லாரும் சேர்ந்து ஒரு சக்தியாக சேர்ந்திருக்கும், பிரபஞ்ச ஒளி இது வேறு பட்டகோணத்தில் பிரபஞ்ச சூட்சமமான இந்த அதி ஒளியான பார்ட்டிகள் சுத்த ஒளி, என்பது இது தான் இது வேறு எந்த ஒளித் தன்மையையும் விவரிக்க முடியாதது, ஒளி என்ற ஒன்று மட்டும்தான் தெரியும், அதை அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாது, கண்களால் காணப்படுமே தவிர பிரபஞ்சத்தில் பார்க்கக்கூடிய ஒளியாக இல்லை, இது லைட் ஆக இருக்கலாம் அறிவுக்கு உருவமாக இருக்கலாம் இந்த பிரபஞ்சத்தை தன்மை டார்க் மேட்டர் தன்மை இதற்கு கிடையாது இது ஒரு அனுமானம், தான் இப்படி இரண்டு விதமான ஆதியில் இருந்தது இரண்டும் வேறு விதமான கோலங்கள் டார்க் மேட்டர் என்பது தனிப்படைகள் இந்த ஒளி என்பது எங்கும் ஏகமாக இருக்கக்கூடியது இதற்கு   ஏகத் தன்மை என்ற பெயர் உண்டு, இதுவே அதித்யம்இரண்டற்றது சர்வ வியிர்த்தியாகவும் சர்வ சின்மயமாகவும் கடவுள் தன்மை வாய்ந்தது, என்றும் சொல்லலாம், இந்த இரண்டும் இரண்டு கோணங்கள் இதில் இந்த சேர்ப்பினால் இதற்கும் ஒரு சக்தி உந்துதல் செய்துகொண்டு நடந்து கொண்டே இருக்கும் எப்பொழுதும் இரண்டு துகள்கள் காலகிரமத்தினால் பல ஆண்டுகள் கலந்து கொண்டு உள்ளது   ஆனால் பல கோடி அணுக்கள் ஒன்று சேர்ந்து இனணயும் பொழுது ஒரு விசை சக்தி உண்டாகின்றது ஒன்றோடொன்று இணைவதற்கு  உருவாகும் தன்மைக்கு உசும்புதல் என்று பெயர், ஒரு அணுவிற்கு உசும்புதல் உண்டாவதால் ஒளி அலை உண்டாகி இழுக்கப்படுவதால் அதற்கு உசும்பதல் என்று அறியலாம் இதுதான் முதல் கர்ம சுழற்சி, இதுதான் முதல் வித்து ,இதுதான் முதல் முதலில் ஏற்படும் ஒரு விசைக்கு தான் பிரபஞ்சம் என்று பெயர், இருண்ட பொருள் ஒளியான தன்மையில் இரண்டுக்கும் இடையில் நடக்கும் அதீதமான சக்தி உண்டாகின்றது இதுவே சிருஷ்டியின் ஆரம்பம் ஒளிப் பொருள் இருண்ட பொருள் பிரபஞ்சத்தில் அடங்கக்கூடியது இல்லை இந்த இரண்டிற்கும் ஒரு நேர் எதிர் சக்திகள் இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த சிருஷ்டி இரண்டும் இந்த சிருஷ்டியில் இரண்டும் கலந்து இருக்கும் இதுதான் பிரபஞ்சமாக பரிணமிக்கும் இந்த இரண்டுக்கும் இடையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தினால் உம்புதல் முதல் கர்மா என்றும் இந்த விசையின் மூலம்  பலபல கோணங்களாக பிரபஞ்சமாக பரந்து விரிகின்றது சர்வ பிரபஞ்சமாக உள்ளது இந்த ஒளியின் தன்மையால் தான் இரண்டும் ஒன்று சேர்கின்றது ஒன்றாக கலக்கின்றது இந்த ஒளியால் ஜீவர்களும் இந்த பிரபஞ்சமும் வளரக்கூடிய தன்மையாக உள்ளது ,சர்வ பிரபஞ்சம் பௌதிகப் பொருள்கள் அனைத்தும் ஜீவனை உற்பத்தி பண்ண கூடிய தன்மையைப் பெற்றுள்ளது ,இந்த ஒளித்தன்மையை பெற்றதனால் தான் இந்த உணர்வினால் தான் இந்த ஜீவன் கர்மாவுவுடன் சேர்ந்து பயணிக்கின்றது முன்னோர்கள் இதை தான்  நரகம், சொர்க்கம், பூலோகம் ,என்றும் வைத்துள்ளார்கள் ஒளியை நோக்கிய பயணமாக இருப்பதால் அதற்கு தேவர்கள் என்றும், இருளை நோக்கி பயணிப்பதால் அசுரர்கள் என்றும் கூறியுள்ளார்கள், இந்த இருண்ட பொருள் உடன் உசும்புதல் உண்டாகின்றது இதனுடன் ஒளியும் கலக்கும் போது தான் பிரபஞ்சமாக வளர்கின்றது இந்த ஜடமாக உள்ள இருள் தொகுப்பு என்பது இதனால், ஒரு சக்தி உண்டாகி நேர் எதிர் சக்திகள் இயற்கையாக அப்பொழுது உண்டாகின்றது இது பௌதிகமான தொகுப்புகளும் பிரகாச தன்மையுடையதாக அருட்பெருஞ்ஜோதி ஆகவும் உள்ளது, இதனுடன் இருக்கும் பொழுது அந்த  அருள் தன்மையும் வெளிப்படுகின்றது, இந்த ஜீவ தொகுப்பு பஞ்சபூதத் தொகுப்பு இது என்றும் அனாதி இந்த அனாதியாக இந்த இருண்ட பொருள் என்ன என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த  ஒளியினால் அருள் வெளிப்படும் தன்மையாக இருக்கின்றது, இதுவே இயற்கை உண்மை கடவுளாகவும் இயற்கையாக  ஏகதேசமாகவும் எங்கும் உள்ளது இதுவே தயவாகவும் மலர்ந்திருக்கிறது  இயற்கை உண்மை கடவுளின் பெரும் தயவாகவும், இந்த தயவு மலர மலர அருள் மலர்ந்து அறிவு மலராக உள்ளது, இதையே சூஃபிகள் ஆன்ம மர்ம ஜலக் கடல் என்று புகழ்ந்துள்ளனர்,

