Friday, November 11, 2022

விசாரம்

  ஒருவர் அதோகதியாகிய சுவாசத்தை சுவாசித்து கொண்டிருக்கின்றார் என கொள்க,ஊர்த்வகதியினை அறிந்த ஒருவர் அதோகதியானவர்களே நீங்கள் சென்று கொண்டிருப்பது அதோகதி,நீங்கள் அதோகதியானவர்கள்.ஆகையினால் அதை விடுத்து பரிபூரணமான ஊர்த்வகதியினை நோக்கி பிரயாணம் செய்யுங்கள் என அழைத்தால் ,அது எவ்வண்ணம் குறையாகும்?.ஏசுநாதர் பாவிகளை ரட்சிக்கவே வந்தேன் என்கிரார்,அவர் பாவிகலையே அழைக்கிறார்,நீதிமான்களையல்ல.பாவிகளே மனந்திரும்புங்கள் எனத்தான் அழைக்கிறார். அவ்வண்ணம் பாவிகளை பாவம் செய்பவர்களே என அழைத்து அவர் உபதேசித்தது தவறாபிரம்மஞானத்தின்கண் அவா கொண்டு இருப்பவர்கலை கூட பிரம்மம் என்பது கூட பொய் என சொல்ல விழைகின்றேன். அதுவும் கூட மூடத்தனம் என சொல்வதில் தயக்கமில்லை ஜீ


3

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடீ-குதம்பாய் பட்டயம் ஏதுக்கடீ

6

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Kumar Venkitasamy Hseija Ed Rian
இதெல்லாம் சரி ஐயா !
யாம் கூறுவது குணம் பற்றியே.

1

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian ’தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை ஐய்யனே..குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன்.

5

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian ’தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை.

6

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Kumar Venkitasamy Hseija Ed Rian
ஐயா சொல்லவேண்டுவது சொல்லியாயிற்று.
தங்கள் கூற்றும் தெளிவாயிற்று. நன்று நன்றி ஐயா !

1

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல.

9

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்.

7

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Mathi நன்றி Kumar Venkitasamy அய்யாவிற்கு ❤️

4

 

Edit or delete this

Like

 

 · Reply

 

 · 1y








Kumar Venkitasamy Mathi
அனைவருக்கும் நன்றி ஐயா !
கனி போன்ற சொல்லிருக்க காய் போன்ற சொல் வேண்டுவது இல்லை.
சரிதானுங்களா மதி ஐயா !
ரியான் ஐயா சொல்வதெல்லாம் கடந்து.

2

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian ஓம் என பிரிண்ட் போட்டு வெச்ச படத்தை கண் இமைக்காமல் பார்த்துகிட்டு இருந்து ,அந்த ஓமின் மத்தியில் இருந்து ஒளி பீறிட்டு கெளம்புண்ணு நிச்சயித்து10 வயது முதல் 12 வயது வரை சாதனை பண்ணினவன் நான், இப்பத்தான் புரியுது அந்த சாதனை எந்தளவு அருமையான சாதனை என.ஹ..ஹ..ஹ

6

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y








Hseija Ed Rian இப்ப என் மருமக புள்ள சொல்லுவா, மஹாதேவன் மட்டும் தான் உண்மையான தெய்வம் மற்றதெல்லாம் பொய் என, இப்ப அவளுக்கும் அதே 12 வயசு தான் ஆகுது.மனசுல சிரிச்சுக்குவேன்....காலம் தான் அவளுக்கு அறிவை போதிக்கும் என.இப்போது விளக்க போனால் அடிஉதை தான் கிடைக்கும்ண்ணு தெரியும்.

6

 

Delete or hide this

Like

 

 · Reply

 

 · 1y

 

 · Edited








Kalai Vendhan Mathi அண்ணன் பதில்லாம் சேர்த்தால் இன்னும் பல பதிவுகள் போடலாம்.. Kumar ஐயாவுக்கு நன்றிகள்

5

 

Delete or hide this

Love

 

 · Reply

 

 · 1y








Mathi Kalai Vendhan ஆமா ப்ரோ ... புத்தகம் போடலாம்.

3

 

Edit or delete this

Like

 

 · Reply

 

 · 1y








Kumar Venkitasamy ஐயா நன்றி இறைக்குத்தான். அது பொதுவானதுதானே. கரைப்போம்
கரைவோம்
ஓம் 💐

4

 

Delete or hide this

கூண்டு விளக்கு

 கூண்டு விளக்கு




தன்னுயிரையே கணு அன்பு செலுத்தி, உயிரின் உயிராம் அருளை உணர்ந்து, அந்த அருளின் உயிராம் இறைவனை அடைவதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணையோ, நல்லெண்ணையோ, நெய்யோ விட்டு எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் அருளை தேடுவதை போன்று ஒரு மூடத்தனம் இருக்கமுடியுமா?

