Sunday, December 4, 2022

எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம் ===

எண்சாண் உடம்புக்கு எண்சாணே பிரதானம் === ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்    --- பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை" குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும். வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல ஒரு முனையில் “நான்” என இருக்கும்.. மறு முனையில் மனம் என இருக்கும்..  இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர். அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே  --- திருமூலர். மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும் ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா? இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும் உயிர் வேற மனம் வேற சார்...  தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்..... தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என. உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே (அகத்தியர் ஞானம் ) --❣️ திரு. ரியான் ஐயா அவர்கள். ❣️

ஆதம்

ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும் : அதல்லாத் தொழுகையது ஆற்றில் கரைத்தபுளி" === ஊமை எழுத்தே உயிராச்சு ஓமென்ரெழுத்தே உடலாச்சு நாமிந்தெழுத்தை அறிந்துகொண்டோமென நாடி கும்மி அடியுங்கடீ... அண்டசராசரங்கள் அனித்திற்க்கும் அனித்து மதங்களுக்கும் அவை எவையும் உண்டாவதற்க்கும் முன்னே அனாதிஅனந்தங்கோடி கற்பாந்தங்களுக்குமுன்னே எக்காலகோடிகளுக்கும் கோடாலங்கிருதங்களுக்கும் முன்னே இருக்கும் எழுத்தறிவு அது இலங்கும் தலமிது...அதுவே கமலக்கண்.... எல்லா பாஷைகளுக்கும் ஒரு மொழியாய் அடங்கி எல்லா தொனிகளும் ஒரு தொனியாய் முழங்கி அங்கிங்கெனாதபடி அகம்புறமாய் விளங்கும் “மெய்பொருள்” அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்...அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை.இப்படி “இவ்விடுதலையே “ வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு.... அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே.. மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர தியான சம்பிரதாயங்கள்... பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்... முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்... சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்..... சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை) காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்? நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே... வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்"..... ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்) புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா? உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க.. வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்.... உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள் அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்.... இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி.... தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும் ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்.... வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்... ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி... பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்.... சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை.... இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்.... முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும் ---❣️ திரு. ரியான் ஐயா  அவர்கள் ❣️

பிரபஞ்சம்

பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து ஜீவன்களும் ஒரு மரத்தின் விதைகள். அவ்விதைகளில் இருந்து தோன்றிய தொடர்கள்.... விதைக்கு "ஜீவன்" என பெயர்.. தாய் மரத்திற்க்கு "ஜீவசிவம்" என பெயர்... அது அனாதியாகவே இருக்கின்ற பொருள்.. அது தான் இருக்கின்றது, அதுவல்லாதது இல்லை... உடலம் உருவாக்குவதும் அதுவே, உடலத்துள் குடியிருப்பதும் அதுவே உடலத்து மனத்துக்கு ஆதாரமும் அதுவே..உடலத்தை அபிமானிக்கும் "நான்” எனும் மனதின் கூற்றுக்கு ஆதாரமும் அதுவே.... அதுவே விரிவான விரிவெலாம் தாங்கி பணர்கொண்டெழுந்து விரிந்து பூத்துகுலுங்கி அணுக்கோடி பிரபஞ்சம் முதல் மகா அண்ட பெரிதான பகிரண்டகோடி பிரபஞ்ச வியாப்திவரை உயிராக நிறைந்துள்ளது... - திரு. ரியான் ஐயா அவர்கள்

இது ஐந்நும் என் பொருள்

இது ஐந்நும் என் பொருள் ”””” சாலை ஆண்குரு திருப்பாதம் னமஸ்கரித்து அட்சரனிலை ஆரம்பம்..கிருபை சொரிவாராக...ஆமீன்..ஆமீன்..ஆமீன். ’அகரம்-அவ்வு-ஏகம்’ இ-ஈ-னா-- து-ஊ-னா-- ஐ-என் -னா-- இந்-நன் -னா-- நு-ஊ-னா-- இம்-மன் -னா-- எ-ஏ-னா-- இன் -னன் -னா-- பொ-ஓ-னா-- ரு-ஊ-னா-- உள்-ளன் -னா-- இது ஆண்டவர் மணலில் எழுதி காண்பித்து கற்பித்தது.சாகா கல்வியாம் தமிழ். ஒரு எழுத்து உண்டாவதற்கு முன் முதலில் பொருள் வேண்டும், இரண்டாவது ஒலி, மூன்றாவது வரிவடிவம். ’அ’ இதன் உச்சரிப்பு: அ-ஆ-னா.இதில் மூன்று ஒடுக்கம் இருக்கிறது. அது குறிக்கும் விஸ்தரிப்பை கடல் என்று சொல்லலாம் என்றால், கடலின் கரையை காணலாமே. ஆனால் ஒலியின் கரையை காணமுடியாது. ’அ’ என்று குறுக்கி உச்சரிப்பதானது,மூன்று கால் உரியில் இரண்டு அறுந்து போனது போல். அ-ஆ-னா என்று சொல்ல வேண்டுவதை அனேக காலமாக சொல்லாது,’அ’ என்று சொல்லி வந்துவிட்டதால்,அந்ந அக்‌ஷரத்தின் பிரயோஜனம் இவனுக்கு இல்லாமல் போய்விட்டது.இதில் தமிழ் வேத சாம்ராஜ்யம் உள்ளது. இதில் மூன்று இலக்குகள் இருக்கின்றன.அம்மூன்றும் என்னென்னெவென்று இந்ந உலகம் முழுவதும் சேர்ந்நு சொல்லட்டும் பார்ப்போம். === மகாமகத்வம் பொருந்நிய ஆண்டவர் திருவாக்கியம். ஆமீன்..ஆமீன்..ஆமீன். ❤️ இறைரகசியத்தை விளக்கி அருளியது                    -  திரு. ரியான் ஐயா அவர்கள்.❤️

