Tuesday, November 29, 2022
தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்
தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்
ஆதியே துணை.. குரு வாஅழ்க குருவே துணை.. தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் என்ன என்பதை உணரும் தருணம் வாய்த்த முகூர்தம் கிடைத்தது என்பது மகிழ்ச்சியான நிகழ்வே தான். சுத்தமான பாத்திரம் முன்னால் நீட்டப்படும் போது ஈயாது முகம்திருப்புதல் நன்றல்லவே..ஆதலின் ஈந்து விட்டேன்..ஈன்று விட்டேன்..அந்த ஆறாவது அறிவினை..பெற்றவர் பேறு கொண்டவர் என்பதில் மாற்று கருத்தில்லை....எண்ணிலிகோடி சென்மங்களின் பிறவி பலனென்பதில் ஐயமுமில்லை...நமசிவாயம் வாஅழ்க..நாதன் தாள் வாஅழ்க..இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாஅழ்க. வாஅழ்க குருவடி வாஅழ்க வாஅழ்கவே
பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்
பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?
தலைப்பை பாத்துகிட்டு சிரிக்காதீக!!!!...பாத்திரம் என்றால் தீட்சை பெற்றுகொள்ள தகுந்தவன் என பொருள் சொல்றாங்க மகான்கள்.
பரமோன்னத குருவை அடைவது என்பது இப்பிறவியின் பயன் மட்டுமல்ல, பலபிறவிகளின் பலன். எண்ணற்ற பிறவிகளின் பலனே குரு வடிவமாக எழுந்தருளுகின்றது. அதை பயன்படுத்திகொள்வதும் அவனவன் செய்த புண்ணிய ஸுஹ்ருதமேயாம் என்பதில் ஐய்யமில்லை.
பிறப்பிலேயே உலக விஷயங்களில் வேட்க்கையற்று இவற்றை கடந்த எதையோ சாதிக்க வேண்டும் எனும் உந்துதலோடு பிறப்பவன், எதனையும் பொருட்படுத்தாது இளம் பிராயத்திலேயே மூகனாக ஏகனாக எதையோ தேடிகொண்டிருக்கும் தன்மை பொருந்தியவனாக ஒன்றிலும் பற்றில்லாதவனாக வேட்கை மிகுந்தவனாக திரிவான், காய்ந்த சருகு போல....குருவின் திருவுரு தரிசித்த மத்திரத்தாலேயே அவனில் ஆனந்தம் அணை உடைந்தாற்போல் குதூகலிக்கும்,ஏன் என்றோ எதற்க்கு என்றோ அவனையும் அறியாமல் எழும் எழுச்சி அது.அவனுக்கு கேள்வி என கேட்க்க ஒன்றுமில்லாமல் இருக்கும்...சந்தேகம் என ஒன்று அவன் மனதில் கூட துளிர் விடாதிருக்கும்..ஏதோ ஜென்மத்து உறவு போல குருவிடம் பழகுவான்.. ஒன்றையும் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும் எனும் சிந்தை கூட அவனிடம் இருக்காது... குருவுக்கு தெரியும், எப்போது எதை எவ்வண்ணம் கொடுக்கவேண்டும் என நிதர்சித்திருப்பான்...அவனுக்கு என தேவை ஒன்று இருக்காது, சேலையும் நூலும் போல குருவிடம் இருப்பான்...பூரண சரணாகதியுடையவனாயிருப்பான். குரு ஒன்றை சூசகமாக சொன்னால் கூட பஞ்சை போல பற்றிகொள்ளும் திறம் கொண்டவனாயிருப்பான். இவன் உத்தம பாத்திரம்
Hseija Ed Rian பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே
எந்த வித்தை மெய்யானது
எந்த வித்தை மெய்யானது?
ஆன்மீகவாதிகள் பொதுவாக பார்த்தால் எதையாவது ஒரு சம்பிரதாயத்தை முன்னிறுத்தியே முன்னேறுவதை பார்க்கிறோம், அந்த சம்பிரதாயம் தான் பெரிய வித்தைண்ணு சொல்லிகிட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம். பக்தியில் திளைக்கிறவன் சிவன் தான் பெரிசு அல்லது விஷ்ணு தான் பெருசு அல்லது அம்மன் தான் பெரிசுண்ணு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க. மனம் அவங்களை மயக்கி வெச்சிருக்கும். ஒருவித போதை போன்றது இது,அவர்களின் இஷ்ட்ட தெய்வ சங்கல்பத்தால் போதை கொண்டு இருப்பார்கள், இதையே பக்தி என்கிறோம். இதில் தான் மிதம் தீவிரம் என இருவகை. இந்த பிரிவு எல்லா மதங்களிலும் உண்டு. ஒருத்தன் சண்டைக்கு போவான், மற்றவன் தான் உண்டு தன்பாடு உண்டு என இருப்பார்கள்.இவர்களுக்கு ஆராதனை செபம் தோத்திரம் இவையே போதும், இவற்றில் அடிமுட்டாளாக இருப்பான், ஞானம் சொன்னாலும் காதுக்கு ஏறாது. இப்படியானவர்களை சமீபிக்காமல் இருப்பது நலம்.
இரண்டாவது குரூப்பு என்பது சற்று உயர்ந்தவர்கள், கொஞ்சம் கேள்விஞானம் கொண்டவர்கள். பலவிதமான ஆன்மீக கேள்விகளை தன்னகத்தே கொண்டவர்கள், ஆனாலும் ஞானம் என்ன என விளங்கி கொள்ள முடியாதவர்கள், இவர்களிடமும் பக்தி நிறைந்திருக்கும்,ஆனால் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். அரைவேக்காடுகள் என சொல்லலாம்.இவர்களை சொல்லி புரியவைப்பது கடினம். அதனால் இவர்களிடமும் சமீபிக்காமல் இருப்பது நலம்.