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதர்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்... நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்... ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லாது புரிதல் வராது.
அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்”. இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம்.

கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது,“ வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை. வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “ அறிவு’ என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள். இதை சற்ரு ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.

அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”...இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது...அதனையே "இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.

மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்" என்னும் பிரமாணத்தால் உணர்க.”””” என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “ பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

நன்றி: "திரு" . ரியான் அய்யா

அவர்கள்திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்...... நாம் வீட்டில் “திரு விளக்கு” வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...

“திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது.... அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும், என்பது பொருள்

திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது... அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.

அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம். கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு
“திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்

-- "திரு" - ரியான் அய்யா

அவர்கள்அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதர்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்... நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்... ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லாது புரிதல் வராது.

அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்”. இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம்.

கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது,“ வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை. வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “ அறிவு’ என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள். இதை சற்ரு ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.

அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”...இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது...அதனையே "இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.

மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்" என்னும் பிரமாணத்தால் உணர்க.”””” என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “ பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

நன்றி: " 

இது தற்புகழ்சியா, வஞ்சப்புகழ்சியான்னு எனக்குத் தெரியாது, தெரிந்தும் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் அதற்கான நேரமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் வெளிப்படுத்த விரும்புகிறேன். தெளிவே ஞானம், முழுமையான விழிப்பு நிலையே ஞானம் அதையே மணிவாசகரில் துவங்கி இருந்து, வள்ளல் பெருமான், சாலை ஆண்டவர், ஐயாவைகுந்தர் வரையும் இன்னும் பல குருமார்களும் நமக்கு விட்டுச் சென்ற வழி. இதில் குழம்பிய குட்டை தெளிந்து பின் மீன்பிடிக்க சமயமில்லை. எல்லாமும் படி நிலைகள், உத்திகள். 10 படிக்கு ஏற ஒன்றாவது படி ஏறித்தான் ஆகவேண்டும். அதற்கான கருவிகளாக அநேக வழிமுறைகளை அத்தனை க்ருமார்களும் அவரவர் வழியில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதை தனது மேதமையை நிருபிக்க சுற்றியும் சுழற்றியும் பொருள் கொண்டு படி ஏறுவோர்க்கு பாதை காட்டுவது உள்ளுணர்ந்தோர் செயலாகாது. அது போல் 5 படியில் இருப்பவனுக்கு 9 ல் சொல்லும் வழி எப்படி தவறோ அதுபோல் 2 படியில் இருப்பவனுக்கும் படி ஏறத்தயங்கி நிற்பவனுக்கும் 9 படியின் வழியைச் சொல்வதும் தவறு. இந்த முகநூல் உலகம் படியேறத்தயங்கி நிற்கும் ஒரு சிறுவனைப் போன்றது இதில் நேர்மறை பாடமே நல்ல விளைச்சலைத் தரும். இதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது என் கடன்.. That's all. Stay blessed


பெருமானார் ஞானசபையில் கண்ணாடியும் விளக்கும் வைத்த காரணமுறை. தியானம் செய்யவேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தை தியானிக்கவேண்டும் என வள்ளலார் கூறுகிறார்.

“நிஷ்களங்கமாயிருக்கபடாது” என வள்ளலார் கட்டளையிடுகிறார். உருவம் இருக்க வேண்டும் என பெருமானார் சொல்கிறார்.

உருவம் கரைந்து அருவமாகும் என சொல்லி போயிருக்கிறார், அதெப்படி கல்லை பார்த்து தியானிச்சுகிட்டு வந்தா கல் கரைஞ்சு போயிரும்ணா அவர் சொல்கிறார்?... அப்படியாக இருக்குமோ அதன் பொருள்??..கொஞ்சம் ஆலோசிங்கப்பா... ஆலோசிங்க... கடவுள் மண்டையில புத்திய உபயோகப்படுத்தத்தானே தந்திருக்கார்... அப்படித்தானே... அல்லாம சும்மா ”மலட்டு கற்பம்” சுமந்துகிட்டு பிரசவத்துக்கு காத்திருக்கவா?.. மலட்டு கற்பம் பிரசவ்க்குமா?...இல்லியே...

