Thursday, November 24, 2022

ஸ்தோத்தரித்தல்

🌼🌼ஸ்தோத்தரித்தல்🌼🌼  - AJIESH NAIR ================================= தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா? மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி? சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா? ”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்..... அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன....சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன.... நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம். இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள் தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார் ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?... “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள் திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார். அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள் இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்... அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும் அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார் கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”..... இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர் உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்... இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை... ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை. நன்றி: ரியான் அய்யா சத்விசாரத்திலிருந்து

முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி 

==== முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி  ==== 1) "சாகாத்தலை": யென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. 2) "வேகாக்கால்": வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. 3)"போகாப்புனல்": போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இதன் பொருள் விளக்கம் வருமாறு:   ===== அடி, நடு, முடியென மூன்றுபாகம்... அதில் முதல் பாகம் ருத்திர பாகம், அடுத்து மகேசுவர பாகம், அதையடுத்து சதாசிவ பாகம் ===== ருத்திர தத்துவம் அதன் மேல் மகேசுவர தத்துவம் அதன் மேல் சதாசிவ தத்துவம் என மூன்று தத்துவம் ===== ருத்திர தத்துவம் என்பது வித்தியா கலை, மகேசுவர தத்துவம் என்பது சாந்திகலை, சதாசிவ தத்துவம் என்பது பிரதிஷ்ட்டா கலை எனப்படும். ====== வித்தியா கலை என்பதுவே வஸ்து (பொருள்-மெய்பொருள்) எனப்படும்...சாந்திகலை என்பதுவே ஆன்மா எனப்படும், பிரதிஷ்ட்டா கலை என்பதுவே ஜீவன் எனப்படும் ===== மெய்பொருளினால் வெளிப்படுவது அருளானந்தம், அதுபோல ஆன்மாவினால் வெளிப்படுவது அன்பு, மற்றும் ஜீவனால் வெளிப்படுவது இரக்கம் ===== சாகத்தலை என்பது காரண அக்கினியில் அடங்கியுள்ளது... அதுபோல வேகாக்கால் என்பது காரணவாயுவில் அடங்கியுள்ளது... மற்றும் போகாபுனல் என்பது காரணதேகத்தில் அடங்கியுள்ளது. ====== ஆகையினால் காரண அக்கினி, காரணவாயு, காரன தேகம் இவை மூன்றையும் தக்க குருவின் கிருபையால் அறிந்து அடைந்து கொள்ளுதலே சன்மார்க்கத்தின் முதல் படியாகிய சகா கலை எனப்படும் சாகா கல்வி. ---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் – பஞ்சதசி

லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் – பஞ்சதசி க்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் எனப்படும். வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தி தொடக்கம் இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீழ்பகுதி சக்தி கூடத்தினையும் குறிக்கும். இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழுவடிவத்தினால் ஆக்கப்படிருக்கின்றது. இந்தக்காரணத்தினால்தான் பஞ்சதசி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.   இந்த முன்று கூடங்களையும் முக்கோணமாக ஒழுங்குபடுத்த வரும் கீழ் நோக்கிய கோணம் தேவியின் யோனியினை குறிக்கும். இதுவே பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலம். இதனால் இந்த மந்திரம் மிக இரகசியமானதாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாகப கூடம் முக்கோணத்தின் வலது புறம், காமராஜ கூடம் மேற்புறம், சக்தி கூடம் முக்கோணத்தின் இடது புறம் காணப்படும். வாக்ப கூடம் ஐந்து பீஜங்களை கொண்டுள்ளது; க – ஏ – ஈ – ல – ஹ்ரீம்காமராஜ கூடம் ஆறு பீஜங்களை கொண்டுள்ளது; ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம்சக்தி கூடம் நான்கு பீஜங்களை கொண்டுள்ளது; ஸ – க – ல – ஹ்ரீம்   இந்த பதினைந்து பீஜங்களும் பஞ்சதசி எனப்படும். இந்த மந்திரம் எந்த நூலிலும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை. கீழ்வரும் சமஸ்க்ருத ஸ்லோகம் மூலம் பரிபாஷையாக கூறப்பட்டுள்ளது. அந்த ஸ்லோகம் வருமாறு, காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/புனர் குஹ ஸகலா மாயாய க புருசேச விஸ்வமாதாதி வித்யா// இந்த ஸ்லோகத்தில் பஞ்சதசியின் பதினைந்து பீஜங்களும் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மந்திரத்தின் இரகசியத்தன்மை புலனாகிறது. இந்த ஸ்லோகத்தில் உள்ள பதினைந்து பீஜங்களும் வரும் முறை வருமாறு; காமோ (க) யோனி; (ஏ) கமலா (ஈ) வஜ்ரபானிர் (ல) குஹ (ஹ்ரீம்)ஹ (ஹ) ஸ (ஸ) மாதரிஷ்வ (க) அப்ரம் (ஹ) இந்த்ரா (ல)/புனர் (மீண்டும் வருதலை குறிக்கும்) குஹ (ஹ்ரீம்)ஸகலா (ஸ , க, ல) மாயாய (ஹ்ரீம்) க () புருசேச விஸ்வமாதாதி வித்யா.முதலாவது கூடம் ஐந்து பீஜாட்சரங்களை கொண்டுள்ளது – க – ஏ – ஈ – ல – ஹ்ரீம்.   மூன்று கூடங்களும் ஹ்ரீம் பீஜத்துடன் முடிவுறுகின்றன. இந்த ஹ்ரீம் பீஜம் ஹ்ரில்லேகா எனப்படும். இந்த ஹ்ரில்லேகா பீஜம் பல முக்கியத்துவங்கள் உடையது, மாயா பீஜம் எனவும் அழைக்கப்படும். வாக்ப கூடம் அக்னி கண்டம் எனவும் அழைக்கப்படும். இது லலிதாம்பிகையின் ஞான சக்தியினை குறிக்கும். க என்பது பிரம்மா, படைத்தலை செய்பவர், ஏ என்பது சரஸ்வதி ஞானத்தின் அதிபதி, ஈ என்பது லக்ஷ்மி, ல இந்திரன், ஹ்ரீம் என்பது சிவ சக்தி ஐக்கியம். க என்ற பீஜம் காம பீஜ மந்திரமான க்லீம் இற்கு மூலமானது.   அத்துடன் இந்த க பீஜ மந்திர சக்தி சாதகனுக்கு அமைதியினையும் செல்வத்தினையும் தரும் வல்லமை உள்ளது. அடுத்த பீஜமான “ஏ” என்பது சாதகனுடைய துரதிஷ்டங்களை விலக்கும். ல என்ற பீஜம் சாதகனுக்கு வெற்றியினை தரும். ஆக முதல் நான்கு பீஜங்களும் சாதகனுக்கு அமைதி, செல்வம், துரதிஷ்டங்களை விரட்டல், புனிதத்துவம், மற்றும் இந்திரனைப்போன்ற வல்லமையினை தரும்.   இதன் பொருள் சாதகன் தான் எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றியினை பெறுவான் என்பதாகும். (இந்திரன் அனைத்து தேவர்களதும் தலைவன், எல்லாக்காரியங்களிலும் வெற்றி பெறுபவன்).   