மூன்றாவது வகையறா என்பது ஏராளம் படித்தவன், இவன் ஒன்றையும் ஆழமாக செல்லமாட்டான், எல்லாத்தையும் படிப்பான், பெரிய குப்பைதொட்டியாக இருப்பான். எல்லா குருமார்கள் கிட்டயும் போவான், எல்லா சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை என எல்லாம் இருக்கும், ஆனால் தெளிவு இருக்காது. இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம்.
நான்காவது வகை போலிகுரு. ஒண்ணும் தெரியாது, நெறைய வித்தை வகையறாக்கள் இவனிடம் இருக்கும், எல்லாத்தையும் கூவி கூவி அழைத்து வாரி வாரி வித்தைகள் வழங்குவான். எதுக்கு கொடுக்குறோம், யாருக்கு கொடுக்கிறோம் என கூட அவனுக்கே தெரியாது, ஆனால் குருவாக இருக்க ஆசைபட்டு இப்படியெல்லாம் செய்துகிட்டு இருப்பான், பணத்துக்கு ஆசைபடுகிரவனும் உண்டு, பணம் வாங்காமலேயே கிடைக்கிறவங்கலை எல்லாம் குட்டிசுவராக்கி கிட்டு இருப்பான். இவனும் சமீபிக்க தகுதியற்றவன்.
ஐந்தாவது வகையானவன் எல்லாம் கற்றவனாக இருந்தாலும் ஒன்றும் புரியாதவனாக இருப்பான், இவனிடம் இருக்கும் அருமையான குணம் என்பது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்திருப்பான். அதனால் தன்னடக்கம் இவனிடம் இருக்கும், ஆனாலும் குருமார்கள் முன் மண்டியிட இவன் ஆணவம் இடம் கொடுக்காது. ஆகையினால் இவன் நுணுக்கங்களை அறியாமலேயே போய்விடுவான். இவனும் சமீபிக்க தகுதி அற்றவன்.
ஆறாவது வகையானவன் கற்றதெல்லாம் மெய்யல்ல என உணர்வு கொண்டவன், அனைத்து வேத ஆகம சாத்திரங்களுக்கும் மேலாக அறிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்கிறது என புரிந்து கொண்டவன், ஆனால் ஆன்ம விளக்கம் இன்றி அலைந்து கொண்டிருப்பான். எதை தான் இவனிடம் போய் சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டான், அலைவதே அவன் கர்மம். இவனையும் சமீபிக்க தகுந்தவன் அல்ல.
ஏழாவது வருகிறவன், சாதனையாளன். யராவது சொல்லியோ, அல்லது எங்கிருந்தாவது கேட்டோ, அல்லது எதாவது நூல்கலை கிளறியோ கொண்ட அறிவால் கடினமான சாதனை செய்பவன், தீவிர வைராக்கியம் கொண்டவனாக இருப்பான், ஆனால் தான் செய்வதை மனைவிக்கு கூட சொல்லமாட்டான், அப்படி ரகசியம் காப்பவன். அவன் செய்ய்ம் வித்தையே பெரிசு எனும் எண்ணம் இவனுக்குள் இருப்பதால் மற்றவர்களை பொருட்படுத்தமாட்டான். எப்போதும் தனிமையில் இருப்பான், சாதனையில் கண்ணும் கருத்துமாக இருப்பான். இவனுக்கும் ஆன்ம விளக்கம் இருக்காது, ஆகையினால் சமீபிக்க தகுந்தவன் அல்ல.
எட்டாவது வருகிறவன் ஞானமுட்டாள் என வகைபடுத்தலாம். தான் செய்யும் வித்தை பரமோன்னதமானது, வித்தையினால் சொர்க்கம் போகலாம், பரமண்டலத்தில் ஏறிவிடுவேன் என பெருமையினால் இருப்பவன். சிறந்த சாதனையாளனாக இருந்தாலும் இவன் தேடுதலை நிறுத்திகொண்டவனாகையினால் இவனுக்கும் ஞான விளக்கம் இருக்காது. எது சொன்னாலும் உறைக்காது, சாகும் தருவாயில் கூட உபதேசம் ஏற்றுகொள்ள தயங்குவான். அவன் வித்தையே பரமமானது என முட்டாள்தனமாக இருப்பவன்.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம்.
ஒன்பதாவது வருபவன் வித்தையை நம்புவான் ஆனால் குருவை நம்பமாட்டான். வித்தை மட்டும் போது ஆன்மவிளக்கம் உண்டாகும் என இருப்பவன். வித்தையின் நுணுக்கம் ஆழ்ந்த அனுபவம் கொண்ட குருவிடம் இருக்கின்றது என விளங்கிகொள்ள மாட்டான். குருவை மனுஷதூலம் என கருதி மரியாதை செய்யமாட்டான். குருவிடம் மறைவான ஞானவிளக்கம் குடிகொள்கின்றது என புரிந்துகொள்ளாமல் வித்தையை மட்டும் வாங்கிகொண்டு ஓடிவிடுவான்.இவனும் கதைக்கு ஆகாதவன்.
===(தொடரும்
உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.
யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர்.
இதன் பரிணாமம் தான்
"தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை. இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை
எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல...
ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?..
அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்
Hseija Ed Rian Sathya Narayanan சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்
Monday, November 28, 2022
புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.
புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.
புருவமத்தி என்பது புருவத்தின் மத்தியா புருவங்களின் மத்தியா என ஒரு சத் விசாரம்.
திருச்சிற்றம்பலம்.