"""""""பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.""""""

இதை அருமையா கவனிச்சு புத்திய தெளிய வையுங்க... இல்லைண்ணா அடிச்சு துவைச்சு வெயில காய போடுங்க, கொஞ்சம் அழுக்கு போகட்டும்... எதை பார்க்கணும்ணு தனக்குத்தானே கேட்டுப்பாருங்க, பார்க்கப்படும் பொருள் எப்படி கெடும் எனவும் ஆலோசிச்சு பாருங்க.

அறிவிருந்தா தப்புவீங்க.. இல்லைண்ணா அலகைதான்......

நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள். ❤️

மகா மந்திரம்

 மகா மந்திரம்




தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்.. அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு?


(657) கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே


(658) அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே


(656) வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே


இதுவே நாதாந்த திறவுகோல்.... நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்... இதுவே திருமூலர் கூறும் கருத்து... "காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே” ....அந்த கருத்தே இதுவாம்...


இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே.. "பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்... அதேதான் உங்கள் முறையீடும்.... குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது.... ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது, கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்... ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்... இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா?


அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா.. அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா... அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?.... பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமா... மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்?


அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்??


மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்.... அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ.... மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே... ஆனால் "நாத மந்திரைத்தை" அறியும் நாள் எந்நாளோ..??


வள்ளலார் சொன்ன இந்த மஹா மந்திரத்தில் எங்கு அகரமும் சிகரமும் வகரமும் சேர்ந்த “நாத மந்திரம்” இருக்கிறது? சொல்லுங்களேன்.

கண்"ணாடி தவம்

 "கண்"ணாடி தவம்


வள்ளலாரும் கண்ணாடியை ஞானசபையில் வைத்தார், ஐயா வைகுண்டசாமியும் கண்ணாடியை வைத்தார், நாராயனகுருவும் கண்ணாடியை வைத்தார்... ஆனால் உங்கள் குரு முறை கண்ணாடியை விட்டு விட்டது...அதன் மறை ரகசியத்தை இழந்து ஞானத்தை இழந்து நிற்கிறது.


பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.


81. தியானம்


தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.


உங்களில் எவனுக்காவது கொஞ்சமாவது மண்டையில அறிவிருந்தா இதை படிச்சு புரியப்பாருங்க.இது வள்ளலார் தியானம் செய்த முறை , அவர் காட்டிய செயல் முறை, அவர் ஞானசபையில் கண்ணாடியும் விளக்கும் வைத்த காரணமுறை. தியானம் செய்யவேண்டுமானால் எதாவது ஓர் உருவத்தை தியானிக்கவேண்டும் என வள்ளலார் சொல்லியிருக்க சிவ செல்வராஜ், ராமசாமி தேசிகர் போன்றோர் எந்த உருவத்தை தியானிக்க சொல்லி விட்டு சென்றுள்ளனர் என்பதனை கவனிச்சு பாருங்க. “நிஷ்களங்கமாயிருக்கபடாது” என வள்ளலார் கட்டளையிட்டும் எதுக்கு நிஷ்களங்கமா இருக்க தீட்சை கொடுத்துகிட்டு இருக்கீங்க?? இது தான் உங்க வள்ளலார் சன்மார்க்கமா என்ன?/...தெரியாமத்தான் கேக்கிறேன்.


உருவம் இருக்க வேண்டும் என பெருமானார் சொல்கிறார், ஆனால் உங்க குருமார்கள் சும்மா இரு என சொல்லியே செத்து போனாங்க. காரணம் அவர்களாஇ வித்தை இன்னிது என புரிந்துகொள்ளமுடியாமல் மூடபுத்தியால் எல்லாம் தெரிந்துவிட்ட கற்பனை, அது தான் அவர்களை கெடுத்தது. உருவம் கரைந்து அருவமாகும் என சொல்லி போயிருக்கிறார், அதெப்படி கல்லை பார்த்து தியானிச்சுகிட்டு வந்தா கல் கரைஞ்சு போயிரும்ணா அவர் சொல்கிறார்?...அப்படியாக இருக்குமோ அதன் பொருள்??.. கொஞ்சம் ஆலோசிங்கப்பா... ஆலோசிங்க...கடவுள் மண்டையில புத்திய உபயோகப்படுத்தத்தானே தந்திருக்கார்...அப்படித்தானே...அல்லாம சும்மா ”மலட்டு கற்பம்” சுமந்துகிட்டு பிரசவத்துக்கு காத்திருக்கவா?..மலட்டு கற்பம் பிரசவிக்குமா?...இல்லியே...