சிருஷ்டி

சிருஷ்டிக்கு ஆதாரம் ஆண்-பெண் ஜோடி என்பது அனைவரும் அறிந்திருக்கின்றதே. கருமுட்டை உருவாக்குதல்,  கருவை சுமத்தல்,  தாய்மை அடைதல், பிறப்பு வழங்குதல், பால் ஊட்டுதல், வளர்த்தல் என பெண்ணிடத்தில் இவ்வளவும் அமைத்து வைக்க தெரிந்த கடவுளுக்கு பெண்ணிடத்திலேயே ஒரு சிறுதுளி சுக்கிலத்தை அமைத்து வைக்கத்தெரியாதா என்ன? --- ❤ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் === நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும் அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!?  எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன். தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன். எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ  அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம். ---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

ஏழாம் வாசலும் - பத்தாம் வாசலும் ==== தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்"  ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள். "த்' என்பது 7-வது மெய்யெழுத்து "ம்' என்பது 10-வது மெய்யெழுத்து "ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து "தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் "ஏழாவதாக " அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும். தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள். தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்) ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது. உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது. "ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி. "தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ். தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.   --- திரு. ரியான் ஐயா அவர்கள் ”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

ஏழாம் வாசலும் - பத்தாம் வாசலும் ==== தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்"  ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள். "த்' என்பது 7-வது மெய்யெழுத்து "ம்' என்பது 10-வது மெய்யெழுத்து "ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து "தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் "ஏழாவதாக " அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும். தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள். தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்) ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது. உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது. "ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி. "தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ். தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.   --- திரு. ரியான் ஐயா அவர்கள் ”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

தாயின் கருவறை

தாயின் கருவறை சுழற்சியில் இருந்து உன்னால் விடுபட முடியாது, நீ மெய்யான ஞானத்தை அறிந்திராவிட்டால்.... ஆதம் பாதம் எனும் உன்னத அறிவை அறியும் வரை தாயுடன் உன் உறவு தொடரும்.. தாய் வழி விட்டு தந்தை வழியை நீ அறிந்து கொள்ளும் போது, தாய் உன் தந்தையை அறியப்படுத்தும் போது, உன் தந்தை மடியில் தவழ ஆரம்பிக்கின்றாய். தந்தை உன்னை வளர்க்கின்றார். ஞானத்தை புகட்டுகின்ரார், உன்னை அவரை போல நாதன் ஆக்கி உன்னதத்தில் வைக்கின்றார். -- ❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

ஒக்கச் சொன்ன அலிபு நடு

ஒக்கச் சொன்ன அலிபு நடு முச்சுடரெண்டெழுத்தும் ஒன்றுபட்டு வரும் விதத்தை உவந்து இங்ஙனம் சொல்வேன்”...   இது தான் மறையான மறையான அறுநான்கில் ஓரெழுத்து. பழுதனுகாதுய்ய பொருள் பரமனைத்தும் பாய்ந்து பாங்குபெறும் ஹூவுடைய பேருமது தானே இந்த இறை நாமம் இரண்டு லாம் ஒரு அலிபு இருலாமும் நடுமூலத்திரு புறமும் நிற்க்கும்                               ~ (#பீருமுஹ்ம்மது #ஒலியுல்லாஹ்) இரண்டு லாம் ஒரு அலிபு சேர்ந்து வரும் முறை அது. ஒரு அலிபு, அதன் இரு புறமும் இரு லாம் சேர்ந்து வரும் அமைப்பு... சதா நம்மோடு இயங்கி நிற்க்கும் உயிர்நிலை, ஆனால் நம் அறிவுக்கு வராமல் இருக்கின்றது. ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனால் கோடி சென்மம் பிறந்தாலும் ஒருவர் காட்டிகொடுக்காமல் அறிவுக்கு வராது என்பது தான் உண்மை "மூச்சினோடியங்கி நிற்கும் முடிவிலா பொருளை நோக்கி....” என்ற நான்கு வரிகள். இது தெளிவான விஷயம். மூச்சுக்கும் பேச்சுக்கும் ஆதாரமாக நிற்க்கும் உயிர்நிலை தான் அது. ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

சூட்சும தேகம்

சூட்சும தேகம் ===== சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று. வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம் பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம். அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்? முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா. சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்.... பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!.  அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே  பக்கதுல இருக்கிறப்ப  பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.   மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என. --- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️