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது “மணி’ என்பது என்ன ? இதை என்ன என்று கூறுமிடத்து வள்ளலார் சொல்லுவதை பாருங்கள், “ நமது புருவமத்தியில் ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது “ என்பார்….அந்த “ஒரு மணியே” மணி மந்திர அவுடதம் என அறிந்து கொள்ளவேண்டும்….அந்த ஒரு மணியே ரெண்டு கண்ணிலும் உயிருக்கு உயிராயும் கருணை கடலாயும் கைபடா கனலாயும் ஜோதியாயும் தந்தையாயும் தாயாயும் குருவாயும் ஞானமாயும் மிளிர்கின்றது. அந்த “ஒரு மணியே குருமணி” என அறிதல் வேண்டும்….அப்படி ”ஆறு பட்டையுடன் கூடிய ஒரு மணியை” தக்க குருவின் துணை கொண்டு அறிதலே ஞான தீக்கை. . அதனை தக்க ஆசாரியன் திருவருளால் அறிந்து திறந்து கொள்ளுதலே “நடுக்கண் பூட்டை” திறத்தல்.அதுவே ஞான சாதனம். ..
இங்கு கற்றவர் உளத்தே இனிக்கும் என்பது அறியப்படவேண்டியது, கண் நுதல் கடவுள் என்பவர் உளத்தே இனிக்கும் தன்மையினர் என தெளிகிறது..ஆனால் ஊனக் கண் மணியானது உளத்தே இனிக்கும் தன்மை அற்றது. “கண் நுதல்” கடவுள் என்பதுவே அறியப்படவேண்டியது. அதுவே உளத்தே இனிக்கும் தன்மையது. ஆதலின் உளத்தே இனிக்கும் தன்மை உடைய கண்நுதல் கடவுளை அறிதல் வேண்டும். அன்றியும் “கண் மணியே ”இங்கு வள்ளலாருக்கு ஞான மணியாயும் ஞான மருந்தாயும் இருக்கின்றது. ஆதலின் “மணி” என்பது என்னவென்று புரிதல் அவசியம்.. “ மணி மந்திர அவுஷதம்” என்பர் பெரியோர். மணியானது மந்திரமாயும் மருந்தாயும் இருக்கிறது என பொருள். அதையே வள்ளலாரும் தெரிவிக்கிறார்.
பொற்சபை நடஞ்செய் புண்ணியரை கண்ணினுள் மணியாயும் ,கைபடா கனலாயும், கறைபடா மதியாயும் ,கணிப்பரும் கருணை கடலாயும், தெய்வமாயும் கருதி திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்றே வள்ளலார் பாடுகின்றார்.ஆதலின் இங்கு ஊன கண்மணியே தான் கடல் என கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணி தான் மதியென கொள்ளுதல் தகுமோ?, அல்லது ஊன கண்மணிதான் கனலாயும் கொள்ளுதல் தகுமோ?..அப்படி கொளின் ஊன கண்மணி தான் கடல் எனவும் கொளவேண்டுமே.? ஒரு ஊன் உறுப்பு, ஊன்பொருள் எப்படி கனலாகவும் கடலாகவும் இலங்கும் என்பதை சற்று கூர்ந்து நிச்சயித்தல் நன்றல்லவா?. ஆதலின் இஃது உவமையாக கொண்டதே அன்றி ஊன கண்மணி தான் கனல் என்றோ, ஊன கண்மணி தான் கடல் என்றோ, ஊன கண்மணி தான் மதியென்றோ, ஊன கண்மணி தான் பொற்சபை என்றோ கொள்ளுவதெங்ங்னே?. இப்பாடலில் வள்ளலார் உபயோகிக்கும் வார்த்தையானது “தெய்வமே என நான் நின்னையேகருதி” என்பதாகும். அதாவது மேற்கூறியவை உவமையாகும். அதாவது,கண்ணின் மணி போலவும், கைபடாத கனல் போலவும்,கறைபடா மதி போலவும், கருணை கடல் போலவும் புனைந்துரைக்கின்றார் பெருமான் அவர்கள்.ஆதலின் “கண் நுதல் கடவுளை என்பது மேற்சொன்ன “மணி’ என் தெளிதல் நலம்.
அடுத்து மெய்ஞானம் என்ன என வினவுமிடத்து வள்லலார் கூறும் மெய்ஞானமானது “தகரமெய்ஞானம்” எனப்படும். அதை “தகர மெய்ஞான தனிப்பெரும் வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெரும்ஜோதி” என்பார் அகவலில். அப்படியான தனிப்பெரும் வெளியினி விளங்கும் தனிப்பெரும் கருணையளரே அகர நிலையான அருட்பெரும் ஜோதியார்., அப்படியல்லவா?.ஆகையினால் ஊனக்கண்ணும் அதில் இருக்கும் மணியும் தனிப்பெரும் வெளியாவதெங்ங்னே என சிந்தித்தல் நன்மை பயக்கும். முன்சொன்ன ஆறுபட்டையுள்ள மணியிலங்கும் தலமே ”தகர வெளி”. அல்லாது செத்துபோகும் போது அழுகி மண்ணோடு மண்ணாகி போகும் தன்மையான ஊனகண்மணி தகர மெய்ஞானமாகாது.
அன்றியும் மெய்பொருள் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட தூல பருப்பொருளக இருக்கமுடியுமா என சிந்தித்து தெளிதல் நலம். கண் என்பதும் கண் மணி என்பதும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டதும் மரணகாலத்தில் அழிவை தருவதும் ஆகும். ஆனால் வள்ளலார் கூறும் தகரவெளியில் விளங்கும் மணியானது பஞ்ச பூத சேர்க்கையினால் உருவாக்கபடாததும் அனாதி முதல் இருப்பதுமாகிய “உண்மை வஸ்த்து”. அதை ”ஏக வஸ்த்து” என்பர் சான்றோர். அதுவே “மணி”, கண்ணுக்கு கண்ணாகவும், உயிருக்கு உயிராகவும்,மாமருந்தாகவும் கைபடா கனலாகவும் , இன்பத்தை தரும் அமிர்தமாகவும் உள்ளது. அதையே கண்ணார் ஒளி எனவும், ஒளியின் கதிர் எனவும் சொல்லுவர்.