"""""""பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.""""""


இதை அருமையா கவனிச்சு புத்திய தெளிய வையுங்க... இல்லைண்ணா அடிச்சு துவைச்சு வெயில காய போடுங்க, கொஞ்சம் அழுக்கு போகட்டும்... எதை பார்க்கணும்ணு தனக்குத்தானே கேட்டுப்பாருங்க, பார்க்கப்படும் பொருள் எப்படி கெடும் எனவும் ஆலோசிச்சு பாருங்க.


அறிவிருந்தா தப்புவீங்க.. இல்லைண்ணா அலகைதான்.

இயற்கை

 இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை...


வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க நிலை...

விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்

அப்படி எல்லையற்ற ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம்

*//இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....//*

"இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்."

-------- திரு. Hseija Ed Rian

ஆன்மா - மனம் - 1

 ஆன்மா - மனம் - 1




ஆன்மாவே ரெண்டாகி மனம் என திரிகிறது.. உண்மையில் மனமே ஆன்மா.. மனமில்லையெனில் ஆன்மா என தனியாக ஒன்றுமில்லை... ஆன்மாவும் மனமும் ரெண்டாக பிளவு பட்டிருப்பதே ஆன்மாவும் மனமும் இரண்டு என பேதலிக்க வைக்கிறது


நான் நான் என ஆன்மாவை சுட்டி காட்டிகொண்டிருப்பதே மனம் தான்.. அது தன்னையே தான் என சுட்டிகாட்டுகிறது... வேறு அதை விட்டு பின்னமாக இருக்ககூடிய வேறொரு பொருளை அல்ல... மனமே மனத்தை சுட்டிகாட்டி இது ஆன்மா என மலைக்க வைக்கிறது


பார்ப்பவனும் நானே.. அதை பார்க்க வைப்பவனும் நானே.. இது தான் நிலை.... இது மயக்கம் இவை ரெண்டுமாக இருப்பது மனம் எனும் ஆன்மாவே தான்


புற உலக காட்சியை கண்னை கட்டியும் நிறுத்தலாம்... புற உலக கேள்வியை காதை பொத்தியும் நிறுத்தலாம்... ஆனால் மனம் ???


தான் தான் மனமாகவும் ஆன்மாகவும் இருக்கிறேன் என மனம் உனராது... மனம் உணராது என்றால் ஆன்மாவும் உணராது


மனமே கற்பனை கட்டிகொண்டு உலகை ருசிக்கிறது...அதுவே அதை பலனையும் அனுபவிக்கிறது....எது வரை?..ரெண்டாக இருக்கும் வரை இது தொடரும்


அந்த ‘நான்” எனும் ஆன்மா மனதினால் நிலை பெறுகிறது


இப்படி மனம் வேறு ஆன்மா வேறு என நில்லாதிருப்பது அத்வைதம்


அப்போது ஆன்மா பிரம்மம் எனவும், மனம் மாயை எனவும் பகுக்கபடுகிறது


இதையே மாயை அகலுதல்...அல்லது மாயை லயிப்பது என்றார்கள்...தானாக பிளவு பட்டிருந்த மனமே ஆன்மாவாக ஒன்றாகிறது.


ஆன்மா ஆன்மாவாகவே எக்காலமும் சுழன்றுகொண்டிருக்கும்...மனமும் எக்காலத்துக்கும் மனமாக ஆன்மாவிடம் ஒட்டி அனுபவிப்பித்து கொண்டிருக்கும்


பகவான் என்பதும் மனதின் வேலையே தான்...தன்னில் இருந்து பிறிதாக ஒரு பகவானும் இல்லை


பகவான் என்பது துணைக்கு ஒரு ஆளை மனமே செய்யும் ஏற்பாடு தான்


மனம் பக்தியில் முதிர்ந்து சித்தியில் சிறந்து விடினும் மயக்கம் மாறா....ஏனெனில் பக்தியெலாம் சித்தியெலாம் மனத்தின் மயக்கமே தாம்....பக்தி முற்றி பழுத்து கனிந்து விடும் தருணம் வரைக்கும் மனத்தின் மயக்கம் இருக்கும் தொடர்வுறாது நிற்க்கும். பிற்பாடு தான் மனம் தன்னையே மாய்க்கும் தருனம் வரும்...அப்போது தான் “உன்னுடலையும் உன் உயிரையும் எனக்கு தந்தாய்..என்னுடலையும் என்னுயிரையும் நீ கொண்டாய்” என்பது மலரும்..மனம் ரெண்டற்று பக்தனும் பரமனும் ஒன்றாவர்...உடலும் ஒன்றாகி உயிரும் ஒன்றாகும்....அது கடைசி நிலை...மனம் ரெண்டற்று போனபின்னர் நிகழ்வது....அது வரை கற்பனை தான்...மனத்தின் மாபெரும் கற்பனை....பக்தெனும் பரமனும் இணைந்து விட்ட பிறகு பக்தி என்பது பயனற்று போய்விடும்

