Friday, November 25, 2022
சுவாசம் ஓடும் கணக்கு
சுவாசம் ஓடும் கணக்கு
கடைசி னேரத்தில் னோயாளிக்கு பிராணவாயுவை குழாய் மூலமாக டாக்டர்கள் செலுத்துவதைப் பற்றி சபையில் வினவிய போது, ஆண்டவர்கள் -
சுவாசம் எப்படி ஓடுகிறதென்று உனக்குத் தெரியுமா? தெரியாது - தாவர வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் - ஒரு மாதத்திற்குத் தண்ணீர் ஊற்றினால், எங்ஙு தளிர்க்கும், எப்போது அழியும் என்று உனக்குச் சொல்லத் தெரியுமா? இறைவனின் கஜானாவிலிருந்நு வெளியானாலன்றி அது உனக்கு விளங்ஙாது - னகம் எப்படி வளருகிறது? ரோமம் எப்படி உண்டாகிறது? ரோமத்தின் அடிப்பாகத்தில் கிழங்ஙு இருக்கிறது - அதை ஒட்டிய ஒரு பொருள் கறுப்பு ரோமத்தைத் தள்ளுகிறது - எந்ந அனலான காப்பைக் கொண்டு கருப்பாக ஆகுது? பின் எப்படி வெளுப்பாக மாறுகிறது? இதைப் பற்றிக் கூடத் தெரியாவிட்டால் உன் படிப்பின் தரம் தான் என்ன? இந்ந னினைப்பாவது உனக்கு வருமா? ஒரு வித்திற்குள் னுழைந்நு அதன் அகண்ட விரிப்பை னுணுகி னுணுகிப் பார்க்கும் தகுதி வந்நாலன்றி இது தெரியாது.
மனித உடலில் சுவாசம் ஓடும் கணக்கு ஒன்று இருக்கிறது - அதாவது மாமிசத்தின் உஷ்ணம் ஒரு பங்ஙும், அதைப் போல் இரண்டு பங்ஙு ரத்தத்தின் உஷ்ணமும், அதைப் போல இரண்டு பங்ஙு னரம்பின் உஷ்ணமும் உண்டு - இவை மூன்றும் சரியாக இருந்நால்தான் சுவாசம் ஓடும் - ஏதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் சரியாக ஓடாது - இப்படியிருக்க இவனாக பிராணவாயுவை ஏற்றினால் என்ன பிரயோசனம் - உள்ளே வாங்ஙும் கருவியின் மூன்று பாகங்ஙளும் இருக்க வேண்டியபடி இருந்நால் தானே வாங்ஙும்? இல்லாவிடில் கருக்கரிவாள் போட்டு அறுக்கும் வாதனையாக இருக்குமே - பட்ட மரத்திற்குத் தண்ணீருற்றி, மேலே தழைக்கிறதா என்று அண்ணாந்நு பார்ப்பவன் செயல்போல்தானிருக்கும் - மேற்கொண்டு அது மொய், மொய்யென்று அழுகுவதால் கொடூரமான வாதையையே உண்டாக்கும்.
இதை அறிந்நால், பூலோகத்தின் எடை எவ்வளவு என்று அறிவது போல இருக்கும் - அனைத்தையும் உண்டாக்கிய காலவரம்பின் எடை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டது போல இருக்கும் - இது யாருக்கு விளங்ஙும்? ஓடுகிற ஓட்டத்தை, (சுவாசத்தை) னிறுத்தி வைப்பவருக்கல்லவா தெரியும்? இதை னாம் வெளியாக்கினாலொழிய உலகத்திற்குத் தெரியாது.
--- சாலை ஆண்டவர்கள்
வாய் உணவு - செவி உணவு
வாய் உணவு - செவி உணவு
"வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம்.அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."
"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.
வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."
"மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்.
ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது.செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில்,துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது."
---- மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் வாக்கியம்
புதிபுருவத் தடி
புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ "கர்மம்" போச்சு;
விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
வத்துவதே காரணமா மகிமை யாச்சே
ஜீவாக்னி - ஜடாக்னி
ஜீவாக்னி - ஜடாக்னி
உஷ்ணம் அதாவது அக்னி என்னும் சிவரூபம் உயிருக்கு ஆதாரமாயும் எங்கும் தூலக் கண்ணால் காண இயலாததும், அண்ட சராசரங்களிலும் கடல் சூழ் இப்பூமியன் கண் மட்டும் , சகல ஜீவராசிகளிலும் மயன௹பமான அ௹பத்தில் மாயாரூபியாய் அரசாட்சி செய்து வருகிறான். அச் சிவமானவன் மனிதனிடத்து மட்டும் அறிவாயும் மனமாயும் உடலாகவும் முப்பொருளாய் குடியமர்ந்து உள்ளான்..
சொல் என்னும் பேசும் கலையானது அகச் சொல்லாகவும் புறச் சொல்லாகவும் பரிணமித்து மனிதனுக்கு மட்டும் தனித்துவமான அமானிதமாக இறைவனால் வெகுமதியாய் தரப்பட்ட ஒரு தனிவரம். ஒரு சொல்லின் தன்மையைப் பொறுத்து உடலில் உஷ்ணமானது ஜீவாக்னி என்றும் ஜடாக்னி என்றும் இரு பிரிவாய் மாறுகிறது. ஜடாக்னி உணவாலும் மற்றும் குணமாற்றங்களாலும் குற்றமாகி எண்ணக்குவியலாய் மாறி நோய் என்னும் எமனிடம் தூலத்தை ஒப்புவித்து மரணத்துக்கேதுவாய் ஜடம் அழிவுரு அடைந்து தன் கடமை மறந்த பாவத்திற்கு ஜனன மரண படுகுழியில் விழுந்து மீட்படையா அலகையாகிறது.
குருவுரு - மனம் - மருள் - ஜடாக்னி
திருவுரு
(பொருளுரு) _ ஆன்மா - அருள் - ஜீவாக்னி.
ஆதம் - ஆத்மா
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லார் மனக்கவலை மாற்றல் அரிது.
தாள் சேர்தல் என்பது காலக் கணக்கான கண்ணையும் நாக்கையும் முறையாகக் கைக்கொள்ளும் போது கணக்கு என்ற நினைவினில் உஷ்ணம் உண்டாக்கி தனக்குள்ளே பேசும் பேச்சு உண்டாக்கும் ஒரு அருங் கலை. நினைவின் பிறப்பு தூலக் கண்ணின் பின்புலத்தில் உள்ளது. இமையா நாட்டம் என்னும் தவநெறியில் ஜீவாக்னி என்னும் அழியா நிலை கைவரவாகி உதயமாகிறது. இது அகத்தே ஸ்தோத்தரித்து தன்னைத்தானே சுயம்புவாய் அர்ச்சித்துக் கொள்ளும் தன்மையால் கொழுந்துவிட்டு ஜ்வாலையாய் ஆகுர்தி வேள்வியில் நிலை கொள்கிறது. இது 24 ஆண்டுகால வைவஸ்ய பாடுடைய தவ முறையால் சித்திக்கிறது.
அதாவது அறிய வரமாகிய பேசும் கலையை உடல் சார்ந்து உபயோகிக்கும் போது அழிவுக்கும் ஆன்மாவோடு உபயோகிக்கும் போது அழியாமைக்கும் இட்டுச் செல்லும். ஒரு மொழிக் கீதையாம் ஓர் மாத்திரைக்கோல் கொண்டு ஆன்மாவோடு உரையாடுவதே வாழும் கலை என்னும் சாகாக்கலை .
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பதை
மனமது செம்மையாக
மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று பகுத்தறிவு கொண்டு பயணிக்கும் போது உஷ்ணம் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
இது மேலும் சொல்லுக சொல்லில் வெல்லும் சொல் என்றும் விரிகிறது.
செம்மை என்பது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். உஷ்ணத்தால்தான் எந்தப் பொருளையும் சிவப்பாக்க இயலும். நம்முடைய தூல தேகத்தில் எந்தப் பொருளை செம்மை என்னும் உஷ்ணத்தால் சிகப் படையச் செய்யலாம் என்று தன்னில் அறிந்து உறக்கத்தை ஜெயம்கொள்ளும் போது இந்தப் பூதவுடல் அழிவிலிருந்து அழியாமையை அடைந்து பொன்னுடம்பு தேகமாகிறது.