கதிர் என்பது கதிரவனை குறிக்கும்,அதை ஞான சூரியன் என்பார், அல்லது சிவசூரியன் என்பாருமுளர். “தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த கண்களில் செலுத்தவேண்டும்” என வள்ளலார் சொல்வதை சற்று கவனிக்க அதன் உண்மை புலப்படும். அதாவது சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்த ”கண்களில் ” செலுத்தவேண்டுவது கடமை. சூரிய கலை என்பது ஒரு கண்ணில் அல்லவா இருப்பதாக சொல்லுகிறார்கள், அப்படியெனில் ஏன் வள்ளலார் “கண்களில்’ என பன்மையில் குறிப்பிடுகின்றார்? ரெண்டு கண்களிலும் எப்படி சூரிய கலை வரும் என நினைக்கவேண்டாமா?
”விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன் கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்கலந்துநின்ற கதிரே”, என்பதில் வரும் கதிரே ”அகர ” நிலைப்பதியான அருட்பெரும் ஜோதி, இதில் வரும் விண்ணே என்பது ”தகர வெளி” எனப்படும். ஆகையினால் தினமும் சூரிய கலையான “அகர’ நிலையின் பால் மனதை செலுத்தவேண்டும்.. இதுவெ வள்ளலார் கூறும் தகர மெய்ஞானம். அல்லாது யோக சாத்திர சம்பிரதாயப்படியான அகரம் என குறிப்பிடும் சூரியகலை இயங்கும் வலது கண் இல்லை என தெளிதல் நலம் அன்றோ
மேற்படி விளக்கங்களினால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?.
மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.
தகரவெளி சிற்றம்பலவாணர் துணை.
உடலுயிர்-ஆன்ம உயிர்
உடலுயிர்-ஆன்ம உயிர் - 1
❤ உடம்பின் உனர்வுகளில் இருந்து விடுபடுங்கள், உணர்வுகளின் அசைவோ , துடிப்புகளோ, சூக்குமமான நாடியோ அல்லது இதுபோன்ற விஷயங்களோ ஆன்மா இல்லை... ஆன்மா ஒருபோதும் உடம்பில் உணரப்படுவது இல்லை, மனதாலும் கூட உணரப்படுவதில்லை... அறிவினால் அன்றி பற்றிகொள்ள அரிதாம்... மேலும் அது உச்சி குழியில் விளங்குவதும் இல்லை, உச்சிகுழி என்பது தூல சடமேயாம்...
தூல சடமானது உயிருடன் தொடர்பு, அந்த உயிரானது அறிவுடன் தொடர்பு, அந்த அறிவானது ஆன்மாவுடன் தொடர்பு கொண்டவை... அல்லாது ஆன்மா வேறு ஒன்றுடனும் தொடர்பில் இல்லை...
உயிரானது உடலை பற்றியது... உடலானதும் உயிரை பற்றியது... ஒன்று இல்லையாகில் மற்றதும் இல்லை.. இருக்காது... அதுபோல அறிவானது ஆன்மாவுடன் இருக்கும்... அது செத்த பின்னும் ஆன்மாவுடன் இருக்கும்... அது செத்து போகாது... அதுவே செத்த பின்னும் பல அறிவுகளை ஆன்மாவுக்கு குடுக்கிறது.... அது எக்காலமும் இருக்கும்... உயிரோ செத்த உடன் பிரிந்து விடும்.... இதை தான் வள்ளலார் ரெண்டு வித உயிர்கள் என சொல்லுகிறார்
ஒன்று உடலுயிர், மற்றையது ஆன்ம உயிர்..
தூக்கத்தில் உயிரும் உடம்பும் தொடர்பில் இருக்கும்...ஆனால் ஆன்மாவுடன் இருக்கும் அறிவெனும் உயிர் இதோடு தொடர்பில் இருக்காது.... அதனால் ஆன்மா ஒன்றும் அறியாது...
Hseija Ed Rian Suvasa Kathi எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினை கண்டறிவாரில்லை...என்றால் பொருள் என்னவாம்? ஆமாம் ஊனகண்ணால் பார்க்கமுடியாது என்கிறிர்களே, யார் இங்கு ஊனகண்ணால் பார்க்கமுடியும் என சொன்னதுவாம்
Hseija Ed Rian Suvasa Kathi இன்னும், நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கி துயரற நாடியே தூங்கவல்லார்கு பயனிதுகாயம் பயனில்லை தானே என திருமூலர் சொல்லுவதி வரும் கண் எந்த கண்ணாம்?