இயற்கை உண்மை கடவுள்

 இயற்கை உண்மை கடவுள்





இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை... வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும்.


அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க நிலை...


விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்


அப்படிப்பட்ட ஒன்றை ஒரு சின்ன உருவத்துள் அடக்கி சொரூபமாக்குவது என்பது அவர் விளக்கநிலையை அவமத்திப்பது போன்றாம்.


ஆன்மாக்கள் தோறும் அவருடைய ஏகதேச விளக்க நிலையே விளங்குகிறது... அவருடைய இருப்பு நிலை அன்று... அவருடைய இருப்பு நிலை என்பது அவருக்கே உரித்தானது... பகிர்ந்தளிக்க முடியாத வண்னம் பெருவெளி சொரூபம்.... விளக்க நிலையே பற்பலவற்றாலும் பற்பலவிதமாக விளங்குகிறது... இதுவெல்லாம் கூட அவருடைய ஏகதேசத்தில் ஒரு அணுப்பொடி ஏகதேசமே...... விளங்கிகொள்ளவும்.... அதன் அளப்பு என்னவென்று.... சும்மா புருவமத்தி... புருவமத்தி என கூக்கிரலிடுவது அல்ல......


அப்படி எல்லையற்ற ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம்


அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”....


அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்... அது கடவுளின் விளக்கம்...... ஏகதேசம் ஆனாலும்....


இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....


இப்படி அறிபவன் புருவமத்தியை விட்டு விடுவான்... அவன் அறிவு விரிய தொடங்கும்.... அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே ஒரு கோணத்தில் பார்க்க தொடங்குவான்.... அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என பார்ப்பது இப்படியே....


“இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும் விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்.....


அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... ஆனால் புருவமத்தி தான் எல்லாம் என்பதும் இருக்காது


அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது....


அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு”.... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு...


அது அறிவு இல்லாததனாலேயே.... பற்றுதல்...வேண்டாம் என தோன்றுகிறது.... உண்மை என்னவென அறியும் போது இவை இருக்காது... உண்மை மட்டும் இருக்கும்... அது அறிவு வரும் வரை இப்படியே தான் இருக்கும்...


இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது..


கேள்வி: காண்பவை அனைத்தும் அவன் விளக்கமாக இருக்க அவனின் இருப்பை மறைக்கும் மறைப்பு எது?


உண்மை தான், அவன் இருப்பை மறைப்பு என்பது அணுகமுடியாது... ஆனால் மறைப்பு என நாம் தான் சொல்கிறோமேயொழிய அவன் சொல்லவில்லை என்பதை கவனிக்க, அதாவது மறைப்பு என்பது நமக்கு தான்.... அது நம்மாலே, நம்மிலே தான் நிறையாக இருக்கிறது.... அதுவே ஆணவம் எனும் பெருமறைப்பு. அது எந்த விதத்தாலும் அகலாது இறை அருளால் தான் அகலும்... ஆனால் அதன் தாக்கத்தை குறைத்து பக்குவப்படுத்த அறிவெனிம் வித்தியா தத்துவத்தால் முடியும்... அப்படி நன்முயற்சியில் இருப்போமாகில் கிடைக்கவேண்டியது கிடைக்கும் எனவல்லவா பெருமானார் சொல்லுகிறார்?... மட்டுமல்ல இரண்டு படாத பூரனம் என்பது அவன் விளக்கத்தையும் உள்ளடக்கியதே, அவன் இயல்பை நாம் அறிந்து கொள்ளாத படியினால் நமக்கு இரண்டு பட்டதாக தோன்றுகிறது என்பது உண்மை என கொள்ளலாம்.இது நமது சிற்றறிவின் அனுமானமே... பூரண அறிவு தோன்றும் போது மேலும் வெளியாகும் என இறைவன் கருணையினால் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்.


கேள்வி: அன்புக்கு அன்னை தெரேசா என்று தானே கூறுகிறோம் அவங்க செய்யாத ஜீவகாருண்யத்தையா நாம் செய்றோம்?