ஹ்ரீம் என்ற பீஜம் மொத்தம் பன்னிரெண்டு எழுத்துக்களால் ஆனது. ஹ+ர்+ஈ+ம் ஆகிய நான்கும் பிந்து வும் சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து என்பது கடைசி எழுத்தான ம் இற்கு மேல் காணப்படுவது. இந்த பிந்துவில் மேலும் எட்டு பீஜங்கள் அடங்கி இருக்கும். அவையாவன் அர்த்தசந்திர, ரோதினி, நாத, நாதாந்த, சக்தி, வ்யாபிக, சமனா, உன்மானி இந்த எட்டையும் சேர்த்து பிந்து நாத என்று அழைக்கப்படும்.   இந்த எட்டும் மற்றைய நான்கு பீஜங்களும்(ஹ+ர்+ஈ+ம்) சேர்ந்து ஹ்ரீம் பீஜம் உருவாகின்றது. இந்த பிந்து உச்சரிப்பில் முக்கியத்துவம் உடையது. ஒவ்வொரு பீஜத்திற்கும் அதனை உச்சரிப்பதற்கான கால அளவு உள்ளது. இந்த முதலாவது வாக்ப கூடத்தின் உச்சரிப்பிற்கு பதினோரு மாத்திரை அளவு இருக்கவேண்டும் என்பது விதி (மாத்திரை என்பது கண்ணிமைக்கும் அளவினைக் குறிக்கும், ஒரு செக்கனை விட குறைவான காலம்).   பீஜங்களை உச்சரிப்பதற்கு விதிகள் உள்ளன. வாக்ப கூடத்தினை உச்சரிக்கும் போது மூலாதார சக்கரத்திலிருந்து அனாகத சக்கரம் வரை அந்த மந்திர சக்தியினை அக்னி சொருபமாக உருவகித்து உச்சரிக்க வேண்டும்.   இரண்டாவது கூடமான காமராஜ கூடம் அல்லது மத்திய கூடம் லலிதாம்பிகையின் கழுத்து தொடக்கம் நாபி வரையிலான பகுதியினை தியானிக்க வேண்டும். இந்தக்கூடமே அதிகளவு பீஜங்களை உடையது, மொத்தம் ஆறு பீஜங்கள். அவை ஹ – ஸ – க – ஹ – ல – ஹ்ரீம். இவற்றில் க, ல, ஹ்ரீம் ஆகிய மூன்றும் ஏற்கனவே விபரிக்கப்பட்டுவிட்டது. புதிதாக இரண்டு பீஜங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஹ இரண்டு தடவை வருகிறது.   முதலாவது ஹ சிவனையும், இரண்டாவது ஹ ஆகாய தத்துவத்தினையும் (சௌந்தர்ய லஹரி 32 ஸ்லோகம் இந்த இரணடாவது ஹ சூரியனை குறிக்கின்றது எனக்கூறும்) இடையில் உள்ள ஸ விஷ்ணுவினையும் குறிக்கும்.   பஞ்ச பூதங்களில் ஸ என்பது வாயு பூதத்தினை குறிக்கும். ஹ என்ற பீஜம் அலி பீஜம் எனவும் குறிப்பிடப்படும். இதனாலேயே ஹ்ரீம் பீஜம் சிவ சக்தி ஐக்கியம் எனக்கூறப்படுகிறது. முதலாவது கூடத்தில் பிரம்மா குறிப்பிடப்பட்டது, ஆதலால் அது படைத்தலுடன் தொடர்புடையது. இந்த கூடத்தில் விஷ்ணு குறிப்பிடப்படுவதுடன் இந்தக்கூடம் காத்தலுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்தக்கூடம் 11.50 மாத்திரை அளவில் உச்சரிக்கப்பட வேண்டியது.   மூன்றாவதும் கடைசியுமான கூடம் சக்தி கூடம் எனப்படும். இதில் நான்கு பீஜங்கள் உள்ளன. இது லலிதாம்பிகையின் நாபி தொடக்கம் பாதம் வரையிலான பகுதியாக தியானிக்க வேண்டும். இதிலுள்ள பீஜங்கள் ஸ – க – ல – ஹ்ரீம் ஆகும். முதலாவது கூடம் ஐந்து பீஜங்கள், இரண்டாவது ஆறு பீஜங்கள், முன்றாவது நான்கு பீஜங்கள் உடையது.   மத்திய கூடத்தில் உள்ள இரண்டு “ஹ” பீஜம் நீக்கப்பட்டு மூன்றாவது சக்தி கூடம் உருவாகின்றது. இந்த மூன்றவது கூடம் எட்டு அரை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. முழு பஞ்சதசி மந்திரமும் முப்பத்தியொரு மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டியது. தொடர்ச்சியான ஜெபத்தில் ஒவ்வொரு கூடத்திற்கும் இடையில் நேர இடைவெளி இன்றி இருபத்தியொன்பது மாத்திரை அளவில் ஜெபிக்க வேண்டும்.   இந்தக்கூடம் சந்திர கண்டம் எனப்படும், இது பிரம்மத்தின் மூன்றாவது செய்கையான அழித்தலை குறிக்கும். அழித்தல் “ல” என்ற பீஜத்தால் குறிப்பிடப்படும். பொதுவாக “ல” ஆயுதங்களான சக்கரம், வஜ்ரம், திரிசூலம் ஆகியவற்றை குறிக்கும். பஞ்சதசியில் உள்ள மூன்று ஹ்ரீம் பீஜங்களும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் குறிக்கும்.