Hseija Ed Rian அண்ணைக்கு எந்த தொந்தரவும் இல்லாம தான் அவர் இருந்தார், எளிமையாகவும் அடக்கமாகவும். ஆனாl eப்ப சீடர்கள் என வந்து சேர்ந்தாங்கலோ அண்ணையிலிருந்து அவர் போக்கு போச்சு. நான் கண்மணி தீட்சை இவரிடம் வாங்கும் முன் ஈஸ்வரபட்டரின் முறை கண்மணி தீடை வாங்கியிருந்தேன், அதனால் இதில் இருக்கும் குளறுபடி பட்டவர்த்தனமாக புரிந்தது.அப்போதிலிருந்தே அவரிடம் நேரடியாகவே மணிக்கணக்காக முகாமுகமாக இருந்து பல நூல்களை எடுத்து போட்டு வாதாடியிருக்கிறேன், என்ன தான் சொன்னாலும் அவர் ஏற்றுகொள்ளதயாரில்ல்லை.இப்படி நாலு முறையாவது அவரிடம் வாதாடியிருக்கிறேன். அதற்க்கு முன் அவரின் நூல் பலபேருக்கு விற்று கொடுத்திருக்கிறேன், ஒரு ஜோல்னாபை முழுதும் அவரின் நூல் இருக்கும், அது தான் அவரின் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தது அன்று. அதனால் நம்மால் இயன்ற அளவு வாங்கி விற்றிருக்கிறேன்.அதற்க்கும் பத்து வருஷத்துக்கு முன்னமே எனக்கு 17-18 வயது இருக்கும் போதே அவரை நன்றாக தெரியும். நூல் விற்ற காலம் 91-94 காலயளவு
Hseija Ed Rian கண்மணியில் உணர்வு வெச்சு செய்கிற பயிற்சியினால் பைத்தியம் ஆன நபர்களை குறைந்தது ஆறு பேர்கலையாவது தெரியும். கேட்டு அறிந்தவர்களில் பலபேருக்கு இப்படி கும்மலமாகி இருக்கிறார்கள். பித்தம் தலைக்கேறி தூக்கம் குறைவது இதன் முதல் அறிகுறி. கண்ணில் அதிக உஷ்னம் தெரிவது இரண்டாம் அறிகுறி.இது இரண்டும் இருக்குமானால் மலபந்தம் ஆரம்பமாகும். வாயு க்ஷோபிக்க துடங்கும்.அப்புறம் சீக்கிரம் பைத்திய சித்தி உண்டாகும்
Hseija Ed Rian இப்படியான நபர்களை எங்காவது பார்த்தால் உம்மத்தம் பூ இலை சமூலம் சேர்த்து சிறுபயறும் பாலும் சேர்த்து உழிஞ்ஞை சமூலம் சேர்த்து செவ்விளநீரில் பாவனை செய்து அரைத்து மத்திப்பு தலைக்கு போட்டு, சிறுபயறும் காரெள்ளும் கருஞ்சீரகமும் பச்சரிசி சேர்த்து பொங்கி தேக்கிலையில் ஆவியுடன் உண்ண தணியும். நல்லெண்ணை தலைக்கு தேய்த்து காலைமாலை குளித்தும் வரவேண்டும்.புகையிலை புளி உப்பு கடுகு தவிர்க்கவும்.சாந்தி கிரியை இது.நெய் பத்தியம்
Hseija Ed Rian இருக்கிறத வுட்டுபுட்டு இல்லாததை அடைய எத்தனிச்சுகிட்டு இருக்கீங்க. “இப்ப..இங்க” இருக்கிற பொருள் ஒண்ணு இருக்கு....சதா இருப்பில் இருக்கும் “அதை” பற்ற முடிந்தால் அதுவே போதும். மனமும் இல்ல ஆத்மாவும் இல்லை, இரண்டும் கற்பனைண்ணு தெளிஞ்சிரும்
Hseija Ed Rian மேலே சொல்லபட்டிருப்பது எப்பொதும் நான் நானாக இருக்கும் ஆன்மா, நீங்கள் கற்பனை செய்யும் ஆன்மா ஏதோ “தூய ஆன்மா
Hseija Ed Rian ”நான் நானாக” இருக்கும் ஆன்மா இல்லாத ஒன்று ..நீங்கள் சொல்லும் “தூய ஆன்மா” எது என்று நீங்களே அறியாமல் கற்பனையால் உருவான ஒன்று
பிறவி
பிறவி
ஸாதி அவ்வளவு ஒன்றும் நிசாரமானவன் அல்ல என அங்குள்ள அனைவருக்கும் தெரியும்,எல்லா ஞான கோட்பாடுகளும் அன்றைய சூழலில் நிலுவையில் இருந்த ஒன்று கூட விடாமல் ஸாதி ஹிரிதிஸ்தம் பண்ணியிருந்தான்,அவற்றை நன்றாக மனனம் செய்து உட்கருத்தை அறிந்திருந்தான். பூர்வஜன்ம புண்ணியம் என ஒன்று இருந்ததினால் தான் அவன் நிச்சயம் ஒரு பிக்குவாக முடிந்திருந்தது, அதுவும் சாட்சாத் பகவான் புத்தர்பிரான் உயிருடன் நடமாடிகொண்டிருக்கையிலேயே அவருடன் கூட வசித்து அவர் சொற்பொழிவை காதுகளால் பருகி புத்த தம்மத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடிந்தவனாயிருந்தான்.
பனிரெண்டாயிரத்து சொச்சம் பிக்குகள் புத்தரை சதா சூழ்ந்து இருந்தனர்,எல்லோரும் தம்மத்தை நன்றாக கிரகித்திருந்தனர், அதன் நுணுக்கங்களை விளங்கியிருந்தனர். மறுபிறவி மற்றும் அனத்தா கோட்பாடுகளின் ஆழம் ஒருபோதும் அவர்கள் மனதை அசைக்கவில்லை,சந்தேகத்துக்கு இடமளிக்காவண்ணம் அவர்கள் சோதாபன்னர்களாக இருந்தனர், அசஞ்சல சித்தர்கள்.