புரியாது.. புரியாது ... அது அப்படித்தான்.... தயவை புரியாதவரை புரியவே புரியாது....... ஆன்ம லாபம் அடையவேண்டும் எனும் லட்சியத்தோடு அல்ல தயவு வெளிப்படுவது..... செய்யும் தவம் எல்லாம் உலகில் உள்ள அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபத்தை பெற்றுகொள்ளவேண்டும் என லட்சியம், இது தான் தயவு...... உலகில்பிறந்து செத்துபோன அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபம் பெறவேண்டும் எனும் லட்சியம்தான் தயவு.... உலகில் பிறக்க இருக்கும் அனைத்து ஜீவஜாலங்களும் கூட ஆன்ம லாபத்தை பெற்று கொள்ளவேண்டும் எனும் பேரவா தான் தயவு..... அன்னை தெரசா இதற்க்கு கால் தூசு வராது....


இப்படியான தயா எண்னம் கொண்டவன் எப்படி இருப்பான் என நினைத்து பார்த்ததுண்டாகில் புரியும், அவன் உள்ளத்தயவின் ஆழம்...... பெருங்கடலை விட ஆழமாக அவன் தயவு இருக்கும்.... அவன் எண்ணங்களும் வெளிபாடுகளும் அவ்வண்னம் விளங்கி நிற்க்கும்....


Muthu Kumar: ஐயா, சத்தியமான உண்மை. யாரொருவர் உலகின் சகல ஜீவன்களும் முக்தியடைய பிரயாசிக்கின்றாறோ அவர்தான் சற்குரு அதுதான் குரு லட்ச்சணம்.


"இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்

வேதம்

 வேதம்





இறைவனால் வகுக்கபட்டது வேதம்..அதை யாரும் கையாலோ மற்ற எந்த உபகரணத்தாலோ எழுத முடியாது.


அது தான் வேதம் என யாரும் சொல்ல வேண்டியதில்லை... அதுவே சொல்லும்...ஒளிக்கு சாட்சி தேவையில்லை எங்கிருந்து அறிவு கிடைக்கிறதோ அது வேதம்.


வேதம் ஒன்று தான், அதை கண்டவர்கள் மட்டும் ஒன்றைத்தான் பேசுவார்கள். காணாதவர்கள் எல்லாம் பலவாறாக பேசுவார்கள். யாரொருவர் பலவாறாக பேசுகிறார்களோ அவர்கள் வேதத்தை கானவில்லை, அவர்கள் பேச்செல்லாம் ஏகதேசம், நிச்சயமான உண்மை அல்ல என்பதே உண்மை. அது எந்த பெரிய ஞானிகள் என நீங்கள் கொண்டாடுபவர்கள் ஆனாலும் சரியே தான்.


வேதத்தை கண்டவர்கள், அறிந்தவர்கள் என நீங்கள் சொல்லும் வேதங்களை பாருங்கள், அதில் உலகம் இன்ன விதமாக சிருஷ்ட்டிக்கபட்டது என தீர்க்கமாக சொல்லபட்டிருக்கிறதா என்ன?.. உலகத்து படைப்புகள் இன்னவிதமாக சிருஷ்ட்டிக்கபட்டனர் என சொல்லபட்டிருக்கிறதா என்ன?..எங்கே எடுத்து காட்டுங்கள் உங்களுடைய ஞானிகளின் வேதத்தில் இருந்து, சவால் விடுகிறேன். நீங்கள் சொல்லும் ஞானிகள் இதன் உற்பத்தியை சொல்லியிருக்கிறார்களா? பெரிய ஞானிகள் என பீத்தி கொள்வதோடு சரி. அவங்கள் கதை முடிந்து விடுகிறது. இருக்கிறது எனில் எடுத்துகாட்டுங்களேன்.