இது வாசி ஹட யோகத்திற்கும் மற்றும் தேக சாஸ்த்திரத்தில் லக்ஷ்யம் கொண்டு யோக நிலை சித்து சக்தி பெற முயல்வோருக்கு கை கூடாதென்பது திண்ணம்.
மனம் என்னும் நினைவு அசையும் இடத்தே 'உடல் உஷ்ணத்தையும்' நினைவு அசையா இடமாகிய நினையாப்புரம் என்னும் பிடரிக் கண் வெளியிலே 'ஆன்ம உஷ்ணத்தையும் ' தன்னுள் தானே ஏற்படுத்திக் கொள்வதே சாகாக்கலை என்னும் பிரம்ம வித்தைச் செயல் என்று எங்கள் மதினாவரசர் மாணிக்கப் பொன்னம்பல மதி மேடைவீற்றிருக்கும் எம்மான் "சாலை ஆண்டவர்கள்" திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
நன்றி: --- திரு. சாலை ஜெயராமன் அய்யா அவர்கள்
றசூல்
===== றசூல் =====
வெம்பனி என்றால் சூரியனே நடுங்கும் வெப்பம் மிகுந்த துளி. பீரப்பா பாடுவர் "பருதி நடுங்கும் துளிகொடென் ஆவி அமைத்தோனே” என.இந்த துளிக்கு “ஆஷிக்” என சூஃபிஸம் கூறும்.
பிரபஞ்ச உற்பத்தி காலத்தில் இறைவனும் இறைவனுடைய பெருங்கருணையும் மட்டுமே இருந்தன. அந்த கருணை கடலுக்கு "றஹ்மத் கடல்" என பெயர், அல்லது "ஆத்தும மர்ம ஜலக்கடல்" எனவும் பெயர். மேற்படி றஹ்மத்து கடலில் சதா இறைவனுடைய பேரருள் பெருமழையான துளி பெய்துகொண்டிருக்குமாம்.
அப்படியான றஹ்மத்து கடலில் கோடானுகோடி கற்பாந்தங்களினூடாக ஒரு மலர்ச்சி உண்டாகுமாமந்த மலர்சிக்கு காரணமானது கடலில் நீரோடு நீராக உறைந்துள்ள "தாத்து" எனும் தன்மையே.
இதையே மஹரிபத்துமாலையில் "தாத்து றஹ்மத்து கடல் நிறைந்த ரகசியம் தனை சொல்லக்கேளும்” என பீரப்பா விவரிக்கின்றார். அந்த தாத்தானது சிபத்து சிபாத்துகளாக விரியும். அந்த தாத்து விரிந்து "அஹமத்" என வளரும், அஹமது பின்னர் "முஹம்மதுவாக மலரும்", அதன் விரிவு நிறைய சொல்ல உண்டு. இந்த முஹமதுவை தான் வலம்புரி என்கின்றோம்.
வலம் புரியான இதற்குள் மேற்சொன்ன ஆஷிக் துளியை உண்டு முத்து உதயமாகும். இதுவே றசூல்.
====🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺
வெட்டவெளி
வெட்டவெளி
பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே.
தமிழில் பேரண்டம் எனச் சொல்லலாம். பிரபஞ்சத்தை நம்மால் ஒருபோதும் முழுமையான புறவயத்தில் கண்டுவிடவே முடியாது. பிரபஞ்சத்தின் வடிவம் கோளம் .
பிரபஞ்சம் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் இருப்பது *வெளி* ஆகும். அதை *வெட்டவெளி* எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். அதுவே
பிரம்மம் என்று கூறப்படுகிறது .
வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு நேர்வாக்கியத்தை அமைத்தால் நம்மால் பரிணாமத்தை ஓரளவு விளங்கிக் கொள்தல் சாத்தியம்.
திடும்மென வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் உசும்புதல் (இயக்கம்) விரியத்துவங்குகிறது. அவ்விரிவால் அண்டங்கள் உள்ளிட்ட அமைப்புகள் தோன்றுகின்றன.