நாஸதீய சூக்தம்/

//////நாஸதீய சூக்தம்////// (ரிக் வேதம்: பத்தாவது மண்டலம் 129வது சூக்தம்) அப்போது அசத் இருக்கவில்லை சத் இருக்கவில்லை உலகமிருக்கவில்லை அப்பாலான வானும் இருக்கவில்லை எது மூடியிருந்தது? எங்கு? யாருடைய ஆணையில்? அடியற்ற ஆழமுடைய நீர்வெளி இருந்ததோ? (1) அப்போது மரணம் இருக்கவில்லை அமுதம் இருக்கவில்லை இரவு பகல்களின் அடையாளங்கள் இருக்கவில்லை ஒன்றேயான அது தன் அகச்சத்தியால் காற்றின்றி மூச்சுவிட்டது அப்பால் அதுவன்றி வேறேதும் இருக்கவில்லை. (2) இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும் நீராக இருந்தது வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது. (3) ஆதியில் அதில் காமம் எழுந்தது மனத்தின் முதல் பீஜம் அது தான் இதயங்களில் தேடுகின்ற ரிஷிகள் தங்கள் மேதமையால் அசத்தில் சத்தைக் கண்டனர். (4) அவற்றின் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் சென்றன மேலிருந்தது என்ன? கீழிருந்தது என்ன? பிறப்பிப்பவை இருந்தன மகத்தான சக்திகள் இருந்தன ஆற்றல் கீழிருந்தது வேகம் மேலிருந்தது. (5) உண்மையில் யாரறிவார்? யார் அதைச் சொல்ல முடியும்? எங்கிருந்து தோன்றியது சிருஷ்டி? எங்கிருந்து? தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்? (6) இந்த சிருஷ்டியின் தோற்றம் யார் அதை உண்டுபண்ணினார்கள் அல்லது உண்டுபண்ணவில்லை? அப்பாலான ஆகாயமாக இதைக் கண்காணிக்கும் அவனே அறிவான் அல்லது அவனும் அறியான். (7) ரிஷிகள் தங்கள் நுண்திறனறிவால் உணர்ந்து கொண்ட “சத்” எனும் அழியா பொருள் எதுவென உணர்வீர்.

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு -

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு - எழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும். 5 மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலியை இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது. "எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1 அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்பர் (இளம்பூரணம். பக்.26) உடல் இயங்குவதற்கு ஏதுவாகிய அகரத்தை தொடக்கத்திலும், வீடு பேறடையும் ஆண்பாலைக் குறிக்கும் னகரத்தை இறுதியிலும் கொண்ட எழுத்துகளின் வைப்புமுறை அமைந்துள்ளதால் தொல்காப்பியம் ஓக முறைகளையே முதலாகக் கொண்டுள்ளது எனலாம். தமிழ் எழுத்துகள் முப்பது என்னும் அவ்வெண், திங்கள் ஒன்றுக்குரிய நாள்களைக் குறிப்பதாகும். உடம்பிலுள்ள உயிர் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உள்ள முப்பது நாள்களும் உடலில், ‘அமுத நிலைகள்’ என்னும் உயிரின் சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் சுழற்சி, ஒவ்வொரு நாளும் உடற்பகுதி ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் என்று தமிழ் மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரின் சுழற்சியை குறிக்கும் நாள்களின் எண்ணிக்கையைக் குறிக்க எழுத்துகள் முப்பதாக அமைந்துள்ளன எனலாம். உயிரெழுத்து ஒலிகள்[தொகு] (ச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகள் இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன.) அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குற்றொலிகளையும் ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து உயிரொலிகளைப் பன்னிரண்டு எனத் தொல்காப்பியம் குறிக்கிறது. குற்றொலி ஐந்தாகும் போது நெட்டொலியும் ஐந்தாகவே இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்காக முடியாது என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார். "எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (புணரியல். 141) உயிரும் உயிரும் புணருமிடத்து உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் யாதெனின், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டாக அமைய வேண்டும் என்பதுவே யாகும். 6 உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சூரிய கலையில் சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும். தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய கலையின் அளவு உயிரோட்டத்தின் அளவாகக் கருதிக்கொண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும் அளவுகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரும் மெய்யும்[தொகு] உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும். 12 x 18 x 100 = 21600 தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம். சார்பெழுத்து[தொகு] எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பவையாகும். அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன

புருவ பூட்டு

புருவ பூட்டு ஆன்மா ஒரு பருபொருள் இல்லை,குருபொருளும் இல்லை,பஞ்ச பூதங்களால் உரு பெற்றதும் இல்லை,அதனால் பஞ்ச பூத சேர்க்கையில் வெளிப்படுவதும் இல்லை,அணு பொருளான அது மனதுக்கும் வாக்கிற்கும் அப்பால் சூட்சுமமானது,அதை புருவமத்தியில் கொள்ள வேண்டும்.ஆனால் உண்மையில் புருவமத்தி இல்லை.கண் மணியில் இருந்து நாடி தோன்றி உள் சென்று ஆன்மாவை அடயாது,அது பிரமை

தயவும் தவமும்

தயவும் தவமும் இந்த சென்மத்துலே மோட்ச வீட்டில் புகுந்து கொள்ள வேண்டாமா, அப்போ எவ்வளவு சமயம் நாம் ஒவ்வொருவரும் சீவகாருண்ய வசத்தராயிருக்க வேண்டும்? கணக்கிட்டு பாத்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும் ,ஒவ்வொருவரும் எத்தனை நேரம் சீவகாருண்ய முனைப்பாய் இருக்கிறீர்கள் என்பது, அப்படித்தானே?. ஒரு நாளில் எத்தனை நிமிடம் என்று சொல்லுங்கள், உள்ளம் தயவுடன் இருக்கிறது?. பசிப்போருக்கு உணவளிக்க வேண்டும், அது தலையாய கடமை,அதுவே சீவ காருண்யம் என கொண்டு உணவளிக்கலாம். ஆனால் பாருங்கள் நூறு பேரிடம் பணம் வாங்கி ஒரு கும்பலாய் கூடி, சாப்பாட்டை ஏந்திகொண்டு பசி இல்லாதவர்களுக்கு பரிமாறி கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரே அமர்களம், கேட்டால் சீவகாருண்யமாம். பசித்து இளைத்து, கண்கள் பஞ்சாகி உள்ளே சென்று பெரிய மனுஷங்கள் கிட்டே உக்காந்து சாப்பிட்டா திட்டுவாங்களோண்ணு பயந்து வெளியிலே ஒரு மூலைலே ஒதுங்கி நிக்கும் ஒரு கூட்டம்,எங்கே போகுது சீவகாருண்யம்? இதுவா சீவகாருண்யம்? இதுவா தயவு? பசித்து துக்கித்து நிற்பவனை கண்டால் உடம்பில் ஒருவித நடுக்கம் தென்பட ஆரம்பிக்கும்,அது பசியால் வாடினவன் உணவு கொண்டபின் அவன் கண்களில் ஏற்படும் பூரிப்பை கண்டபின்பே தணியும்,இதுவே தயவு. அப்படி நாள் முழுக்க தயவுடன் இருப்பதே தவம். இது வராமல் மோட்சவீடு என்று சொல்லிகொண்டு திரிவது வெறும் பகட்டுக்கு வார்த்தை ஜாலம் மட்டுமே,செத்து பிணம் நாறுமே ஒழிய மோட்சமில்லை