கடவுள் நிற்பது அண்ட சராசரங்களின் அளப்பிடமுடியாத வல்லபத்திறதின் பின்னால், அவனுடைய ஆற்றல் மறைந்திருப்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் பின்னால். சொல்லபடுகின்ற எந்த வேதமும் இதை ஆரம்பமாக சொல்லத்தான் செய்கிறது, ஆனால் ஒவ்வொருவேதமும் ஒவ்வொரு விதமாக சொல்லிகொண்டு திரிகின்றன. பலவிதமாக சொல்லிகொண்டு திரியும் வேதங்கள் உண்மைத்தான் சொல்லுகின்றன என எப்படி நிச்சயபடுத்திகொண்டீர்கள் என சொல்லுங்களேன். என்னுடைய நிச்சயம் இவையான வேதங்கள் உண்மையை அறியவில்லை இதுவரைக்கும். இந்த உண்மையை தெரிவிக்காத வேதங்கள் எல்லாம் உண்மையை அறிந்திறாதவை. கற்பனை படைப்புகள். ஏதோ அந்தந்த காலத்துக்கு தக்கபடி மக்களை திருப்திபடுத்துவதற்க்கு தக்கபடி மனித கைகளால், மனித மனத்தினால் ஒப்புக்கொள்ளும் படியாக கற்பனையாக உருவாக்கபட்டவைகளே அன்றி உண்மையை உண்மையென கண்டு இது இன்ன விதமாகத்தான் சிருஷ்ட்டிக்கபெற்றன என அறுதியிட்டு கூற இயலாத வேதங்கள். அவற்றை சுமந்துகொண்டு திரியும் உங்களை போன்ற வேதாந்திகள் இதை வாய் கிழிய பெசினாலும் உண்மை பொய்த்து போகாது.


சிருஷ்ட்டியை கூட தெரியாத வேதங்கள் கூறும் முக்தி எப்படியானது ஆக இருக்கும் என சற்று நினைத்துபாருங்கள். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதுக்கு பிறந்தோம், யாரால் பிறந்தோம், எப்போது பிறந்தோம், என கூட சொல்லத்தெரியாத வேதங்கள் அதற்க்கு முன்னே எப்படி முக்தி எதுக்கு முக்தி எப்போது முக்தி எவ்வாறு முக்தி யாரால் முக்தி என விளம்பரம் பண்ணிகொண்டிருக்கின்றன. இது தான் உங்க ஞானமா?. இதைத்தான் ஞானம் என்கிறீர்களா?.எங்கே உங்க ஞானிகள் வேதம், எடுத்து பிரித்து போடுங்கள். ரகசியங்களை கேட்கிறேன், பதில் வேதங்களில் இருந்து வரட்டும், அவை உண்மையை தெரிந்திருக்கின்றன எனில்....
மனிதன் ஏன் விதவிதமான வர்ணங்களில் படைக்கபட்டான் எனும் சின்ன கேள்விக்காவது உங்கள் எந்த வேதமாவது பதில் சொல்லுமா?..அல்லது சொல்லதெரியுமா? ஏன் மனிதனை படைப்பதற்க்கு முன்னரே இறைவன் வர்ணங்களை நிர்ணயித்தான், வேதத்தை பிரித்து பார்த்து பதில் சொல்லுங்களேன், சற்று காத்திருக்கிறேன்.

மரணம் என்பது என்ன - தொடர்ச்சி

 மரணம் என்பது என்ன - தொடர்ச்சி




உலகம் ஆதியில் வெறுமனே தான் இருந்தது... ஆக்ஸிஜனும் இல்லை கார்பண்டை ஆக்ஸைடும்... நைட்ரஜன் மற்றும் அனேகம் வாயுக்கள் இருந்தன... தாவரங்கள் தான் ஆதி உயிர்.. அவை கார்பன்டை ஆக்சைடை கொண்டு வாயு மண்டலத்தில் ஆக்ஸிஜன் பெருக்கி தெவையான அளவு ஆக்சிஜன் பெருகி விட்ட பின்னரே ஏனைய உயிர் வகைகள் தோன்ற ஆரம்பித்தன... தாவரங்கள் தாம் மழையையும் உருவாக்கின...


மனித கருவை படைத்த இறைவன் முன்னரே தாவரங்களை தயவாக கொண்டு மனித கரு வளரவே அமைத்தான்.... தாவரங்கள் இல்லையெனில் எந்த உயிர் இனங்களும் இபூமுகத்தில் இல்லை... மழை இல்லை ஆக்ஸிஜன் இல்லை.... சின்ன அனு உயிர்கள் கூட இருக்காது...


நாம் உயிருடன் இருக்கின்றோம், நமக்கு ஆதாரமானதுவோ நமது பிதா மாதாக்களின் கருசுக்கிலங்கள் இருக்கின்றன.. அவை இல்லையெனில் நாம் இல்லை.. அது போல நமது பிள்ளைகளுக்கு ஆணும் பெண்ணுமாகிய நாம் ஆதாரமாக இருக்கின்றோம்... அப்படி உயிர்கொடியானது ஆதிமுதல் படர்ந்து விரிந்து பூத்து காய்த்துகொண்டே இருக்கின்றது... ஆனால் அந்த கொடியினை காண்பவர் எவரோ அவன் சித்தன்.