வெட்டவெளியின் சிறுபுள்ளியில் திடீரென நிகழும் உசும்புதல் அல்லது விரிவின்போது எழும் சத்தமும்(ஒலி), வெளிச்சமும்
(ஒளி) பேரண்டத்திற்கான முதற்புள்ளிகள். அவ்வொலியை ஓங்காரம் என்றும், அவ்வொளியை சோதி என்றும் குறிப்பிடுகிறார்கள் .
நாதம், விந்து என இரண்டு சொற்களை தோற்றக்குறியீடுகளாகக் குறிப்பிடுவர். நாதம் என்பது ஒலி;
விந்து என்பது ஒளி.
”நாத விந்து கலாதி நமோநம” எனும் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒரு சான்று. சமயத்தில் இறைவனை நாதன் என்றும் சொல்வதை நினைவுகூரவும். பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.
சைவசமயத்தில் சிவம், சக்தி எனும் முதன்மைக் குறியீடுகளை பார்ப்போம். சிவம் என்பது வெட்டவெளியைக் குறிப்பது. சவம் என்றால் உயிரற்றது. இயக்கமும் அற்றது .
அப்படியானால் சிவம்? ஆம், உயிருள்ளது. சிவத்தை நுட்பமாக அணுகினால இயக்கமற்று உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெளியே சிவம்.
உயிருள்ள இயக்கமாக மாறுகிற வெளி வளியே சக்தி.
உயிருள்ள இயக்கமற்ற வெளியைச் சிவம் என்றும் உயிருள்ள இயக்கங்கள் நிகழும் வெளியை சிவசக்தி என்றும் கொள்ளலாம்.
”*வெட்டவெளி* தன்னை மெய்யென்று இருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி, குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி”
(குதம்பைச் சித்தர்),
“மெய்ஞானப் பாதையிலேறு – சுத்த வேதாந்த *வெட்டவெளி* யினைத் தேறு”
(கடுவெளிச் சித்தர்),
” *வெட்டவெளி* தனையன்றி வேறு தெய்வமில்லையே”(சிவவாக்கியர்),
”வெட்டவெளி தன்னில் விளைந்த வெறும்பாழ் திட்டமுடன் கண்டு தெளிவதினி எக்காலம்?”(பத்ரகிரியார்),
”வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யானேண்டி”
(பட்டினத்தார்),
குருவடி
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
குருவாக வந்தாயே திரு வாக வந்து உரைத்தாயே உங்கள் அன்பாலே என் வினைகளை கலைந்தாயே
அமுத மொழியால் செவியில் உபதேசம் அளித்தாயே
தெளிவான அறிவு விளக்கை ஏற்றினாயே
ஆன்மா =மனம்
சிவம் என தனியாகஎதுவுமில்லை...தனியாகவெளிப்பட்டிருக்க ஜீவன்எனவும்..மொத்தமாக தோற்றம்பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும்பெயர்.நமக்கு ஜீவன் என தனியாகஇருப்பது போல தோன்றினாலும் அதுதனியான ஜீவன் இல்லை...அது ஒருசங்கிலி தொடரின் அமைப்பு..நமக்கு நம்தந்தையிடம் இருந்துவருகிறது..அவருக்கு அவரின்தந்தையிடம் இருந்து...இப்படி ஒரு பின்நோக்கிய அதுவும் முன்னோக்கியசங்கிலி தொடர்...இந்த தொடர்முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம் எனபெயர்.அது நம்முடன் மட்டுமல்ல,இவ்வுலகத்து ஜீவஜாலங்கள்அனைத்திற்க்குள்ளுக்குள்ளாகபிணைந்திருக்கும் தொடர்...அதைஉள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மைவெளிப்படும்.