புத்தர் மஹா போதி ஞானம் அடைந்து கொள்ளும் முன்பாக பல பிறவிகளின் ஊடாக பிறந்து கர்மங்கலை துய்த்து மேல்நிலைக்கு வந்தவர், போதிசத்துவர்களாக பல பிரவி, கடைசியில் பூரன ஞானம் எய்தினார் என ஸாதி அறிந்திருந்தார். பல சமயங்களில் இதன் நுணுக்கம் குறித்து தன் உடனான பிக்குகளிடம் கலந்துரையாடல், வாதம் , அறிவு பரிமாற்றம் என நிகழ்த்தியிருந்தார் ஸாதி. ஆனால் ஒரு போதும் ஏனைய பிக்குக்கள் ஸாதியின் கருத்தை ஏற்கவில்லை, அவர்கள் எதிர்த்தனர். ஸாதிக்கு மறுபிறப்பின் கொள்கையை விளக்கமுற்பட்டனர் சகதோழர்கள்.ஆனால் ஸாதிக்கு நண்பர்கள் சொல்லுவது புரியவில்லை, எத்தனை முறை சொன்னாலும் ஸாதியை அவரின் கருத்தை அவரின் கொள்கையை எவரும் ஏற்கவில்லை.
தற்போது புத்தர் பூரணஞானியாக இருக்கிறார், இதே புத்தர் தான் போதிசத்துவராக ஏராளம் முறை பிறந்திருக்கிறார் என்றார் ஸாதி.ஆனால் ஏனைய புத்த பிக்குகள் இல்லை என்ரார்கள். புத்தராக இந்த பிரவியில் வருவதற்க்கு அனேகம் பிறவிகள் பிறந்தது தான் உண்மை, ஆனால் பிறந்தது இதே புத்தர் அல்ல என்றார்கள் நண்பர்கள். ஆனால் ஸாதிக்கு இது எவ்வண்ணம் என புரியவில்லை.
என்றும் மதியம் பிட்சை அருந்தியபின் புத்தர் மரத்தடியில் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவது வழக்கம். பிக்கு ஆனந்தர் விஷயத்தை புத்தரின் காதுக்கு கொண்டு சென்றார்.ஸாதி வரவழைக்கபட்டார். புத்தர் ஸாதியிடம் அவரின் புரிதலை வினவினார்,ஸாதி தன்னுடைய ஆழ்ந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தினார். புத்தர் மவுனமாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
கூட்டத்தினரை நோக்கி முகமுயர்த்திய புத்தர் வினவினர், ‘..பிக்குகளே இதுவா புத்தரின் கோட்பாடு?’...”இல்லை” என்றனர் பிக்குக்கள் ஒருமித்த குரலில்.”ஸாதீ..” அன்புடன் அழைத்தார் புத்தர்....
‘இங்கு ஒரு நபர் இல்லை... இங்கு பிறந்து இருக்கின்றவர் என ஒருவர் இல்லை. அனேகம் போதிசத்துவர்கள் பிறந்தது உண்மை...ஆனால் புத்தர் இதற்க்கு முன் பிறந்ததில்லை....
ஸாதிக்கு ஒன்றும் விலங்கவில்லை...கடைசி வரைக்கு இந்த கோட்பாட்டை விலங்கி கொள்ளாமலேயே...புத்த சங்கத்தை விட்டு விலகி போனார்...அவருக்கு புரியவேயில்லை இதன் நுணுக்கம்
நாம ரூப விவர்ஜிதம் பிரம்மம் நிரஞ்ஞன நிராகாரம்
நாம ரூப விவர்ஜிதம் பிரம்மம் நிரஞ்ஞன நிராகாரம்
இங்கு நாமம் என சொல்லபடாத வஸ்து ஒன்றில்லை,பிரபஞ்சத்து வஸ்துக்கள் அனைத்தும் நாமங்களால் பகுக்கபட்டிருக்கின்றன. உண்மையில் பிரம்மம் என சொல்லபடுவதும் கூட வியவகார நிமித்தமாக சொல்லபட்டிருக்கின்றதே.
நாம் அனைவரும் நாமத்தால் கட்டபட்டிருக்கின்றோம்.பிறந்த குழந்தைக்கு முதல் சடங்கு நாமகரணம் தான்.அது முதல் நம்மோடு ஒட்டிகொண்டிருக்கின்றது நாமம்.இவ்வண்ணம் நாமமும் நம் ரூபமும் ‘நான்’ என கொண்டு திரிகிறோம்.
ஆழ்ந்த தூக்கத்தில் கூட நம் பிரக்ஞையில் ஆழ்ந்து ததாத்மியம் கொண்டு திகழ்வது தான் இந்த நாமம்..ஜாக்ரத்தில் நம் தூலசரீரம் தான் ‘நான்’ என சதா நினைப்பில் பிரக்ஞையில் வேரூன்றி திகழ்கின்றது. சூட்சுமத்தில் நாமம் சூட்சும சரீரமாக திகழ்கின்றது.எங்கு எந்த காலத்தில் அழைத்தாலும் அழைப்பது ‘என் நாமம்’ என பிரக்ஞை கொண்டு திகழ்கின்றது.
ஒரு புறம் தூலசரீரம் தான் ‘நான்’ என்பது ,மறுபுறம் ‘என் நாமம்’ என ஒன்று. இவை இரண்டின் மத்தியில் பிரம்மம் திகழ்கின்றது.’நாம ருப விவர்ஜிதம்’ என்பது இவற்றை விட்டு விட்டது என பொருள்.’நிரஞ்ஞனம் ‘ என்பது பற்றற்றது என பொருள்.இங்கே பற்றற்றது என்பது ‘நாமம் அற்றது’ என பொருள் கொள்க. நிராகாரம் என்பது உடலற்றது அல்லது ரூபமற்றது என பொருள் கொள்க.இவற்றின் மத்தியில் “பிரம்மம்” எனும் பதம் வைக்கபட்டுள்ளது.
முன் சொல்லபட்ட ‘நாமரூபவும்’ பின் சொல்லபட்ட நிரஞ்ஞன நிராகாரம் என்பதும் ஒருபொருளின் இருபுறங்கள், அவத்தைகள் மட்டுமே.