Tuesday, December 6, 2022

இந்த பிரபஞ்சமும் ஜீவன்களும்

இந்த பிரபஞ்சமும் ஜீவன்களும் இந்த பிரபஞ்சத்தில் அனாதி கோடி காலமாக எங்கெங்கும் அங்கிங்கெனாதபடி இருந்து கொண்டிருக்கும் இந்த உயிர்ப்பு தன்மையானது பலவகையாக பிரிந்து இருக்கின்றது இந்த பிரபஞ்சமும் இந்த காற்றும் அதிலுள்ள துகள்களும் இங்கு இருக்கும் கரும் பொருளும் அதில் உள்ள ஊடாக இருக்கும் ஒளியும், இந்த கருப்பொருள் கண்களுக்கு அகப்படாத அறிவுக்கு எட்டாத அறிவுக்கு எட்டாத எட்டாத நிலையில் உள்ளது இந்த கரும்பொருள் இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது இந்த சிறு புல் முதல் செடி கொடி பறவைகள் விலங்குகள் மனிதன் வரை அனைத்துக்கும் உருவாகக்கூடிய நான் என்பதை இயக்கக்கூடிய வஸ்து ஆகவும் இருக்கிறது இந்த உயிர்ப்புத் தன்மை கடவுளால் படைக்கப்பட்டு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து தனி தனி தன்மையாக இருந்து கொண்டும் அதன் உருவத்தையும் தனி உருவத்தையும் உருவங்களையும் தனித் தனியாக அமைத்து கொண்டு இந்த பிரபஞ்சத்தில் சந்திரன் முதல் சூரியன் வரை இருக்கக்கூடிய அனைத்தும் ஒளிவிர்ட்டுக் கொண்டிருக்கின்றன இந்த பிரபஞ்சமும் இயங்குவதற்கு செரிப்பதற்கு நலமாக இருப்பதற்கும் உறுதுணையாக இருக்கின்றன இந்த ஜீவனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது எக்கோடி காலத்துக்கும் இந்த பிரபஞ்சத்தில் உயிர் பிள்ளையாக இருக்கக்கூடிய ஒரு சில உயிர் துகள்களே அணுத்துகள்களே வாழ்வாதாரத்திற்கும் இந்த கடவுள் தன்மைமையும் ஆகி கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன நாம் இந்த ஜீவனுக்கு அறிவுபூர்வமாக இருக்கக் கூடிய மண் மணம் வளர்வதற்கும் உண்மையாகவும் இருக்கிறது இதில் ஜீவன்கள் பல பல பிரிவுகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நான் என்றபோதம் கொண்டு  அறிவியல் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த அறிவே அழியாத இந்த கடவுள் தன்மையை எக்கொடி காலத்துக்கும் அறியாதவர்கள் இதில் கடவுள் தன்மையையும் இறைத் தன்மையையும் அறியாமலேயே மாண்டு போகின்றார்கள் ஒவ்வொரு மரமும் பல விதமான மலர்களையும் பழங்களையும் தந்து கொண்டு இருக்கின்றன அவை நமக்காக படைக்கப்பட்டுள்ளன இந்த ஜீவன் ருசிப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளது மனிதனுக்கு தண்ணீரும் காற்றும் படைக்கப்பட்டுள்ளன இவ்வளவு அதிசயம் நிறைந்த இந்த பூவுலகில் மனிதன் ஜீவனை அறியாமல் போகின்றான் உன் ஜீவனுக்கு உயிர்ப்பு எப்படி வந்தது என்று அறியாமல் தத்தளிக்கின்றான் நீ உன் ஜீவனை அறிந்தால் நீ இந்த பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பாய் உனக்கு அறிவு பூர்வமாக நீயே இருப்பாய்  உன் ஜீவன் உன்னை  எட்டி பிடித்துவிட்டால் எக்காலத்துக்கும் நீ இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்ததாக ஒரு சரித்திரம் உண்டாகட்டும் =============அகழி==============