உயிர்கொடியானது தான் மட்டும் தன்னுக்குளே வளர்ந்து பூத்து காய்க்கவேண்டுமெனில் ஆதிமுதல் பயிர்கொடியும் உயிர்கொடியுடன் கூடவே வளர்ந்து கொண்டே இருந்திருக்கவேண்டும்... பயிர்கொடி இல்லையெனில் இந்த உலகில் உயிர்கொடியானது இந்த அளவுக்கு படர்ந்து பூத்து காய்த்து வளர்ந்து இருக்காது... உயிர்கொடி மடிந்து போயிருக்கும்... ஆக உயிர்கொடியானது உயிருடன் எக்காலமும் வாழ்ந்திருக்கவே பயிர்கொடியானதும் கூடவே பூத்து காய்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது... நமக்காக நமது சந்ததிக்காக அவை நம்முடன் வளர்ந்து பூத்து காய்த்து நமக்கு உணவாகி நமக்கு வாழ்வாதரமாகி செழிப்பிக்கின்றது... அந்த பயிர்கொடியும் நம்மை போன்றே ஆதி முதல் அனாதி இறைவனின் சூட்சுமத்தை சுமந்துகொண்டு நம்முடன் வாழ்கின்றது... ஆனால் நாம் அதை அறியாமலிருக்கின்றோம்...


ஜீவ விருட்சத்தின் சூட்சுமங்களை பேசிகொண்டிருக்கிறோம்.. இதை கேட்டவர் கண்டவர் பாக்கியவான்கள் என எழுதபட்டிருந்தது அனாதி காலம் முன்பு... அழிந்து போன அறிவுகள் உயிர்பெறும் காலம் வர இறைவனை போற்றுவோமாக... செத்தவைகள் எல்லாம் உயிர்பெறுமாகட்டும்... செத்தவர்கள் கூடவே உயிர் பெற்று எழும்பட்டும்

Spiritual Seed

 

Spiritual Seed



மண்ணை கிளற கிளற அது அருமையான வளம் பெறும்,


விதை விதைப்பவன் மண்னை நன்றாக அறிந்திருப்பான்... மண்ணில் இருக்கும் சின்ன சின்ன கூழாங்கற்களை பொறுக்கி மாற்றுவதும் அவன் கடமையே அல்லவா?


மண் பக்குவமாகும் போது விதை தானே விழும்.


பக்குவம் ஆகாத மண்ணில் விதை விழுந்து என்ன பயன்..விதை முளைக்குமா?


சில பேருக்கு ஆசை இருக்கும்... ஆவல் இருக்கும்... ஆன்மீக தாகம் இருக்கும் என்பதும் சரி.. ஆனால் விதை முளைக்க அதுமட்டும் போதாது... அருமையாக விதையை கவ்வி மூடிகொள்ளுகிற பசையான மண் வேண்டும்.. நீர் நயப்பு இருக்கவேண்டும்.... அதிக ஆழமாகவும் விதை செல்ல கூடாது.. வெகு மேலாகவும் விதை இருக்ககூடாது... காகம் கிளி முதலியவை கொண்டு சென்றுவிடும்.


இதை தான் மனம் என்கிறோம்... மனமும் மண்ணும் ஒன்றே தான். இதனாலத்தான் மண்டையில களிமண்ணா இருக்கு என நையாண்டித்தனமாக பேசுவர் ஞானிகள்.


கொஞ்சம் விதை இருக்கிறது...பார்க்கும் இடமெல்லாம் நிலமும் இருக்கிறது.... விதை விதைப்பவன் கண்டமேனிக்கு விதையை அள்ளி வீசிகிட்டு போவானா...?


அது மாதிரித்தான்...மனம் என்பது விளைநிலம்...அதை பண் படுத்தி நீர் ஓட வாய்க்கால் போட்டு அதை கிளறி..எரு விட்டு அப்புறம் சீஸண் பார்த்து தானே விதையை போடுவான் விவசாயி....ஒரு விவசாயியே இப்படி என்றால் ஆன்மீக விதை விதைக்கிறவன் என்னவெலாம் பார்க்க வேண்டும்


கொஞ்சம் விதைகள் விதைத்து இருக்கிறேன்..அந்த விதைகள் அனேகம் விதைகளை தூவ வேண்டும்...பல விருட்சங்கல் முளைக்கவேண்டும்...இங்கு நான் என ஆக ஒன்றும் இல்லை..எல்லாம் இறை சித்தமே