தூலசரீரம் நிலையற்றது, இந்த நிலையற்ற தூலத்தில் நாமம் நிலையாக இருக்கின்றது என மயங்குகின்றோம். நாமம் குழந்தையாக இருக்கும் போதும் ஒன்று தான், படுகிழவனாகும் போதும் அதே நாமம் தான்.இது மயக்கம் ஒன்று.
இரண்டாவது மயக்கம்தூலம் ஒருபோதும் ஒரே போன்ற தூலம் அல்ல.நிமிட நேரத்துக்கு முன் இருந்த தூலம் அல்ல நிமிட நேரத்துக்கு பின் இருக்கும் தூலம். கன நேரத்துக்கு கனம் தூல உடல் மாறுகின்றது, செல்கள் மாறுகின்றன, இரத்தம் தசை நரம்பு தோல் என அனைத்தும் புதியவைகளாக மாறிகொண்டேயிருக்கின்றது. ஆனால் இதை ஆழ்ந்து கவனிக்காமல் அன்றும் இன்றும் தூலம் நிலையானது, ‘நான் நிலையானவன்’ என கொண்டு திரிகின்றோம்.
இவை இரண்டும் மயக்கம்...பிரம்மம் இல்லாதது..பிரம்மம் அல்லாதது...இவை இரண்டும் அற்றது பிரம்மம்.அதாவது அத்வைதம் நாமரூபம் பரம்.பராபரம்....விக்ஞானமயம்.
=நிமிஷ நாமி
Hseija Ed Rian நிமிஷ நாமி என்னுடைய புனை பெயர்...அப்பப்ப புது புது பெயரை மாற்றும் யுக்தி.ரமணர் புத்தர் எனும் நாமங்கல் சுட்டும் பொருள் தான் மெய்பொருள். நம்மில் இயங்கும் ஜீவஸ்வரூபம்...அக்ஷர ரூபம்..சூட்சும தேகம்
Hseija Ed Rian நிமிஷ நாமி என்னுடைய புனை பெயர்...அப்பப்ப புது புது பெயரை மாற்றும் யுக்தி.ரமணர் புத்தர் எனும் நாமங்கல் சுட்டும் பொருள் தான் மெய்பொருள். நம்மில் இயங்கும் ஜீவஸ்வரூபம்...அக்ஷர ரூபம்..சூட்சும தேகம்.
Hseija Ed Rian தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை. இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் ,அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது.இரு முனையும் அற்றது..இரண்டற்றது.
Hseija Ed Rian ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது...உறைவது..இதையே ஹ்ருதயம் என்பர்.ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான்
"கண்"ணன் தேவ இரகசியம்
*"கண்"ணன் தேவ இரகசியம்*
எவனொருவனுக்கு இரவும் பகலும் கண்கள் இமையாமல் ஒரு நினைவாகவும், கால்கள் இரண்டும் பூமியின் பரிசமின்றி நிலை கொள்கின்றதோ அவர்களை தேவர்கள் என்பாயாக. மற்றெல்லாம் பொய்யர்கள் என்பாயாக.
குருபிரானால் கூறப்பட்ட, உள்முகமாய் சுட்டப்பட்ட, லட்சிய தலத்திலே உட்கண்ணை செலுத்தியும் வெளி தோற்றத்தில் கண்ணானது வெளிமுகமாகவும், இமைத்தல் முதலியவை அற்றிருக்கின்ற தன்மையே சாம்பவீ முத்திரை என்று எல்லா தந்திர ஞானங்களிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அறிவாயாக.....
🌺திரு. ரியான் அய்யா அவர்கள்🌺
உச்சி தனிலிருந்து உருவாகி
உச்சி தனிலிருந்து உருவாகி
உச்சி தனிலிருந்து உருவாகி அலிபாகியே நடுவே பச்சி தனில் தரித்து பலமாகவே இல் என்றிருந்துகொண்டு வெச்சிதனை கடந்து இல்லல்லாஹூ என எழும்பி நின்று அச்சரமானதுவை அருளாக தரும் திருக்கையிதுவே
~(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானக்குறம்
உடல், ஓ பிக்குவே ஆன்மா
உடல், ஓ பிக்குவே ஆன்மா அற்றது. ஒருவேளை ஓ பிக்குவே இவ்வுடலில் ஆன்மா உறைந்துள்ளது எனில் துக்கத்தினால் அவதியுறும் தன்மை இல்லாமல் இருந்திருக்கும்,’இந்த உடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் ஏற்பாட்டுக்கு வாய்ப்பு இருந்திருக்க்கும்.அவ்வண்ணம் எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பதினால் ,அவ்வண்ணம் ஏற்பாட்டுக்கு ஆதாரமான ஆன்மா இல்லாமல் இருப்பதினாலும்’ இவ்வுடலம் இவ்வண்ணம் இருக்கட்டும் அல்லது இவ்வுடலம் அவ்வண்ணம் இருக்கட்டும்’ எனும் கட்டளை செய்யும் ஆன்மா இல்லாமல் உடல் முதல் ,மனம், மெய்யுணர்வு வரைக்கும் அனைத்தும் ஆன்மாவற்றது
~புத்தர்
சாதாரண மக்களுக்கு இது புரியாது ஜீ..இந்தியாவை விட்டு புத்த தம்மம் அகன்று போக நிச்சயமான காரனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆன்ம தத்துவம். ஆன்ம கோட்பாட்டை அவ்வளவு எளிதாக இந்திய சிந்தனையில் இருந்து அகற்றிவிட முடியாது. எப்போது ஆன்ம தர்சனம் மயக்கம் என தெளிவு வருகின்ரதோ அப்போஒது தான் புத்த தர்சனம் என்ன என புரிய ஆரம்பிக்கும். இல்லையெனில் எண்ணற கர்ம சுழற்சிகளின் ஊடாக பயணித்து பல பிறப்புகள் கடந்து தான் சாத்தியம் என்பது நிதர்சனமான உண்மை
ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்ல்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது
நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது
பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே..இது தான் நிலை.... இது மயக்கம்
இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்
Hseija Ed Rian ‘நான்’ எனும் இருப்பின் நிதர்சன ரூபம் வஜ்ர பிம்பமாக வெளியாக மனதின் மயக்கம் அற வேண்டும், இல்லையெனில் ஆன்மா என ஒன்று தனியாக இருக்கின்றது என மனம் பேதலித்து திரியும்
Hseija Ed Rian மனமே ‘நானாக’ மனம் தன்னையே ‘நான்’ என சொல்லி, அந்த ‘நானே’ மனமல்ல ,மற்றொன்று எனவும் ‘தன்னையே’ அறியாமல் உழன்று கொண்டு திரிகிறது
Mathi Hseija Ed Rian மனமே இல்லையெனில் கர்மம் இல்லை அப்படித்தானே...