Hseija Ed Rian: இந்த புரிதல் என்பதுஅசாத்தியமான சாத்தியபுரிதல்...தனிமையில் இருந்துமுழுமையை உணர்தல்சாத்தியம்....முழுமை முற்றுபெற்றுவிலங்கும் தன்மை அது. அனைத்துஜீவன்களும் ஒரு தொடரே என தெளியசிவமாம் தன்மை விளங்கும் என்பதுஆன்றோர் மதம். சிவம் என தனியாகபின்னமாக நினைத்து வேறுபாடுஉணர்வது அறிவின்குறைபாடு...இருப்பது அகண்ட சிவம்ஒன்றே தான்...முழுபூசணிக்காய்சோற்றில் மறைந்துள்ளது
Hseija Ed Rian: இயற்கை உண்மை என்பதுஜீவனுக்கு இடுபெயர்...அதுவேஅருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும்கடவுள்...அதுவே உடலான உடலெல்லாம்நிறைந்து அருட்பிரகாசமாகவிரிந்துள்ளது..அதை தனிமையில்உணர மலர்தல் சாத்தியம்..உணராவிடில்ஜீவன் என அறிவு மழுங்கி தன்நினைப்பே வெளிப்பட்டு தான் வேறுஎனும் னவேற்றுமை உருவாகிறது....அந்தவேற்றுமை மறைய ஒருமைதுளிர்க்கிறது. அதனால் நம்முள்இயங்கும் ஜீவனை பார்த்துஅறிவோமாக..அதுவே பரஉடலங்களிலும் இயங்குகிறதுஎன்பதுவே ஒருமைக்கு மூலாதாரம்
Hseija Ed Rian: சிவன் என கங்கணம்பூண்டு திருநீறு பூசி கபால மாலைஅணிந்து அங்க எங்கேயோகைலாசத்துல பார்வதி தேவியைபக்கத்துல வெச்சுகிட்டு பூதகனங்கள்நடனமாட யாரும் கிடையாது...எந்த ஒருமனிதன் ஜீவசிவத்தை உணர்ந்துதன்மயமாகிறானே அவனேசிவன்....அதாவது, எவனொருவன்ஜீவனை கண்டு அந்த ஜீவனேஅனைத்திற்க்குள்ளும்பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம்என தெளிவுறுகிறானே அவனுக்குசிவன் என பெயர். அல்லாது பாம்பைகழுத்துல தொங்கவிட்டுகொண்டுஇருக்கும் ஒரு கற்பனைகதாபாத்திரத்திற்க்கு அல்ல...எங்கோகைலாயத்தில் இருக்கிறார் எனகற்பனை கைலாயத்தில் இருப்பவருக்குஅல்ல....இருப்பது ஒன்றே தான்..அதுவேஜீவனாகவும் ஜீவசிவமுமாக இருக்கிறது
Hseija Ed Rian: சிவ சிவாகலிகாலம்...மனமே கேட்டு படி...அங்ககைலாயத்துல இருந்துகிட்டு சிவனார்பிரபஞ்சத்தை படைத்தார் என்பதைகற்றுணர் ..மனமே...ஏய்உன்னையத்தான் மனமேஉன்னையத்தான்...ஏன் பிதற்ருகிறாய்என் மனமே ஏன் பிதற்றுகிறாய்...நீயும்மாயசொப்பனத்தின் வடிவழகு கண்டுமலைத்தாயோ...சிதம்பரத்தில்வாதவூரார் கண்ட சிவன்பொற்சிலைக்குள் மாயமாய்மறைந்ததையும் கண்டாயோ..ஏய் மனமேஇன்னும் தெளிவிலையோ உனக்கு..ஏய்அழகிய பல உலகங்கலை உன் சிற்றணுதொகுப்பால் காட்டி வித்தை புரியும்மனமே நீ உனராயோ.