தன்னை உணர தனக்கொரு கேடில்லை

தன்னை உணர தனக்கொரு கேடில்லை மகார வித்தை - Ajiesh ஐயா மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து..அதுக்கு மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்......நீங்க சொல்லி இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை.... ’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர் வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம் செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்... துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய குரு கவுட பாதர் விலக்குகிறார்....இங்க துரிய தவம் சொல்லி குடுத்து சமாதி நிலை கிடைக்குதாம்,ஆனா அகாரத்தையும் கண்டதில்லே உகாரத்தையும் கேட்டதில்லை,விந்து நாதம் தெவையே இல்லை...என்னா உலகம் எப்படியாவது நாலு பணம் பாக்கணும் ஆசிரமம் கட்டணும் பயிற்சி வகுப்புகள் நடத்தணும்ன்கிற ஒரே குறிக்கோளிலே குருமார்கள்.....நல்ல சீடர்களை வார்த்தெடுக்கணும் என்கிறகவலை கிடையவே கிடையாது....கொடுக்கிற பீஸுக்கு சமாமான போதனை அவ்வளவுதான்...ஞானம் கிடைச்சச்சு போ.....நல்லா உருப்படும் குருவும் சீடனும்...... அரை மாத்திரை விளக்கம் என்பது குரு பாரம்பரியத்தால் கிடைக்கப்பெறுவது...அப்படி ஒன்று இருக்கிறது என்பது பெரும் ஞானிகளுக்கு தெரிந்தாலும் அதை விளக்கத்தெரிவதில்லை....கேட்டால் அது ரகசியம் என ஓடிவிடுவர்...ஆனால் உண்மை அதுவல்ல....உண்மையில் அரை மாத்திரை என்பது உச்சரிக்கும் தன்மையாகும்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டுவது ஒரு தன்மை...ஆனால் அது நீட்டுதல் இல்லை, ===ம்ம்ம்ம்ம்ம்ம்= என முழங்குவது ஆகும், மற்றொன்று தான் ””””அரை மாத்திரை பிரயோகம்”””,அது தீட்சா சம்பிரதாயம்.....அதுவானது மகாரத்தின்மெல் புள்ளி போடாமல் அர்த்த சந்திரன் போட்டு உச்சரிக்கும் முறை...அது குருவானவர் சீடனுக்கு காதில் உபதேசித்து கருணை பொழியும் முறை...அதுவே அருள் முறையான அமைப்பு.....அதையே வடமொழியில் ஓம் என்பதை எழுதும் போது அதன் மேல் அர்த்தசந்திரனும் ஒரு புள்ளியும் போட்டிருப்பார்கள் நம் ரிஷி முனிவர்கள் தங்கள் கருத்தால் சுட்டிக்காட்டிய ஞான அமைப்பு அது.ஆனால் காலப்போக்கில் உண்மை மறைந்து போனது,நாமும் அரைமாத்திரை பிரயோகத்தை இழந்துவிட்டோம்,ஆனால் கடவுள் கருணை உள்ளவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது...கருணைசெலுத்தவேண்டியவர்களுக்கு அவர் கருணைபொழிய தவறியதில்லை

சத் சங்கம்.

== சத் சங்கம்.=== அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்.. ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான் புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும். ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்.... ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை..... இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம். ----❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

வாலையின் அட்சரம்

வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்டு சொல்பவர் யார்காணும் மேலென்றும் கீழென்றும் மத்திபமும் கூட்டி விரைந்து சொல்லடி ஞானபெண்ணே. விரைந்து சொல்லுவன் மூன்றெழுத்தால் சதம் விரிந்து தானுயிருண்டாச்சு தெரிந்து கொண்டவர் தங்களுக்கா கவலை தீட்சை இதுவல்லவோ ஞானபெண்ணே                                                    ~ கொங்கணர் ஞானகும்மி  அ ன்னா ஆ வன் னா இ ன்னா ஈ யன் னா ன்னு சொல்லும் குருவே அவனா இவன் இவனா அவன்னு கண்டு பிடித்து அவனுக்கு தக்க பாடம் எடுக்கும் குருவே வாலையின் அட்சரம் தெரிந்தவர்கள் குருவே