=== நினைவு நல்லது வேண்டும் ===
ஜெபம் பண்ணுவது ஒரு தனிபட்ட சமயம் வைத்துகொள்ளவேண்டும். ஆரம்பகாலங்களில் இப்படித்தான் வரவேண்டும்.அடுத்துதான் அதிகரிக்கவேண்டும். ஏனெனில் நாம் சமுசாரிகள், இல்லறத்தில் இருப்பவர்கள்.நமுக்கு என கடமைகள் கட்டுபாடுகள் இருக்கின்றன. அது அனுசரித்து வரவேண்டும். ஆனால் ஒன்று நிச்சயம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில், "அக்கினி" கெடாமல் பார்த்துகொள்ளுவது.
அக்கினி என்பது சதா உந்துதலை கொடுத்துகொண்டிருக்கும் அவா. தீவிர ஆவலே அக்கினி...அதுவே நம்மை முன்னோக்கி நகர்த்திகொண்டிருக்கும் எனர்ஜி
ஆகாரத்தில் இச்சை செல்லுமா...தூக்கம் வருமா எனவெல்லாம் வள்ளலார் கேட்ப்பது இது தான்
இந்த தீவிர அவா தான் பக்தியாக காதலாக மலர்கிறது.. "நினைந்து நினைந்து உருகி உருகி" என சொல்லபடுவது இது தான்
சாலை ஆண்டவரின் வாழ்க்கையை படிக்கும் போது அவரின் அவா எத்தகையது என நாம் புரிந்து கொள்ளமுடியும். அருமையான வியாபாரம் பண்ணிகொண்டிருந்தவர் அவர், மிட்டாய் வாங்க கிடைக்கிற காசை கருதி தக்கலை ஞானமாமேதை பீர்முஹம்மது அப்பா அவர்களின் நூலை வாங்கி, காட்டிற்க்கு மாடு மேய்க்க செல்லும் போது படித்து மனப்பாடம் செய்தவர். இளவயது மனைவி,சின்ன கைகுழந்தை இவர்களை விட்டு குருவின் காலடியெே கதி என வாலிப பிராயத்திலேயே புறப்ப்பட்டவர்.அவரின் ஆவலை நான் உணரவேண்டும்.
அனேக வருடங்கள், தனியாக மதுரை திருப்பரங்குன்ற மலைகுகையில் தவம்.எப்போதாவது தியானம் கலைந்து எழும் போது பசிக்கு உணவு என்னவென்றால் சப்பாத்திகள்ளி. கள்ளியின் சோறு, அதை ஆற்றில் போட்டு அலசி கழுவி சாப்பிட்டு பசியடக்கி, பின்னர் தியானம்...அஞ்சு நாள் பத்துநாள் ஒருவேளை தான் கள்ளி சோறு சாப்பாடு.நினைத்து பாருங்கள்..அவர்களின் ஆவல்..வேட்கை...இந்த வேட்கையே அக்கினி.இதுவே தவத்திற்க்கு தேவை.
ஐயா..அந்தகாலத்தில் எனைபோன்றவர்கள்,சின்ன வயதில் இருந்தே தேடி தேடி அலைந்தவர்கள்...பல குருமார்கலை தேடி செல்வோம்...காலை ஆகிவிட்டால் நினைப்பு என்பது இன்றைக்கு யாரை சென்று பார்த்து கருத்துக்களை பெற்றுகொள்ளுவது என்பது தான்.இண்டெர்னெட் வராத காலம் அது. நூல்கள் வாங்கி படிக்க கையில் காசு இருக்காது...வீட்டில கேட்டா அறை தான் விழும். அதனால் பணத்தை சேமித்து நூல் வாங்கி படித்த காலம் உண்டு. நூல் பெற்றுகொள்ள கையேண்ட்நிய காலம் உண்டு. இரவல் வாங்கி படித்த காலம் உண்டு. இப்படியே தான் நாங்கள் அறிவை பெருகி கொண்டோம். குரு ஆசிரமங்களுக்கு செல்வோம்..நெறைய மக்கள், பக்தர்கள் வந்திருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் அயிரம் பிரச்சினைகள், அதை முறையிட்டு கொண்டிருப்பார்கள்.பொறுமையோடு ஒதுக்கு புறமாக அமர்ண்ட்ந் காத்திருப்போம்...குரு சற்று ஓய்ந்து கொண்டால் அப்போது அவரிடம் செல்வோம்...நமுக்கு தேவையானதை கேட்டு பெற்றுகொள்ள அப்படி எத்தனை காலம் எத்தனை வருஷங்கள்.....நெனைக்க நெனைக்க ஒரு வித அனந்த பரவசம்.
---❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️