Hseija Ed Rian: கண்டதெலாம்அனித்தியமே கேட்டதெலாம் பழுதெ நீஉண்டதெலாம் மலமே என வள்லல்பெருந்தகை பாடி சென்ரது கூடஉணராமல் இருக்கின்றாயோ மனமே...நீதிருந்துவது எப்போது...உன்னையே கட்டிமேய்த்து ஓய்ந்து விட்டேன் மனமே..என்றுநீ உன் கற்பனை கொட்டைக்குளிருந்துமீண்டு வரபோகிராய்...யுகங்கள்எத்தனையாக கற்பனைகட்டிகொண்டாய்...கற்பாந்தங்கள்எத்தனையென கனவுகட்டிகொண்டாய்...இது தான் உன்நித்திய வேலையோ என்மனமே..உணர்வாய் திரும்பி எழு என்மனமே மாய்ந்து விடாதே..கற்பனைசாகரத்துள் மீழ்கிவிடாதே...ஏய்கொள்லிபிசாசே உன்னைத்தான்சொல்லுகிறேன்..ஏன் இப்படிபிதற்றல்?..ஏன் இந்தமயக்கம்..எண்ணிலொகோடி தேவர்கள்ஆமே என எண்ணிலொகோடிதவமிருந்தாயே..இன்னுமா உன் மயக்கம்மாறவில்லை..??விழி மனமே விழி
Hseija Ed Rian: மனம் பக்தியில் முதிர்ந்துசித்தியில் சிறந்து விடினும் மயக்கம்மாறா....ஏனெனில் பக்தியெலாம்சித்தியெலாம் மனத்தின் மயக்கமேதாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்துவிடும் தருணம் வரைக்கும் மனத்தின்மயக்கம் இருக்கும் தொடர்வுறாதுநிற்க்கும். பிற்பாடு தான் மனம்தன்னையே மாய்க்கும் தருனம்வரும்...அப்போது தான் “உன்னுடைய்ம்உன் உயிரையும் எனக்குதந்தாய்..என்னுடலையும்என்னுயிரையும் நீ கொண்டாய்” என்பதுமலரும்..மனம் ரெண்டற்று பக்தனும்பரமனும் ஒன்றாவர்...உடலும் ஒன்றாகிஉயிரும் ஒன்றாகும்....அது கடைசிநிலை...மனம் ரெண்டற்று போனபின்னர்நிகழ்வது....அது வரை கற்பனைதான்...மனத்தின் மாபெரும்கற்பனை....பக்தெனும் பரமனும்இணைந்து விட்ட பிறகு பக்தி என்பதுபயனற்று போய்விடும்
seija Ed Rian: மூணாவது உள்ளஇருப்பது “நான்” எனும் ஆன்மா...அதுக்குமனம் ஒரு கோட்டை...கோட்டைக்குள்சிங்காசனத்தில் இருந்து அரசாட்சிநடக்கிறது....”நானே” அரசன் எனும்இறமாப்புடன்
Hseija Ed Rian: இது தான் ஒன்றினில்ரெண்டும் ரெண்டினில்ஒன்றும்...வள்லலார் பாடி சென்றது
Hseija Ed Rian: ஆன்மாவே ரெண்டாகிமனம் என திரிகிறது..உண்மையில்மனமே ஆன்மா..மனமில்லையெனில்ஆன்மா என தனியாகஒன்றுமில்ல்லை...ஆன்மாவும் மனமும்ரெண்டாக பிளவு பட்டிருப்பதேஆன்மாவும் மனமும் இரண்டு எனபேதலிக்க வைக்கிறது
Hseija Ed Rian: பார்ப்பவனும்நானே..அதை பார்க்க வைப்பவனும்நானே..இது தான் நிலை....இது மயக்கம்
Hseija Ed Rian: இவை ரெண்டுமாகஇருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்
மனசு
எல்லோரும் மனசு ஒரு நிலையா இல்லைன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்லே.... மனசை, அது என்னனு கண்டுபிடிச்சா அவர்களுக்கு தெரியும்.
உண்மைதான். தியானத்துக்கு உக்காந்தா நினைப்பு டஜன் கணக்குலே வர்றது. மனசு நினைப்பு மூட்டை தானே!
நினைப்புகளை ஒழிச்சுக் கட்டறதுதான் முயற்சி பலிக்க மாட்டேங்குது.
ஒருத்தன் எந்த வழியிலேயோ, ஆத்மாவிலே ஓய்ஞ்சு இருந்தா சரிதான். ஆத்மா விசாரத்திலே முடியலேன்னா... ஜபமோ, தியானமோ பண்ணனும்....
யானை துதிக்கைக்கு சங்கிலியைப் பிடிசுக்கக் கொடுக்கிறது மாதிரிதான். ஜபமோ, தியானமோ பண்ணினா பிற நினைப்புகள் போகும். ஏகாக்கிரம் ஏற்படும். மனசு அமைதி அடையும். அதுக்காக, பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் அமைதி வரும்னு அர்த்தம் இல்லை. அமைதி எப்பவும் இருக்கு. நினைப்பை போக்கிறதுக்குதான் இந்தப் போராட்டம் எல்லாம்.