"என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயல் என்று
உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ
இங்ஙனம் வந்து மூண்டதுவே......பட்டினத்தார்
Hseija Ed Rian கர்மம் என்பது எல்லா செயல்களும் தான், நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி ,அவையெல்லாம் கர்மம் எனும் கட்டுக்கள் வரும். அகர்மம் என்பது கர்மங்களை நிராகரிப்பது, செயலாற்றாமல் இருக்கும் தன்மை. விகர்மம் என்பது ஞானம், எல்லா கர்மங்களையும் பந்தம் அற்று நிசங்கத்துடன் செயலாற்றும் அர்ப்பண செயல்
Hseija Ed Rian கர்மம், மனத்தால் செய்யபடுவது உண்டு, உடலால் செய்யபடுவதும் உண்டுமனம் உடல் சேர்ந்து செய்யபடுவதும் உண்டு
Hseija Ed Rian உடலால் செய்தாலும் மனதால் செய்தாலும் இவை இரண்டும் சேர்ந்து செய்தாலும் கர்மம் கர்மம் தான், அதற்க்கு ஏற்ப பலன் நிச்சயம் உண்டு. வினை உண்டு எனில் வினை பயனும் கூடவே உண்டு. இவை இரண்டும் அபின்னமானவையே.
Mathi குறைபாடுகள் தேகமுள்ள மனிதர்களும், சிறுவயதிலே அறிவு மேலோங்கி இருக்கும் நபர்களையும் காண்கிறோம்... இது கர்மாவை வைத்து தான் நடக்கிறதா ?
Hseija Ed Rian குறைபாடுள்ள மனம் கொண்டவர்கள் செய்யும் கர்மமும் பலனை கொடுப்பனவையே, குறைபாடுள்ள உடலை கொண்டவர்கள் செயலும் பலனை கொடுப்பவையே.ஆனால் குறைபாடின் தன்மைக்கு ஏற்ப்ப குனநலன்களும் குறையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?. ஆனால் கர்ம பிறவி என்பதும் கர்ம பூமி என்பதும் ஒன்றோடொன்று பந்தம் கொண்டவை. 80 ஆயிரம் கோடி கர்ம பூமிகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒவ்வொன்றிலும் பிறப்பதும் கர்ம புண்ணியம் பாவம் நிமித்தமே தான்.
Hseija Ed Rian கர்ம பூமிகள் என சொல்லபடுவது இப்பூவுலகு போல, கர்ம பலன்கலால் பிரதிபலிக்ககூடிய உலகங்கள் தாம். இவ்வுலககமும் கூட ஒரு பிரதிபலிப்பு தான். கர்மங்களுக்கு ஏற்ற பிரதிபலிப்பு
Hseija Ed Rian இவ்வுலகத்தின் ஒத்த கர்ம நியதி கொண்ட பிறப்புகள் மட்டும் தான் இங்கு பிறக்கும், பிறக்க முடியும். இந்த உலகத்துக்கு ஒவ்வாத மேல்நிலை கீழ்நிலை பிறப்புகள் இங்கு பிறக்கமுடியாது. அவை ஏனைய கர்மபூமியிங்கல் பிரக்கும்.
·
Hseija Ed Rian ஜோதிடம் கணிதம் வரைதான் கற்றேன், பலஸ்ருதிக்கு போக
Hseija Ed Rian பித்ருகர்மம் என்பது செயல் தானே, அப்போது பலன் கூடவே இருக்கவேணும் அல்லவா?
Hseija Ed Rian ஒருவன் ஒரு பாறாங்கல்லை உடைக்கின்றான் என கொள்ளுங்கள். அந்த உடைக்கும் செயலுக்கு பலன் அவன் கர்ம பந்தத்தில் பலனாக பரிணமிக்கும். அதேவேளை உடைக்கபட்ட பாறாங்கல் ஒருபோதும் பழையபடி ஆவதில்லை, உடைத்த பலனை தாங்கி எக்காலமும் நிற்கின்றது. அடுத்து வருபவனுக்கு உடைக்கும் வாய்ப்பு கிடையாமல் போய் விடுகின்ரது,ஏனெனில் அது உடைபட்டு விட்டது. அப்படியிருக்க, உடைபட்ட கல்லை தரிசிக்க கர்மம் செய்தவன் மட்டுமே அதை தரிசிக்கிறான். முழு கல்லை தரிசிக்க கர்மம் உடையவன் உடைந்த கல் அருகாமையில் வருவதில்லை.
Subscribe to:
Posts (Atom)