மாடு பிறர் கொல்லையிலே போய் மேயறது. மாட்டை இழுத்து வந்து கொட்டத்திலே கட்டினாலும் ... அவிழ்த்துக் கொண்டு ஓடிடும். இப்போ... நல்ல புல்லைக் கொட்டத்திலேயே கொடுத்தோம்னா... முதல்லே ஒரு வாய் சாப்பிடும்.. பழைய பழக்கத்தினாலே, அடுத்த கொல்லைக்கு ஓடிடும். அடுத்த நாள் இரண்டு வாய் சாப்பிடும்.. பழகப் பழக நிறைய புல்லைச் சாப்பிடும். கடைசிலே பிறர் கொல்லைக்கு ஓடறதை விட்டுடும். அந்தப் பழக்கம் சுத்தமா போச்சுனா... அதைக் கட்டத் தேவையில்லை... அவிழ்த்து விட்டுடலாம். பக்கத்துக் கொல்லைக்குப் போகாது. கொட்டதிலே அதை அடிச்சாக்கூட கொட்டத்தை விட்டுப் போகாது.
இப்படிதான் மனசும், வாசனைகள் இருக்கற வரைக்கும் ஒரு நிலையிலே இருக்காது. வாசனை எல்லாம் வெளியே வரணும். வந்துதான் அழியும்.
மனம்னா என்னனு பாத்தா.... நினைப்பு எல்லாம் போய் அது ஆத்மான்னே முடிஞ்சிடும். எண்ணங்களின் மொத்த தொகுதியைத் தான் மனம்கறோம்.
எண்ணங்கள் ஆத்மாவிலே இருந்துதான் வர்றதுன்னு தெரிஞ்சு ... ஆத்மாவிலே இருந்தா மனம் மறைஞ்சுடும். அமைதி நிலைச்சிடும்... நினைக்கிறது கஷ்டமாகியிருக்கும்... இப்போ நினைப்பு இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கோ ... அப்படி அப்போ நினைக்கிறது கஷ்டமாயிருக்கும் ... இங்கே மனம்தான் மாடு; நினைப்புகள் தான் அடுத்தவா கொல்லை; கொட்டம் தான் நம்மளோட சொருபம்.
தூங்கறவனை வேலையைப் பாருன்னு எழுப்பினா எப்படி இருக்கும்? தூக்க சுகத்தை வேலைக்காக தியாகம் பண்ண சிரமாமாயிருக்கும். அப்படித்தான் மனமற்ற நம்மளோட நிலை.
சுகஸ்வருபம். அதை விட்டுட்டு சிந்திச்சுக்கொண்டு துக்கப்படறது ரொம்ப கஷ்டம். நம்மளோட சொருபத்தோட ஆனந்தத்தைத் தொந்தரவு பண்ணவே சம்மதிக்க மாட்டோம்.
மனமற்ற நிலையிலே நிக்கணும்னா..... பெரிய போராட்டந்தான். போராடித்தான் நம்மளோட சொருபத்தைப் பெற வேண்டியதிருக்கு. போராட்டத்தை ஜெயிச்சு லக்ஷியத்தை அடைஞ்சா, எதிரி ஆத்மாவிலேயே அடங்கி இல்லாம போயிடுவான். மனந்தான் எதிரி. நினைப்புதான் எதிரி. நினைவுகள் தான் உலகம். நினைப்பு இல்லேன்னா... உலகமும் இல்லை... கடவுள் இல்லை. ஆத்மா மட்டும் தனியிருப்பா விளங்கும்.
மகா மந்திரம்
===== மகா மந்திரம் ======
தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்.. அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு?
(657) கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே
(658) அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே
(656) வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே
இதுவே நாதாந்த திறவுகோல்.... நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்... இதுவே திருமூலர் கூறும் கருத்து... "காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே” ....அந்த கருத்தே இதுவாம்...
இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே.. "பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்... அதேதான் உங்கள் முறையீடும்.... குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது.... ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது, கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்... ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்... இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா?
அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா.. அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா... அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?.... பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமா... மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்?
அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்??
மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்.... அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ.... மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே... ஆனால் "நாத மந்திரைத்தை" அறியும் நாள் எந்நாளோ..??
Subscribe to:
Posts (Atom)